வணக்கம்.மை ஃபிரண்ட், நிஜமாக இத்தனை அறிவுபூர்வமான கேள்விகளை அனைவரும் கேட்டார்களா?இப்படி பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் நான் சொல்ல வேண்டுமா?இப்போவே லேசாக மயக்கம் வருவது போல உள்ளது.இப்பொழுதுதான் எனது பழைய மலேசியா வரலாறு புத்தகத்தை எல்லாம் தூசி தட்டி எடுத்து வைத்து உள்ளேன்.கூடி சீக்கிரம் மலேசியா வரலாறைப் பற்றி சொல்லி உங்களின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றேன்.
முதலில் ஒரு மலேசியராக மலேசியாவைப் பற்றி எனது சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்றேன்.ஏது எனது தாய் நாடு என்றால் மலேசியா என்றுதான் ஞாபகம் வருகின்றது.தமிழ் நாடு பக்கமே நான் போனது இல்லை.பல தலைமுறைகளாக மலேசியா மண்ணில் வாழ்ந்து வரும் தமிழர்கள் நாங்கள். ஒரு சில விஷயங்கள் மலேசியாவைப் பற்றி பிடிக்கமால் போனாலும் மலேசியா எனக்கு மிகவும் பிடித்த நாடு.இங்கே மலாய் மொழிதான் முதன்மையான மொழி.இருந்தாலும் தமிழ் இன்னும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. யாருக்கவது மலாய் கற்றுக் கொள்ள ஆசையா?அதற்கு நீங்கள் நாட வேண்டிய நபர் நம் மை ஃபிரண்ட் டீச்சர்.நான் சொல்லி கொடுத்தால் அது ஆபத்தில் முடியும்.மலாய் மொழியை மறந்துக் கொண்டிருக்கின்றேன்.தப்பு தப்பாக சொல்லி கொடுத்து விடுவேன் என்ற பயம்.
மலேசியா அழகான நாடு என்றால் அது பொய் இல்லை.நிஜமாகவே பல அழகான இயற்கை இடங்களுடன் அமைந்தது தான் மலேசியா.மலேசியா இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.ஒன்று தீபகற்ப மலேசியா மற்றும் கிழக்கு மலேசியா(சபா,சரவாக்).மலேசியாவில் மக்கள் தொகை தீபகற்ப மலேசியாவில்தான் அதிகம்.ஒரு 80% மக்கள் தொகை இங்கேதான் உள்ளது.மொத்த மக்கள் தொகையில் இந்தியர்கள் ஒரு 7% இருப்பார்கள்.இந்த 7% இந்தியார்களில் 80% தமிழர்கள்.மலேசியாவில் பண்டிகை காலம் வந்தால் அனைவருக்கும் கொண்டாட்டம்.நோன்பு பெருநாள்,சீனப்புத்தாண்டு,தீபாவளி என்று எது வந்தாலும் அந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் காணலாம்.எனக்கு பயங்கர கொண்டாட்டம்.அனைத்து பெருநாள் காலங்களிலும் சாப்பிட்ட சுவையான உணவு,நண்பர்கள் வீட்டிற்குச் செல்லலாம்,பட்டாசு வெடிக்கலாம்.மொத்ததில் நன்றாக ஆட்டம் போடலாம்.ஆகவே எனக்கு மலேசியாவில் பண்டிகை என்றால் உச்சி குளிரும்.
எங்களுக்கு எல்லாம் மற்ற இனத்து மக்களுடன்(மலாய்காரர்கள்,சீனர்கள்,மலேசியா பழங்குடியினார்,etc) வாழ்ந்து பழகி போய் விட்டது.தமிழர்கள் சீன மொழி பேசுபவர்கள் இருக்கின்றார்கள்.அதே போல் சீனர்கள் தமிழ் பேசுபவர்களும் இருக்கின்றார்கள்.மலேசியா பக்கம் வந்தால் யாரவது சீனரைத் தமிழில் திட்ட வேண்டி இருந்தால் சற்றே யோசிக்கவும்.அவருக்கு தமிழ் தெரிந்து இருக்கலாம்.இது வரையில் பெரிய இன கலவரம் எல்லாம் வரவில்லை.ஆனால் ஒரே ஒரு சமயம் வந்தது.அதுவும் 1969 இல் தான் நடந்தது.இதைப் பற்றி விரிவாக எங்கள் பதிவில் எழுதுவேன்.இது வரையில் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்று சொல்லலாம்.எனக்கு எல்லாம் ,மலாய் மற்றும் சீன நண்பர்கள்தான் அதிகம்.பல மொழி,பல இனம்,பல கலாச்சாரம் என்று எல்லாமே இங்கு பல என்றுதான் இருக்கின்றது.இது அனைத்தையும் கடந்து மலேசியாவில் இன்று நிம்மதியான வாழ்க்கை முறை நடந்துக் கொண்டிருக்கின்றது.
அடுத்தது உணவு.மலேசிய உணவைப் பற்றி சொல்லமால் போனால் எங்களை யாரும் மனிக்க மாட்டார்கள்.மலேசியாவில் எல்லா இன உணவுகளும் கலந்து ஒரு கலவையே வந்துவிட்டது.இங்கு உள்ள சில இந்திய உணவுகள்,இந்தியாவில் உள்ளது போல இருக்காது.இது மலேசியாவிற்கு உள்ள தனி சிறப்பு.மலேசியாவில் பிறந்த புண்ணியம் சாப்பிட்ட சுவையான பல வகை உணவுகள் கிடைக்கின்றன.சீன பெருநாள் வந்தால் சீனர்கள் வீட்டில் முறுக்கு இருக்கும் என்றால் நம்புவீர்களா?முறுக்கு என்பது சீன பெருநாள் காலங்களில் அதிகம் விற்பனையாகும்.இது சீன உணவு,மலாய் உணவு என்று பிரித்துப் பார்க்கமுடியவில்லை.எங்களில் பதிவுகளில் மலேசியா உணவைப் பற்றி கண்டிப்பாக சொல்லுவோம்.
அடுத்தது எங்கள் ஊரின் கலைஞர்கள்.இங்கேயும் பல திறமை மிக்க கலைஞர்கள் இருக்கின்றார்கள்.அவர்களில் சிலரை ஏற்கனவே சில பதிவுகளில் நீங்கள் படித்து இருக்கலாம்.அவர்களைப் பற்றியும் மை ஃபிரண்ட் கண்டிப்பாக எழுதுவார்.மலேசியா இது வரையில் அமைதியாக உள்ள நாடு(நானும் இல்லை.ஆகவே இன்னும் அமைதியாக இருக்கும்)
இனிமேலும் இப்படியே இருக்க வேண்டும்.மலேசியாவில் பிறந்து வளர்ந்தது ஒரு சுகமான அனுபவம்.ஆனால் என்னை சிங்கப்பூரிக்கு தூரத்திவிட்டார்கள்.
Tuesday, March 27, 2007
மலேசியா எனது பார்வையில்
Subscribe to:
Post Comments (Atom)
13 மறுமொழிகள்:
ஃபர்ஸ்ட்டு கமேண்ட்டு என்னதுதான். ;-)
அற்புதமான பதிவு!!
மேலும் பதிவுகளை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது,
வாழ்த்துக்கள்.
:-)
Awaiting to hear more spl things over in malaysia
My dream land.
So I will be a regular visiter 4 this blog.
Regards,
rt.
@CVR said...
//அற்புதமான பதிவு!!
மேலும் பதிவுகளை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது,//
@வேதா said...
//மிகவும் அருமையான ஆரம்பம்,உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்:) //
வாங்க வேதா, நன்றி. :-)
@rt said...
//Awaiting to hear more spl things over in malaysia//
நன்றி..
//My dream land.
So I will be a regular visiter 4 this blog.//
வாவ்.. உங்களுக்க்கு கண்டிப்பாக விருந்து காத்திருக்கிறது. :-)
முறுக்கு கதை ஆச்சரியமாக இருந்தது. இந்த பாம்பு, தவளன்னும் சீனர்கK வீட்டில் இருக்கும் என கேள்விப்பட்டேனே. அது சரியா?
//மலேசியாவில் பிறந்த புண்ணியம் சாப்பிட்ட சுவையான பல வகை உணவுகள் கிடைக்கின்றன//
கொடுத்து வச்சவங்க :)
//மலேசியாவில் பிறந்து வளர்ந்தது ஒரு சுகமான அனுபவம்.ஆனால் என்னை சிங்கப்பூரிக்கு தூரத்திவிட்டார்கள்.//
ஒவரா வறுத்தீட்டிங்களா.. சொல்லவே இல்ல
ஆரம்பமே ஆஹா!..
/*மலேசியா பக்கம் வந்தால் யாரவது சீனரைத் தமிழில் திட்ட வேண்டி இருந்தால் சற்றே யோசிக்கவும்.அவருக்கு தமிழ் தெரிந்து இருக்கலாம்.*/
இந்த மாதிரி நல்ல விஷயங்களை நாங்கள அடி வாங்கும முன்பே கூறி
எச்சரித்தமைக்கு மிக்க நன்றி..:)
வாழ்த்துக்கள் துர்கா ;-))
கலக்கல ஆரம்பிச்சிருக்கிங்க, சூப்பர இருக்கு உங்கள் எழுத்து நடை ;-)) ம்ம்ம்....கலக்குங்க
//முறுக்கு கதை ஆச்சரியமாக இருந்தது. இந்த பாம்பு, தவளன்னும் சீனர்கK வீட்டில் இருக்கும் என கேள்விப்பட்டேனே. அது சரியா? //
haha.யாரு இது தப்பு தப்பாக புரளியைக் கிளப்பி விடுறது?தவளை என்பது பல சீன உணவகங்களில் கிடைக்கும்.பாம்பு கிடைப்பது என்பது சற்று கடினம்தான்.இது எல்லாம் பெரும்பாலும் உணவங்களில்தான் நான் பார்த்து இருக்கின்றேன்.வீட்டில் தவளையும் பாம்பு வளர்க்கும் சீனர்களை இதுவரையில் நான் பார்த்தது இல்லை,மை ஃபிரண்ட் நீங்க எப்படி?
@cvr,வேதா,rt&gopi,balar
நன்றி:))
வணக்கம். நோர்வேயிலிருந்து கண்ணன் எழுதுகின்றேன். விரைவில் விடுமுறைக்காக மலேசியா வரவிருக்கின்றேன். அங்கு வாழும் தமிழர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவல். மலேசியாவின் எந்தப்பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள்? அவர்களின் வாழ்வு , அவர்களின் சமூக, அரசியல் பிரச்சினைகள், இனவாத்தின் பாதிப்பு பற்றியெல்லாம் எழுதுங்களேன்!
Post a Comment