க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்...... க்க்க்க்க்ர்ர்ரீஈஈஈங்ங்ங்......
டீச்சர் அவங்க புத்தகங்களையும் கோப்புகளையும் தூக்கிக்கிட்டு வகுப்புக்குள் நுழைகிறார்.
செலாமாட் பாகி செக்குன்னு க்ளாஸே இடிந்து விழும் அளவுக்கு சவுண்டா கத்துறாங்க மாணவர்கள்.
டீச்சருக்கு ஒரே திகைப்பு.. வகுப்பு நிறைஞ்சு இருக்கு.. பசங்களும் பொண்ணுங்களும் இடம் இல்லாம நிக்குறாங்க.. ஒரு 50 பேருக்கு மேலே இருப்பாங்க போல .. மூனு வயசு பாப்பாவிலிருந்து (அபி ) ஐம்பது வயது பாட்டி (அது யாருன்னு நானே சொல்லணுமாக்கும்) இருக்காங்க..
ம்ம்.. என்ன பண்ணலாம்? சரி , கேண்டின்லதான் இடம் தாராளமாகவும் மேஜை நாற்காலியெல்லாம் இருக்கு.. வகுப்பை அங்கே மாற்றிடலாம்ன்னு முடிவு செய்து எல்லாரும் அங்கே உட்கார்ந்தாச்சு.
"மாணவர்களா, இன்றைய பாடத்துக்கு போறதுக்கு முன், போன வாரம் என்ன படிச்சோம்ன்னு பார்க்கலாமா?"
மாணவர்கள் கோரசாக "ஓகே செக்கு!"
"சினேகிதி, நீ உனக்கு தெரிஞ்சதை சொல்லு"
"ம்ம்.. அப்பா காபார் - காபார் பாயிக் செக்கு "
"கார்த்தி, இதுக்கு என்ன அர்த்தம்ன்னு நீ சொல்லு"
"அது நலமான்னு கேட்குற கேள்வியும் அதுக்கான பதிலும் செக்கு"
"ஓகே.. சந்தோஷ், நீ ஒன்னு சொல்லு!"
"ஒன்னு செக்கு"
"என்னடா சொல்ற?"
"நீங்கதானே ஒன்னுன்னு சொல்ல சொன்னீங்க?" என்று அப்பாவியாக கேட்க..
"ம்ம்.. நீ வீட்டுப்பாடம் செய்யவே இல்லை!!! அங்கே ஓரமா போய் நின்னு மனப்பாடம் பண்ணிட்டு வா?"
"கோப்ஸ், நீ உனக்கு தெரிஞ்சதை சொல்லு?"
"செலாமாட் பெட்டாங், செக்கு?"
"கோப்ஸ், உன் உச்சரிப்பில் பிழை இருக்கு.. அது செலாமாட் பெத்தாங். திரும்ப ஒரு முறை சொல்லு பார்ப்போம்?"
"செ... செ.. செலாமாட் பெத்தாங்"
"குட்.. அடிக்கடி இந்த உச்சரிப்புகளை சொல்லி பழகு.. எல்லாமே சுலபமாக இருக்கும்!"
அதுக்குள்ள மங்கை கைதூக்கி
"செக்கு, எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு . நானே எல்லாத்தையும் சொல்லவா?"ன்னு கேட்க
"சரிம்மா. நீயே சொல்லு?"
மங்கை முதல் க்ளாஸுல படித்த எல்லாவற்றையும் சரியா சொல்கிறார்..
"க்ளாஸ் பாருங்க.. மங்கை மட்டும்தான் படித்த பாடத்தை சரியா செஞ்சிருக்கா .. எல்லாரும் மங்கையை போல இருக்கனும் சரியா? மங்கைக்கு எல்லாரும் ஒரு பலத்த கைத்தட்டு கொடுங்கப்பா! சரி,மாணவர்களே இன்றைய பாடத்துக்கு போலாமா? இன்று நாம் எண்கள் கற்றுக் கொள்ளலாம்".
அப்போதுதான் அருண் க்ளாஸுக்கு வர்றார்..
"அருண், இன்னைக்கும் லேட்டா நீ?"
"செக்கு, நான் வரும்போது என் சைக்கிள் விபத்துல மாட்டிக்கிச்சு.. அதான் லேட்டு செக்கு!"
"ம்ம்.. இப்படி ஓவர் பில்டப் கொடுத்துதான் எப்போதும் நீ மாட்டிக்கிற.. ஏதாவது நம்புற மாதிரி சொல்லக்கூடாதா நீ? உனக்கு தண்டனை கொடுக்கணுமே! சரி, இந்த போர்ட்'லே ஒன்றிலிருந்து பத்துவரை எழுது"
அருண் போர்டு முன் நின்னு பேந்த பேந்த முளிக்கிறார்.
"என்னடா? ஒன்னு ரெண்டு மூனு கூட தெரியலையா உனக்கு? ம்ம் .. உனக்கு உதவி செய்ய இந்த வகுப்பிலிருந்து யாரையாவது கூப்பிடுக்கோ!"
"செக்கு, நான் நாட்டாமையை கூப்பிடுறேனுங்க."
"யாரு இங்க நாட்டாமை?"
"அட, நம்ம ஸ்யாம்தான்"
"ம்ம்.. நீ திருந்தவே மாட்டியா? அவனே எலி வால் பார்த்துட்டு உட்கார்ந்திருக்கான் .. இவனா எழுத போறான்?.. சரி, ஸ்யாம் ... அருணுக்கு உதவி செய்.."
ஸ்யாம் கெத்தா எழுந்திருச்சு முன்னே நடந்து போய் நிக்குறார்.. தன்னோட உள்ளங்கையில எழுதி வச்சிருக்கிற பிட்டா காப்பியடிச்சு காப்பியடிச்சு பத்து வரைக்கு எழுதி முடிக்கிறார்.
"ஸ்யாம், அருண்.. போய் உட்காருங்க.."
"க்ளாஸ்.. ஒன்றிலிருந்து பத்து வரை மலாயில்..
1-சத்து - Satu
2-டூவா - Dua
3-தீகா - Tiga
4-எம்பாட் - Empat
5-லீமா - Lima
6-எனாம் - Enam
7-தூஜோ - Tujuh
8-லாப்பான் - Lapan
9-செம்பிலான் - Sembilan
10-செப்பூலோ - Sepuluh
ன்னு உச்சரிக்க வேண்டும்"
numbers.mp3 |
"சுமதி, எட்டு எப்படி மலாயில் சொல்வது?"
"துப்பான் செக்கு"
"சுமதிக்கா, துப்பனும்ன்னா அதோ அங்கே ஓரமா போய் துப்பிட்டு வாங்கக்கோய்!" ன்னு ஜி3 சொல்ல..
அபி பாப்பா, "உனக்காவது மலாயில் எட்டு என்னனு சொல்ல தெரியுமா செல்லம்?"ன்னு டீச்சர் கேட்கிறாங்க.
"என்ன டீச்சர் இப்படி கேட்டுட்டீங்க.. ஏழு தூஜோன்னு சொல்வாங்க.. ஒன்பது செம்பிலான்னு சொல்வாங்க.. எட்டு என்னனு அதோ அந்த தோட்டக்காரரு சொல்வாரு.."
டீச்சர் நிமிர்ந்து பார்க்குறார்ங்க.. அங்கே தோட்டக்காரர் ஆணியை பிடுங்காம திருட்டு முழி முழிச்சிட்டு நிக்குறார்.. (அவரு வேற யாரும் இல்லைங்க.. அபியோட அப்பாதான் அவரு)
"தோட்டக்காரரே, உங்களுக்கும் இந்த வகுப்பில் சேரணுமா?"
தோட்டக்காரர் தலையை மேலும் கீழுமா ஆட்ட..
"சரி, எட்டுக்கு மலாயில் என்னனு கரேக்டா சொன்னீங்கன்னா உங்களுக்கு அட்மிஷன் கொடுக்கலாம்"
"லீப்பான் செக்கு.. கரெக்ட்டா?"
"லீப்பானா? அப்படின்னா என்ன அர்த்தம்ன்னு உங்களுக்கு தெரியுமா? லீப்பான்னா பூரான்னு அர்த்தம்"ன்னு டீச்சர் நொந்துக்கிட்டு..
"சரி சரி.. நீங்களும் க்ளாஸுல ஒரு ஓரத்துல உட்காருங்க.. க்ளாஸ் , எட்டை லாப்பான் என்று சொல்ல வேண்டும்.. திரும்ப சொல்லுங்க பார்ப்போம்?"
மாணவர்கள் கோரஸாக, "லாப்பான்"
"ஸப்ப்பாஆஆஆ.. இப்பவே கண்ணை கட்டுதே எனக்கு!! க்ளாஸ் , இன்றைய பாடம் இதோடு முடித்துக் கொள்வோம். நீங்க ஒன்றிலிருந்து பத்து வரை முதல்ல கத்துக்கிட்டு வாங்க. அப்புறமா நான் வேற எண்கள் சொல்லி தர்றேன்."
"க்ளாஸ் முடிக்கிறதுக்கு முன்னே ஒரு கேள்வி.. கோபி, இப்போது உன் கடிகாரத்துல மணி என்ன ?"
"மணி 10.10 காலை செக்கு"
"அதை அப்படியே மலாயில் சொல் கோபி"
"ம்ம்.. ம்ம்.. செப்பூலோ செப்பூலோ பாகி , செக்கு"
"சரியாக சொன்னே கோபி. வாழ்த்துக்கள்"
"சரி, மாணவர்களே! இந்த வாரமும் நான் உங்களுக்கு தனியாக வீட்டுப் பாடம் தரபோவதில்லை! வீட்டுல போய் போன வார பாடத்தையும் இந்த வார பாடத்தையும் படித்துட்டு வாங்க. அடுத்த வாரம் சந்திப்போம் மாணவர்களே! எல்லாரும் சந்தோஷமா போயிட்டு வாங்க"
மாணவர்கள் கோரஸாக "தெரிமா காசே செக்கு"
26 மறுமொழிகள்:
//ஐம்பது வயது பாட்டி (அது யாருன்னு நானே சொல்லணுமாக்கும்) இருக்காங்க..//
செக்கு. நல்லால்லே ஆமாம்............. முதியோர்க்கல்விக்குத் தடாவா?
@துளசி கோபால்:
//செக்கு. நல்லால்லே ஆமாம்............. முதியோர்க்கல்விக்குத் தடாவா? //
அட.. நான் சும்மக்காட்டியும்தான் போட்டேன் டீச்சர்.. அது சரிதான்னு நீங்களே வந்து ப்ரூவ் பண்ணிட்டீங்களே.. நான் அது யாருன்னு சொல்லவே இல்லை.. :-P
முதியோர்க்கல்விக்கு தடையே இல்லை.. படிக்கணும்ன்னு ஆர்வம் இருந்தாலே போதும். நம்ம பள்ளி தோட்டக்காரரையும்தான் சேர்த்திருக்கிறேன். :-D
கெட்ட வார்த்தை எல்லாம் கற்றுக்கொள்வதற்கு முன்பு முதலில் "சது","துவா" தான் கற்றுக்கொண்டேன்.
ஹலோ செக்கு,
என்னுடைய மகள் மலேசியாவில் வசிப்பதால் நானும் மாணவனாக சேர்ந்து படிக்கலாம் என்றிருக்கிறேன்.
முதல் இரண்டு பாடங்களையும் சேமித்துக்கொண்டேன்...
இன்னுமொரு துளசி டீச்சர்:-)
வாழ்த்துக்கள்... வாரம் ஒரு பாடம் என்று வருமா?
@வடுவூர் குமார் said...
//கெட்ட வார்த்தை எல்லாம் கற்றுக்கொள்வதற்கு முன்பு முதலில் "சது","துவா" தான் கற்றுக்கொண்டேன்.//
ஆஹா குமார்... உங்ககிட்ட கொஞ்ச ஜாக்கிரத்தையாத்தான் பேசணும்போல. :-P
//செலாமாட் பாகி செக்குன்னு க்ளாஸே இடிந்து விழும் அளவுக்கு சவுண்டா கத்துறாங்க மாணவர்கள்.
//
adhula naaanum oruthanaaakum....
//என்ன பண்ணலாம்? சரி , கேண்டின்லதான் இடம் தாராளமாகவும் மேஜை நாற்காலியெல்லாம் இருக்கு.. வகுப்பை அங்கே மாற்றிடலாம்ன்னு முடிவு செய்து எல்லாரும் அங்கே உட்கார்ந்தாச்சு.
//
unmai'a sollunga teacher.. G3 kitta evalavu kaaasu vaanguneenega canteen'ku class room'a maathurathuku????
//நீங்கதானே ஒன்னுன்னு சொல்ல சொன்னீங்க?" //
செக்கு'key aaappaaaa? adra adra....
//குட்.. அடிக்கடி இந்த உச்சரிப்புகளை சொல்லி பழகு.. எல்லாமே சுலபமாக இருக்கும்!"
//
sareeenga teacher..... enakku குட் vaanguradhuna remba pudikkum.... inoru thaba koooovunga teacher...
//எல்லாரும் மங்கையை போல இருக்கனும் சரியா? //
teacher avanga thalai'la poovu, hair clip ellam vachi irukaangaley teacher......
//தன்னோட உள்ளங்கையில எழுதி வச்சிருக்கிற பிட்டா காப்பியடிச்சு காப்பியடிச்சு பத்து வரைக்கு எழுதி முடிக்கிறார்.
//
brother, round katturadhu'na idha thaan solluvaaangalo?????
/உங்களுக்கு தனியாக வீட்டுப் பாடம் தரபோவதில்லை//
sareenga teacher, atleast verkadalai vaaanga oru two rupeees aaachum thaaangalen...... next week return pannidren....
sekku.... paadamellaam chanagithe... ;)))
மங்கையை வீட்டுப் பாடம் எல்லா செய்ய வச்சு, அத சரிய சொல்ல வச்ச செக்கு வாழ்க..
செக்கு இந்த கோப்ஸ் பாருங்க... இப்படி எல்லாம் கேள்வி கேட்டு இது உருப்படப் போகுது..?...
(விளையட்டுக்கு கோப்ஸ்...கோவிச்சுகாதீங்க)
உள்ளேன் செக்கு. ஆனா பாருங்க. நான் பாட்டுக்கு வீட்டுல டூவா, தீகான்னு சொல்லப் போக, சுத்தி நின்னு ஒரு மாதிரியா பாக்குறாங்க.
செக்கு ஒன்னும் புரியல!!
ஹாய்,ஃப்ரெண்ட்,
செக்கு, இது கொஞ்சம் கூட நல்லாயில்ல,,ஆமா சொல்லிபுட்டேன்.
புதுசா சொல்லிகுடுத்த பாடத்த படிக்க கொஞ்சம் கூட டைம் குடுக்காம என்னை இப்படி பழி வாங்கிட்டீங்களே செக்கு?
அடுத்த மலாய் பாடம் எப்போ டீச்சர்?:-)
மலாய் படிக்கலாம் வாங்கனு போட்டுயிருக்கீங்க!! 1-10 இன்னைக்கு பாடமா!! பதிவு முழுக்க சும்மா மொக்கையா இருக்கே!!
இதுல கொஞ்சம் நல்ல விஷயம் இருக்கிறதுனால, கும்மி அடிச்சு கெடுக்க விரும்பல!!
வாழ்த்துக்கள்!!
@gops
நான் எங்க அக்காவை உங்களுக்கு பதில் சொல்ல அனுப்புறேன் ;-)
@மங்கை
//செக்கு இந்த கோப்ஸ் பாருங்க... இப்படி எல்லாம் கேள்வி கேட்டு இது உருப்படப் போகுது..?...
//
நாலு போடு போட்ட அடங்கிட்டு போகுது,அது மை ஃபிரண்ட் டீச்சர் பார்த்துக்குவாங்க
//காட்டாறு said...
உள்ளேன் செக்கு. ஆனா பாருங்க. நான் பாட்டுக்கு வீட்டுல டூவா, தீகான்னு சொல்லப் போக, சுத்தி நின்னு ஒரு மாதிரியா பாக்குறாங்க.
//
இது எல்லாம் வாழ்க்கையில சகஜம் அக்கா :-)
//இசக்கிமுத்து said...
செக்கு ஒன்னும் புரியல!!
//
ஏன்??என்ன புரியல்லைன்னு கேளுங்க.சொல்லி தருவோம்
//புதுசா சொல்லிகுடுத்த பாடத்த படிக்க கொஞ்சம் கூட டைம் குடுக்காம என்னை இப்படி பழி வாங்கிட்டீங்களே செக்கு? //
ஹிஹி.என்ன பண்ணுவது எல்லாரும் ஆர்வமாக இருக்காங்க.அதுனாலதான் பாடம் ரொம்ப speed ஆக போகுது
//tbr.joseph said...
அடுத்த மலாய் பாடம் எப்போ டீச்சர்?:-)
//
மை ஃபிரண்ட் டீச்சர்க்கு நேரம் இருக்கும் பொழுது
//குட்டிபிசாசு said...
மலாய் படிக்கலாம் வாங்கனு போட்டுயிருக்கீங்க!! 1-10 இன்னைக்கு பாடமா!! பதிவு முழுக்க சும்மா மொக்கையா இருக்கே!!
இதுல கொஞ்சம் நல்ல விஷயம் இருக்கிறதுனால, கும்மி அடிச்சு கெடுக்க விரும்பல!!
வாழ்த்துக்கள்!!
//
நீங்க ரொம்ப நல்லவர்...ஹிஹி.நன்றி குட்டி பிசாசு
Post a Comment