Thursday, March 29, 2007

சோதனை!

சோதனை, பதிவுக்கு தான் உங்களுக்கு இல்லை.

ஒரு முக்கிய அறிவிப்பு


நீங்கள் 21 வயதுக்கு மேற்பட்டவரா?

நீங்கள் மலேசியரா?

இவை இரண்டும் உங்களுக்கு பொருந்தினால், கீழே உள்ள அறிவிப்பை நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்:

இந்த சனிக்கிழமைதான் (31/03/2007) நீங்கள் வாக்காளராக பதியக் கூடிய இறுதி நாள். அப்படி முறைப்படி பதிந்தவர்கள் வரும் ஜூன் 2007-இருந்து செப்டம்பருக்குள் நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதி பெறுவீர்கள்.


மாவட்ட பதிவு இலாக்காவிற்கு நீங்கள் செல்லும்போது உங்கள் மைகாட் (MyKad) அட்டையை உடன் எடுத்துச் செல்லவும்.

Wednesday, March 28, 2007

பாட்டியா இல்லை party- ஆ?


எப்படி இருக்கு இந்த கருத்து.இது எங்க ஊர் தயாரிப்பு.தீபாவளிக்கான விளம்பர வாழ்த்து.

Nasi Kandar


முதலில் உணவில் இருந்து ஆரம்பிக்கின்றேன்(அதுதான் சுலபம்).'நாசி கண்டார்' பற்றி தெரிந்துக் கொள்வோம்.நாசி என்றால் மலாய் மொழியில் சோறு என்று அர்த்தம்.இந்த சோறை அந்த காலத்தில் எப்படி விற்பனை செய்வார்கள் என்றால் ஒரு நீண்ட மூங்கில் கம்பில் இரு புறமும் உணவு கொள்கலன்கள் இருக்கும்.தராசு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதை இப்படி சமநிலையில் தூக்குவது kandar என்பார்கள்.குழப்பி விட்டேனா?

"The word Nasi Kandar, came about from a time when nasi [rice] hawkers or vendors would kandar [balance] a pole on the shoulder with two huge containers of rice meals"

இப்படிதான் இந்த பெயர் வந்தது.நாசி கண்டார் வடக்கு மாநிலங்களில் வெகு பிரபலம்.முக்கியமாக பினாங்கு மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உணவு இதுதான். பினாங்குச் சென்றால் நாசி கண்டாரை ஒரு கைப் பார்கமால் வந்து விடதீர்கள்.மற்ற மாநிலங்களில் இந்த உணவு பினாங்கு மாநிலத்தில் உள்ள சுவையைப் போல இருக்காது என்று சொல்கின்றார்கள்.நானும் பினாங்குச் சென்று இதை உண்ண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.கடைசி வரையில் முடியவில்லை.நான் உண்ட நாசி கண்டார் எல்லாம் பிற மாநிலத்தைச் சேர்ந்தது.இந்த உணவுகள் இந்திய முஸ்லிம் உணவு கடைகளில் அதிகம் கிடைக்கும்.இந்த சோறின் நறுமணம் சற்றே மறுபட்டு இருக்கும்.இதற்கு துணை உணவுகள்(side dish) அசைவமும் சைவமும் கலந்து இருக்கும்.அசைவ உணவு என்றால் பொரித்த கோழி,மாட்டிறைச்சி,மீன்,இறால் என்று அனைத்தும் இருக்கும்.உங்களுக்கு அது பிடிக்குமோ அதை நீங்கள் தேர்வு செய்து சாப்பிடலாம்.சென்னையில் நாசி கண்டார் உணவகம் இருப்பதாக கேள்விபட்டேன்.அங்கு உள்ள நாசி கண்டாரின் சுவை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.நான் சொல்லி தெரிந்துக் கொள்வதை விட நீங்களே சாப்பிட்டு பார்த்தால் இன்னும் தெரியும்
சில நாசி கண்டாரின் துணை உணவுகள்(side dish)
ps:please read My Friend's comment for more information.

Tuesday, March 27, 2007

மலேசியா எனது பார்வையில்


வணக்கம்.மை ஃபிரண்ட், நிஜமாக இத்தனை அறிவுபூர்வமான கேள்விகளை அனைவரும் கேட்டார்களா?இப்படி பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் சொல்ல வேண்டுமா?இப்போவே லேசாக மயக்கம் வருவது போல உள்ளது.இப்பொழுதுதான் எனது பழைய மலேசியா வரலாறு புத்தகத்தை எல்லாம் தூசி தட்டி எடுத்து வைத்து உள்ளேன்.கூடி சீக்கிரம் மலேசியா வரலாறைப் பற்றி சொல்லி உங்களின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றேன்.

முதலில் ஒரு மலேசியராக மலேசியாவைப் பற்றி எனது சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.ஏது எனது தாய் நாடு என்றால் மலேசியா என்றுதான் ஞாபகம் வருகின்றது.தமிழ் நாடு பக்கமே நான் போனது இல்லை.பல தலைமுறைகளாக மலேசியா மண்ணில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நாங்கள். ஒரு சில விஷயங்கள் மலேசியாவைப் பற்றி பிடிக்கமால் போனாலும் மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு.இங்கே மலாய் மொழிதான் முதன்மையான மொழி.இருந்தாலும் தமிழ் இன்னும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. யாருக்கவது மலாய் கற்றுக் கொள்ள ஆசையா?அதற்கு நீங்கள் நாட வேண்டிய நபர் நம் மை ஃபிரண்ட் டீச்சர்.நான் சொல்லி கொடுத்தால் அது ஆபத்தில் முடியும்.மலாய் மொழியை மறந்துக் கொண்டிருக்கின்றேன்.தப்பு தப்பாக சொல்லி கொடுத்து விடுவேன் என்ற பயம்.

மலேசியா அழகான நாடு என்றால் அது பொய் இல்லை.நிஜமாகவே பல அழகான இயற்கை இடங்களுடன் அமைந்தது தான் மலேசியா.மலேசியா இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.ஒன்று தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா(சபா,சரவாக்).மலேசியாவில் மக்கள் தொகை தீபகற்ப மலேசியாவில்தான் அதிகம்.ஒரு 80% மக்கள் தொகை இங்கேதான் உள்ளது.மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒரு 7% இருப்பார்கள்.இந்த 7% இந்தியார்களில் 80% தமிழர்கள்.மலேசியாவில் பண்டிகை காலம் வந்தால் அனைவருக்கும் கொண்டாட்டம்.நோன்பு பெருநாள்,சீனப்புத்தாண்டு,தீபாவளி என்று எது வந்தாலும் அந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் காணலாம்.எனக்கு பயங்கர கொண்டாட்டம்.அனைத்து பெருநாள் காலங்களிலும் சாப்பிட்ட சுவையான உணவு,நண்பர்கள் வீட்டிற்குச் செல்லலாம்,பட்டாசு வெடிக்கலாம்.மொத்ததில் நன்றாக ஆட்டம் போடலாம்.ஆகவே எனக்கு மலேசியாவில் பண்டிகை என்றால் உச்சி குளிரும்.

எங்களுக்கு எல்லாம் மற்ற இனத்து மக்களுடன்(மலாய்காரர்கள்,சீனர்கள்,மலேசியா பழங்குடியினார்,etc) வாழ்ந்து பழகி போய் விட்டது.தமிழர்கள் சீன மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள்.அதே போல் சீனர்கள் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள்.மலேசியா பக்கம் வந்தால் யாரவது சீனரைத் தமிழில் திட்ட வேண்டி இருந்தால் சற்றே யோசிக்கவும்.அவருக்கு தமிழ் தெரிந்து இருக்கலாம்.இது வரையில் பெரிய இன கலவரம் எல்லாம் வரவில்லை.ஆனால் ஒரே ஒரு சமயம் வந்தது.அதுவும் 1969 இல் தான் நடந்தது.இதைப் பற்றி விரிவாக எங்கள் பதிவில் எழுதுவேன்.இது வரையில் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொல்லலாம்.எனக்கு எல்லாம் ,மலாய் மற்றும் சீன நண்பர்கள்தான் அதிகம்.பல மொழி,பல இனம்,பல கலாச்சாரம் என்று எல்லாமே இங்கு பல என்றுதான் இருக்கின்றது.இது அனைத்தையும் கடந்து மலேசியாவில் இன்று நிம்மதியான வாழ்க்கை முறை நடந்துக் கொண்டிருக்கின்றது.

அடுத்தது உணவு.மலேசிய உணவைப் பற்றி சொல்லமால் போனால் எங்களை யாரும் மனிக்க மாட்டார்கள்.மலேசியாவில் எல்லா இன உணவுகளும் கலந்து ஒரு கலவையே வந்துவிட்டது.இங்கு உள்ள சில இந்திய உணவுகள்,இந்தியாவில் உள்ளது போல இருக்காது.இது மலேசியாவிற்கு உள்ள தனி சிறப்பு.மலேசியாவில் பிறந்த புண்ணியம் சாப்பிட்ட சுவையான பல வகை உணவுகள் கிடைக்கின்றன.சீன பெருநாள் வந்தால் சீனர்கள் வீட்டில் முறுக்கு இருக்கும் என்றால் நம்புவீர்களா?முறுக்கு என்பது சீன பெருநாள் காலங்களில் அதிகம் விற்பனையாகும்.இது சீன உணவு,மலாய் உணவு என்று பிரித்துப் பார்க்கமுடியவில்லை.எங்களில் பதிவுகளில் மலேசியா உணவைப் பற்றி கண்டிப்பாக சொல்லுவோம்.

அடுத்தது எங்கள் ஊரின் கலைஞர்கள்.இங்கேயும் பல திறமை மிக்க கலைஞர்கள் இருக்கின்றார்கள்.அவர்களில் சிலரை ஏற்கனவே சில பதிவுகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.அவர்களைப் பற்றியும் மை ஃபிரண்ட் கண்டிப்பாக எழுதுவார்.மலேசியா இது வரையில் அமைதியாக உள்ள நாடு(நானும் இல்லை.ஆகவே இன்னும் அமைதியாக இருக்கும்)
இனிமேலும் இப்படியே இருக்க வேண்டும்.மலேசியாவில் பிறந்து வளர்ந்தது ஒரு சுகமான அனுபவம்.ஆனால் என்னை சிங்கப்பூரிக்கு தூரத்திவிட்டார்கள்.

Saturday, March 24, 2007

எங்க ஏரியா.. உள்ளே வாங்க!

இது எங்க ஏரியா! உள்ளே வரலாம் தாராளமாக..

எல்லாரும் எல்லா நாட்டைப் பற்றியும் எழுதுறாங்க.. ஆனால், தமிழர்கள் அதிகமாய் வாழும் மலேசியாவை பற்றி ஒரு தகவலும் இல்லை.

இங்கே இவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
என்ன செய்கிறார்கள்?
அவர்களின் வாழ்க்கை நடைமுறைதான் என்ன?

இங்கே இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் வாழ்கிறார்களாமே?
இவர்கள் ஒற்றுமையாதான் வாழ்கிறார்களா?
இல்லை மற்ற நாடுகளில் மதச் சண்டை ஜாதி சண்டைதான் இருக்கா?
ஒற்றுமையாய்தான் வாழ்கிறார்கள்!!!!
ஆனால், எப்படி?

சரி, இந்த ஊருக்கு எப்படி சீனர்களும் இந்தியர்களும் வந்தனர்?
எப்போது வந்தனர்?
ஏன் வந்தனர்?
அப்போது இவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னென்ன?
அந்த கஷ்டங்கள் இப்போது இருக்கிறதா? இல்லையா?

மலேசியா ஒரு காலத்தில் மலாயா என்றழைக்கப்பட்டதாமே?
ஏன் மலாயா மலேசியா ஆனது?
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் என்ன சம்பந்தம்?

மலேசியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன?
எத்தனை கூட்டரசு பிரதேசங்கள் இருக்கின்றன?
அதில் எது சிலிக்கோன் சிட்டி? எது கலாச்சார ஊர்?

இங்கே என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கின்றன?
அந்தந்த இடங்களுக்கு எப்படி போக வேண்டும்?
பொது போக்குவரத்து வசதியும் இங்கே எப்படி இருக்கின்றது?
இங்கே எப்படிப்பட்ட உணவுகள் கிடைக்கும்?
ஒவ்வொரு இனங்களின் சிறப்பு வாய்ந்த உணவுகள் என்ன?
இங்கே என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது?
ஏன் இந்தியர் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுகிறார்?
ஏன் சீனர் தீபாவளியை கொண்டாடுகிறார்?
அந்த கொண்டாட்டங்களில் ஒவ்வொரு இனத்தவரின் பங்குகள் என்ன?

இந்தியாவில் வாழும் இந்தியருக்கும் மலேசியாவில் வாழும் இந்தியருக்கும் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
இங்கே கலாச்சாரம் எப்படி காக்கப்ப்டுகிறது?
கலாச்சார சீரழிவுகள் இருக்கிறதா?

இப்போது மலேசியாவின் நிலை என்ன?
உருதியான அரசியல் ?
நிலையான பொருளாதாரம்?
ஒற்றுமையான சமூகம்?

இப்படி எத்தனையோ கேள்விகள் உங்கள் மனசுக்குள் இருக்கலாம். பலர் நேரடியாகவும் என்னிடம் கேட்டிருக்கீங்க. பூங்காவில் மலேசியாவை பற்றி தொடர் எழுத சொல்லி மதி அவர்களும் என்னை கேட்டுக் கொண்டார். அப்பொழுது என்னால் எழுத முடியாத சூழ்நிலை. என்னை விட அருமையாக எழுதிக் கொண்டிருக்கும் துர்காவை கேட்டால் "நான் எப்படி தனியா எழுதுறது?"ன்னு கேட்டார்.

ஆனால், எங்கள் இரண்டு பேரின் ஒவ்வொரு பதிவிலும் மலேசியாவை பற்றி ஏதாவது விஷயங்கள் இருந்துக்கொண்டே இருந்ததால், நண்பர்களின் வேண்டுகோள்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. மலேசியா பற்றிய ஒரு கையேடாக அமையவேண்டும் என்றும் சிலர் ஆசைப் பட்டனர்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் கார்த்திக் என்னிடம் "ஏன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதகூடாதா?"ன்னு கேட்டார். இந்த யோசனை ஒரு நல்ல யோசனையாக எங்கள் இருவருக்குமே தோண்ற நாங்கள் இந்த வலை ஆரம்பித்தோம்.

வரலாறிலிருந்து இப்போதைய நாட்டு நடப்பு வரை.. உணவிலிருந்து உடைவரை.. இசையிலிருந்து படங்கள் வரை.. இனத்திலிருந்து இடங்கள் வரை எல்லாவற்றையுமே நாங்கள் இங்கே உங்களுக்காக நாங்க ஜில்லுன்னு கூலா எழுத போகிறோம். (இதை தவிர்த்து வேறு ஏதாவதைப் பற்றி நாங்கள் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது).

துர்கா நன்றாக கதை சொல்வார் என்பது நாமெல்லாம் அறிந்ததே! ஆதலால், மலேசியாவின் வரலாறை அவர் பாட்டி வடை சுட்ட கதை.. இல்லை இல்லை.. பாட்டி மலாயா வந்த கதையை காமேடியாக சொல்ல போகிறார். விரைவில்!

காத்திருங்கள்!