Tuesday, May 15, 2007

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்..

ஜில்லென்று ஒரு மலேசியாவில் ஜில்லுன்னு பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டிருக்கும் நாங்கள், மலேசிய கலைஞர்களையும் இங்கே அறிமுகப்படுத்த போகிறோம்.

ஏற்கனவே திலிப் வர்மனைப் பற்றியும், அவரின் உயிரைத் தொலைத்தேன் பாடலைப்பற்றியும், பூமெராங்-x குழுவைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

பிறந்த நாள் பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த ஒரு பாடல். ஒரு காதலன் தன் காதலியின் பிறந்த நாளை தன்னுடைய சிறந்த நாளாக எண்ணி பாடுகிறான். மிதமான இசையில் வார்த்தைகள் தெளிவாக கேட்கிறது.
இந்த பாடலை பாடியவர்களின் குழுவின் பெயர் அப்பாச்சியன் (Apachean).


இவர்களின் முதன் இசை தொகுப்பு "முதல் முதலாய்" என்ற தொகுப்பில் அமைந்த பாடல். R&B இசையில் ஆர்வமுள்ள இந்த இளைஞர்களின் முதல் தொகுப்பே இப்படி வெற்றி கரமாய் அமைந்தது. காதல், தாய் பாசம், பிறந்த நாள் வாழ்த்து, தமிழனின் குரல், மற்றும் அவர்களின் அறிமுகம் என்று ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகமாய் இருக்கின்றது. ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன்.

அதுவரை.. நீங்கள் இந்த பாடலை கேட்டு கீழே உள்ள வரிகளை படித்து மகிழுங்கள்:

Apachean-PiranthaNaal...


மலருக்கின்று பிறந்த நாள்..
என் மனதை திறந்த நாள்..
நிலவுக்கின்று நிறைந்த நாள்..
என் நினைவில் நிலைத்த நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..

25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பூமி மடியில் முதன் முதலாய்
நீ தவழ்ந்த நாள்..
25 ஆகஸ்ட்டில் உன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பரிசு எந்தன் உயிருனக்கே நான்
கொடுத்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் வாழ்வில் சொர்க்கம் தழுவும் நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் உறவும் உன்னால் உயர்ந்த நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
ஓஓஓ..
(மலருக்கின்று..)

வருடப்பிறப்பு எனக்கே உந்தன் பிறந்த நாள்..
பிறந்த நாள்..
ஆண்டுதோறும் என் மனதில் நீ படர்ந்த நாள்..
இருவரல்ல ஒன்றில் ஒன்றாய் இணைந்த நாள்..
இணைந்த நாள்..
ஆக மொத்தம் எனக்கெனவாக பிறந்த நாள்..
பிறந்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
என் பிறவி பயனை அடைந்த நாள்..
பிறந்த நாள் உன் பிறந்த நாள்
நான் தவமிருக்கும் போல் இனிய நாள்..
பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்.
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
ஓஓஓ...
(மலருக்கின்று..)

பிறந்த நாள் உந்தன் பிறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
மறந்த நாள் நான் என்னை மறந்த நாள்..
நான் என்னை மறந்த நாள்..

இந்த பதிவு இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் தங்கை / ஜில்லென்று ஒரு மலேசியாவின் இன்னொரு பாதியான துர்காவுக்கு பரிசளிக்கிறேன்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா!

இந்த மலர் நோய் நொடியின்றி தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)

30 மறுமொழிகள்:

')) said...

பிறந்த நாள் வாழ்த்துகள் துர்கா!


//
இந்த மலர் தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)
//

Amen.

-Mathy

Anonymous said...

//இந்த மலர் நோய் நொடியின்றி தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)
//

hehe.முதல் வரியே தப்பாகி போச்சு ;)
இன்னைக்கு எனக்கு வந்த முதல் தொலைப்பேசி அழைப்பு உங்கள்யுடைதுதான்.நன்றி அக்கா.

')) said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

')) said...

அன்பு தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

')) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா.

')) said...

வாழ்த்துக்கள்

வாழ்க

வளர்க

')) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்! துர்காவிற்கு!

')) said...

மலேசியா துர்கா அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் நல்ஆசிகள்.

')) said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா
இன்று போல் என்றும் ஜில்லென்று வாழ்க ;-)

காஜாங் சிக்கனா இன்றைய விருந்தில்?

')) said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!! :-)
இந்த நாள் உங்கள் வாழ்வில் எல்லா வளமும் மகிழ்ச்சியும் பெற்றுத்தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

')) said...

Thurgahvirku iniya pirandha naal vaazthukkal :-))

')) said...

Wish you a many more happy returns of the day ammani... :)

')) said...

வ்வ்வ்வ்வ்வ்வாழ்த்துக்கள் துர்கா...

with hugs and kisses :))
-- பொன்ஸ்

')) said...

தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

')) said...

////
இந்த மலர் தன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி வாழ்க்கை குறையின்றி சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)
//

Amen.
// Amenக்கு ஆமென்.

பிறந்தநாள் தங்கைக்கும், பதிவு போட்ட தங்கைக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துர்கா.
என்றும் இனிமையோடு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அருமையான பாட்டு.. இது போன்ற அழகான வரிகள் உள்ள பாட்டுக்களை கேட்டு ரொம்ப நாட்களாகி விட்டது.:-)

')) said...

என் அருமைத் தங்கையின் தங்கையே வாழ்க பல்லாண்டு நலமுடனும்,வளமுடனும்.

')) said...

என் அருமை சகோதரிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..:)

Anonymous said...

MC ஜேஸ் உடைய வல்லவன் இசைக்குழுவை பற்றி கேள்விப்பட்டதுண்டா ?

அவர்களோட பாடல்கள் சூப்பரா இருக்கும்...

')) said...

@செந்தழல் ரவி:

//MC ஜேஸ் உடைய வல்லவன் இசைக்குழுவை பற்றி கேள்விப்பட்டதுண்டா ?

அவர்களோட பாடல்கள் சூப்பரா இருக்கும்... //

யோகி பி & நட்சத்திரா குழுவின் வல்லவன் ஆல்பத்தை பற்றி நிறைய பேர் எழுதி விட்டதால்தான் நாங்கள் அவர்களைப் பற்றி எழுதவில்லை. அவர்கள் இப்போது புது ஆல்பம் ஒன்று தயாரித்து கொண்டிருக்கின்றனர். அது வெளியானதும் இவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டுடலாம். :-) சரியா ரவி?

')) said...

@மதி, மின்னல், வெட்டி, சந்தோஷ், புலி, கீதா, பாலராஜன்கீதா, கானாபிரபா, சி.வி.ஆர், ஜி3, ஜி, பொன்ஸ், தேவ், பாபா, மனதின் ஓசை, கண்மணி, இராம்:

தங்கச்சிக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. :-)

')) said...

@மனதின் ஓசை:

//அருமையான பாட்டு.. இது போன்ற அழகான வரிகள் உள்ள பாட்டுக்களை கேட்டு ரொம்ப நாட்களாகி விட்டது.:-) //

இப்படிப்பட்ட பல அற்புதமான பாடல்கள் இங்கே ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கப்படும். :-D

')) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;-))

')) said...

/அன்பு தங்கைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!/

இது போல நான் சொல்லமாட்டேன்

/சந்தோஷமாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)/

இதுவும் நம்ம ஸ்டைல் இல்ல

/வ்வ்வ்வ்வ்வ்வாழ்த்துக்கள் துர்கா...

with hugs and kisses :))
-- பொன்ஸ்
இது சான்ஸே இல்ல

/இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் துர்கா ;-)) /

ஆங் இது நல்லாருக்கு ..கோபிய ரிப்பீட் பன்றேன்

')) said...

அன்பு தங்கை துர்க்காவிற்கு அண்ணனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

எல்லாருக்கும் நன்றி :-)

')) said...

அருமை துர்கா குட்டிமாவுக்கு பிறந்தநாள்
வாழ்துக்கள் ஆசிர்கள் கடவுளின் திரு முக
ஒளியில் உடல் நலம் பெற்று வாழ்வாங்கு வாழ்க
என வாழ்துகிறேன்

')) said...

Belated Wished To Dhurga!

(Malesiya Mariyamma...)

')) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

@வாழ்த்துக்கள் சொன்ன எல்லாருக்கும்:

நன்றி நன்றி நன்றி

அனைவருக்கும் தனி தனியாக நன்றி சொல்ல முடியவில்லை,மனிக்கவும்