என் அருமை தமிழ் நெஞ்சங்களே!!(எல்லாம் பாசம்,கண்டுக்கதீங்க)
எல்லாரும் மை ஃபிரண்ட் அக்காவிற்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டீங்களா?சரி இன்று நான் எழுத போவது எங்கள் ஊர் 'லா' தமிழைப் பற்றி...
சில வருடங்களுக்கு முன்பு நான் பேச ஆரம்பித்தலே எனது இந்திய நண்பர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
"எப்படி'லா' இருங்கீங்க"
"கையீ(guy) ஜோக்கா(joke) பேசு'லா'"
இப்படி எல்லாம் சற்று அதிகமாக பேசி இருக்கின்றேன்.நான் 'லா' என்று பேச ஆரம்பித்தலே எனக்குக் கிடைப்பது கிண்டலும் கேலியும்தான்.ஆகவே முடிந்த வரையில் "லா" என்பதைப் பயன்படுத்தமால் இருப்பேன்.இப்பொழுது எல்லாம் நான் பேசும் தமிழில் 'லா' என்ற வார்த்தையே அதிகம் வருவது இல்லை.இதை வைத்தே எனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்கள் நான் தமிழ் நாட்டிலிருந்து வந்து இருக்கின்றேன் என்று முடிவு கட்டி விட்டார்கள்.'லா'தமிழின் மகிமையை பாருங்கள்.இதை வைத்தே யார் எந்த நாட்டு தமிழர் என்று தீர்மானித்து விடுகின்றார்கள்.
என்னிடம் பலர் கேட்கும் கேள்வி அது என்ன கடைசியில் 'லா' என்று சேர்த்துக் கொள்கின்றீர்கள்?அது என்ன தமிழ் மொழியா?இது எப்படி வந்தது?இன்று அதைப் பற்றி உங்களுக்கு சொல்கின்றேன்.
மலாய் மொழியில் பேசும் பொழுது 'லா' என்பதை கடைசியாக இணைத்துக் கொள்வார்கள்.
இது அந்த வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க பயன்படுத்துவார்கள்.இப்பொழுது மலாய் மொழியில் உள்ளே வா என்பதற்க்கு மாசூக்( masuk).வரச் சொல்லியும் வரமால் இருந்தால் மாசூக்'லா' என்பார்கள்.நாங்கள் இந்த நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாக இருக்கின்றோம்.எப்படியோ கொஞ்சம் மலாய் மொழியும் தமிழ் மொழியோடு கலந்து விட்டது.தமிழ் மொழி மட்டும் இல்லை,இது எங்கள் ஊர் ஆங்கிலத்தோடும் கலந்து விட்டது.எங்கள் ஊர் ஆங்கிலத்தை "Manglish" என்பார்கள்.
தமிழ் நாட்டிலில் இடத்துக்கு இடம் தமிழ் மொழி பேசுவது மாறுப்படும் பொழுது,நாட்டிக்கு நாடு மாறதா என்ன?இதுதான் 'லா' தமிழுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.சில சமயம் வெறும் 'லா' மட்டும் தமிழில் வராது.கூடவே சில மலாய் வார்த்தைகளும் கலந்து வந்துவிடும்.நான் சில சமயம் இப்படி கலப்பட தமிழ் பேசினால் எல்லாரும் முழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அப்புறம்தான் ஞாபகம் வரும் நான் பேசியது மலாய் வார்த்தை.சரி நான் கிளம்புகின்றேன்'லா'.அடுத்த பதிவில் சந்திப்போம்.
Saturday, July 21, 2007
என்ன"லா" தமிழ் இது??
Subscribe to:
Post Comments (Atom)
25 மறுமொழிகள்:
ஆஹா! இது இந்த லா வா? நான் இது திருநெல்வேலி லே மாதிரினு நினைச்சேன்!
கமென்ட்ஸ் மாடரெசன் இல்லாமா வச்சிருக்கீங்களே..." நீங்க ரொம்ப நல்லவருங்க"..
யா"லா"....
இந்த "கென்" பத்தி தெரியுமா...
இது செய்ய முடியுமா..அப்படின்னு கேட்டா... " ஐ கென் டூ இட்" " யு கென் டூ இட்" க்கு பதிலா..சிம்பிளா "கென்"
சொல்லிட்டு போராங்க.. தமிழர் , மலாய் இருவருமே...இதை பத்தியும் எழுதுங்க
"ஷகி"லா ன்னா எதாச்சும் கெட்ட வார்த்தயா?
//Dreamzz said...
ஆஹா! இது இந்த லா வா? நான் இது திருநெல்வேலி லே மாதிரினு நினைச்சேன்!
//
tube light endru proved:)
//கமென்ட்ஸ் மாடரெசன் இல்லாமா வச்சிருக்கீங்களே..." நீங்க ரொம்ப நல்லவருங்க"..
யா"லா"....
இந்த "கென்" பத்தி தெரியுமா...
இது செய்ய முடியுமா..அப்படின்னு கேட்டா... " ஐ கென் டூ இட்" " யு கென் டூ இட்" க்கு பதிலா..சிம்பிளா "கென்"
சொல்லிட்டு போராங்க.. தமிழர் , மலாய் இருவருமே...இதை பத்தியும் எழுதுங்க //
comment moderation irrukunga...
hehe.In post I give one link under the word 'manglish' you can find more information about malaysian languages.
//"ஷகி"லா ன்னா எதாச்சும் கெட்ட வார்த்தயா?//
thambi sir,athu depends on you :))
ஷகி"லா ன்னா எதாச்சும் கெட்ட வார்த்தயா?
ஆமா லா
சகி லா ன்னாதான் தமிழ் வார்த்தை
நல்லா இருந்திச்சிலா! (பயன்பாடு சரிதானே?)
அன்புடன்,
மா சிவகுமார்
அது என்ன 'கென் லா' சொல்லாம விட்டது யாரு?
//அய்யனார் said...
ஷகி"லா ன்னா எதாச்சும் கெட்ட வார்த்தயா?
ஆமா லா
சகி லா ன்னாதான் தமிழ் வார்த்தை
//
:S
samy ungaluku ellam en mela kovama?yaarupa ivanga ellam...
//மா சிவகுமார் said...
நல்லா இருந்திச்சிலா! (பயன்பாடு சரிதானே?)
அன்புடன்,
மா சிவகுமார்
///
you are correct lah
//துளசி கோபால் said...
அது என்ன 'கென் லா' சொல்லாம விட்டது யாரு?
//
yaaru?hehe.innaiku post only about tamil.Next time english eppadi malaysian style leh pesalam nu solli tharen lah
/*comment moderation irrukunga...
hehe.*/
மன்னிக்கவும்...அது..வேற பதிவிற்கு எழுதியது..காப்பி பேஸ்டில் சிக்கி இங்கே வந்து விட்டது..
/*In post I give one link under the word 'manglish' you can find more information about malaysian languages. */
தந்தால் "சினாங்காக" இருக்கும்
/*அது என்ன 'கென் லா' சொல்லாம விட்டது யாரு? */
அது கேன்லா இல்லைங்க.."கேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்" அப்படின்னு இழுக்கனும்
//தந்தால் "சினாங்காக" இருக்கும்//
sari lah.Next week post poduren lah. :))
/*sari lah.Next week post poduren lah. :)) */
நன்றி"லா"
Sundal enbathu ketta vaarthaya?
//ilyas said...
Sundal enbathu ketta vaarthaya?
//
aiya samy...ungaluku en mela ethachum kovama?aalai vidunga samy....
//aiya samy...ungaluku en mela ethachum kovama?aalai vidunga samy....//
yean malasysia karavanga ellarum intha varthaye keta ippadi patharureenga? artham sonna pinnadi use pannama irupom le
ஆமாம் லா!!
நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்!!
சரியா ஒரு பதிவப்போட்டு புட்டு புட்டு வெச்சிட்டீங்க அக்கா!!
வாழ்த்துக்கள்!! :-)
/yean malasysia karavanga ellarum intha varthaye keta ippadi patharureenga? artham sonna pinnadi use pannama irupom le //
சுண்டல் சாமிக்கு எல்லாம் படைப்பாங்களே அதுவா?அது கெட்ட வார்த்தை இல்லை.அது என் சாமீ என்கிட்ட கேட்குறீங்க :(
அது நல்ல வார்த்தைதான் எனக்குத் தெரிந்த வரையிலும்,எதாச்சும் உள் குத்து வெளிகுத்து எல்லாம் எனக்குத் தெரியாது.ஒகேவா? :))
/ஆமாம் லா!!
நானும் ரொம்ப நாளா கேக்கனும்னு நெனைச்சிட்டு இருந்தேன்!!
சரியா ஒரு பதிவப்போட்டு புட்டு புட்டு வெச்சிட்டீங்க அக்கா!!
வாழ்த்துக்கள்!! :-) //
அண்ணா இன்னும் புட்டு புட்டு வைக்கவில்லை.இது ரொம்ப சிறிய பதிவு.இன்னும் இருக்கு :)
மலேசிய தமிழர்கள் தமிழில் "லா" போட்டு பேசிவதின
காரணத்தை விளக்கியதற்கு நன்றி துர்கா.
இப்ப தான் தெரியுது "ஊ ல ல லா." வந்ததின் காரணம்..:))
எனக்கு தெரிஞ்சு இங்கே சிங்கப்பூர் வந்து வேலை பார்த்து விட்டு நிறைய சம்பாதித்து விட்டு (ரொம்ப வருஷத்திற்கு முன்னால் உள்ள செய்தி வலைப்பதிவு பாணியில் 'சமீபத்தில்' என்று கூட சொல்லலாம்) ஊருக்கு போய் வெளிநாட்டு சிகரெட் வாங்கி தான் குடிப்பாராம், பேச்சுக்கு பேச்சு 'லா' போட்டு தான் பேசுவாராம். கையில் இருந்த காசு குறைய ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் சிகரெட் வாங்கி குடிக்க ஆரம்பித்து பீடி சுருட்டு என்று தேய்ந்து கடைசியில் ஒரு கூட்டாளியிடம் 'ஒரு பீடி இருந்தா வாங்கி தாருமே..' என்று எங்க ஊரான நாகூர் பாணிக்கே இறங்கி வந்திருக்கிறார். அதற்கு கூட்டாளி இப்படி பதில் சொல்லி இருக்கிறார், 'சிங்கப்பூர்லேந்து வந்த புதுசுல பேச்சுக்கு பேச்சு 'லா' 'லா'ன்டு சொன்னீயோம், இப்ப துண்டு பீடிக்கே 'லோ' 'லோ'ன்டு அலையறீயோம்' இதுக்கு தாங்கணி எப்போதும் எப்போதும் போலவே இருக்கணும்' என்று.
கலக்க"லா" எழுதி அசத்துறீங்க"லா"? உங்களுக்கு ரெண்டு பலா பழம் வாங்கி கப்பல்ல அனுப்பியிருக்கன்"லா"!
Even after 100 years still Tamil lives there.That's amazing.
Post a Comment