Friday, April 13, 2007

இது தெரியுமா?

மலேசியா வரலாறு பற்றி இன்னும் சில தினங்களுக்குப் பேச்சை எடுக்க வேண்டாம்.தலை வெடித்து விடும் அளவிற்கு இருக்கின்றது.அது வரலாறு பாடம் எனக்கு மிகவும் பிடித்த பாடம் ஏனென்றால் நன்றாக தூங்க வைக்கும் பாடம் அது மட்டும்தான் :-)ஆனால் கடந்த பதிவு எழுதுவதற்குள் பாதி தூக்கம் போய்விட்டது.ஆகவே நான் வரலாறு பாடத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கின்றேன்.


சரி இன்று வேறு ஒன்றைப் பற்றி எழுதுகின்றேன்.அனைவரும் தயாரா?





இது பச்சையாக இருக்கும்









முட்கள் நிறைந்தது









இதன் மணம் சிலருக்கு நறுமணம் சிலருக்குத் துர்நாற்றம்.எப்படி பட்ட மணம் என்று இணையத்தில் தேடி பார்த்தேன்.படு கேவலமாக இருந்தது.பூனை முத்திரம்,வாந்தி என்று எல்லாம் எழுதி வைத்திருந்தார்கள்.இப்படி தப்பாக எழுதி வைத்திருப்பவர்களை நம்ப வேண்டாம்.எனக்கு அந்த மணம் அவ்வளவு கேவலமாக இருப்பதாக தெரியவில்லை.பல நாடுகளில் இந்த மணம் மிக பிரபலம்.மலேசியார்களான பலருக்கு இது நறுமணம்தான்.





இது ஒரு பழம்







சாதாரண பழம் இல்லை









இது பழங்களின் அரசன்















எங்கள் ஊர் டுரியான்(durian) பழத்தைப் பற்றிதான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.










தென் கிழக்கு ஆசியா நாடுகளில் டுரியான் பழம் மிகப் பிரபலம்.இந்த பழம் சுவையாக இருக்கும் ஆனால் மணம்தான் சற்று ஒரு மாதிரியாக இருக்கும்.டுரியான் பழத்தைப் பற்றி ஒரு நாட்டுபுறக் கதை ஞாபகம் வருகின்றது.

"ஒரு ஊரில் அவலட்சணமான அரசன் இருந்தான்.அவனுக்கு ஒரு அழகான இளவரசி மேல் காதல்.ஆனால் அந்த இளவரசிக்கோ இந்த அரசனைக் கண்டால் பிடிக்காது.ஆகவே இந்த அரசன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடினார்.அந்த மந்திரவாதியும் ஒரு விதையைக் கொடுத்து அரண்மனைத் தோட்டத்தில் நட்ட சொன்னார்.அந்த விதையில் இருந்து காய்க்கும் பழத்தை இளவரசி உண்டால் காதல் வரும் என்றார்.அப்படி இளவரசி அரசனை மணந்தால் அவர்களின் திருமண விருந்திற்கு மந்திரவாதியையும் அழைக்க வேண்டும் இதுதான் மந்திரவாதிக்கு அரசன் செய்ய வேண்டிய கைமாறு.விதை ஒரே நாளில் முளைத்து மரமாகி,காயாகி கனியும் ஆகிவிட்டது.அந்த சுவையான மற்றும் வாசமான பழத்தை உண்ட இளவரசியும் அரசன் மீது காதல் கொண்டு திருமணமும் செய்தாள்.ஆனால் அரசன் மந்திரவாதிக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான்.இதனால் சின முற்ற மந்திரவாதி இந்த சுவையான பழம் இனிமேல் நாற்றம் அடிக்கட்டும்,பழத்தின் மேல் இனிமேல் முட்கள் இருக்கும் என்று சாபம் விட்டு விட்டார்.இப்படிதான் அந்த சுவையான பழம் டுரியான் பழமாக மாறியதாம்.(கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றால் பழம் நாறிவிடுமா?)இதுதான் கதை.


(இதைப் படித்து விட்டு யாரவது நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு டுரியான் பழம் வாங்கி கொடுக்க வேண்டாம்.இது மிகவும் ஆபத்தான வேலை.பழத்தின் மணம் பிடிக்கமால் அந்த பழத்தால் அடி வாங்கினால் உடம்பு தாங்காது.பழங்களின் முட்கள் சற்றே கூர்மையானவை.)

அடுத்தது டுரியான் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும்(மே முதல் ஜுலை மாதம் வரை).

பழத்தின் வெளிதோற்றத்தை நீங்கள் படத்திலேயே காணலாம்.வெளியே நிறைய முட்கள் இருக்கும்.உள்ளே மஞ்சள் நிற சுளைகள் இருக்கும்.பழத்தின் சுவையே தனி.தித்திப்பாக நாக்கில் அப்படியே பழம் கரையும்.எனக்கு இப்பொழுதே சாப்பிட ஆசையாக இருக்கின்றது.பழத்தை அப்படியே கொட்டையோடு வாயில் போட வேண்டாம்.மாட்டிக் கொண்டால் வீண் வம்பு.(அனுபவத்தில் சொல்கின்றேன்.என் பேச்சை கேளுங்கள்)

டுரியான் பழத்தின் தரம் மூன்று கூறுகளால் நிர்மாணியம் செய்யபடுக்கின்றது
•வெளிதோற்றம்(நிறம்)
• மணம்
• படிவ அமைப்பு(texture)


டுரியான் பழத்தை வாங்குவதும் ஒரு கலைதான்.நல்ல பழத்தை தேர்ந்து எடுக்க பல குறிப்புகள் இருக்கின்றன.பலரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டவைகளை இங்கே பகிர்ந்துக் கொள்கின்றேன்.
பழம் அதிக கனமாக இல்லமால் இருக்க வேண்டும்
• பழத்தின் தண்டுகள் பெரிதாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும்
• பழம் பழுத்துவிட்டதா என்பதை அதன் மணத்தை வைத்துதான் சொல்வார்கள்
• பழத்தை ஆட்டிப் பார்கும் பொழுது சத்தம் கேட்க வேண்டும்.
• ஒரு கத்தியை உள்ளே சொருகினால் பழம் அதில் ஒட்டி இருக்க வேண்டும்.இல்லையென்றால் பழம் பழுக்கவில்லை என்று நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
• பழத்தில் எந்த ஒரு ஓட்டைகளும் இருக்க கூடாது.அப்படி இருந்தால் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பு உண்டு

அடுத்த முறை எங்கள் ஊர் பக்கம் வந்தால் இந்த பழத்தை எப்படி வாங்குவது என்று சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வந்தால் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.பழத்தை வெட்டுவதற்கும் ஒரு தனி வழிமுறை இருக்கின்றது.உங்களுக்கு அந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம்.வாங்கும் இடத்திலேயெ வெட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்த பழம் வேறும் பழமாக மட்டும் உட்கொள்ள படுவதில்லை.கேக்,ரொட்டி,Jam,ஐஸ் கீரிம் என்று பல உணவுகள் டுரியானைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.ஒரு சில உணவுகள் கிழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் நீங்கள் பார்க்கலாம்.
http://www.durianpalace.com/gourmet.htm

பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?இந்த கேள்விக்குப் பதில் அடுத்த முறை எழுதுகின்றேன்.இல்லை நீங்களே கண்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் :-)

45 மறுமொழிகள்:

')) said...

நல்ல பதிவு மேடம்!
எனக்கு இந்த பழம் பத்தி சுத்தமா தெரியாது!! இந்த பதிவுனால நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்!! :-)

தொடர்ந்து இது போன்று எழுதுங்கள்
வாழ்த்துக்கள்!! :-)

')) said...

நீங்கள் டுரியான் பழத்தை அரசன்
என்கிறீர்கள், அண்மையில் மலேசியாவிற்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதியில் டுரியான் பழத்தை உள்ளே எடுத்து வந்தால் 200 ரிங்கற் அபராதம் என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

அதேவேளை ஓரிடத்தில் நடைபாதை பழவியாபாரியிடம் சில ஐரோப்பியர்கள் இதனை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

Anonymous said...

@cvr
நன்றி.

@விருபா
இந்த பழத்தின் மணம் அப்படி.ஒரு பழத்தைக் கொண்டு வந்தால் விடுதியே டுரியான் வாடைதான் வீசும்.ஆகவேதான் இதைக் கொண்டுச் செல்ல அனுமதி இல்லை
சிங்கப்பூரிலும் கூட இந்த பழத்தை பஸ் இரயில் என்று பல இடங்களில் கொண்டுச் செல்ல அனுமதி இல்லை

')) said...

ஒரு காலத்தில் இதைக்கண்டு ஓடினேன் ஆனால் இப்போது...
ஹி ஹி :-))
பிடிச்சுப்போச்சு.
எனக்கு இதன் அறிமுகம் உங்கூரில் தாங்க.
மலேசியா,தாய்லாந்து,மியன்மார் மற்றும் இந்தோனேஷியா வில் கிடைத்தாலும் வெவ்வேறு சுவை இருக்கும் என்று கரைகண்டவர்கள் சொல்கிறார்கள்.

')) said...

நல்லப் பதிவும்மா.. ஆமா இந்தப் பழம் எங்க தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியாகுதான்னு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?

')) said...

துர்க்கா
எனக்கு இந்தப் பழத்தின் மணமே பிடிக்காது.
அத்துடன்
என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி

')) said...

yuvaaa... vaanthi naathamaa??

padikumpothe enakku vaanthi varuthe.. itha epdi neenga thinreenga?? ;)))

')) said...

நல்லா எழுதி இருக்கீங்க கதையும் நடுவே கமெண்டுகளும்...இண்ட்ரஸ்டிங் கா
இருந்தது.

')) said...

துர்கா இந்த பழத்தை பார்த்ததும் இல்லை சாப்பிட்டாதும் இல்லை,

ஆனால் நீங்கள் கூறிய விதம் நன்றாக உள்ளது.

')) said...

நல்ல பதிவு..

டுரியான்=ப்லா பழம்???

இதன் தோற்றத்தை பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதையும் வைத்து பார்க்கும் பொழ்து இது தமிழ் நாட்டில் கிடைக்கும் பலா பழம் போல் அல்லவா தெரிகின்றது?..

')) said...

தெரியாத பழம் ஒன்றை தெளியவைத்து விட்டீர்கள் பார்ப்பதற்கு பலாப்பழம் போல் உள்ளது
//பழத்தின் மணம் பிடிக்கமால் அந்த பழத்தால் அடி வாங்கினால் உடம்பு தாங்காது//
எச்சரிக்கை மணியும் அடித்து விட்டீர்கள் இதுக்கு மேல டுரியான் பழத்த யாரும் Present பண்ணமாட்டாங்க....

')) said...

துரியன் பலாப்பழம் இல்லை அது போலவே தோற்றம் அடிக்கும். எங்க ஊரில் கிழக்கிந்திய கடைக்களில் கிடைக்கும். நல்ல சுவை. ஆனால் அரசன் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டேன். மாம்பழம்தான் உலகிலேயே சிறந்த பழம். அப்புறம் இங்கு பெர்ஸிமான் என்ற ஒரு பழம் கிடைக்கும் அதுவும் அலாதியான சுவை.

')) said...

Attendace Malaysia!

')) said...

பார்க்க பலாப்பழம் போல் இருந்தாலும் இது அது அல்ல. இந்த பழம் ஹைத்தியில் இருக்கும் போது சாப்பிட்டு உள்ளேன். நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டாலும் பரவாயில்லை ரகம் தான் என்னை பொறுத்தவரைக்கும். இது பழங்களில் அரசன் என்பது உங்கள் ஊரில் மட்டும் தானே!

')) said...

ஹாய் துர்கா மை பிரண்ட் ஈஸ் மை பிரண்ட் அண்ட் மை பிரண்ட் ஈஸ் யுவர் பிரண்ட் டூ...ஹி..ஹி
என்ன தலை சுத்துதா?நான் மைபிரண்ட் பத்திச் சொன்னேன்.
இது என்ன எங்க ஊரு பலாப்பழம் போல இருக்கு.சுளை சுளையா இருக்குமா?தனியே எடுத்து ஒரு போட்டோ காட்டியிருக்கலாம்.

')) said...

பழங்களின் அரசன் மாம்பழம் தாங்க. அது கொடுக்கலனு முருகர்கூட பழனில டயப்பரோட (கோமணம்) நின்னாருங்க (அப்ப அவர் ரொம்ப சின்ன குழந்தை).

சரி மை ஃபிரெண்ட் ஆன்லைன்ல அனுப்ப சொல்லிடுவோம்...

சொல்ல மறந்துட்டேன்...
நல்லா எழுதறீங்க.

')) said...

துர்க்கை அட இப்படி அறிவுப்பூர்வமான விசயமெல்லாம் எழுதறீங்களே !!! ரொம்ப சந்தோசமா இருக்கு துர்கா!!! ;))))))))))) வாழ்த்துக்கள்!!!

')) said...

ஆமா இந்த துரியன் பழம் ஒரு 'மார்கமான' பழம் தெரியுமா ?? ;))))) எங்க ஊரிலே இது ஒரு மன்மத பழங்கோ!!! குழந்தை வேணும்னா இந்த பழத்தை சப்டா பத்தே மாசத்திலே குவா குவா தானாம்!! நெசமாவா துர்கா??:)))

தேவ் நம்ம ஊரிலே இது கொடைகானலில் கிடைக்கும். ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணனும் !! என்னா 'புக்' பண்ணிடலாமா சொல்லுங்க :)))))))))))

Anonymous said...

//வடுவூர் குமார் said...
ஒரு காலத்தில் இதைக்கண்டு ஓடினேன் ஆனால் இப்போது...
ஹி ஹி :-))
பிடிச்சுப்போச்சு.
எனக்கு இதன் அறிமுகம் உங்கூரில் தாங்க.
மலேசியா,தாய்லாந்து,மியன்மார் மற்றும் இந்தோனேஷியா வில் கிடைத்தாலும் வெவ்வேறு சுவை இருக்கும் என்று கரைகண்டவர்கள் சொல்கிறார்கள். //

நீங்கள் இப்போ எங்க கேங்.எங்களுக்கும் பிடித்த பழம் இதுதான்.மற்ற நாட்டில் இந்த பழத்தின் சுவை வேறு மாதிரி இருக்கும் என்று நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரியும்.அடுத்த முறை மற்ற நாட்டின் பழத்தையும் ஒரு கைப் பார்த்துவிடுகின்றேன்

Anonymous said...

//தேவ் | Dev said...
நல்லப் பதிவும்மா.. ஆமா இந்தப் பழம் எங்க தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியாகுதான்னு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?//

தெரியல அண்ணா.மை ஃபிரண்ட் கிட்ட கேட்டு சொல்லுறேன்

Anonymous said...

//செல்லி said...
துர்க்கா
எனக்கு இந்தப் பழத்தின் மணமே பிடிக்காது.
அத்துடன்
என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி//

மணம்தானே!பழம் நன்றாக இருக்கும்.உங்களுக்கும் எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

//ஜி said...
yuvaaa... vaanthi naathamaa??

padikumpothe enakku vaanthi varuthe.. itha epdi neenga thinreenga?? ;))) //

hello இது எல்லாம் புரளின்னு சொன்னேன் இல்ல.பழம் நல்ல இருக்கும்.எங்க ஊரு பக்கம் வாங்க.என் சொந்த காசில் உங்களுக்கு வாங்கிதரேன்.அப்போ சொல்லுங்க.சாப்பிட்டமால் ரொம்ப பேசுறது தப்பு

Anonymous said...

//முத்துலெட்சுமி said...
நல்லா எழுதி இருக்கீங்க கதையும் நடுவே கமெண்டுகளும்...இண்ட்ரஸ்டிங் கா
இருந்தது. //

நன்றி :)

Anonymous said...

//கோபிநாத் said...
துர்கா இந்த பழத்தை பார்த்ததும் இல்லை சாப்பிட்டாதும் இல்லை,

ஆனால் நீங்கள் கூறிய விதம் நன்றாக உள்ளது. //

எங்க ஊரு பக்கம் வாங்க.கண்டிப்பாக வாங்கி தரேன்.சாப்பிட்டு நீங்களும் ஒரு பதிவு எழுதுங்க.உங்கள் பாரட்டுகளுக்கு நன்றி

Anonymous said...

//balar said...
நல்ல பதிவு..

டுரியான்=ப்லா பழம்???

இதன் தோற்றத்தை பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதையும் வைத்து பார்க்கும் பொழ்து இது தமிழ் நாட்டில் கிடைக்கும் பலா பழம் போல் அல்லவா தெரிகின்றது?.. //

இதற்கு பதில் சொல்ல மை ஃபிரண்ட் கூடிய சிக்கிரம் ஓடி வருவார்.

Anonymous said...

//சுப.செந்தில் said...
தெரியாத பழம் ஒன்றை தெளியவைத்து விட்டீர்கள் பார்ப்பதற்கு பலாப்பழம் போல் உள்ளது
//பழத்தின் மணம் பிடிக்கமால் அந்த பழத்தால் அடி வாங்கினால் உடம்பு தாங்காது//
எச்சரிக்கை மணியும் அடித்து விட்டீர்கள் இதுக்கு மேல டுரியான் பழத்த யாரும் Present பண்ணமாட்டாங்க.... //

பலாப்பழம் டுரியான் பழத்தின் வித்தியாசங்களை மை ஃபிரண்ட் சொல்லுவார்.நீங்க எல்லாம் அடி வாங்க கூடாது என்ற நல்ல மனசுதான் இப்படி எச்சரிக்கை செய்ய வைத்தது.வருகைக்கு நன்றி

')) said...

இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

')) said...

டுரியனை போன்ற சுவையான தகவல்களை பரிமாறியதற்கு நன்றிகள்

இந்த பழத்தில் D24 என்ற ரகம் தான் சிறந்தது என்கிறார்கள். சிங்கப்பூரில் ஒரு ஏரிய முழுக்க இந்த பழத்தின் கடைகள் தான் நிறைந்துள்ளன. சிஙப்பூர் வந்தா சொல்லுங்க நான் உங்களை அங்கே அழைத்து செல்கிறேன்

சிங்கப்பூரில் இந்த பழத்தை ரயில் வண்டியில் அனுமதிப்பதில்லை. மீறி கொண்டு சென்றால் அபராதம் விதிக்கிறார்கள். காரணம் தெரியவில்லை. உங்களுக்கு காரணம் தெரிந்தால் சொல்லவும்

')) said...

உங்களுக்கு எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

')) said...

டுரியான் பழத்தை பற்றி பழத்தை போலவே சுவையாக எழுதியுள்ளீர்கள். இந்த பழத்தை பற்றி குறிப்பிடும் போது "சுவர்க்கத்தின் சுவை நரகத்தின் வாடை" என்று கூட சொல்வார்கள், இங்கே சிங்கப்பூரில் வெளியாகும் ஆங்கில பத்திரிக்கையில் 'தாய்லாந்த் நாட்டை சேர்ந்த ஒருவர் துரியான் பழத்தை அதிகம் சாப்பிட்டு விட்டு மதுபானம் அருந்தியதால் இறந்து போனார் என்ற செய்தியை பல வருடங்களுக்கு முன்பு படித்ததாக நினைவு, பழம் சாப்பிட்டால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பார்கள் - தங்களின் அனைத்து பதிவுகளுமே நன்றாக தான் உள்ளது. - நாகூர் இஸ்மாயில்

')) said...

மணமா அது? கடவுளே.. சரியான நாத்தம்!! ஆனாலும் சாப்பிட்டிருக்கோம்ல.. ரொம்ப ரொம்ப சுவையா வேற இருந்து தொலைச்சதை மறக்கமுடியுமா? :-D

')) said...

துர்கா, பழத்தை பற்றி நல்லாவே சொல்லியிருக்கீங்க.. கொஞ்சம் நமக்கும் அனுப்பிவச்சா நல்லா இருக்கும்.. ஹிஹிஹி

Anonymous said...

//இலவசக்கொத்தனார் said...
துரியன் பலாப்பழம் இல்லை அது போலவே தோற்றம் அடிக்கும். எங்க ஊரில் கிழக்கிந்திய கடைக்களில் கிடைக்கும். நல்ல சுவை. ஆனால் அரசன் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டேன். மாம்பழம்தான் உலகிலேயே சிறந்த பழம். அப்புறம் இங்கு பெர்ஸிமான் என்ற ஒரு பழம் கிடைக்கும் அதுவும் அலாதியான சுவை. //

டுரியான் பழம் பலாப்பழத்தை போல தோற்றமும் இல்லை மணமும் இல்லை.எல்லாரும் துரியான் என்று புதுவகை பழத்தைப் பற்றி சொல்கின்றீர்கள்.குழம்பிபோய் விட்டேன்.எங்க ஊர் பக்கம் இதுதான் பழங்களின் அரசன்.பெர்ஸிமானா?சரி நான் உங்க ஊர் பக்கம் வந்தால் வாங்கி கொடுங்க.ஒரு கைப் பார்த்துவிட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்கின்றேன் :)
நன்றி

Anonymous said...

//
நாகை சிவா said...
பார்க்க பலாப்பழம் போல் இருந்தாலும் இது அது அல்ல. இந்த பழம் ஹைத்தியில் இருக்கும் போது சாப்பிட்டு உள்ளேன். நல்லா இருக்குனு சொல்ல முடியாட்டாலும் பரவாயில்லை ரகம் தான் என்னை பொறுத்தவரைக்கும். இது பழங்களில் அரசன் என்பது உங்கள் ஊரில் மட்டும் தானே! //

தென் கிழக்கு ஆசியா நாடுகளில் பழங்களின் அரசன் டுரியான் தான்.மற்ற நாடுகளைப் பற்றி தெரியவில்லை

Anonymous said...

//கண்மணி said...
ஹாய் துர்கா மை பிரண்ட் ஈஸ் மை பிரண்ட் அண்ட் மை பிரண்ட் ஈஸ் யுவர் பிரண்ட் டூ...ஹி..ஹி
என்ன தலை சுத்துதா?நான் மைபிரண்ட் பத்திச் சொன்னேன்.
இது என்ன எங்க ஊரு பலாப்பழம் போல இருக்கு.சுளை சுளையா இருக்குமா?தனியே எடுத்து ஒரு போட்டோ காட்டியிருக்கலாம். //

ஹாய் கண்மணி.My friend is everyone's friend ;)
தலை சுத்தவே இல்லை.என் உடம்பில்தான் இருக்கின்றது.உங்கள் விருப்பம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.சுளையின் படமும் போட்டுவிட்டேன்.நன்றி

Anonymous said...

//Kanags said...
இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.//

அப்படியா?எங்களின் ஈழ நண்பர்களிடம் கேட்டு சொல்கின்றோம் ;)
வருகைக்கு நன்றி

Anonymous said...

//Kanags said...
இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.//

அப்படியா?எங்களின் ஈழ நண்பர்களிடம் கேட்டு சொல்கின்றோம் ;)
வருகைக்கு நன்றி

Anonymous said...

//வெட்டிப்பயல் said...
பழங்களின் அரசன் மாம்பழம் தாங்க. அது கொடுக்கலனு முருகர்கூட பழனில டயப்பரோட (கோமணம்) நின்னாருங்க (அப்ப அவர் ரொம்ப சின்ன குழந்தை).

சரி மை ஃபிரெண்ட் ஆன்லைன்ல அனுப்ப சொல்லிடுவோம்...

சொல்ல மறந்துட்டேன்...
நல்லா எழுதறீங்க. //

நீங்களும் கொத்ஸ் மாதிரியே மாம்பழம்தான் அரசன் என்று சொல்கின்றீர்கள்.வாழ்த்துகளுக்கு நன்றி :))

Anonymous said...

@ஜொள்ஸ்

//துர்க்கை அட இப்படி அறிவுப்பூர்வமான விசயமெல்லாம் எழுதறீங்களே !!! ரொம்ப சந்தோசமா இருக்கு துர்கா!!! ;))))))))))) வாழ்த்துக்கள்!!! //

எல்லாம் உங்களை மாதிரி அறிவாளிகள் கிட்ட இருந்து கற்றுகொண்ட்டது :)நன்றி ஜொள்ஸ்



//ஆமா இந்த துரியன் பழம் ஒரு 'மார்கமான' பழம் தெரியுமா ?? ;))))) எங்க ஊரிலே இது ஒரு மன்மத பழங்கோ!!! குழந்தை வேணும்னா இந்த பழத்தை சப்டா பத்தே மாசத்திலே குவா குவா தானாம்!! நெசமாவா துர்கா??:)))//
தேவ் நம்ம ஊரிலே இது கொடைகானலில் கிடைக்கும். ஆனா அட்வான்ஸ் புக்கிங் பண்ணனும் !! என்னா 'புக்' பண்ணிடலாமா சொல்லுங்க :)))))))))))
//

wrong information.என்ன பழத்தைப் பற்றி சொல்லுறீங்க?

Anonymous said...

//மருதநாயகம் said...
டுரியனை போன்ற சுவையான தகவல்களை பரிமாறியதற்கு நன்றிகள்//

இதைப் படித்ததற்கும் நன்றி :)

//இந்த பழத்தில் D24 என்ற ரகம் தான் சிறந்தது என்கிறார்கள். சிங்கப்பூரில் ஒரு ஏரிய முழுக்க இந்த பழத்தின் கடைகள் தான் நிறைந்துள்ளன. சிஙப்பூர் வந்தா சொல்லுங்க நான் உங்களை அங்கே அழைத்து செல்கிறேன்//

நான் சிங்கப்பூரிலேதான் இருக்கின்றேன்.டுரியான் பழம் வாங்கி சாப்பிட்டதான் நேரம் இல்லை.

//சிங்கப்பூரில் இந்த பழத்தை ரயில் வண்டியில் அனுமதிப்பதில்லை. மீறி கொண்டு சென்றால் அபராதம் விதிக்கிறார்கள். காரணம் தெரியவில்லை. உங்களுக்கு காரணம் தெரிந்தால் சொல்லவும்//

டுரியான் பழத்தின் மணம்தான் இதற்கு காரணம்.ஒரு mrt எல்லாம் டுரியான் வாடை அடித்தால் எப்படி இருக்கும்?நம்ப ஊரில்தான் சுத்தம் ரொம்ப பார்ப்பர்களே.ஆகையால்தான் இந்த பழத்தைக் கொண்டுச் செல்ல அனுமதி இல்லை.ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை.டுரியான் கொண்டு சென்றால் அபாரதத் தொகை எவ்வளவு என்று எங்குமே போடவில்லை.அது ஏன்?

Anonymous said...

//nagoreismail said...
டுரியான் பழத்தை பற்றி பழத்தை போலவே சுவையாக எழுதியுள்ளீர்கள். இந்த பழத்தை பற்றி குறிப்பிடும் போது "சுவர்க்கத்தின் சுவை நரகத்தின் வாடை" என்று கூட சொல்வார்கள், இங்கே சிங்கப்பூரில் வெளியாகும் ஆங்கில பத்திரிக்கையில் 'தாய்லாந்த் நாட்டை சேர்ந்த ஒருவர் துரியான் பழத்தை அதிகம் சாப்பிட்டு விட்டு மதுபானம் அருந்தியதால் இறந்து போனார் என்ற செய்தியை பல வருடங்களுக்கு முன்பு படித்ததாக நினைவு, பழம் சாப்பிட்டால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பார்கள் - தங்களின் அனைத்து பதிவுகளுமே நன்றாக தான் உள்ளது. //

நீங்கள் சொல்வதும் சரிதான்.ஒரு புதுமையான செய்தி சொல்லி இருக்கின்றீர்கள்.ஆமாம் நாகூர் இந்த பழத்தைச் சாப்பிட்டால் தண்ணீர் நிறைய அருந்த வேண்டும் என்று சொல்வார்கள்.ஏனென்றால் இந்த பழம் உடல் சூட்டை அதிகரிக்கும் என்கிறார்கள்:)
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

Anonymous said...

//சேதுக்கரசி said...
மணமா அது? கடவுளே.. சரியான நாத்தம்!! ஆனாலும் சாப்பிட்டிருக்கோம்ல.. ரொம்ப ரொம்ப சுவையா வேற இருந்து தொலைச்சதை மறக்கமுடியுமா? :-D //

:))
நன்றி சேதுக்கரசி

Anonymous said...

// மு.கார்த்திகேயன் said...
துர்கா, பழத்தை பற்றி நல்லாவே சொல்லியிருக்கீங்க.. கொஞ்சம் நமக்கும் அனுப்பிவச்சா நல்லா இருக்கும்.. ஹிஹிஹி //

சிங்கப்பூர் இல்லை கோலாலம்பூர் பக்கம் வந்தால் சொல்லுங்க.மை ஃபிரண்ட் இல்லை நான் உங்களுக்கு அந்த பழத்தை வாங்கி தருகின்றோம் :)அனுப்பி வைக்கலாம் ஆனால் i am very busy.sorry :)))))

')) said...

ஊட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசினர் தோட்டத்தில் இந்த மரத்தை பார்த்த ஞாபகம். பழம் சாப்பிட்டதில்லை.

இந்த மரம் இருந்த இடத்தை சுற்றி வேலி போட்டு வைத்திருப்பார்கள்.

ஏனெனில் இதன் நாறும்மணத்திற்கு பாம்புகள் அருகே படுத்திருக்கும் என்றும் சொல்வார்கள்.

அறுவடை சமயத்தில் நல்ல கிராக்கி இருக்கும்.ஆண்மையை விருத்தி செய்யும் குணமும் உண்டு என்று கேள்வி.

மேட்டுப்பாளைத்தில் இப்பொழுதும் இருக்கின்றதா என்று தெரியவில்லை.

')) said...

இப்பழம் சுவையோ சுவை. இதற்கு முள்நாறி என்றும் அழைப்பர். மலேசியா வாருங்கள், பழத்தைச் சாப்பிடுங்கள்.