Wednesday, August 15, 2007

கொண்டாடலாம் வாங்க..

அட.. என்ன கொண்டாடலாம்ன்னு நான் சொல்லவே இல்லையா? மலேசியாவின் சுதந்திர நாள் வருதுல்ல.. எப்போதுன்னு கேட்குறீங்களா? 31 ஆகஸ்ட்டுதான் மலேசியாவின் சுதந்திர தினம்.


இந்த வருடம் ஸ்பெஷலான வருடம். மலேசியா சுதந்திரம் வாங்கி 50 வருடம் பூர்த்தியாகிறது. சாதாரணமாகவே சுதந்திர தினத்துக்கு 15 நாட்கள் முன்னிலிருந்தே கொண்ட்டாட்டங்கள் ஆரம்பமாகிவிடும். வீடு, அலுவலகம், ஷாப்பிங் காம்ப்ளேக்ஸ், கார், லாரி, மோட்டர், சைக்கிள் என எல்லா இடத்திலும் மலேசிய கொடி கம்பீரமாக பறக்க விடப்பட்டிருக்கும்.

இந்த வருடம் ஆகஸ்ட் ஒன்றிலிருந்தே ஆங்காங்கே மலேசிய கொடி கம்பீரமாக காற்றில் பறப்பதை பார்க்க மிக பெருமையாக இருக்கின்றது. இந்த வருட சுதந்திர தினத்துக்காக பல நிகழ்ச்சிகள் நடக்க விருக்கின்றன. மலேசியாவில் உள்ளவர்கள் இந்த விழாக்களுக்கு தாராளமாக போகலாம். வெளி நாடுகளில் உள்ளவர்களுக்கும் கவலை இல்லை. இந்த வருடம் Tahun Melawat Malaysia 2007(மலேசியாவைச் சுற்றி பார்க்கும் ஆண்டு) என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. நீங்கள் மலேசியாவை சுற்றிப் பார்க்க தாராளமாக வரலாம். சுற்றுப் பயணிகளுக்கு பல வசதிகள் செய்யப்பட்டிருகின்றது. விமான டிக்கெட், தங்கும் வசதி, மற்றும் சுற்றுலா தளங்களின் நுழைவு சீட்டுகளின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை நழுவ விடாமல் மலேசியாவை சுற்றிப்பார்க்க வாருங்கள். சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்னன்னு கேட்குறீர்களா? இதோ:

1- ஜூலை 2007 - 1940 - 1957 மெர்டேக்கா (சுதந்திர) புத்தக வெளியீட்டு விழா

சுதந்திரத்துக்காக போராட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது. பல அரிய படங்களும் இந்த சேமிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

2- ஜூலை 2007 - டாத்தாரான் மெர்டேக்கா சுற்றுப்புறம் வரலாற்று சிறப்புமிக்க தளமாக அறிவிக்கப்படும் விழா.

டாத்தாரான் மெர்டேக்கா என்பது வரலாற்று சிறப்பு மிக்க இடமாக திகழ்கிறது. இப்போது அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் இடங்களும் சேர்க்கப்பட்டு பேணிக்காக்கப்படுகிறது.

3- 19 ஜூலை 2007 - 50 வருட சுதந்திர தின நாணயம் வெளியீட்டு விழா

50-ஆவது வருடத்திற்க்காக சிறப்பாக ஒரு நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. இது லிமிடட் எடிஷன் மட்டும்தான். நாணயம் சேமித்து வைப்பவர்கள் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நாணயத்தை பெறுங்கள்.

4- சுதந்திர தின கொண்டாட்ட துவக்க விழா

ஆகஸ்ட் 17-ஆம் திகதி மலேசிய பிரதமரால் புத்ராஜெயாவில் துவக்கி விடப்படும். அன்றைய தினத்தில் மலேசியா பாரம்பரிய நடனங்கள் சில அரங்கேற்றப்படும். அதன் பிறகு ஜாலுர் கெமிலாங் (Jalur Gemilang) என்றழைக்கப்படும் மலேசிய கொடியை அங்கே உள்ள ஒவ்வொரு காரிலும் கட்டுவார்.

மலேசியாவில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் இதுக்கு ஆதரவு தந்து, அவங்களால் முடிந்த சில நன்கொடைகள் செய்துள்ளனர். அவர்களும் தங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக ஜாலுர் கெமிலாங் தருவார்கள். இங்கே என்ன ஒரு சந்தோஷமான விஷயமென்றால், பலர் அந்த கொடியை எதிர்ப்பார்க்காமல், அவர்களே சொந்த செலவில் ஜாலுர் கெமிலாங் வாங்கி கட்டியிருப்பதுதான். சுதந்திர தினம் என்பது அவர்களுள் ஊறியிருப்பது மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம்.

5- 50 வருட சுதந்திர மலேசியா கண்காட்சி

1957 முதல் 2007 வரை, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மலேசியாவின் மாறுதல்களை மிக துல்லியமாக விளக்கப்படும் ஒரு கண்காட்சி. சுற்றுப்பயணிகளுக்கு மலேசியாவை அறிய இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

மலேசிய அருங்காட்சியகத்திலும் சுற்றுப்பயணிகளுகாக சில வழிகாட்டுபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் பொறுமையாக பதில் சொல்வார்கள்.

6- கலை மற்றும் கலாச்சார விழா 2007

மலேசியா முழுதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் விழா. மலேசிய வாழ் மக்களின் கலை மற்றும் கலாச்சாரங்கள் ஒரே இடத்தில் நீங்கள் கண்டுக் களிக்கலாம். மலேசியாவின் பெரும்பான்மை இனத்தவர்கள் மலாய், சீன இந்தியர்கள் என்று மட்டுமே சிலருக்கு தெரியும். ஆனால், இபான், கடஜான், பாபா டான் ஞோஞ்ஞா மற்றும் பல சிறும்பான்மை இனத்தவர் இருப்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். அவைகளை அறிய இந்த வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுங்கள்.


7- மலேசிய உணவு திருவிழா 2007 (Malaysia Food Festival 2007)

குவாலா லும்புரில் உள்ள மிக முக்கியமான மூன்று ஷாப்பிங் காம்ப்ளேக்ஸான கே.எல்.சி.சி (KLCC), 1 உத்தாமா (1 Utama) மற்றும் சன்வே பிரமிட் (Sunway Pyramid)-இல் நடைப்பெறுகிறது. மலேசியாவில் உள்ள அனைத்து விதமான உணவு வகைகளும் இங்கே நீங்கள் சுவைத்து பார்க்கலாம். பல உணவு வகைகள் அங்கே உங்கள் முன்னே சமைத்தும் காட்டப்படும். இந்திய, மலாய், சீனர், பாபா டான் ஞோஞ்ஞா, இபான், கடஜான் மற்றும் பல இனத்தவரின் உணவுகளும் ஒரே இடத்தில் சுவைக்க வேண்டுமா? நீங்கள் போக வேண்டியது:

10-12 ஆகஸ்ட் - KLCC
17-19 ஆகஸ்ட் - 1 Utama
24-26 ஆகஸ்ட் - Sunway Pyramid

8- மெர்டேக்கா மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

இந்த் 25 ஆகஸ்ட் 2007-ஆம் ஆண்டு சந்திப்பில் மலேசிய அரசாங்க மற்றும் தனியார் உயர்க்கல்வி மாணவர்கள் கலந்துக்கொள்வார்கள். இனம் மற்றும் நாட்டுப்பற்று இவர்களிடம் வளர்க்கவே நாடு தழுவிய அளவில் ஒரு பெரிய சந்திப்பு நடத்தப் படுகிறது.

9- தேசப்பற்று பாடல் இயக்கி / பாடும் போட்டி

நீங்கள் ஒரு இசையமைப்பாளரா? நன்றாக கவிதை எழுதுவீர்களா? நல்ல குரல் வளம் இருக்கின்றதா? சேருங்கள் இந்த போட்டியில்.. ஆனால், பாடல் மலாயில்தான் இருக்க வேண்டும். :-)

10- உலக சிங்க நடன விழா 2007
இங்கே எத்தனை பேர் சிங்க நடனத்தைப் பார்த்திருக்கீங்க?கெந்திங்கில் 3-5 ஆகஸ்ட் நடந்த சிங்க நடனத்தில் உலகில் பல நாடுகளிலிருந்து பலர் வந்து கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதுவரை மலேசிய சிங்க நடனங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஆனால், மற்ற நாடுகளில் உள்ள வித்தியாசக்ங்களும் இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

11- அனைத்துலக வானவேடிக்கை போட்டி 2007

வானவேடிக்கை என்றால் யாருக்குதான் பிடிக்காது? எல்லாரும் ரசித்து பார்க்க கூடிய ஒன்று. அதுவே இங்கே திருவிழாப்போல் நடக்கிறது. புத்ராஜெயா, தித்திவங்ஸா, குவாலா லும்புர் மற்றும் போர்ட் டிக்ஸனில் 4,11,18,25 மற்றும் 30 இரவு வானமே வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும் அந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க தவறாதீர்கள்.

12- அம்பாங் மெர்டேக்கா

இது சுதந்திர தின கவுண் டவுன் என்றும் சொல்லலாம். டாத்தாரான் மெர்டேக்காவில்தான் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு வருடமும் 30 ஆகஸ்ட் இரவு இங்கே கவுண் டவுன் எண்ணப்படும். மலேசியாவில் பல இடத்தில் கவுண் டவுன் செய்தாலும், டாத்தாரானில் உள்ள அந்த சூழலுக்கு ஈடாகுமா?

13- சுதந்திர தின அணிவகுப்பு

அரசாங்க, தனியார், தற்காப்பு படை மற்றும் பல அணிகளின் அணிவகுப்பு. இது 31 ஆகஸ்ட் காலை மலேசிய ராஜாவின் தலைமையில் நடக்கும். காலை 7.30க்கு ஆரம்பமாகும் இந்த அணிவகுப்பு நண்பகல் 12 மணிக்கு முடிவடையும். நமது நாட்டின் தற்காப்பு படைகளுக்கு மரியாதை செலுத்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

14- மெர்டேக்கா திருவிழா

31 ஆகஸ்ட் இரவு ஸ்டேடியம் மெர்டேக்காவில் நடைப்பெற விருக்கிறது இந்த நாடகம். சுத்ந்திர போராட்டத்தை இந்த நாடகத்தில் அழகாக சித்தரிக்க விருக்கின்றனர். நுழைவு இலவசம்.

15- கான்ஸர்ட் அனாக் மலேசியா 2007 (Son of Malaysia Concert)

சுதந்திர தினத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதம் முழுதும் இஸ்தானா புடாயவில் (Istana Budaya) கலைநிகழ்ச்சிகள் நடைப்பெறும். ஆனால், இந்த கலநிகழ்ச்சிகள் மலேசியாவை பற்றியும், மலேசிய சுதந்திரத்தை பற்றியும், மலேசியாவில் வாழும் மக்களை பற்றியுமாக இருக்கும்.

திருவிழாதான்.. முப்பது நாளும் திருவிழாதான். எங்களுடன் கலந்து சுதந்திர தினத்தை கொண்டாட அழைக்கிறோம் நண்பர்களே! :-)

8 மறுமொழிகள்:

Anonymous said...

me 1st :D

')) said...

ஆகா!!
ஒரே கொண்டாட்டம் கும்மாலம் தான் போல!!
எஞ்சாய் பண்ணுங்க!! :-))

நல்ல விரிவான கட்டுரை மை ஃபிரண்ட்!
உங்களை மலேசிய சுற்றுலா துறையில் கண்ணை மூடிக்கொண்ட்டு சேர்த்துக்கலாம்!! :-)

')) said...

நன்றாக எழுதி இருக்கீங்க:)

ஹாய் மை பிரண்ட் நன்றி நீங்கள் எனக்கு அனுப்பிய விசாவும் டிக்கெட்டும் கிடைக்க பெற்றேன், இதே போல் நம் நண்பர்களுக்கும் எடுக்க போகிறேன் என்று சொன்னது என்ன ஆனது? அவர்களிடம் சொல்லி விட்டீர்களா?

')) said...

Very informative post Myfriend!!!

//உங்களை மலேசிய சுற்றுலா துறையில் கண்ணை மூடிக்கொண்ட்டு சேர்த்துக்கலாம்!! :-) //

aamanga!!

')) said...

வாவ்... பல தகவல்களைத் தெரிந்துக் கொண்டேன்...

அப்படியே மலேசியா வர்றதுக்கு எந்த பஸ்சை பிடிக்கணும்னு சொன்னீங்கன்னா, நான் ஃபுட்போர்டுல தொங்கியாவது வந்துட்டுப் போயிடுவேன் :-)

http://blog.nandhaonline.com

')) said...

வாழ்த்துக்கள்.....நல்லாக் கொண்டாடுங்க...

')) said...

அப்புறம்...வலிமிகும்..அப்படின்னா என்ன ..?

அப்படின்னு..எனக்கும்..தெரியாது... ஹி ஹி...!!!!!

')) said...

நல்லா இருங்க! happy independence day! Death to the Imperialistic hegemony.
Life for freedom to all human kind.