Kelas cabut paku(கிளாஸ் சாபுட் பக்கு) ......
ஆணி புடுங்கும் வகுப்பா?
இது என்ன புது மாதிரியான வகுப்பு என்று நான் வகுப்பில் நுழைகின்றேன்.
எல்லாமே ஆணி புடுங்கும் மாணவர்களாக இருந்தார்கள்.ஆஹா இதுதான வகுப்பின் பெயர்க்கு காரணம்!!!!அனைத்து மாணவர்களும் லாப் டாப்பும் கையுமாக வகுப்பில் அமர்ந்து இருந்தார்கள்
நானும் வகுப்பை ஆரம்பித்தேன்.
"Selamat pagi murid-muridஇன்று நான் தான் உங்களுக்கு எல்லாம் மலாய் ஆசிரியை.மை ஃபிரண்ட் டீச்சர் இப்பொழுது சற்று busy.ஆகவே இன்றைய வகுப்பு என்னுடந்தான் "
“ஐயோ மலேசியா மாரியாத்தா வந்துருச்சி.நாமே எல்லாம் செத்தோம்” இது இராயல் இராம்.
“ராம் வகுப்பு நடக்கும் நேரத்துல அது என்ன பக்கத்தில் உள்ள ரஞ்சனி கூட பேச்சு?இங்கே வாங்க”
ராம் தலையில் ஒரு கொட்டு விழுகின்றது.
"நான் மை ஃபிரண்ட் cikgu மாதிரி பொறுமைசாலி இல்லை.ரொம்ப கண்டிப்பு.யாரவது தப்பு செய்தீர்கள் .... கொட்டுதான் விழும் சொல்லிட்டேன்.சரி இன்று நாம் சில மலாய் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாமா?"
“நாங்க முடியாதுன்னு சொன்னால் விடவா போறீங்க”என்று நாகை சிவா முணுமுணுக்கின்றார்.
“இந்த மலாய் வார்த்தைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகளோடு சம்பந்தம் உள்ளவைகள்.”
Cikgu மலாய் மலாய்தான் தமிழ் தமிழ் தான்.எப்படி இது இரண்டும் சம்பந்தம்பட்டவை?என்று அய்யனார் கேட்கின்றார்.
“நல்ல கேள்வி..”(பதில் தெரியமால் திரு திரு என்று முழிக்கின்றேன்)
“அது வந்து எனக்கு யாரும் என்னிடம் கேள்விகள் கேட்ககூடாது.நான் தான் கேள்விகள் கேட்கனும்.சரியா?"
....
..
.
“கார்த்திக் நீங்கதான் தான் மலாய் வகுப்பில் ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.நீங்க பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்”
“தமிழ் மொழியின் சில வார்த்தைகள் மலாய் மொழியிலும் பயன்படுத்தப்படுகின்றன.”என்று கார்த்திக் google search பயன்படுத்தி சரியான விடையைச் சொல்கின்றார்.
“ஆஹா...வாழ்த்துக்கள் கார்த்திக்”
“அடுத்த கேள்வி தமிழ் மொழி பயன்பாடு எப்படி மலாய் மொழிக்கு வந்தது?அதற்கான காரணங்கள் தெரியுமா”?
“cikgu நான் பதில் சொல்லுறேன்” என்று ஆர்வத்தோடு ஜி துள்ளி குதிக்கின்றார்.
“பூனை ஜி பொறுமை.சரி சொல்லுங்க பார்ப்போம்”
“அந்த காலத்தில் பல இந்து அரசாட்சி மலேசியாவில் இருந்தது.ராஜ ராஜ சோழன் ஒரு தமிழர் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.நாங்க எல்லாம் அவரு பரம்பரைன்னு வெளியே பேசிக்கிறாங்க cikgu"
"ஜி இது எல்லாம் வெட்டி பந்தா.அடுத்தது வேறு யாரவது சொல்லுங்கள்.சிபி நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்".
“மலாக்கா மாநிலத்திற்கு வணிகத்தின் மூலம் பல தமிழ் வணிகர்கள் வந்துள்ளனர்.இந்த வகையில் கூட தமிழ் மொழி மலாய் மொழியில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்”என்று சிபி சொன்னார்.
“ஆமாம் இதுவும் ஒரு காரணம்.மெலாயு என்ற சொல்லிலேயே தமிழ் இருப்பது தெரியுமா?உங்களுக்கு எல்லாம் தெரியாது என்று எனக்கும் தெரியும்.நானே சொல்கின்றேன் கேளுங்கள்”
“cigku எங்களுக்குத் தெரியாதது என்பதனால்தான் இங்கே வந்து கஷ்டப்படுறோம்.இப்படி அறுக்கமால் பாடத்தை நடத்துங்கள்.அடுத்தது நாங்க எல்லாரும் சிவாஜி படம் பார்க்க போகனும்.சீக்கிரம் வகுப்பை முடிங்க”என்று தேவ் கத்த ஆரம்பித்தார்.
“தேவ் உங்களுக்கு கச்சேரி வகுப்பு முடிந்து நடக்ககும்.சரி இதுதான் காரணம்”
மலை+ஊர்=மலையூர்
இமயமாலை தொடர்தான் நம் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பு போல் இருக்கின்றது.இந்த மலைத்தொடரை வைத்துதான் மெலாயு என்ற சொல் வந்ததாக நம்ப படுகின்றது,ஆங்கிலேயேர்கள் இந்த சொல்லை சொல்லும் பொழுது மெலாயுவை மெலாயா(Malaya)என்று மாற்றி சொல்லி இந்த நாட்டினின் பெயரை மாற்றிவிட்டார்கள் என்றும் நம்படுகின்றது
“Cigku நீங்க இவ்வளவு பெரிய அறிவாளியா”என்று வெட்டிபயல் கேட்கின்றார்.
“அது இப்போதான் உங்களுக்குத் தெரியுமா?என்ன பண்ணுவது பல அறிவாளிகள் எல்லாம் இலைமறை காயாகதான் இருக்கின்றார்கள்.அடுத்த கேள்விக்கு நான் போகின்றேன் murid murid”
"நடுவுல இது அறிவாளின்னு சந்துல சிந்து பாடுது.எல்லாம் நம்ப நிலமை"என்று my day gops அனைவருக்கும் g talk வழியாக சொல்கின்றார்
"என்ன கணினியை வெறிச்சு பார்க்குறீங்க.பாடத்தை கவனிங்கப்பா."
“பூமிபுத்திரா(bumi putera).இதுவும் ஒரு தமிழ் வார்த்தைதான்.யாரவது விளக்கம் தர முடியுமா”
அப்பொழுது CVR ஜன்னலுக்கு வெளியே வெறித்து பார்க்கின்றார்.
“தம்பி.Hey தம்பி.என்ன வேடிக்கை பார்க்குறீங்க.வகுப்பைக் கவனிக்க மாட்டீங்களா”
“நான் ஒரு dreamer.கனவு காணும் பொழுது தொந்தரவு பண்ணதீங்க”
“கனவு எல்லாம் வகுப்பில் காண கூடாது.வகுப்பு முடிந்தது காணுங்கள்.மற்ற மலாய் வகுப்பு பக்கமே நீங்கள் போகவில்லையமே.அதற்கு தண்டனை இன்னும் ஒரு வாரத்தில் மற்ற வகுப்பில் நடந்த பாடங்களை மனப்பாடம் செய்யுங்கள்.சரியாக மனப்பாடம் செய்யவில்லை.Bench க்கு மேலே நிற்க வைப்பேன்.ஜாக்கிரதை.சரி இந்தாங்க ஒரு குட்டு”
“ச்சே இந்த லூசு தொல்லை தாங்க முடியவில்லை.எங்கே போனாலும் வந்து உயிரை வாங்குது.அப்துல் கலாமே இளைஞர்களே கனவு காணுங்கள் என்று சொல்லி இருக்கார்.இது நம்பளை திட்டிட்டு போகுது”என்று மனதிற்குள் CVR திட்டிக் கொள்கின்றார்.
“cikgu பூமி என்றால் தமிழிலும் பூமி இல்லை மண் என்று வைத்துக் கொள்ளலாம்.புத்திரா என்றால் புத்திரன்.மைந்தன் என்று வைத்துக் கொள்ளலாம்.ஆகவே மண்ணின் மைந்தர்கள்தான் பூமி புத்திரா”என்று அருண் சரியாக பதில் அளிக்கின்றார்.
“அப்பா.. உங்களில் சிலர் வகுப்பில் கவனத்தோடு தான் இருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி”
"ராகவன் உங்களால் மலாய் மொழியில் பயன்படுத்த பட்ட சில தமிழ் வார்த்தைகளைச் சொல்ல முடியுமா?
"டிலாராங் மாசுக்?"
"என்ன dilarang masuk ஆ?உங்களை மலேசியா பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க சரி.அதை தவிர வேறு எந்த வார்த்தையும் தெரியாது போல் இருக்கின்றதே"“சியாம் தலையில் என்ன helmet?”
“எல்லாம் பூரிக்கட்டைக்கு பயம்தான் cikgu”
“பூரிக்கட்டையா?!ஏங்கே போனாலும் கழற்ற மாட்டீங்க போல் இருக்கு.சரி நீங்க ஒரு சில உதாரணங்கள் சொல்ல முடியுமா”
“தோ சொல்லுறேன் cikgu”
சுவாமி(suami) என்றால் கணவர் aka ரங்கமணி
ராஜா(raja) என்றால் அரசர்
கேடாய்(kedai) என்றால் கடை
சரி murid-murid நேரம் ஆகிவிட்டது.டீச்சர் அடுத்த வகுப்புச் செல்ல வேண்டும்.ஆகவே இத்தோடு வகுப்பை முடித்துக் கொள்ளலாம்.இன்னும் சில வார்த்தைகளைக் குறிப்புகளில் கொடுத்து உள்ளேன்.
Putu (புட்டு) -புட்டு(உணவு வகை)
Kapal(கப்பால்) - கப்பல்
Kupang(கூப்பாங்) - குப்பம்
Kotak(கோத்தா) - கொட்டான்
Satay(சாத்தே) – சதை
Harimau (Tiger)(ஹாரிமாவ்) - அரிமா
Singa(சிங்கா) - சிங்கம்
Perahu(பேராகு) -படகு
Taulan(தௌலன்) - தோழன்
Neschaya(நெஸ்சாயா) - நிச்சயம்
Aniyaya(அநியாய) - அநியாயம்
Sama(சாமா) - சமம்
Segala(செகலா) - சகலம்
Kerana(கெரனா)- காரணம்
Manga(மாங்கா)-மாங்காய்
Kari(கறி)-கறி
மலாய் மொழியில் தமிழ் மொழி மட்டும் இல்லமால் இன்னும் பல மொழிகளின் பயன்படும் உள்ளது.முடிந்தால் இது எல்லாம் மற்றொரு நாள் பார்ப்போம்."
சரி இன்றைய பாடத்தில் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா?
“cikgu ஒரு சந்தேகம்”என்று ஜொள்ளுப்பாண்டி கேட்கின்றார்
“எல்லாம் சொல்லி கொடுத்தீங்க சரி.இந்த ஐ லவ் யூ மட்டும் மலாயில் இப்படி சொல்லுவது என்று சொல்லி தரவீங்களா?”
“அடப்பாவி.இந்த வகுப்பில் உள்ள மற்ற நல்ல மாணவர்களையும் கெடுத்து விடுவீங்க போல் இருக்கே”
உ
"Cikgu இந்த ஜொள்ளு மலாயில் எப்படி சொல்லுவாங்க.அதையாச்சும் சொல்லிட்டு போங்க.எனது ஜொள்ளுப்பணி மலேசியா அளவில் துவங்கலாம் என்று இருக்கின்றேன்"என்று ஜொள்ளுப்பாண்டி நச்சரிக்க ஆரம்பித்தார்.
மணி அடித்தது.
அப்பாடா.... ஆளை விடுங்க சாமீகளா என்று தலை தெறிக்க அவர்கள் ஓடுவதற்கு பதிலாக நான் ஒடி விட்டேன்.அடுத்த வகுப்பில் மை ஃபிரண்டுடன் மலாய் வகுப்பு ஆரம்பம்.சென்று வருகின்றேன்.
murid murid-மாணவர்கள்
cikgu=ஆசிரியர்
paku= ஆணி
cabut=புடுங்குதல்
kelas=வகுப்பு
(இது தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு மீள்பார்வை)
18 மறுமொழிகள்:
present chiku..
பாடம் நல்லா இருந்திச்சு மக்கு!! ஓ சாரி சிக்கு (Sigku) :-D
நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி தகவலகள் தந்திருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)
ஆஹா இப்பட மலாயில் வரும் தமிழ் வார்த்தைகளை புட்டு புட்டா சொல்லி தந்து இருக்கீங்களே..நன்றி சிக்கு...:)
cikgu,
நல்லா தான் பாடம் எடுக்குறீங்க ஆனா கொஞ்சம் violent இருக்கீங்க. தமிழ்நாட்டுல இப்ப எல்லாம் cikguங்க அடிச்சா உள்ள புடிச்சி போட்டுறாங்களாம் இல்லாட்டி பசங்க எல்லாம் சேர்ந்து 5,10ன்னு போட்டு acid வாங்கி cikguங்க மேல ஊத்துறாங்களாம் பாத்துகோங்க. அதுவும் மதுரை பக்கம் பசங்க ரொம்ப மோசம்.
// My days(Gops) said...
present chiku.. //
சரியா வகுப்பு மட்டும்தான் வருகின்றீர்கள் போல இருக்கு
chiku wrong spelling
cikgu அது....
பாடம் நடக்குற அப்போ தூங்கதீங்க கோப்ஸ்
//CVR said...
பாடம் நல்லா இருந்திச்சு மக்கு!! ஓ சாரி சிக்கு (Sigku) :-D
நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி தகவலகள் தந்திருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)
//
sigku vaa?தலையில் நிஜமாக கொட்டனும் போல இருக்கு!வாழ்த்துகளுக்கு நன்றி
// balar said...
ஆஹா இப்பட மலாயில் வரும் தமிழ் வார்த்தைகளை புட்டு புட்டா சொல்லி தந்து இருக்கீங்களே..நன்றி சிக்கு...:)
//
புட்டும் இருக்கு.putu mayam என்று ஒரு உணவு..அதுவும் தமிழ் :-)
சிக்கு ஒரு பழம்.எல்லாரும் வகுப்பில் தூங்குகின்றீர்கள் என்று நன்றாக தெரிகின்றது.
அது cikgu cikgu cikgu....
//cikgu,
நல்லா தான் பாடம் எடுக்குறீங்க ஆனா கொஞ்சம் violent இருக்கீங்க. தமிழ்நாட்டுல இப்ப எல்லாம் cikguங்க அடிச்சா உள்ள புடிச்சி போட்டுறாங்களாம் இல்லாட்டி பசங்க எல்லாம் சேர்ந்து 5,10ன்னு போட்டு acid வாங்கி cikguங்க மேல ஊத்துறாங்களாம் பாத்துகோங்க. அதுவும் மதுரை பக்கம் பசங்க ரொம்ப மோசம்.
//
எல்லாம் வளர்ந்த பசங்க.நல்ல அடிக்கலாம்.
சந்தோஷ் நீங்க எல்லாம் acid வாங்கி அடிக்கும் ரகம் என்று தெரியும்.அதுனாலதான் உங்களை வகுப்பிலேயே சேர்க்க வில்லை.
//எல்லாம் வளர்ந்த பசங்க.நல்ல அடிக்கலாம்.
சந்தோஷ் நீங்க எல்லாம் acid வாங்கி அடிக்கும் ரகம் என்று தெரியும்.அதுனாலதான் உங்களை வகுப்பிலேயே சேர்க்க வில்லை.//
சேக்காட்டி என்ன ஆளை வச்சி அடிப்போமுல்ல. நல்ல வேளை சேக்கலை இல்லாட்டி, ராயலுக்கு நேர்ந்த நிலைமையை தமிழகம் பூரா சொல்லி ரணகளம் ஆக்கி இருப்போம். பாவம் அறியாத பச்ச புள்ளங்களை எல்லாம் சேத்து வெச்சி மிரட்டியா கிளாஸ் எடுக்கறீங்க.
/ஆணி புடுங்கும் வகுப்பா?
இது என்ன புது மாதிரியான வகுப்பு என்று நான் வகுப்பில் நுழைகின்றேன்.
எல்லாமே ஆணி புடுங்கும் மாணவர்களாக இருந்தார்கள்.//
aaama neenga deacher aaani thaaaaney pudungureeenga.. appo y y class ku varala?
//அனைத்து மாணவர்களும் லாப் டாப்பும் கையுமாக வகுப்பில் அமர்ந்து இருந்தார்கள்//
ada, naan கை'la ellam அமர்ந்து irukala.... anga orama oru bench irundhuchi. adhula thaaan அமர்ந்து irundhen... [:P]
//மலேசியா மாரியாத்தா வந்துருச்சி.நாமே எல்லாம் செத்தோம்” இது இராயல் இராம்//
இராயல் இராம், nalla velai neenga solliteeenga...... inga en pakkathula ukkaandhu irukum inoruthar, malaysia muniamma'nu sollla vandhutaaaru.. he heh
//சேக்காட்டி என்ன ஆளை வச்சி அடிப்போமுல்ல. நல்ல வேளை சேக்கலை இல்லாட்டி, ராயலுக்கு நேர்ந்த நிலைமையை தமிழகம் பூரா சொல்லி ரணகளம் ஆக்கி இருப்போம். பாவம் அறியாத பச்ச புள்ளங்களை எல்லாம் சேத்து வெச்சி மிரட்டியா கிளாஸ் எடுக்கறீங்க.
//
hehe..காமெடி நல்ல வருது.நம்ப இராயலு பச்சை புள்ளையா?அவர் சொல்லிதான் இதை நான் எழுதினேன்.
கோப்ஸ்
நீங்க மலாய் வகுப்பில் இருந்து உதைக்கப்பட்டீர்கள்.means kicked out.வாழ்க எமது ஆங்கில் புலமை.நீங்க பண்ணுற வாலுதனத்தில் வகுப்பே இரண்ட்டாச்சு
புதுசா புட்டு வித்த டீச்சர் வர்ராங்கன்னு சொன்னாங்க. அது நீங்கதான்னு இப்பதான் தெரிஞ்சது. அதான் பாடத்தப் புட்டுல தொடங்குனதோ! ஒங்கூர்ல புட்டுல தேங்காப்பூவும் ஜீனியும் கலந்துதான சாப்பிடுவீங்க? சமயத்துல அள்ளி வாயுல திணிச்சிக்கிட்டா தொண்டை "டிலாரங் மாசூக்"னு சொல்லும். :)
Raja Raja Chozan malaysiala irunthaara?? sollave illa??
// CVR said...
பாடம் நல்லா இருந்திச்சு மக்கு!! ஓ சாரி சிக்கு (Sigku) :-D//
ROTFL CVR.. kalakki potteenga... epdi ungalukku antha unmai therinjathu??
//ஒங்கூர்ல புட்டுல தேங்காப்பூவும் ஜீனியும் கலந்துதான சாப்பிடுவீங்க? சமயத்துல அள்ளி வாயுல திணிச்சிக்கிட்டா தொண்டை "டிலாரங் மாசூக்"னு சொல்லும். :)
//
அடுத்த தடவை வந்த சொல்லுங்க. belacan போட்ட nasi lemak வாங்கி தரேன் :D
/// ஜி said...
Raja Raja Chozan malaysiala irunthaara?? sollave illa??
// CVR said...
பாடம் நல்லா இருந்திச்சு மக்கு!! ஓ சாரி சிக்கு (Sigku) :-D//
ROTFL CVR.. kalakki potteenga... epdi ungalukku antha unmai therinjathu??
//
கீதா அண்ணி விஷயம் தெரிந்தது இல்லையா அப்போதான் இதுவும் தெரிந்தது :-)
Post a Comment