Sunday, October 28, 2007

மலாக்கா பேரரசு 2

(மலாக்காவில் அமைந்திருக்கும் டச்சு கோட்டை)
சிறந்த ராஜியத்தை நடத்தி வந்த பரமேஸ்வரா வெளியாட்களின் உதவியின்றி சியாமியரின் தாக்குதலை வெற்றி கொண்டார். இந்நிலையில், சியாமியரின் ஆட்சியின் கீழ் இருந்த பகாங் மாநிலத்தையும் தமது ஆட்சிக்குட்படுத்தினார். மலாக்கா மாநிலம் செல்வச் செருக்குடன் அதீத வளர்ச்சியடைய ஆரம்பித்தது.

மலாக்கா துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற ஆரம்பித்தது. வியாபார மைய பகுதியென மலாக்கா துறைமுகம் உறுவாகியது. முதல் முறையாக மலாக்கா கடற்கரை சட்டத்தை அமல்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து சீன தேசத்து இளவரசியான ‘ஹங் லீ போ’ மற்றும் மலாக்கா பேரரசின் திருமணத்தையடுத்து மலாயா மற்றும் சீனாவுடனான உறவு மேலும் வழு பெற்றது. மலாக்கா மாநிலத்தில் அதிக அளவிளான மக்கள் குடியேற அராம்பித்தார்கள். இதுவே மலாயா சரித்திரம் உறுவாக ஒரு மைல்கல்லாக அமைந்தது. மலாக்கா பேரரசின் ஆதிக்கம் தீபகற்ப பகுதிகளேங்கும் பறவ ஆரம்பித்தது. இவை மாநிங்களாக பிறிக்கபட்டு சிற்றரசர்களால் அட்சி செய்யபட்டு வந்தது.

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய மத ஆதிக்கம் பெருக ஆரம்பித்த்து. மலாய் மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவ தொடங்கினார்கள். மலாக்காவிற்கு சுமாத்ராவிலிருந்து இஸ்லாமிய மதம் பரவியதாக சொல்லப்படுகிறது. இதன் பின் மலாக்கா மலாயாவில் இஸ்லாமிய சமய மையமாக விளங்கியது. இம்மத விரிவாக்கத்திற்கு முக்கிய காரணம் அரசரை விட மத குருவிற்கு இருந்த அதிக சழுகைகளே என கூறப்படுகிறது. புதிய மத அடிப்படையில் அரசருக்கே அதிகமான உறிமைகள் இருந்த்து. தமது நாட்டை ஆட்சி செய்யவும் முடிவெடுக்கவும் தடைகள் இல்லாமல் இருந்த்து. அரசரின் மத தழுவல் மக்களையும் பதிதத்து. அரசருக்கு ஒத்த மதத்தை மக்கள் தழுவும் பொழுது அவர்களுக்கு சிறப்பு சழுகைகள் வழங்கப்பட்டன.

15-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17-ஆம் நூற்றாண்டு வரை நடந்த இஸ்லாமிய மயமாக்கம் முடிவடையாத பட்சத்தில். சுமத்ராவை சேர்ந்த சுல்தான் இஸ்கண்டார் மூடா மக்களிடம் கட்டாயமாக இஸ்லாமிய மத்த்தை ஏற்றுக் கொள்ளும் பணியை செய்தார். இச்செயல் போர்த்துகீஸியர்களின் எதிர்ப்புக்குள்ளானது. இதன் பின்பு இந்து மத பண்பாடுகள் நீடிக்காமல் போனது. அரசர்களுக்குறிய மகாராஜ பட்டம் சுல்தான் என நிலை மறியது. சமஸ்கிருதம் மறைந்து அரபு மொழி நிலை கொண்டது.

இராமயணமும் மகாபாரதமும் பிந்தல்லப்பட்டது. இருப்பினும் தற்சமயம் கிளந்தான் மாநில பகுதிகளில் ‘ஹிகாயட் ஸ்ரீ ராமா’ என பல மாற்றங்கள் செய்யப்பட்டு, இஸ்லாமிய அடிப்படையில் இராமயண இதிகாசம் அமலில் உள்ளது.

கி.பி 1511-ஆம் ஆண்டு அல்போன்ஷோவின் தலைமையில் போர்துகீஸியர்கள் மலாக்காவை கடற்படையை வைத்து தாக்கினார்கள்......
தொடரும்.....