Saturday, May 10, 2008

மசூரி சமாதி (Makam Mahsuri)



எத்தனை வருடங்கள் ஆனாலும், காலங்கள் கடந்தாலும் சில நிகழ்வுகள் காலத்தால் அழிக்க இயலாது. அது போலத்தான் மசூரிக்கு நடந்த கொடுமையும்.

அடடே. மசூரி யாரு? எதுக்கு இப்போது அவரை பற்றி பேசுறேன்னு பார்க்குறீங்களா? தொடர்ந்து படியுங்கள். இவர் எப்படி லங்காவியின் தாழ்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று தெரிய வரும்.

பரம்பரையோ அல்ல பணக்கார வர்கத்தையோ சார்ந்தவர் அல்ல. ஒரு ஏழைபல நூறு வருடத்துக்கு முன்னே மசூரி என்பவர் லங்காவி சுற்றுவட்டாரத்திலேயே பெரிதும் பேசப்பட்டவரில் ஒருவர். அவர் ராஜ குடும்பத்தில் பிறந்த ஒரே மகள். ஒரு தடவை பார்த்ததும் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் அழகு. அதுமட்டுமா? அவருடைய குணங்களும் மிகவும் போற்றக் கூடியவை. அவர் பெற்றோர்கள் வளர்ப்பில் நல்ல குணங்களை கற்றரிந்தார். பெரியவர்கள் மீது மரியாதை, தானே முன் வந்து மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை, விட்டுக் கொடுத்தல், என்று அவருடைய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விருது கொடுக்கலாம்.

இவரும் திருமண வயதை அடையும்போது திருமண தாக்கல்கள் இவர் வீடை தேடி நிறைய வந்தன. யாருக்குதான் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க நிறைய ஆண்மகன்கள் தவமிருந்தனர். ஆனால், அதிர்ஷ்டம் அடித்தது அரசாங்கத்தில் பெரிய பதவி வகிக்கும் ஒரு இளைஞனுக்கு. (எனக்கு அவர் பெயர் என்ன என்று தெரியவில்லை).

இவர்கள் திருமணம் மசூரியின் பெற்றோர்களின் சக்திக்கும் மீறி விமரிசையாக நடத்தினர். இருவரும் சந்தோஷமாத்தான் வாழ்ந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அவன் பெயர் வான் ஹக்கிம் (Wan Hakim). வருடங்கள் கடந்தாலும் மசூரியின் குணங்களில் ஒரு சின்ன வேறுபாடும் தெரியவில்லை. எப்போதும் போல எல்லாருகும் தன்னால் ஆன உதவிகளை செய்தே வந்தாள். அதனால் அந்த ஊரிலேயே அவருக்கு நல்ல பெயரும் புகழும் மேலும் மேலும் கூடியது.

அதே ஊரில் உள்ள, ராஜ பரம்பரையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு (Wan Manohara) மசூரியின் மேலும் அவருக்கு சேர்ரும் புகழும் மேலும் பெரும் பொறாமை கொண்டாள். அவளை எப்படியாவது பழி வாங்கியே தீரவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். மசூரியின் கணவன் அடிக்கடி வேலை தொடர்பாக வெளியூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. மசூரியின் கணவன் வெளியூருக்கு சென்ற காலத்தில் மசூரியின் மேல் இவள் அபாண்டமான பழி ஒன்றை போட்டாள்..

கணவன் இல்லாத போது மசூரி மற்ற ஆண்களுடன் உறவு கொள்கிறாள் என்று அவதூறு கிளப்பினாள். காட்டுத் தீப்போல் பரவிய இந்த பொய் அரசர் காதுக்கும் எட்டியது. எல்லா விஷயத்திலும் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கும் மன்னர் இந்த விஷயத்தில் அவ்வளவு கவனம் செலுத்தாதற்கு என்ன காரணமோ தெர்ரியவில்லை..


தீர விசாரிக்காமல் மசூரிக்கு மரண தண்டனை விதித்தார். மரணத் தண்டனை என்பது தூக்கிலுவதில்லை. மக்களின் முன் ஒரு மரக்கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் முன்னே ஆயுதத்தால் குத்தி/வெட்டி கொள்வது. மக்களில் ஒரு பகுதியினர் தங்களது தங்கங்களும் தானியங்களும் மன்னரிடம் ஒப்ப்படைத்து மசூரியை மீட்க முயற்சி செய்தனர். எதுவும் பலனழிக்கவில்லை.

தணடனை நாளும் வந்தது. ஆனால் என்ன ஆச்சர்யம்/ அதிசயம்!!!!

எந்த ஆயுதமும் அவள் உடம்பில் பதியவில்லை.. ரத்தங்களும் வெளியாகவில்லை. ஆனாலும், அந்த துன்புருத்தலில் மிகவும் வேதனைப்பட்டார் மசூரி. பலவாறு அரசாங்க வீரர்கள் முயற்சி செய்தும் அவரை கொல்லமுடியவில்லை. பிறகு மரக்கம்பத்தில் கட்டப்பட்ட மசூரியை அப்படியே விட்டுவிட்டு சென்று மறுநாள் தொடர்ந்தனர். எதுவும் பலனிக்கவில்லை..

ஒரு கட்டத்தில் மசூரியினால் அந்த வேதனையை தாங்க முடியாமல் அவரே தன்னை கொல்ல ஒரே ஒரு வழி இருக்கிறது என்றார். அவரின் தந்தையின் கெரிஸ் (Keris)-இல் அவரை குத்தினால் கண்டிப்பாக அவர் இறக்கும் சாத்தியம் இருக்கு என்பதை அவர் கூறியதும் வீரர்கள் மசூரியின் தந்தையிடம் அந்த கெரிஸை பெற்று மசூரியை குத்தினார்கள்.

உடம்பிலிருந்து செங்குருதி வெளியாகுவதற்கு பதிலாக ரத்தம் வெள்ளை வர்ணமாக வழிந்தது. அவரும் மாண்டார். அவர் உயிர் உடம்பை விட்டு பிரியும் முன்னே அவர் விட்ட பத்தினி சாபம்: உண்மையை அலசி ஆராயாமல் அபாண்டமான பழியை சுமத்திய மன்னரும் அவரது நாடும் ஏழு தலைமுறைக்கு முன்னேறவே முடியாமல், இருக்கிற பெயர், புகழ் எல்லாம் அழிந்து கஷ்டப்படட்டும். இதுவே இந்த மண்ணுக்கு கிடைக்கும் பாடமாக அமையட்டும்ன்னு சொல்லி இறந்துட்டாங்க. அந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளியாக மாறியது.

அந்த நாள் வரை செல்வாக்கு மிக்க நாடாக இருந்த லங்காவியில் பேரிடிகள் ஏற்ப்பட்டது. பக்கத்து நாடுகளின் படையெடுப்பு, நீர் பஞ்சம், உணவு பஞ்சம், உள்நாட்டு சலசலப்பு, ஆட்சி சண்டை என பல இன்னல்களால் லங்காவி இருண்டது. சரியாக ஏழு வருடம். அப்படி ஒரு நாடு இருப்பதையே மக்கள் மறக்கும் நிலைக்கு மாறியது

மசூரி இறந்து சில நாட்களில் நாடு திரும்பிய அவனது கணவனுக்கு கிடைத்தது தன் மனைவியின் இறப்பு செய்தி மட்டுமே. அவர் அந்த நாட்டின் மேல் வெறுப்பும் விரக்தியும் கொண்டு நாட்டை விட்டு வெளியேறி தன் மகனுடன் தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தார். மசூரியின் ஏழாவது தலைமுறை என நம்பப்படும் வான் ஆயிஷா (Wan Aishah) பிறந்த போதுதான் லங்காவி திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது.

அப்போது கெடா லங்காவியை ஆட்சி செய்ததால், லங்காவி ஒரு தனி நாடாக அல்லாமல் கெடா மாநிலத்தின் ஆட்சியின் கீழ் அடங்கியது. இப்போது லங்காவி ஒரு மாபெரும் சுற்றுலா தளமாக மாறியதுக்கும் முக்கிய காரணம் மசூரிதான். வெளிநாட்டவர்கள் லங்காவி வந்தால் அவர்கள் முதலில் பார்க்க வேண்டும் என நினைப்பது மசூரியின் சமாதிதான்.

7 மறுமொழிகள்:

')) said...

சூப்பரா இருக்கு...

Anonymous said...

Good Info

')) said...

///அவர் உயிர் உடம்பை விட்டு பிரியும் முன்னே அவர் விட்ட பத்தினி சாபம்: உண்மையை அலசி ஆராயாமல் அபாண்டமான பழியை சுமத்திய மன்னரும் அவரது நாடும் ஏழு தலைமுறைக்கு முன்னேறவே முடியாமல், இருக்கிற பெயர், புகழ் எல்லாம் அழிந்து கஷ்டப்படட்டும். இதுவே இந்த மண்ணுக்கு கிடைக்கும் பாடமாக அமையட்டும்ன்னு சொல்லி இறந்துட்டாங்க////

அப்போ அவங்க மேலே பொறாமைப்பட்டு பொய்யா வழக்கு போட்ட பெண்மணிக்கு சாபம் இல்லையா??
அதே மாதிரி தானியங்கள் கொடுத்து அவங்களை காப்பாத்த நெனைச்சவங்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லையா???
என்ன கொடுமை சார் இது??? :O

நல்ல சுவாரஸ்யமான கதை,நீங்களும் சுவாரஸ்யம் குறையாம சொல்லியிருக்கீங்க!!
நன்றி! :-)

')) said...

@விக்னேஸ்:

நன்றி

@புனிதா:

நன்றி

')) said...

@சி.வி.ஆர்:

எல்லாருக்கும் தனி தனியா சாவம் விடுறதுக்கும் வாழ்த்து சொல்றதுக்கும் நேரம் பத்தாம இருந்திருக்கலாம். அதான் ஒட்டு மொத்தமா ஒரே சாபமா விட்டுட்டாங்க.. மதுரையை எறித்த கண்ணகியும் இப்படித்தானே சாபம் விட்டாங்க. இவங்க லங்காவி கண்ணகின்னு பேர் வச்சிடலாமா? :-)
இல்ல கண்ணகியை மதுரை மசூரின்னு பெயர் சூட்டிடலாமா? ;-)

')) said...

Yes good Story

நல்ல சுவாரஸ்யமான கதை,நீங்களும் சுவாரஸ்யம் குறையாம சொல்லியிருக்கீங்க!!
நன்றி! :-)

In Jesus death that time blood came in Red Colour But Majurri blood was White ?? How it is possible ??

puduvai siva.

')) said...

ஓ...தகவலுக்கு நன்றி. வரும் வாரம் லங்காவி செல்ல இருக்கின்றேன். நிச்சயம் அந்த நேரத்தில் இந்த தகவலை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கும்