Sunday, April 29, 2007

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1

"யாரப்பா அங்கே க்ளாஸுக்கு வெளியே?? மணி அடிச்சும் இன்னும் வெளியில உங்களுக்கு என்ன வேலை? க்ளாஸுக்கு போங்கடா.."

ப்ரீன்ஸி மாணவர்களை மிரட்ட அவர்கள் வகுப்பிற்குள் ஓடுகிறார்கள்.
டீச்சர் வகுப்புக்குள் வர்றாங்க..

"பசங்களா, நாந்தான் உங்களுக்கு மலாய் சொல்லி தர போகிறேன். எல்லாரும் இன்றைய பாடத்துக்கு ரெடியா??"

மாணவர்கள் கோரஸாக "ரெடி டீச்சர்!!!"

"டீச்சர் என்பது ஆங்கில் வார்த்தை. மலாயில் Cikgu [செக்கு] 'ன்னு சொல்லணும்.. எங்கே திருப்பி சொல்லுங்க பார்ப்போம்?"

"Cikgu"

"சரி.. நாம் இன்றைய பாடத்துக்கு வருவோம்.. நாம் யாரையவது எங்கேயாவது சந்த்தித்தால் முதலில் வாழ்த்து சொல்லிதானே ஆரம்பிப்போம் ! அதை பற்றியே இன்று நாம் படிப்போம்.."

"சிவா, உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே?"

"நான் எங்கே டீச்சர் வரவேற்கப் போகிறேன்!! வீட்டுல இருக்கிற நேரம் முழுதும் தூங்கிட்டேதான் இருப்பேன். மத்த நேரம் வெளியில நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவேன்.."

"கார்த்தி, உனக்காவது தெரியுமா?"

"Cikgu, எங்க வீட்டு கதவுல "வருக! வருக !"ன்னு எழுதியிருக்கும்.. வீட்டுக்கு வர்றவங்களை வருக வருகன்னு சொல்லி வரவேற்கணும்ன்னு என் அம்மா சொல்லுவாங்க .."

"குட்.. சரியான பதில் கார்த்தி. வருக வருக அல்லது welcome என்பதை Selamat Datang [செலாமாட் டாத்தாங்] என்று சொல்லலாம்."

"செலாமாட் என்பது நல்லது (good) என்று பொருள்ப்படும். ஆங்கிலத்தில் குட் என்று வாழ்த்து இருந்தால், அதை நாம் செலாமாட் என்று மலாயில் உச்சரிக்கலாம்."

"இப்போது காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவை எப்படி சொல்வது என்று பார்ப்போம்."

காலை - pagi [பாகி]

பிற்பகல் - tengah hari [தெங்கா ஹாரி]

மாலை - petang [பெத்தாங்]

இரவு - malam [மாலாம்]"

"இப்போது செலாமாட்டையும் காலங்களையும் சேர்த்து வாழ்த்து சொல்லுவோம்! ராம், காலை வணக்கம் (குட் மார்னிங்) மலாயில் மொழி மாற்றம் செய்"

"ம்ம்... குட் = செலாமாட்.. மார்னிங் = பாகி.. Selamat Pagi [செலாமாட் பாகி], cikgu"

"சரியான விடை ராம்.. செலாமாட் பாகி என்பதே சரியான பதில்."

குட் மார்னிங் - Selamat pagi [செலாமாட் பாகி]

குட் அஃப்டர்னூன் - Selamat Tengah hari [செலாமாட் தெங்கா ஹாரி]

குட் ஈவினிங் - Selamat Petang [செலாமாட் பெத்தாங்]

குட் நைட் - Selamat malam [செலாமாட் மாலாம்]

"தேவ், இப்போது உனக்கொரு கேள்வி.. நீ உன் நண்பனிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது அவனிடம் என்ன சொல்லுவே?"

"ம்ம்.. ம்.. பாய் பாய் சொல்வேன். ஹாங்.. மீண்டும் சந்திப்போம்ன்னு சொல்வேன்"

"குட், இந்த வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் மரியாதையாக பேச தெரிகிறது. அதுக்கு நீங்களே உங்க தோளை தட்டிக் கொடுத்துகோங்க"

"மீண்டும் என்பது மலாயில் lagi [லாகி] என்று சொல்லலாம் .. சந்திப்பதை jumpa [ஜும்பா] என்று சொல்லலாம் .. மீண்டும் சந்திப்போம் என்பதை jumpa lagi [ஜும்பா லாகி] என்று சொல்ல வேண்டும்.."

"தேவ், சரியாக பதில் சொன்னதுக்கு உனக்கு இந்த சாக்லேட் பரிசு.. வா"

தேவ் சாக்லேட்டை வாங்கிவிட்டு "நன்றி cikgu" என்று சொல்கிறார்..

"நன்றி.. இந்த வார்த்தையை எப்படி மலாயில் சொல்வது என்று உங்களுக்கு தெரியுமா??"

சிவா கை தூக்குகிறார்..

"சிவா, உனக்கு தெரியுமா? சொல்"

"cikgu,எனக்கு தெரியாதுன்னு சொல்ல வந்தேன்..."

"ம்ம்.. பரவாயில்லை சிவா.. நானே சொல்கிறேன் உட்கார் . நன்றி என்பதை terima kasih [தெரிமா காசே] என்று சொல்ல வேண்டும் "

"மாணவர்களே "தெரிமா காசே"ன்னு சொல்லுங்க பார்ப்போம்??"

மாணவர்கள் கோரசாக "தெரிமா காசே"

"ஓகே.. தேங்கியூ சொன்னா நாம் பதிலுக்கு யூ ஆர் வெல்கம் என்று சொல்லனுமல்லவா? அதுக்கு நாம் sama-sama [சமா சமா] என்று சொல்ல வேண்டும்"

"ஏதாவது தப்பு செய்திருந்தால் நாம் சொல்வது sorry..."

சிவா: "cikgu, ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. சாரி.."

தேவ்: "நேத்து ராத்திரி கேப்டன் படம் பார்க்க போயிருக்கே நீயி.. என்னை கூப்பிடவே இல்லை பார்த்தியா!!!!"

"க்ளாஸ்.. அமைதி அமைதி!! சிவா, நீ ஓவரா தமிழ் படம் பார்க்கிற.. இது நல்லதா படலை.. சொல்லிட்டேன் .. சரி நாம் பாடத்துக்கு வருவோம்.. மன்னிப்பு கேட்பதுக்கு மலாயில் minta maaf [ மிந்தா மா-ஆஃப்] என்று சொல்ல வேண்டும்"

சிவா உடனே எழுந்து "Minta maaf, cikgu"

"பரவாயில்லை சிவா.. உட்கார்.."

"பசங்களா, உங்களுக்கு வேரு ஏதாவது வார்த்தைக்கு மலாயில் தெரிய வேணுமென்றால் கேளுங்க.."

"ராம், உனக்கேது கேள்வி இருக்கா?"

"ஆமாம் cikgu... How are you என்பதை எப்படி மலாயில் கேட்பது?"

"நல்ல கேள்வி ராம். அதை apa khabar [அப்பா காபார் ] என்று சொல்லாம். நலம் என்பதை சொல்வதுக்கு khabar baik [காபார் பாயிக் ] என்று சொல்ல வேண்டும்"

"சரி, இன்று படித்தவை என்னென்ன என்று பார்ப்போம்.."

ஆசிரியர்- Cikgu - செக்கு
வருக வருக- Selamat Datang - செலாமாட் டாத்தாங்
காலை வணக்கம்- Selamat Pagi - செலாமாட் பாகி
மதிய வணக்கம்- Selamat Tengah hari - செலாமாட் தெங்காஹாரி
மாலை வணக்கம்- Selamat Petang - செலாமாட் பெத்தாங்
இரவு வணக்கம்- Selamat Malam - செலாமாட் மாலாம்
மீண்டும் சந்திப்போம்- Jumpa Lagi - ஜும்பா லாகி
நன்றி- Terima Kasih - தெரிமா காசே
நன்றிக்கு பதில்- Sama-sama - சமா சமா
மன்னிக்கவும்- Minta Maaf - மிந்தா மா-ஆஃப்
நலமா? - Apa Khabar? - அப்பா காபார்
நலம்- Khabar Baik -காபார் பாயிக்

மேலே உள்ள வார்த்தைகளை கேட்க கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள ஈ-ஸ்னிப்ஸ் பட்டனை சொடுக்கவும்..


இங்கே இப்படியே பாடம் நடந்துக்கொண்டிருக்க ஒருவன் மட்டும் வகுப்பின் ஒரு மூலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. டீச்சருக்கு சந்தேகம் .. பையனுக்கு பாடம் புரியவில்லையோன்னு..

"ஸ்யாம், இன்னைக்கு படிச்சதெல்லாம் நுழைஞ்சதா?"

"எல்லாம் நுழைஞ்சிடுச்சு டீச்சர்.. ஆனா இந்த வாலு மட்டும்தான் இன்னும் வெளியிலேயே தெரியுது!!!!"

"இவன் திருந்த மாட்டான் போலிருக்கே!!! சரி மாணவர்களா.. அடுத்த பாடத்தில் சந்திப்போம் . Jumpa lagi"

" Terima kasih cikgu"

70 மறுமொழிகள்:

')) said...

நல்ல முயற்சி....

வாழ்த்துக்கள்!

')) said...

jst a miss

')) said...

// உங்களுக்கு என்ன வேலை? க்ளாஸுக்கு போங்கடா.."//

idhu thaan saaakunu miratureenga paartheeengala?

//நாந்தான் உங்களுக்கு மலாய் சொல்லி தர போகிறேன்//
uppu potadha illa, potadhadha?
oh language a sollureengala

ok teacher, ukkaralama teacher?

')) said...

enga oorrla endha porulum (ponnum thaan) nalla irrundha,

"Cikgu"'nu solluvom... he he

')) said...

//முதலில் வாழ்த்து சொல்லிதானே ஆரம்பிப்போம் //

naangalum thaaan teacher.. gudmorning teacher , how r u teacher....

')) said...

//உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே//

vaanga vaanga, enna vaangitu vandheenganu thaaaan...

//வருக வருகன்னு சொல்லி வரவேற்கணும்ன்னு//
adhu thaan correct, ponga ponga na adhu thorathura maadhiri aaagidum..

')) said...

//செலாமாட் டாத்தாங்] //

enga ooorla, sella maaataanga da ivanga nu solluvom...
(yaarachum ukkaandhu blade pottta )

super info koduthu irrukeeenga... gud gud.... post fulla kalakals..

')) said...

//உங்களுக்கு வேரு ஏதாவது வார்த்தைக்கு மலாயில் தெரிய வேணுமென்றால் கேளுங்க.."
//

teacher, neenga nallavangala kettavangala? eppadi ketkuradhu teacher?

')) said...

//சிவா, உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே?"//

ஏண்டா வந்தீங்கனு கேட்காம இருந்தா பத்தாதா? இதுல வரவேற்க வேறு செய்யனுமா?

')) said...

//வீட்டுல இருக்கிற நேரம் முழுதும் தூங்கிட்டேதான் இருப்பேன். மத்த நேரம் வெளியில நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவேன்.."//

சுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்லிட்டீங்க....

')) said...

vanthiden Cikgu:-))

')) said...

present cigku:-))) ena nan vanthiden neengal Selamat Datang endu solamal nikreengal;-))

')) said...

செக்கு அந்த எலி வால பாத்த பையன் ஆருங்கோ

')) said...

தெரிமா காசி மை பிரண்ட்..

நல்ல முயற்சி.. இரண்டு பரிந்துரைகள்:
1. முடிஞ்சா, கடைசியில் summarize செய்யும் போது, உச்சரிப்பையும் எழுதுங்கள்
2. உச்சரிப்பைப் பேசி பதிவு செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். தனியே பேச வேண்டாம்.. உங்க அகில உலக மலேசிய வலைபதிவர்மாநாடு ;) ஒண்ணு மலாய் மொழியில் செய்து அதைப் போடுங்க ;)

')) said...

/" Terima kasih cikgu"/
நன்றி வாத்யாரே

இப்படிக்கு
குட் ஸ்டூடண்ட்
:)

')) said...

நலல் முயற்சி...நன்றி மை ஃப்ரெண்ட்

ஃப்ரெண்டுக்க் என்ன சொல்ல மலாய்ல?.. :-))..அது சொல்லுங்க முதல்ல

')) said...

மொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட்

')) said...

மைஃபெரெண்ட் வருவதற்குள்,மங்கைக்கு பதில்
"கவான் சாயா"
கவான் - நண்பன்
சாயா- நான்/என்னுடைய.
மலாய் பாடம் நல்லா இருக்கு.

')) said...

நல்ல முயற்சி மை பிரண்ட்!

வாத்துக்கள்!

பலருக்கும் பயனுள்ள தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

')) said...

//ஆனா இந்த வாலு மட்டும்தான் இன்னும் வெளியிலேயே தெரியுது//

நாட்டாமை, வாலை சுருட்டி வைக்கமுடியாத அளவு பெருசா.. ஹிஹிஹி..அனுமாரா?

')) said...

esnips இல் போட்டிருப்பது சின்னச் சின்ன file ஆக இருப்பதால், என்ன பேசி இருக்கீங்கன்னே தெரியலை. எல்லா சொற்களையும் ஒரே mp3 இல் பேசிப் பதிவு செய்து போடுங்களேன்..

')) said...

அசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..

தொடரட்டும் உங்கள் பணி..

')) said...

My Friend Cikgu, Selamat malam! Jumpa Lagi..

')) said...

செலாமாட் பெத்தாங் செக்கு!

நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்!!

தெரிமா காசே!

')) said...

மாணவர்களா,

செலாமாட் டாத்தாங்..

எல்லாரும் கரேக்ட்டா அட்டெண்டன்ஸ் போட்டிருக்கீங்க.. இருங்க நான் ரெகிஸ்டரில் நோட் பண்ணிக்கிறேன்..அட,இங்கே சில பேர் எப்போதும் போலவே லேட்டா???

பிறகு வந்து உங்க சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.. மிந்தா மா-ஆஃப்.. :-)

')) said...

//
எல்லாரும் கரேக்ட்டா அட்டெண்டன்ஸ் போட்டிருக்கீங்க.. இருங்க நான் ரெகிஸ்டரில் நோட் பண்ணிக்கிறேன்..//

என்னாந்தான் வகுப்பிலே லாங்குவேஜ் சொல்லிக்கொடுத்தாலும் வாத்தி ரிஜஸிடர் எடுக்கிறோப்போ நாங்க சொல்லுறது...

பிரசண்ட் ஐயா..
உள்ளேன் சார்...
எஸ் அம்மா....

இது மலாய்'கிறதுனாலே கொஞ்சம் மாத்தி...

பிரசண்ட் செக்கு,
ஓசி வகுப்புக்கு ரொம்ப தெரிமா காசே மேடம் :)

')) said...

cingu நல்ல துவக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிடிச்சி பெஞ்சி மேல எழுப்பி நிப்பாட்டாடாதிங்க :)).

')) said...

டீச்சர்ஸ், நானும் வந்துட்டேன் மலாய் கத்துக்க...:)

செலாமாட் செலாமாட்..

மிக அருமையான் முயற்சி..மேலும் சிறப்பாக தொட்ர வாழ்த்துக்கள்..கண்டிப்பாக ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும்...

முதல் பாடம் முடிந்து விட்டது ஒரு கொஸ்டீன் கூட கேட்கலைனா எப்படி அதான் இந்த கொஸ்டீன்.

நீங்கள் கற்றுக்கொடுத்த மலாய் வார்த்தைகள் அப்ப்டியே இந்தோனோஷியா Bahasa மாதிரி இருக்கிறது.அப்படியென்றால் இந்தோனோஷியாவிலும் மலாய் தான் முதல் மொழியா??

தெரிமா காசே செக்கு.

')) said...

டீச்சர்,

நல்ல முயற்சி.

உங்க க்ளாலே எல்லாரும் 'பொடியன்'களா இருக்கறதாலே, நான் கொஞ்சம்
வெளிப்புறம் ஜன்னல் பக்கமிருந்து படிச்சுக்கறேன்:-)))

')) said...

Terima Kasih Cikgu கிளாஸ்ல தூங்கிட்டேன்...இன்னொரு டைம் கிளாஸ் எடுக்கறீங்களா :-)

Anonymous said...

பிரசண்ட் செக்கு.

நோ ஹோம் ஒர்க் பிளீஸ்...

')) said...

செக்கு,

தெரிமா காசே !!

ஜும்பா லாகி :)))))

')) said...

இது என்ன (வால் உள்ள) பாய்ஸ் கிளாஸ்'ஆ..

பொண்ணுங்க கிடையாதா?

')) said...

நீங்கள் நல்ல செக்கு, அருமையாக பாடம் சொல்லி தருகிறீர்கள், இது தொடர்ந்தால் இங்கே சிங்கையில் மலாய் நண்பர்களுடன் நான் மலாய் மொழியில் பேசுவேன், தெரிமா காசே - நாகூர் இஸ்மாயில்

')) said...

nalla class edukareenga....congrats....

')) said...

Terima Kasih!!!

')) said...

akka thangachi idhukku ennanu sollaiye :-) illaina nama epdikka pesuradhu?

')) said...

2007 ஆங்கிலப் புத்தாண்டாடு சேர்த்து ஆறு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். ஓரளவுக்கு...(ஏதோ ஒன்றிரண்டு) தெரிந்து கொண்டோம். குராங்கான் லாஜு (மெதுவாப் போ). டண்டாஸ் (இது ரொம்ப முக்கியமப்பா). டிலாரங் மெரோகாக் (புகைப் பிடிக்கக் கூடாது). மாசூக். டிலாரங் மாசூக். இப்படியாக கொஞ்சம் படித்துக் கொண்டோம்.

அதுல குராங்கான் லாஜுதான் காமெடி. நாங்க தங்கியிருந்த ஓட்டல் இருந்த தெரு குராங்கான் லாஜுன்னு நெனச்சோம். அங்க போர்டு இருந்தது. அத வெச்சி அந்த எடத்தக் கண்டுபிடிச்சிரலாம். அப்புறம் இன்னொரு எடத்துக்குப் போனா...அங்கயும் அந்த போர்டு. அட...என்னடா...இந்தத் தெரு எல்லா ஊர்லயும் இருக்கேன்னா வெசாரிச்சா...அது மெதுவாப் போங்குற பலகையாம்.

Anonymous said...

@நாகை சிவா
நன்றி புலி.

//ஏண்டா வந்தீங்கனு கேட்காம இருந்தா பத்தாதா? இதுல வரவேற்க வேறு செய்யனுமா? //

விருந்தோம்பல் நம் பண்பாடு சிவா!!
:-)
//சுருக்கமா சொன்னாலும் தெளிவா சொல்லிட்டீங்க.... //

எல்லாம் உங்கள வைச்சு எழுதியது.ஆகவே தெளிவாகதான் இருக்கும்.நாங்க ரெண்டு பேரும் உங்களை நன்றாக புரிந்து வைத்து இருக்கின்றோம் என்பதற்கு இதுவே சாட்சி:P

Anonymous said...

@பொன்ஸ்
//1. முடிஞ்சா, கடைசியில் summarize செய்யும் போது, உச்சரிப்பையும் எழுதுங்கள்//

மை ஃபிரண்ட் அக்கா இதை பரிசிலனை செய்வார்.

//2. உச்சரிப்பைப் பேசி பதிவு செய்து போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். தனியே பேச வேண்டாம்.. உங்க அகில உலக மலேசிய வலைபதிவர்மாநாடு ;) ஒண்ணு மலாய் மொழியில் செய்து அதைப் போடுங்க ;) //

நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருந்தால் மீட்டிங் போடலாம்.மாநாடு எல்லாம் போட முடியுமா?

Anonymous said...

//நந்தியா said...
vanthiden Cikgu:-)) //

selamat datang



//சினேகிதி said...
present cigku:-))) ena nan vanthiden neengal Selamat Datang endu solamal nikreengal;-)) //

மை ஃபிரண்ட் அக்கா ரொம்ப பிசி.நான் இருக்கேன் இல்லை.selamat datang

Anonymous said...

//அய்யனார் said...
/" Terima kasih cikgu"/
நன்றி வாத்யாரே

இப்படிக்கு
குட் ஸ்டூடண்ட்
:) //

அய்யனார் குட் ஸ்டூண்ட்.selamat datang dand jumpa lagi.welcome and see you again ன்னு சொன்னேன் :-)

Anonymous said...

//மங்கை said...
நலல் முயற்சி...நன்றி மை ஃப்ரெண்ட்

ஃப்ரெண்டுக்க் என்ன சொல்ல மலாய்ல?.. :-))..அது சொல்லுங்க முதல்ல //

மங்கை உங்களுக்கு வடுவூர் குமார் பதில் சொல்லி விட்டார்.இருந்தாலும் எங்கள் பங்கிற்கு

தோழி/தோழன்:காவான்(kawan)
எனது(my):சாயா(saya)

Anonymous said...

// மு.கார்த்திகேயன் said...
மொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட் //

அட்டெண்டன்ஸ் மட்டும் நல்ல போடுற ஒரே மாணவர் நம்ப தல தான்.ஆனால் கேள்விகள் கேட்டால் தல தப்பு தப்பாக சொல்லுறார்.மை ஃபிரண்ட் அக்கா இவர் மட்டும் சரியா பதில் சொல்லவில்லை bench மேல ஏறி நிக்க வைக்கனும் சரியா?:-))

// மு.கார்த்திகேயன் said...
அசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..

தொடரட்டும் உங்கள் பணி..//


நன்றி நன்றி நன்றி

// மு.கார்த்திகேயன் said...
My Friend Cikgu, Selamat malam! Jumpa Lagi.. //

cikgu thurgah வை மறந்துட்டீங்களே தல.சரி பரவயில்லை.selamat tinggal!jumpa lagi

Anonymous said...

// மு.கார்த்திகேயன் said...
மொதல்ல அட்டென்டன்ஸ் மை பிரண்ட் //

அட்டெண்டன்ஸ் மட்டும் நல்ல போடுற ஒரே மாணவர் நம்ப தல தான்.ஆனால் கேள்விகள் கேட்டால் தல தப்பு தப்பாக சொல்லுறார்.மை ஃபிரண்ட் அக்கா இவர் மட்டும் சரியா பதில் சொல்லவில்லை bench மேல ஏறி நிக்க வைக்கனும் சரியா?:-))

// மு.கார்த்திகேயன் said...
அசத்தி இருக்கீங்க மை பிரண்ட்.. பயங்கர யூஸ்ஃபுல்..

தொடரட்டும் உங்கள் பணி..//


நன்றி நன்றி நன்றி

// மு.கார்த்திகேயன் said...
My Friend Cikgu, Selamat malam! Jumpa Lagi.. //

cikgu thurgah வை மறந்துட்டீங்களே தல.சரி பரவயில்லை.selamat tinggal!jumpa lagi

Anonymous said...

// வடுவூர் குமார் said...
மைஃபெரெண்ட் வருவதற்குள்,மங்கைக்கு பதில்
"கவான் சாயா"
கவான் - நண்பன்
சாயா- நான்/என்னுடைய.
மலாய் பாடம் நல்லா இருக்கு//

நன்றி குமார்.

Anonymous said...

//நாமக்கல் சிபி said...
நல்ல முயற்சி மை பிரண்ட்!

வாத்துக்கள்!

பலருக்கும் பயனுள்ள தொடராக இருக்கும் என்பதில் ஐயமில்லை!//

நன்றி சிபி

Anonymous said...

// கப்பி பய said...
செலாமாட் பெத்தாங் செக்கு!

நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்!!

தெரிமா காசே! //

terima kasih.jumpa lagi

Anonymous said...

// இராம் said...


//என்னாந்தான் வகுப்பிலே லாங்குவேஜ் சொல்லிக்கொடுத்தாலும் வாத்தி ரிஜஸிடர் எடுக்கிறோப்போ நாங்க சொல்லுறது...//
நீங்க எல்லாம் பளிச்ன்னு தெரிவிங்க.ஒன்னுமே சொல்லமால் நீங்க வகுப்பில் இருப்பது தெரியும்

//பிரசண்ட் செக்கு,
ஓசி வகுப்புக்கு ரொம்ப தெரிமா காசே மேடம் :) //

மை ஃபிரண்ட் அக்காவிடம் இதை சேர்த்துவிட்டேன்

Anonymous said...

/சந்தோஷ் aka Santhosh said...
cingu நல்ல துவக்கம். சாரி கொஞ்சம் லேட் ஆயிடிச்சி பெஞ்சி மேல எழுப்பி நிப்பாட்டாடாதிங்க :)). ///

மை ஃபிரண்ட் டீச்சர் ரொம்ப நல்லவங்க.நாந்தான் உங்களை பெஞ்சி மேல நிப்பாட்டுவேன்.வருகைக்கு நன்றி சந்தோஷ்

Anonymous said...

/balar said...
டீச்சர்ஸ், நானும் வந்துட்டேன் மலாய் கத்துக்க...:)//

செலாமாட் செலாமாட்..//

தம்பி.selamat datang.தம்பி நீங்க எங்களுக்கு பாரட்டை தெரிவிக்க taniah(தானியா) என்று சொல்ல வேண்டும் :-)


//மிக அருமையான் முயற்சி..மேலும் சிறப்பாக தொட்ர வாழ்த்துக்கள்..கண்டிப்பாக ரொம்ப யூஸ்புல்லாக இருக்கும்...//

கண்டிப்பாக தொடரும்.நன்றி




//நீங்கள் கற்றுக்கொடுத்த மலாய் வார்த்தைகள் அப்ப்டியே இந்தோனோஷியா Bahasa மாதிரி இருக்கிறது.அப்படியென்றால் இந்தோனோஷியாவிலும் மலாய் தான் முதல் மொழியா?? //

பாலா.Bahasa indonesia வும் மலாய் மொழிதான்.ஆனால் அவர்கள் பேசும் முறை சற்றே மாறுப்பட்டு இருக்கும்.மற்றப்படி அதுவும் மலாய் மொழிதான்.இந்தோனோஷியாவில் மட்டும் இல்லை brunei நாட்டிலும் மலாய்தான் முதல் மொழி :-)

தெரிமா காசே செக்கு.

Anonymous said...

//Syam said...
Terima Kasih Cikgu கிளாஸ்ல தூங்கிட்டேன்...இன்னொரு டைம் கிளாஸ் எடுக்கறீங்களா :-) //

அதுக்கு எல்லாம் extra charge ஆகும் நாட்டாமை

Anonymous said...

/மணி ப்ரகாஷ் said...
பிரசண்ட் செக்கு.

நோ ஹோம் ஒர்க் பிளீஸ்... //

no homework ஆனால் சோதனைகள் உண்டு :-)

Anonymous said...

/கவிதா|Kavitha said...
செக்கு,

தெரிமா காசே !!

ஜும்பா லாகி :))))) //

சாமா சாமா.


//கவிதா|Kavitha said...
இது என்ன (வால் உள்ள) பாய்ஸ் கிளாஸ்'ஆ..

பொண்ணுங்க கிடையாதா? //

கவிதா பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்ல பசங்க.அதுதான் வால் இல்லை.அடுத்த வகுப்பு பெண்களை வைக்கலாம்.மை ஃபிரண்ட் அக்காவை கேட்டு சொல்லுறேன்

Anonymous said...

@நாகூர் இஸ்மாயில்,பரணி,we the people

terima kasih.jumpa lagi :-))

Anonymous said...

//பொற்கொடி said...
akka thangachi idhukku ennanu sollaiye :-) illaina nama epdikka pesuradhu? //

அக்கா நான் இருக்கேன்.நான் சொல்லி தருவேன் ;-)

அக்கா: காகாக்(kakak)
தங்கை:ஆடேக்(adik)
தம்பி:ஆடேக்(adik)
அண்ணா:அபாங்(abang)

தங்கையும் தம்பியும் ஆடேக் என்றுதான் அழைப்பார்கள்.2 in 1 ;-)

Anonymous said...

// G.Ragavan said...
2007 ஆங்கிலப் புத்தாண்டாடு சேர்த்து ஆறு நாட்கள் மலேசியாவில் இருந்தேன். ஓரளவுக்கு...(ஏதோ ஒன்றிரண்டு) தெரிந்து கொண்டோம். குராங்கான் லாஜு (மெதுவாப் போ). டண்டாஸ் (இது ரொம்ப முக்கியமப்பா). டிலாரங் மெரோகாக் (புகைப் பிடிக்கக் கூடாது). மாசூக். டிலாரங் மாசூக். இப்படியாக கொஞ்சம் படித்துக் கொண்டோம்.//
அதுல குராங்கான் லாஜுதான் காமெடி. நாங்க தங்கியிருந்த ஓட்டல் இருந்த தெரு குராங்கான் லாஜுன்னு நெனச்சோம். அங்க போர்டு இருந்தது. அத வெச்சி அந்த எடத்தக் கண்டுபிடிச்சிரலாம். அப்புறம் இன்னொரு எடத்துக்குப் போனா...அங்கயும் அந்த போர்டு. அட...என்னடா...இந்தத் தெரு எல்லா ஊர்லயும் இருக்கேன்னா வெசாரிச்சா...அது மெதுவாப் போங்குற பலகையாம். //

டண்டாஸ் ரொம்ப முக்கியம்தான்.கழிவறை எல்லாம் இடத்திலும் மிகவும் முக்கியம் :-)
terima kasih இராகவன் :-)jumpa lagi

')) said...

மலாய் படிக்க வைக்காம விடமாட்டீங்க போல! :)
நல்லாயிருக்கு நீங்க வகுப்பெடுக்கும் அழகு!

')) said...

இவ்ளோ jolly யா ஒரு வகுப்பு இருந்தா கத்துக்கிற ஆர்வம் தன்னால வருமுங்கோ!!!

')) said...

''கவான் சாயா தெரிமா காசே''

ஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'


:-)))

Anonymous said...

terima kasih cikgu....

')) said...

//''கவான் சாயா தெரிமா காசே''

ஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'//

நான் தான் பாஸா பெயிலா போடுறவன். நல்ல அமவுண்ட் அபிஅப்பா அக்கவுண்டுக்கு அனுப்பினா ஆல் பாஸ்:-))

')) said...

எப்பவும் போல நான் classக்கு லேட்டா?

வலை உலகத்துக்காக மலாய் சொல்லித்தர உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :)

')) said...

@சுப.செந்தில்:

//மலாய் படிக்க வைக்காம விடமாட்டீங்க போல! :)
நல்லாயிருக்கு நீங்க வகுப்பெடுக்கும் அழகு!//

ஹீஹீ.. எனக்கு தெரிஞ்சது பத்தவங்களுக்கும் தெரியணும் என்ற நல்ல(??) எண்ணம்தான் :-D

//இவ்ளோ jolly யா ஒரு வகுப்பு இருந்தா கத்துக்கிற ஆர்வம் தன்னால வருமுங்கோ!!!//

:-D அடுத்த க்லாஸுல செந்திலையும் மாணவராய் சேர்த்துக்குவோம். :-D

')) said...

@மங்கை:

//''கவான் சாயா தெரிமா காசே''

ஜஸ்ட் பாஸாவது ஆவனா 'செக்கு'


:-))) //

மங்கையக்கா,

விட்டுப்பாடமெல்லாம் செஞ்சுட்டு வந்திருக்கீங்க.. எல்லாவத்தையும் கரேக்டா சொல்லிட்டீங்க. :-)

கண்டிப்பா பறக்குற வர்ணத்துல (flying colours) நீங்க பாஸ் ஆகுவீங்க. :-D

')) said...

லேட்டா வந்ததுக்கு மிந்தா மா-ஆஃப்
செக்கு(கள்). இரண்டு செக்கு இல்லையா... அதான். ;-)

தெரிமா காசே - பாடத்துக்கு. இதையெல்லாம் எப்படி ஞாபகம் வச்சுக்கிறது செக்கு(கள்)? அதையும் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு கோடான கோடி தெரிமா காசே.

நகைச்சுவை ததும்ப, படங்களுடனும் சொல்லித்தந்த செக்கு(களுக்கு), ஒரு ஓ போட்டிரலாம்.

மை பிரண்டு - சாயா கவான்
துர்கா - ??

;-)

')) said...

Hi Buddy,

May God Bless.

')) said...

மிகவும் நல்ல முயற்சி. அழகாக சொல்லித்தருகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தொடரட்டும்.

')) said...

உள்ளேன் டீச்சர்

')) said...

romba nalla irunthathu!!!!!!!!