Wednesday, March 28, 2007

Nasi Kandar


முதலில் உணவில் இருந்து ஆரம்பிக்கின்றேன்(அதுதான் சுலபம்).'நாசி கண்டார்' பற்றி தெரிந்துக் கொள்வோம்.நாசி என்றால் மலாய் மொழியில் சோறு என்று அர்த்தம்.இந்த சோறை அந்த காலத்தில் எப்படி விற்பனை செய்வார்கள் என்றால் ஒரு நீண்ட மூங்கில் கம்பில் இரு புறமும் உணவு கொள்கலன்கள் இருக்கும்.தராசு மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.இதை இப்படி சமநிலையில் தூக்குவது kandar என்பார்கள்.குழப்பி விட்டேனா?

"The word Nasi Kandar, came about from a time when nasi [rice] hawkers or vendors would kandar [balance] a pole on the shoulder with two huge containers of rice meals"

இப்படிதான் இந்த பெயர் வந்தது.நாசி கண்டார் வடக்கு மாநிலங்களில் வெகு பிரபலம்.முக்கியமாக பினாங்கு மாநிலத்தில் பிரசித்தி பெற்ற உணவு இதுதான். பினாங்குச் சென்றால் நாசி கண்டாரை ஒரு கைப் பார்கமால் வந்து விடதீர்கள்.மற்ற மாநிலங்களில் இந்த உணவு பினாங்கு மாநிலத்தில் உள்ள சுவையைப் போல இருக்காது என்று சொல்கின்றார்கள்.நானும் பினாங்குச் சென்று இதை உண்ண வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.கடைசி வரையில் முடியவில்லை.நான் உண்ட நாசி கண்டார் எல்லாம் பிற மாநிலத்தைச் சேர்ந்தது.இந்த உணவுகள் இந்திய முஸ்லிம் உணவு கடைகளில் அதிகம் கிடைக்கும்.இந்த சோறின் நறுமணம் சற்றே மறுபட்டு இருக்கும்.இதற்கு துணை உணவுகள்(side dish) அசைவமும் சைவமும் கலந்து இருக்கும்.அசைவ உணவு என்றால் பொரித்த கோழி,மாட்டிறைச்சி,மீன்,இறால் என்று அனைத்தும் இருக்கும்.உங்களுக்கு அது பிடிக்குமோ அதை நீங்கள் தேர்வு செய்து சாப்பிடலாம்.சென்னையில் நாசி கண்டார் உணவகம் இருப்பதாக கேள்விபட்டேன்.அங்கு உள்ள நாசி கண்டாரின் சுவை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.நான் சொல்லி தெரிந்துக் கொள்வதை விட நீங்களே சாப்பிட்டு பார்த்தால் இன்னும் தெரியும்
சில நாசி கண்டாரின் துணை உணவுகள்(side dish)
ps:please read My Friend's comment for more information.

16 மறுமொழிகள்:

')) said...

படித்து புரிந்துக்கொண்ட வரை இந்தியாவில் கிடைக்கும் புலாவ்(pulav) வகை உணவு போல இருக்கும் என் தோன்றுகிறது.
நல்ல பதிவு!!
தொடர்ந்து எழுதுங்கள்!! :-)

')) said...

துர்கா,

என்னம்மா பசிநேரத்திலே இப்பிடியெல்லாம் பதிவே போட்டு வைக்கிறீயே தாயி... :)

நல்ல பதிவு :)

[சந்தேகம்:- இது துர்கா எழுதினதுதானா??? ;) ]

')) said...

துர்கா நாஸி கண்டாரை பற்றி அழகாக சொல்லியிருக்கார். நான் கொஞ்சம் எழுதலாம்ன்னு நினைக்கிறேன். :-)

நாஸி கண்டாரை சிலர் budget indian foodன்னு சொல்லுவாங்க. பினாங்குல இது ரொம்ப பிரபலம். பினாங்குக்கு போயிட்டு இதை சாப்பிடலைன்னா வேஸ்ட்டு! மாமாக் என்றழைக்கப்படும் இந்திய முஸ்லிம்களே இந்த உணவுக்கு புகழ் பெற்றவர்கள். (Tips 1: நீங்க கடை தேடுனீங்கன்னா முஸ்லிம் கடையை தேடவும் (for Nasi Kandar)).

சில நேரங்களில் இது வாழையிலும் பறிமாறப்படும். சோறு, காய்கறி, மற்றும் ஏதாவது ஒரு அசைவ உணவு வைக்கப்படும். அந்த கடையில் கண்டிப்பாக ஒரு ஐந்திலிருந்து ஏழு விதமான கறிகள் இருக்கும். கோழி கறி, ஆட்டுக் கறி, மாட்டிறைச்சி கறி, முட்டை கறி, கோழி கிச்சாப், கோழி சம்பல் என்று பலவகை கறிகள். உங்கள் சோறின் மேலே ஒவ்வொரு கறியும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றப்படும். (Tips 2: உங்களுக்கு வேண்டாத கறியை நிங்க முன் கூட்டியே சொல்லிவிட்டால் அவர்கள் அதில் கலக்க மாட்டார்கள்.)
(Tips 3: உங்களுக்கு இவ்வாறு கலக்க இஷ்டமில்லையென்றாலும் நீங்கள் முன் கூட்டியே சொல்லிவிடவேண்டும். ஆனால் இவ்வாறு மிக்ஸ் பண்ணி அடிக்கும் கறியின் ருசியே தனிதான். ;-))

இது மலேசியா காசுக்கு RM3 - RM 5 வரை வரும்.

லீ படத்தில் பார்த்திருப்பீங்க. சிபி, சிபியின் நண்பர்கள், நிலா மற்றும் நிலாவின் தோழி ஒரு கடையில் உணவு உண்பார்கள். ஞாபகமிருக்கா? அது ஒரு நாஸி கண்டார் கடையேதான்! பினாங்கில் போபுலரான நாஸி கண்டார் உணவகம் "Pelita Nasi Kandar". இந்த உணவகத்தின் Branch பினாங்கு, கெடா, பேராக், குவாலா லும்புர் மற்றும் சிலாங்ஊரிலும் இருக்கின்றது. சென்னையில் இருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி: இந்த உணவகம் ஷென்னை ஸ்ரீ தியாகராஜ ரோட் (நாகேஷ் தீயேட்டர் பக்கதிலும்) இருக்கின்றது. அங்கே உள்ள ருசியும் இங்கே உள்ள ருசியும் ஒன்றாக உள்ளதா என்று சொல்ல இயலாது. ஏனென்றால், KL-இல் உள்ள பெலிதா உணவக உணவுக்கும் பினாங்கில் உள்ளதுக்கும் ருசி கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கு. ;-)

')) said...

கறி இருப்பதால் நான் அந்த பக்கமே போனதில்லை- நான் மலேசியாவில் இருந்த போது.
நாசி கன்டார்- தெரிந்துகொண்டேன்.

')) said...

ஆஹா ஆஹா எச்சில் ஊறுதுங்கோ..
இன்னும் எழுதுங்கோ

')) said...

@ மை Friend..
பின்னூட்டத்துக்குள்ள கூட ஒரு பதிவா ஆச்சர்யப்படுத்திரீங்க..

')) said...

இரணடாம பதிவே சாப்பாடு item..மிக்க அருமை!...

/ஆனால் இவ்வாறு மிக்ஸ் பண்ணி அடிக்கும் கறியின் ருசியே தனிதான். ;-))*/

படிக்கும போதே சாப்பிட ஆர்வலைத் தூண்டுதே! :)

')) said...

துர்கா....பார்க்குறதுக்கு ரொம்ப நல்லா தான் இருக்கு.

ம்ம்ம்ம்....இங்கே நாசிக்கு எல்லாம் வழியே இல்லை ;-(

')) said...

//துர்கா....பார்க்குறதுக்கு ரொம்ப நல்லா தான் இருக்கு.

ம்ம்ம்ம்....இங்கே நாசிக்கு எல்லாம் வழியே இல்லை ;-(

//
அதே அதே..ஒரு பார்சல் அனுப்ப முடியுமா ??? :)

')) said...

@இராம்

//நல்ல பதிவு :)

[சந்தேகம்:- இது துர்கா எழுதினதுதானா??? ;) ] //

இல்லை இராம்.என் செத்துப் போன பாட்டி ஆவியாக வந்து எனக்கு எழுதி கொடுத்துட்டு போனங்க.

')) said...

@CVR
நன்றி.புலாவ் எப்படி இருக்கும்.இது எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கே

')) said...

// வடுவூர் குமார் said...
கறி இருப்பதால் நான் அந்த பக்கமே போனதில்லை- நான் மலேசியாவில் இருந்த போது.
நாசி கன்டார்- தெரிந்துகொண்டேன்.//

நம்ப ஊரு பக்கம் இருந்துட்டு இது பத்தி தெரியமா இருக்குமா?

')) said...

//சுப.செந்தில் said...
ஆஹா ஆஹா எச்சில் ஊறுதுங்கோ..
இன்னும் எழுதுங்கோ //

போய் சாப்பிட்டு பாருங்கோ.இன்னும் நல்ல இருக்கும் ;)

')) said...

//கோபிநாத் said...
துர்கா....பார்க்குறதுக்கு ரொம்ப நல்லா தான் இருக்கு.

ம்ம்ம்ம்....இங்கே நாசிக்கு எல்லாம் வழியே இல்லை ;-( //

அடப்பாவமே...கவலைப்படதீங்க.நானும் மை ஃபிரண்டும் இருக்கும் வருத்தப்படலமா? பொழுது நீங்க இங்கே வந்தா உங்களுக்கு மலேசியாவில் உள்ள எல்லா நாசியையும் வாங்கி அனுப்புறோம் :)

')) said...

/balar said...
இரணடாம பதிவே சாப்பாடு item..மிக்க அருமை!...

/ஆனால் இவ்வாறு மிக்ஸ் பண்ணி அடிக்கும் கறியின் ருசியே தனிதான். ;-))*/

படிக்கும போதே சாப்பிட ஆர்வலைத் தூண்டுதே! :) //

நன்றி.எங்க ஊரு பக்கம் வந்தால் ஒரு பிடி பிடித்துட்டு போங்க..உங்களுக்கும் அந்த ருசி தெரியும் :)))

')) said...

////
அதே அதே..ஒரு பார்சல் அனுப்ப முடியுமா ??? :) //

பார்சல் பண்ணலாம்.ஆனால் நீங்க சாப்பிடும் பொழுது அது பழைய நாசி ஆகி இருக்கும்.புரிந்து இருக்கும் என்று நினைக்கின்றேன்.இந்த ஊருக்கு வந்து சாப்பிட்டு போங்க(உங்க சொந்த செலவில் ஓகே?)