Thursday, January 24, 2008

பத்துமலை தைப்பூசத் திருவிழா
Thanks: Kervin Chong

13 மறுமொழிகள்:

')) said...

அருமை, அருமை, கண்ணாரக் கண்டோம், நன்றி

')) said...

இந்த முறை கூட்டம் குறைவாக இருந்ததாக இங்கு செய்தியில் சொன்னார்களே??
படத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே!!

')) said...

படங்கள் மூலமாகவே ஒரு பரவசப் பதிவு!

அத்தனையும் கண்கொள்ளாக் காட்சி!

இந்த மலேஷிய முருகனைப் போற்றி ஒரு பாடலை முருகனருளில் சென்ற ஆண்டு இட்டிருந்தேன்.

தேடிப் பார்த்து மீண்டும் இங்கே வந்து தருகிறேன்
அருமையான படங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி.

முருகனருள் முன்னிற்கும்!

Anonymous said...

படங்களை வச்சு கூட்டத்தை எடை போடாதீங்க. இந்த முறை கூட்டம் குறைவுதான்.

')) said...

சொன்னபடி இதோ அந்தப் பதிவு!

"துள்ளி விளையாடும்"

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த ஆதிரை என்ற சிறுமி இந்தப் பாடலை எங்கள் வீட்டிற்கு வந்த போது பாடினார்.
கேட்டதுமே மனம் பறி கொடுத்தேன்.
செட்டிநாட்டு மக்கள் அந்தக் காலத்தில் மலேயாவுக்கு பிழைக்கப் போனபோது கூடவே செந்திலாண்டவனையும் கூட்டிச் சென்று கோயில் கட்டி, 'தண்ணீர்மலையான்' எனப் பெயரிட்டு வழிபட்டனர்.
இப்போதும் பல செட்டி நாட்டுப் பெயர்கள் தண்ணீர்மலையான் என்று இருக்கும்.
அந்த நிலையைக் காட்டும் இப்பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.[குறிப்பாக ஆசிரியர் ஐயா அவர்களுக்கு!!]

பாடல்

துள்ளி விளையாடும் - சின்னப்
பிள்ளை முகம் மறந்து

வெள்ளி விளையாடும் -- மலேயா
சீமைநகர் அடைய

நாகப்பட்டினத்து - கடலில்
நங்கூரம் பாய்ச்சி நிற்கும்

செட்டிக்கப்பலுக்கு - துணையாம்
செந்தில் ஆண்டவனே


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

கப்பல் ஏறுகையில் - முதலில்
கடல் முகம் தெரியும்

கண்களில் நீரோடு -- நிற்கும்
மனைவி முகம் தெரியும்

அன்னை முகம் தெரியும் -- அன்பு
பிள்ளை முகம் தெரியும் [2]

அந்த முகங்களிலே -- செந்தில்
கந்தன் முகம் தெரியும்


செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

பினாங்க் துறைமுகத்தை -- கப்பலும்
நெருங்கி விட்டதையா

கப்பல் அடியினிலே -- கூட்டம்
கண்டிட வந்திருக்கு

தண்ணீர் பூ மலையில் -- நிற்கும்
தண்ணிமலையானே[எங்கள்]

பெண்டுபிள்ளைகளைக் -- காக்கும்
புனித மலையானே


தண்ணி மலையானே -- எங்கள்
தண்ணிமலையானே
கண்களில் நீர் வழிய -- நாங்கள்
கைகள் கூப்புவோமே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

தைப்பூச நாளினிலே -அவனும்
நகரத்தைக் கண்டிட

தங்க ரதமேறி - தேரில்
நகர்ந்து வருவானாம்

பார்க்குமிடமெங்கும் -- மக்கள்
பக்தி முகம் தெரியும்

காவடி ஆடிவரும் -- சீனர்
காலடியும் தெரியும்


தண்ணிமலையானே -- எங்கள்
தாகம் தீர்ப்போனே
வந்தவரைக் காக்கும் -- எங்கள்
தண்ணிமலையானே

செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே

[விரைவு கதியில்][fast speed]
செந்தில் ஆண்டவனே -- ஐயா
செந்தில் ஆண்டவனே
வந்த வினை தீர்க்கும் -- எங்கள்
செந்தில் ஆண்டவனே x3

கந்தனுக்கு வேல் வேல் - அந்தக்
காவடிக்கும் வேல் வேல்
கந்தனுக்கும் வேல் வேல்- எங்கள்
கடம்பனுக்கும் வேல் வேல் x 3
****************************************************

முருகனருள் முன்னிற்கும்!
வேலும் மயிலும் துணை!

')) said...

அழகு முருகனின் அழகான படங்களை தந்தமைக்கு மிக்க நன்றி :)

')) said...

wonderful snaps..thanks for sharing..i feel that we have missed this wonderful celebration very closely...if our trip was extended for 2 more days we could have attened it ..

')) said...

நேரில் கண்ட நெகிழ்ச்சியை தந்த பதிவிற்கு நன்றி!

')) said...

கடந்த வருடங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த தடவை பத்துமலையில் மிக குறைவானவர்களே கலந்துக்கொண்டனர்.

1.5 மில்லியன் மக்கள் வரும் பத்துமலைக்கு இந்த தடவை 1 மில்லியன் மக்கள் கூட வரவில்லை என்பதே உண்மை. இந்த தடவை பினாங்கு தண்ணீர்மலை ஆலயத்தில் கூட்டம் அலைமோதியது என்பது இங்கே கண்டிப்பாக சொல்லியாக வேண்டும்.

பினாங்கு தைப்பூச படங்கள் கிடைத்தால் அதையும் பதிவிடுகிறேன். :-)

')) said...

படங்கள் எல்லாம் பட்டையைக் கெளப்புது! நன்றி மை பிரெண்ட்!
அந்தப் பெண் குழந்தை கையில் சிறு கும்பம் வச்சிக்கிட்டு கண்கொட்டப் பார்க்கும் அழகு சூப்பர்!

மலர் அலங்காரத்தில் முருகப் பெருமானின் அழகு முகமும், வேலும் மட்டும் தெரிவது முருகோ முருகு!

பத்துமலை முருகனுக்கு அரகரோகரா!

பிகு:
காவடிப் படங்கள் அவ்வளவா கிடைக்கலையா?

')) said...

படங்கள் அனைத்தும் அருமை. வாழவந்த இடத்தில் கூட மறக்காமல் முருகனை கொண்டாடும் அழகை பதிவில் கொண்டு வந்ததற்கு நன்றி.

')) said...

wow. Malaysia va Thiruchenduraa nu yosika veikudhu indha photos.
kankolla katchi, thanks for the pictures
-K mami

')) said...

கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!
படங்களுக்கு நன்றி!