Saturday, March 24, 2007

எங்க ஏரியா.. உள்ளே வாங்க!

இது எங்க ஏரியா! உள்ளே வரலாம் தாராளமாக..

எல்லாரும் எல்லா நாட்டைப் பற்றியும் எழுதுறாங்க.. ஆனால், தமிழர்கள் அதிகமாய் வாழும் மலேசியாவை பற்றி ஒரு தகவலும் இல்லை.

இங்கே இவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
என்ன செய்கிறார்கள்?
அவர்களின் வாழ்க்கை நடைமுறைதான் என்ன?

இங்கே இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் வாழ்கிறார்களாமே?
இவர்கள் ஒற்றுமையாதான் வாழ்கிறார்களா?
இல்லை மற்ற நாடுகளில் மதச் சண்டை ஜாதி சண்டைதான் இருக்கா?
ஒற்றுமையாய்தான் வாழ்கிறார்கள்!!!!
ஆனால், எப்படி?

சரி, இந்த ஊருக்கு எப்படி சீனர்களும் இந்தியர்களும் வந்தனர்?
எப்போது வந்தனர்?
ஏன் வந்தனர்?
அப்போது இவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னென்ன?
அந்த கஷ்டங்கள் இப்போது இருக்கிறதா? இல்லையா?

மலேசியா ஒரு காலத்தில் மலாயா என்றழைக்கப்பட்டதாமே?
ஏன் மலாயா மலேசியா ஆனது?
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் என்ன சம்பந்தம்?

மலேசியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன?
எத்தனை கூட்டரசு பிரதேசங்கள் இருக்கின்றன?
அதில் எது சிலிக்கோன் சிட்டி? எது கலாச்சார ஊர்?

இங்கே என்னென்ன சுற்றுலா தலங்கள் இருக்கின்றன?
அந்தந்த இடங்களுக்கு எப்படி போக வேண்டும்?
பொது போக்குவரத்து வசதியும் இங்கே எப்படி இருக்கின்றது?
இங்கே எப்படிப்பட்ட உணவுகள் கிடைக்கும்?
ஒவ்வொரு இனங்களின் சிறப்பு வாய்ந்த உணவுகள் என்ன?
இங்கே என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது?
ஏன் இந்தியர் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுகிறார்?
ஏன் சீனர் தீபாவளியை கொண்டாடுகிறார்?
அந்த கொண்டாட்டங்களில் ஒவ்வொரு இனத்தவரின் பங்குகள் என்ன?

இந்தியாவில் வாழும் இந்தியருக்கும் மலேசியாவில் வாழும் இந்தியருக்கும் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?
இங்கே கலாச்சாரம் எப்படி காக்கப்ப்டுகிறது?
கலாச்சார சீரழிவுகள் இருக்கிறதா?

இப்போது மலேசியாவின் நிலை என்ன?
உருதியான அரசியல் ?
நிலையான பொருளாதாரம்?
ஒற்றுமையான சமூகம்?

இப்படி எத்தனையோ கேள்விகள் உங்கள் மனசுக்குள் இருக்கலாம். பலர் நேரடியாகவும் என்னிடம் கேட்டிருக்கீங்க. பூங்காவில் மலேசியாவை பற்றி தொடர் எழுத சொல்லி மதி அவர்களும் என்னை கேட்டுக் கொண்டார். அப்பொழுது என்னால் எழுத முடியாத சூழ்நிலை. என்னை விட அருமையாக எழுதிக் கொண்டிருக்கும் துர்காவை கேட்டால் "நான் எப்படி தனியா எழுதுறது?"ன்னு கேட்டார்.

ஆனால், எங்கள் இரண்டு பேரின் ஒவ்வொரு பதிவிலும் மலேசியாவை பற்றி ஏதாவது விஷயங்கள் இருந்துக்கொண்டே இருந்ததால், நண்பர்களின் வேண்டுகோள்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. மலேசியா பற்றிய ஒரு கையேடாக அமையவேண்டும் என்றும் சிலர் ஆசைப் பட்டனர்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதுதான் கார்த்திக் என்னிடம் "ஏன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எழுதகூடாதா?"ன்னு கேட்டார். இந்த யோசனை ஒரு நல்ல யோசனையாக எங்கள் இருவருக்குமே தோண்ற நாங்கள் இந்த வலை ஆரம்பித்தோம்.

வரலாறிலிருந்து இப்போதைய நாட்டு நடப்பு வரை.. உணவிலிருந்து உடைவரை.. இசையிலிருந்து படங்கள் வரை.. இனத்திலிருந்து இடங்கள் வரை எல்லாவற்றையுமே நாங்கள் இங்கே உங்களுக்காக நாங்க ஜில்லுன்னு கூலா எழுத போகிறோம். (இதை தவிர்த்து வேறு ஏதாவதைப் பற்றி நாங்கள் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது).

துர்கா நன்றாக கதை சொல்வார் என்பது நாமெல்லாம் அறிந்ததே! ஆதலால், மலேசியாவின் வரலாறை அவர் பாட்டி வடை சுட்ட கதை.. இல்லை இல்லை.. பாட்டி மலாயா வந்த கதையை காமேடியாக சொல்ல போகிறார். விரைவில்!

காத்திருங்கள்!

42 மறுமொழிகள்:

')) said...

மிகவும் எதிர்பார்த்த ஒரு பக்கம்.. இப்போது வேண்டுமானாலும் பக்கமாய் இருக்கலாம்.. பின்னால் இது ஒரு புதையல்.. மேலேசியப் புதையல்..

உயர்வான சிந்தனையோடு மலேசியாவின் நீள அகலத்தை உலகுக்கு சொல்லப் போகும், இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் மை பிரண்ட், துர்கா

')) said...

ஒரு நாட்டின் கலாச்சார மாற்றங்களையும், நடைமுறை விஷயங்களையும் பதியப் போகும் இந்த காலப்பெட்டகத்துள், இசை, கல்வி, அரசியல், இயற்கையின் காலடி தடங்கள் எல்லாம் இருக்கட்டும்.. மனிதனுக்கு ஒரு டைரி போல மலேசியாவிற்கு இந்த பக்கமாய் இருக்கட்டும்..

வாழ்த்துக்கள் இருவருக்கும்!

')) said...

என்னென்ன எழுதப்போறீங்கன்னு சொல்லியிருக்க பட்டியலே ஒரு பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது.. துர்காவின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்!

')) said...

கண்டிப்பாக இந்த பதிவு வெற்றி விழா தாண்டி ஓடும் என்பதனை ஆணித்தரமாகக் கூறிக் கொள்ள விழைகிறேன். ஏனென்று கேட்கும் எதிர் கட்சியினர் ஒன்றை மறந்து விட்டனர்.

'ஜி' என்று என்னுடைய பெயரில் ஆரம்பிக்கும் எதுவும் தோல்வியடைந்ததென்ற சரித்திரப் பக்கங்கள் ஆதும் இதுவரை இல்லை. அதைப்போல்தான் இப்பதிவும்.

')) said...

மலேசியாவின் மக்கள், குறிப்பாக பெண்களைப் பற்றியும் எழுதுவீர்கள்தானே?? ஒரு கன்ஃபர்மேஷனுக்கு கேட்டேன் :)))

')) said...

வாழ்த்துக்கள்!

')) said...

//மலேசியாவின் மக்கள், குறிப்பாக பெண்களைப் பற்றியும் எழுதுவீர்கள்தானே?? ஒரு கன்ஃபர்மேஷனுக்கு கேட்டேன் :))) //

என் இனம்டா நீ....

')) said...

//'ஜி' என்று என்னுடைய பெயரில் ஆரம்பிக்கும் எதுவும் தோல்வியடைந்ததென்ற சரித்திரப் பக்கங்கள் ஆதும் இதுவரை இல்லை. அதைப்போல்தான் இப்பதிவும். //

ஜிம்பாவே கிரிக்கெட் டீமும் இதில் அடங்குமா?

')) said...

//ஜிம்பாவே கிரிக்கெட் டீமும் இதில் அடங்குமா?//

இதில் இலக்கணப் பிழை இருக்கிறது. இது தமிழில் சிம்பாவே என்று இருந்திருக்க வேண்டும். அதனால் இது செல்லாது, செல்லாது.

')) said...

வாழ்த்துக்கள் மை ஃப்ரண்ட்,துர்கா
பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த வலப்பூவின் மூலமாக வரும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்! :-)

')) said...

நல்ல யோசனைங்க.. நல்லா செய்யுங்க.. வாழ்த்துக்கள்..

')) said...

//ஜிம்பாவே கிரிக்கெட் டீமும் இதில் அடங்குமா?
//

ஏப்படி கொக்கி போட்டான் பாருப்பா என் மாப்ஸ்..

ஜி, என்ன தான் ஜிம்பாப்வே வை சிம்பாப்வேன்னு சொன்னாலும் தப்பிக்க முடியாதுல

')) said...

13th

')) said...

my friend paaartheeengala..

kidaikiradhu kidaikaaama irukaadhu

13 th inga kidaichudichi...

')) said...

attendance varen....

')) said...

hai :) thulasi teacher new zealand pathi sonnadha pola neenga malaysia! koodiya seekiram naanum poduren idhu madhiri ;)

')) said...

வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட் ;-)

வாழ்த்துக்கள் துர்கா ;-)

')) said...

தலைவர் சொன்னாது போல இது ஒரு புதையல் தான்.

துர்கா.....சீக்கிரம் பாட்டியை குமரியா ஆக்குங்கள் ;-)))

')) said...

ஆர்வத்தை தூண்டி இருக்கறீங்க.. சீக்கிரம் ஆரம்பிங்க.. நாங்களும் மலேசியா பாத்தது போல ஆகும்.. வாழ்த்துக்கள்

')) said...

நல்ல முயற்சி..தஙகளுக்கும் துர்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

')) said...

இது இது இது!!! இதத்தான் நான் எதிர்பார்த்தேன். வாழ்த்துகள் தோழிகளே!!!

ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

பொன்ஸின் 'சக்தி கொடு'விலும் சேர்த்துவிடுகிறேன்.

(இiது ஒரு அவசரத்தில் இடும் சந்தோஷப்பின்னூட்டம். கருத்துகள்+யோசனைகளுடன் விரைவில் வருகிறேன். ;) )

-மதி

')) said...

my friend n durga...more happy to c this blog thru karthik's page...super nalla ezhundhunga rendu perum...i will luv to read it as i hv njyd a part of it...

')) said...

very nice one. supera malaysia pathi kadaingo :)

indha pakkathula ennoda attendance illena epdi.aproma vandhu padikkiren chi therijikkiren malaysia pathi :P

')) said...

அருமையான ஒரு முயற்ச்சி...தொடரட்டும் உங்கள் சேவை :-)

')) said...

அப்படியே நாங்க எல்லாம் மலேசியா வர எப்போ டிக்கட் எடுத்து அணுப்ப போறீங்கன்னும் சொல்லிடுங்க...:-)

Anonymous said...

மை ஃபிரண்ட் நம்ப ரெண்டு பேர் இருக்கும் போது மலேசியா பெண்களைப் பத்தி சந்தேகம் வரலாமா நம் நண்பர்களுக்கு?

')) said...

@மு.கார்த்திகேயன்:

//மிகவும் எதிர்பார்த்த ஒரு பக்கம்.. இப்போது வேண்டுமானாலும் பக்கமாய் இருக்கலாம்.. பின்னால் இது ஒரு புதையல்.. மேலேசியப் புதையல்..//

நன்றி மு.கா. இது உங்களின் தூண்டுதலில் ஆரம்பித்த ஒரு வலைதான் என்பதில் சொல்லிக்கொள்ள பெருமைபடுகிறேன். :-)


//மனிதனுக்கு ஒரு டைரி போல மலேசியாவிற்கு இந்த பக்கமாய் இருக்கட்டும்..//

நன்றி. :-)


//துர்காவின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்! //

போட்டாச்சு.. அவங்க 3 பதிவை வருசையா போட்டிருக்காங்க. :-)

')) said...

@ஜி - Z:

//கண்டிப்பாக இந்த பதிவு வெற்றி விழா தாண்டி ஓடும் என்பதனை ஆணித்தரமாகக் கூறிக் கொள்ள விழைகிறேன். ஏனென்று கேட்கும் எதிர் கட்சியினர் ஒன்றை மறந்து விட்டனர்.//

நன்றி ஜி. அது என்ன ஜி?

//'ஜி' என்று என்னுடைய பெயரில் ஆரம்பிக்கும் எதுவும் தோல்வியடைந்ததென்ற சரித்திரப் பக்கங்கள் ஆதும் இதுவரை இல்லை. அதைப்போல்தான் இப்பதிவும். //

ஓ! உங்க வலை ஒரு வெற்றி பதிவுன்னு சொல்லாமல் சொல்றீங்க.. (உங்க வலை ஒரு வெற்றிபெற்ற வலைதான். இதில் சந்தேகம் எனக்கில்லை.):-)

@ஜி - Z:

//மலேசியாவின் மக்கள், குறிப்பாக பெண்களைப் பற்றியும் எழுதுவீர்கள்தானே?? ஒரு கன்ஃபர்மேஷனுக்கு கேட்டேன் :))) //

பெண்கள் பதிவை எதிர்ப்பார்க்கும் உங்களுக்காக பெண்கள் பற்றி எழுதுகிறோம். ஆண்கள் பதிவை எதிர்ப்பார்க்கும் பெண்களுக்காக ஆண்கள் பற்றி எழுதுகிறோம். ;-)

டீல் ஓகே வா?

')) said...

@நாகை சிவா:

//வாழ்த்துக்கள்!//

நன்றி சிவா

//ஜிம்பாவே கிரிக்கெட் டீமும் இதில் அடங்குமா?//

சபாஷ்.. சரியான கேள்வி. :-)
பதில் சொல்லுங்க ஜி.. கமான்!

')) said...

@CVR said:

//வாழ்த்துக்கள் மை ஃப்ரண்ட்,துர்கா
பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த வலப்பூவின் மூலமாக வரும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்! :-)//

நன்றி CVR. :)

')) said...

@பொன்ஸ் said...

//நல்ல யோசனைங்க.. நல்லா செய்யுங்க.. வாழ்த்துக்கள்..//

பொன்ஸக்கா, வாழ்த்துக்கு ரொம்ப நன்றிக்கா! :-)

')) said...

@My days(Gops) said...

//my friend paaartheeengala..

kidaikiradhu kidaikaaama irukaadhu

13 th inga kidaichudichi...//

13 உங்களுக்குதான்.. அட, இந்த பக்கத்தை பற்றி ஒன்னும் சொல்லாம கிளம்பிட்டீங்க?

')) said...

@பொற்கொடி said...

//hai :) thulasi teacher new zealand pathi sonnadha pola neenga malaysia! koodiya seekiram naanum poduren idhu madhiri ;)//

ஏறக்குறைய அதே மாதிரிதான். நியூசிலாந்து முடிந்து இப்போ மலேசியா ஆரம்பம்.. ஸ்டார்ட் மியூஜிக்.. :-)

')) said...

@கோபிநாத் said...

//வாழ்த்துக்கள் மை ஃபிரண்ட் ;-)

வாழ்த்துக்கள் துர்கா ;-)//

நன்றி கோபி. :-)

//தலைவர் சொன்னாது போல இது ஒரு புதையல் தான்.//

ஒரு பத்து வருசத்துக்கு அப்புறம் புதையல் தேடுற போட்டி வச்சிடுவோம். :-)

//துர்கா.....சீக்கிரம் பாட்டியை குமரியா ஆக்குங்கள் ;-)))//

ஹ்ம்ம்.. சீக்கிரம் துர்கா. நாங்களும் வேய்ட்ட்டீங். :-)

')) said...

@ACE said...

//ஆர்வத்தை தூண்டி இருக்கறீங்க.. சீக்கிரம் ஆரம்பிங்க.. நாங்களும் மலேசியா பாத்தது போல ஆகும்.. வாழ்த்துக்கள்//

மலேசியாவை எங்களால் முடிந்த வரை உங்கள் கண்முன் நிறுத்த முயற்சிக்கிறோம் ace.

')) said...

@balar said...

//நல்ல முயற்சி..தஙகளுக்கும் துர்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
//

நன்றி பலர். :-)

')) said...

@மதி கந்தசாமி (Mathy) said...

//இது இது இது!!! இதத்தான் நான் எதிர்பார்த்தேன். வாழ்த்துகள் தோழிகளே!!!//

இது ஆரம்பமானதுக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம் மதி. அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் ;-)
நன்றி.


//பொன்ஸின் 'சக்தி கொடு'விலும் சேர்த்துவிடுகிறேன்.//

இதுக்கு இன்னொரு நன்றி. :-)

//(இiது ஒரு அவசரத்தில் இடும் சந்தோஷப்பின்னூட்டம். கருத்துகள்+யோசனைகளுடன் விரைவில் வருகிறேன். ;) )//

பிரச்சனையே இல்லை. சொல்ல வந்த மேட்டர் புரியிர படி இருந்தாலே போதும். ;-)

')) said...

@ramya said...

//my friend n durga...more happy to c this blog thru karthik's page...super nalla ezhundhunga rendu perum...i will luv to read it as i hv njyd a part of it...//

நன்றி ரம்யா.. நிறைய புது புது விஷயங்கள் வர இருக்கின்றது. காத்திருங்கள்! :-)

')) said...

@Arunkumar said...

//very nice one. supera malaysia pathi kadaingo :)//

நன்றி அருண். தாரை தப்பட்டை முழங்கியாச்சு! ஆரம்பமாச்சு!

//indha pakkathula ennoda attendance illena epdi.aproma vandhu padikkiren chi therijikkiren malaysia pathi :P//

அட்டண்டஸ் மார்க்க்ட். நீங்க ஆணியெல்லாம் புடுங்கி முடிச்சுட்டு வந்து படிங்க அருண். :-)

')) said...

@Syam said...

//அருமையான ஒரு முயற்ச்சி...தொடரட்டும் உங்கள் சேவை :-)//

நன்றி நாட்டாமை..

//அப்படியே நாங்க எல்லாம் மலேசியா வர எப்போ டிக்கட் எடுத்து அணுப்ப போறீங்கன்னும் சொல்லிடுங்க...:-)//

டிக்கட்தானே! கண்டிப்பா இங்க கிடைக்கும்.. இங்க பக்கதுல ஒரு பாய் விரிச்சு உக்காருங்க.. டிக்கெட் வந்ததும் நீங்க அள்ளிடலாம்..

நாட்டமை, நாங்கள் தமிழ்மணத்தில் சேராமலேயே எங்களை உயிரெல்லையை 40 போட்டு கடக்க வச்சிருக்கீங்க.. முதல்வர் முதல்வர்தான்.. :-)

')) said...

//மை ஃபிரண்ட் நம்ப ரெண்டு பேர் இருக்கும் போது மலேசியா பெண்களைப் பத்தி சந்தேகம் வரலாமா நம் நண்பர்களுக்கு?//
அது தான் எங்களுக்கு பெரிய சந்தேகமே :))

Anonymous said...

@சந்தோஷ்
வந்துட்டீங்களா?இனிமேல் நான் காலி.