Friday, November 7, 2008

திரெங்கானு மாநிலமும் தமிழர்களும்

திரெங்கானு மாநில அரசின் தோற்றம் குறித்த ஆவணப்பட கலந்தாய்வில் ஈடுப்பட்டிருந்தப் பொழுது திரெங்கானு மாநிலத்தின் பெயர் 'திரங்கானி' என்ற இயற்பெயரில் இருந்தும் உருவாகியிருக்கலாமென்று சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர் ஒருவர் தம்முடைய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

மலைகளால் சூழப்பட்ட நிலமென்பதால் 'திரங்கானி' என்ற பெயர் அங்கு வாழ்ந்து வந்த பண்டைக்கால தமிழர்களால் வழங்கப் பட்டதாக அறிய முடிகிறது. இந்த கூற்றில் எத்துணை சதவிதம் உண்மையிருக்கலாம் என்ற ஆதங்கத்தில் அந்த ஆவணப்படத் தயாரிப்பாளரிடம் 'திரங்கானி' என்பது தமிழ்ச்சொல்தானா என்று கேள்வியெழுப்பியப் பொழுது, அந்தத் தகவல் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தில் ஆவணமாக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலை மலை சார்ந்த நிலத்தினை குறிஞ்சி நிலமென்று நம் இலக்கியங்கள் பகர்கின்ற வேளையில் இந்த 'திரங்கானி' சொல் தமிழ்ச்சொல்தானா என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால், இதுப் பற்றி தகவலறிந்த மொழி அறிஞர்களும் சரித்திர ஆய்வாளர்களும் பின்னுட்டத்தில் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துக் கொள்ள வேண்டுகிறேன். இதன் வழி தவறான தகவல் நம் மாணவர்களை சென்றடைவதில் இருந்து தவிர்க்கலாம்.

6 மறுமொழிகள்:

')) said...

வணக்கம்!

'திரங்கானி' என்ற சொல்லை சில அறிஞர்களுடனும் ஒரு பேராசியர் ஒருவருடனும் கலந்துரையாடிய பொழுது, கிடத்த சில விளக்கம் கிழே.

திரங்கானி என்ற சொல் கடலலை அல்லது நீர் உள்ள இடம் என்று அர்த்தப்டுமாம்.

இதை வைத்துப் பார்க்கும்பொழுது திரெங்கானு, திரங்கானியிலிருந்து வந்திருக்கும் என்பது சாத்தியமாகும். காரணம், திரெங்கானு, கடற்கரை ஓரம் அமந்த மாநிலமாக உள்ளதால்; மற்ற மலேசிய மாநிலங்களை விட நல்ல கடற்கரையும் கடலலையும் கொண்டுள்ளதால்.

யார் அந்த சரித்திர ஆய்வாளராகிய பேராசிரியர்? அந்த நேர்காணலின் விபரம் கிடைக்குமா?

நன்றி.

Anonymous said...

//மு.வேலன் said...

நன்றி.//

தகவலுக்கு மிக்க நன்றி மு.வேலன்.... அந்த நிகழ்ச்சியின் காப்புரிமை கல்வி தொழில்நுட்ப பிரிவின் கீழ் உள்ளதால் மேற்கொண்டு தகவல் தர இயலாமைக்கு வருந்துகிறேன். இருப்பினும் திரெங்கானு மாநில அருங்காட்சியகத்தைத் தொடர்புக் கொண்டு மேல் விபரம் பெறலாம்.

')) said...

சிறப்பான பதிவு... அவர் யார் என்பதை என்னால் சற்றே யூகிக்க முடிகிறது... மலாயா எனும் வார்தைக் கூட மலையகம் என்பதில் இருந்து திரிந்ததாக கூறுவார்கள்...

')) said...

த்ரெங்கானு என்று இன்று அழைக்கப்படும் அந்தப் பெயரின் மூலமாக விளங்குவது ஒரு சமஸ்கிருதப் பெயர்.
தமிழ்ப் பெயர் அல்ல.

')) said...

:)))அக்கா இது எனக்கு கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கு.. புரியாத மாதிரியும் இருக்கு..

')) said...

தரங்கம் என்பது கடலை குறிக்கும் தமிழ்ச் சொல். 'தரங்கம்பாடி' இதிலிருந்துதான் வந்தது.
தெரங்கானு தரங்கத்திலிருந்து பிறந்ததா எனத் தெரியவில்லை. திரு. இராம.கி அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தெரங்கானு மலேசியாவின் மேற்கு பகுதியில் உள்ளத்தானே. அங்கு தமிழர்கள் அதிகம் இருந்தார்களா?

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)