Tuesday, August 26, 2008

திரெங்கானு பயணம் - 2

மேற்குக்கரை மாநிலங்களில் ஒன்றான திரெங்கானு மாநிலம் மலேசிய பாத்தேக் வகை துணிகளுக்கு உலகப் புகழ்ப் பெற்றவையாகும். இந்த பாத்தேக் துணி வகைகள் இரண்டு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. 'ஜாந்திங்' என்று அழைக்கப்படும் பேனாவில் உருகிய மெழுகையூற்றி அழகிய பூக்களும் இலைகளும் வரையப்படுக்கின்றது. மற்றொரு வகை துணிகளில் பூவேலைப்பாடுகளை அச்சிடுதல். மிகவும் நுன்னிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பாத்தேக் வகைத் துணிகள் ரி.ம 100இல் இருந்து 1000 வரையிலும் விற்கப்படுகின்றன.



அடுத்து வாவ் 'Wau' வகை பட்டங்கள் இங்கு பிரபலமாகும். மலேசிய விமானத்தில்கூட இந்த வாவ் சின்னத்தைக் காணலாம். இந்த வாவ் பட்டம் விடுதல் திரெங்கானு மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டாக இன்று வரையிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பறவை, மீன், பூனை போன்ற வகை பட்டங்களை இம்மாநில மக்கள் விரும்பி பறக்க விடுகின்றனர். அதிலும் நிலா பட்டம் இங்கு மிகவும் புகழ் பெற்றவையாகும். இம்மாநில மக்கள் அடுத்து 'காசிங்' என்று மலாய் மொழியில் அழைக்கப்படும் பம்பரத்தை இவர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதுகின்றனர்.

திரெங்கானு மாநிலம் அதன் உணவு வகைகளிலும் மிகவும் சிறந்து விளங்குகின்றது. பெரும்பாலும் காலையிலேயே இவர்கள் 'நாசி டாகாங்' என்றழைக்கப்படும் சோறு வகை உணவை விரும்பி உண்கின்றனர். அடுத்து திரெங்கானு மாநிலம் செல்வோர் அவசியம் மறவாமல் வாங்கிச் செல்வது 'கெரோப்போக் லேக்கோர்' வகை பதார்த்தமாகும். இந்த கெரோப்போக் லேக்கோரை நீண்ட வரிசைகளில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

5 மறுமொழிகள்:

')) said...

ஹைய்யா.. மீ த ஃபர்ஸ்ட்டு :)

')) said...

என்னங்க.. ரொம்ப சீக்கிரம் முடிச்சுட்டீங்க. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே :(

')) said...

நல்ல பதிவு ...
தொடருங்கள் இனியும்

வாழ்த்துக்களுடன்
விஷ்ணு

')) said...

இப்போதான் வந்தேன் நல்லாருக்கேன்னு பாத்தா சட்டுன்னு முடிச்சிட்டிங்களே?

')) said...

திரெங்காணு சம்பந்தமான கதைகள்:

http://www.visvacomplex.com/A_Doctor_and_A___-___.html

http://www.visvacomplex.com/The_Srange_SEquelae.html

http://www.visvacomplex.com/Aththuvaana_Kaattil_Madurai.html