Monday, May 28, 2007

ஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்

சுமார் 16 நாட்களுக்கு நடைபெறவிருக்கும் ஒன்பதாவது சித்ராவர்ணா மலேசியா நேற்று முன்தினம் புத்ராஜெயாவில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோலாகலமாக தொடக்கிவைக்கப்பட்டது.'ஒரு லட்சம் வண்ணங்கள், ஒரு லட்சம் புன்னகைகள்' என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டு சித்ராவர்ணா மலேசியாவை பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அதிகாரப்புர்வமாகத் தொடக்கிவைத்தார். சித்ராவர்ணா தொடக்கவிழா நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புத்ராஜெயா நீதிமன்ற வளாக கட்டத்தின் முன்புறம் திரளாகத் திரண்டனர்.

நேற்று முன்தினம் 6.30 மணிக்கு புத்ராஜெயா பொலிவார்ட்டில் கண்கவர் அணிவகுப்பு, நடனக் காட்சிகள், உள்நாட்டு தயாரிப்பிலான ஆடைகள் கண்காட்சி, சைக்கிள் சாகசக் கண்காட்சிகளுடன் சித்ராவர்ணா நிகழ்வு தொடங்கியது. இரவு 8.00 மணியளவில் பாரம்பரிய இசை மற்றும் நடனங்களின் வரவேற்புடன் பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைத்தார்.மலாய், சீன, இந்திய மூவினத்திலிருந்து 100 பேர் மிகப் பெரிய மத்தாளத்தை அடித்து வந்திருந்த பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். பூர்வ குடியனரின் முகமூடி நடனமும், சபா மக்களின் அறுவடை நாள் நடனமும், சபா வாழ் மக்களின் வீரர் தின நடனமும் இதில் இடம் பெற்றிருந்தன. அதுமட்டுமின்றி, மலாய், சீன, இந்திய, சியாம், போர்த்துகீள் சமுதாயத்தினரின் பாரம்பரிய நடனங்களும் வந்திருந்த பார்வையாளர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

முதல்நாள் நிகழ்வின் உச்சக்கட்டமாக அனைத்து நடனங்களிலும் பங்கேற்ற சுமார் 1,800 நடனக் கலைஞர்களும் ஒரு சேர மேடையில் தோன்றி சித்ராவர்ணா நிகழ்வுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்புப் பாடலைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். அதனைத் தொடர்ந்து, சுமார் ஐந்து நிமிடங்கள் வரை வாணவெடிகள் வெடிக்கப்பட்டு முதல் நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.கடந்த சனிக்கிழமை மே 26-ஆம் தேதி தொடங்கிய சித்ராவர்ணா நிகழ்வு ஜூன் 10-ஆம் தேதி வரையில் 16 நாட்களுக்கு நடைபெறும்.

இவ்வாண்டு மலேசியாவின் 50-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள சித்ராவர்ணா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன் தொடர்பில், கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளைச் சுற்றியுள்ள தங்கும் விடுதிகள், சுற்றுலா மையங்கள், பேரங்காடிகளில் மிகப் பெரிய அளவிலான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


மலாய் படிக்கலாம் வாங்க - பாகம் 3 செமெஸ்டர் லீவு முடிந்து இந்த வார இறுதியில் திரும்ப ஆரம்பம் ஆகிறது விரைவில் எதிர்ப்பாருங்கள்!!!

16 மறுமொழிகள்:

')) said...

என்ன இது கண்ணை பரிக்க கலரும் பிகருமாக இருக்கிறது! இது தான் லட்சம் வண்ணங்களோ!!

எங்க போனிங்க!! தமிழ்மணத்தில் ஆளையே காணோமே!! எக்ஸாம் எப்படி எழுதினீங்க!!

வாழ்த்துக்கள்!!

')) said...

வணக்கம் வருக

')) said...

தங்கச்சிக்கா,


படமெல்லாம் நல்லா இருக்கு.... :)

')) said...

என்ன ரொம்ப நாளா காணோம்னு பார்த்தேன்,வண்ணமயமான பதிவோட திரும்பி வந்திருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)

')) said...

வண்ணமயமான பதிவு.. :D :D வாழ்த்துக்கள்..

')) said...

படங்கள் எல்லாம் ரொம்ப கலர்புல்லா இருக்கு..:)

')) said...

athellaam neenga eduththa photosaa illa suttathaa??

nallla irukuthu.. ithukkaagave Malaysia varanum pola irukuthe ;)))

')) said...

நல்ல வர்ணனை.... அழகிய புகைப்படங்கள்

')) said...

//nallla irukuthu.. ithukkaagave Malaysia varanum pola irukuthe ;))) //

ஜி... நீ ஏத சொல்லுற... ஆமாம ரொம்பவே நல்லா இருக்கும் ;-)....

')) said...

aiyo ithana color'gala.....
adra adra.....

Malaysia Truly Asia.......

')) said...

/// நீ ஏத சொல்லுற... ஆமாம ரொம்பவே நல்லா இருக்கும் ;-).... //
//

repeatu.......

')) said...

எங்க போனிங்க!! தமிழ்மணத்தில் ஆளையே காணோமே!!

')) said...

என்ன ரொம்ப நாளா காணோம்னு பார்த்தேன்,வண்ணமயமான பதிவோட திரும்பி வந்திருக்கீங்க!!

வாழ்த்துக்கள்!! :-)

')) said...

ஜில்லுன்னு ஒரு மலேசியா இப்ப தான் ஜில்லுன்னு இருக்கு :))..

//தங்கச்சிக்கா,//
ராயலு ஒண்ணு தங்கச்சின்னு கூப்பிடனும் இல்ல அக்கான்னு கூப்பிடனும் அது என்ன தங்கச்சிக்கா அப்படி கஷ்டமா இருந்தா "aunty", பாட்டி ன்னு கூப்பிடு அவங்க என்ன கோச்சிகவா போறாங்க.

')) said...

your website simply very super
i m new member to your site

')) said...

Hai, I am chola. nagarajan, a journalist from Tamil nadu, epdi irukkinga la ange ellarum? nalama?