Tuesday, August 21, 2007

மலாக்கா பேரரசு


(பேரரசர் பரமேஸ்வராவின் வரைபடம்)

மலேசிய வரலாற்றில் மலாக்கா மாநிலத்தின் சரித்திரம் தவிர்க்க முடியாத ஒன்று. மலேசிய வரலாற்றின் முக்கிய வித்தாக அமைந்தது மலாக்கா மாநில சரித்திரம் எனக் கூறினால் அது மிகையாகாது.

சிங்கபூரின் முந்தய பெயர் தெமாசிக் ஆகும். இது சிரிவிஜயா பேரரசிடமிருந்து பிறிந்த ஒரு குட்டித் தீவு. கடார சரித்திர காலம் தொடங்கி ஏறக் குறைய 400 வருடங்கள் சரித்திர சான்றற்று கிடந்த தீவாகும். ஆரம்ப காலத்தில் சியாமியர்களின் ஆட்சியின் கீழும், அதன் பிறகு மாஜபாட் அரசின் கீழ் இருந்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. அது சரி எதற்காக தெமாசிக் (சிங்கபூரின்) கதையை கூறிக் கொண்டிருக்கிறேன் என யோசிக்கின்றீர்களா?

ஆம் இங்கிருந்து வந்தவர்தான் மலாக்கா மாநில பேரரசான பரமேஸ்வரா. இவர் தெமாசிக்கில் ஆட்சி செய்த காலம் நடைபெற்ற சகோதர யுத்தத்தின் சமயம், வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பரமேஸ்வராவின் வருகைக்கு முன் சரித்திரத்தில் காணப்படாமல் இருந்ததுதான் மலாக்கா மாநிலம்.

யுத்தத்தில் தோல்வியுற்ற பரமேஸ்வரா தப்பி ஓடி வந்த இடம்தான் இந்த மலாக்கா மாநிலம். அச்சமயம் இது ஒரு சிறு மீன்பிடி கிராமமாகும். ஆம், இந்த மீன்பிடி கிராமம் தான் பின்னாற்களில் மலாக்கா பேரரசுவென பெயர் எடுத்தது.

மலாக்காவிற்கு வந்த பரமேஸ்வரா தன் ராஜ்ஜியத்தை நிறுவினார். தொல்லைகள் விட்டபாடில்லை. மலாக்கா வியாபாரத்திற்கு சிறந்த இடமாகக் கருதப்பட்டது. பலரும் மலாக்கா மாநிலத்தை தங்கள் ஆட்சிக்கு உற்படுத்த நினைத்தார்கள். பரமேஸ்வரா அரசருக்கு முன்பு இருந்ததை விட எதிரிகள் அதிகரித்தனர். சியாமிய (தாய்லாந்து) அரசு, மலாக்காவை அபகரிப்பதில் முக்கிய எதிரியாக விளங்கியது.

பரமேஸ்வரா அரசாங்கத்தினரிடமிருந்து விசுவாசத்தை கோரியது.
அபாயகரமான நிலையிருந்த மலாக்கா மாநிலத்தை காப்பாற்ற சீனப் பேரரசிடமிருந்து பாதுகாப்பு கோரினார் பரமேஸ்வரா. சியாமிய தாக்குதல் ஏற்படாமல் மலாக்காவை காத்தது மட்டுமல்லாது, சியாமிய அரசை கடுமையாக எச்சரித்தது சீனப் பேரரசு.

கேட்பார்களா சியாமியர்கள். அரசியலில் வழுத்த தந்திரசாலிகள் சியாமியர்கள். இதனால்தான் என்னவோ, உலக வரலாற்றில் அன்னியரின் ஆட்சிக்கு ஆளாகதவர்கள் என பெயர் பெற்றார்கள் போழும்.

மலாக்கா வரலாறு தொடரும்…

அன்புடன்,
விக்னேஷ்.


8 மறுமொழிகள்:

')) said...

நல்ல சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க விக்னேஷ்வர்!!
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்!!! :-)

')) said...

arumai

')) said...

nanri CVR and gaana...

')) said...

விக்னேசு முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

தொடரட்டும் பணி.

மொழி
www.mozhi.net

')) said...

நல்ல பயனுள்ள வலைப்பதிவு. ஒரு கேள்வி: பேரரசர் பரமேஷ்வரன் தமிழரா ?

')) said...

இல்லை தொழரே அவர் தமிழர் அல்ல. மலாய் பேசக் கூடிய இந்து... பலேம்பாங் இந்தோனேசிய அரச வம்சாவழியை சேர்ந்தவர்..

')) said...

விக்கி நண்பரே தங்கள் மலேசிய வரலாற்றுப் பகுதி மிக அருமை, மிக சுவாரசியமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

')) said...

பரமேஸ்வரா மலாக்காவின் பேரரசர் அல்ல.
பிற்காலத்தில் அரசராக அங்கீகரிக்கப்பட்டார்.
அவர் சுமாத்ராவின் ஒரு பகுதிலிருந்தவர். அங்கிருந்து விரட்டுப்பட்டு துமாஸிக் வந்தவர்.
அடைக்கலம் கொடுத்த துமாஸிக் மன்னரைக் கொன்றுவிட்டு அரசை அபகரித்தவர்.
அங்கிருந்த மக்களாலும் துமாஸிக் மன்னருக்கு வேண்டியவர்களாலும் விரட்டப்பட்ட
பரமேஸ்வரா அங்கிருந்து மூவாருக்குச் சென்று தங்கினார்.
அங்கும் பாதுகாப்பு இல்லாததால் மலாக்காவை நிர்மாணித்துக்கொண்டு அங்கே
இருக்கலானார்.