ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு சுதந்திரப் பொன்விழாவையொட்டி 73.3 மீட்டர் நீளமும் 41.4 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி வடிவமைப்புக் கோலத்தை அமைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.
இந்த தேசிய தினக் கோலத்தை வடிவமைப்பதில் 2000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இந்தக் கோலம் மலேசியாவின் மிகப்பெரிய கோலமாகக் கருதப்படுகிறது. ஏ.சி.எஸ் பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் பொது மக்கள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. பேரா மந்திரி புசாரின் பிரதிநிதியாக உயர்கல்வி இலாகாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் அவர்களின் திறனையும் வெளிக்கொணரும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்படும் இதுப்போன்ற சாதனைகள் மூலம் நாட்டின் மீது மாணவர்களிடையே சிறந்த சிந்தனையை விதைக்கலாம்.

7 மறுமொழிகள்:
மீ த பர்ஸ்ட்..ஆ..?
அட!!
பசங்க கலக்கி போடறாங்க!! B-)
நடத்துங்க!! :-)
அடடா ஈப்போவா :D
நம்ப ஊரு ஆச்சே.
ஹ்ம்ம் எல்லாம் கலக்கல்தான் போங்க
மை பிரண்ட்!
இம்மாம் பெருசா? கலக்கல் தான்.
தலைப்பை மாணவர்கள் என மாற்றுங்கள்
Thanks Johan. Ippave change pandren. :-)
:) naanum irukken!
மாணவர்கள் கலக்கி இருக்காங்க.31/2 மணி நேரத்தில் வடிவமைத்து இருப்பது ஆச்சிரியத்துகுரியது.
அவ்வள்வு தேங்காய் சக்கை எங்கிருந்து மாணவர்கள் சேகரித்த்தார்கள்.
Post a Comment