Monday, July 16, 2007

யாரு"லா" பழங்களின் அரசி???!

வணக்கம் நண்பர்களே,
போன பதிவில் “மலேசியா பழங்களின் அரசன் டுரியான்” பற்றி பல சுவையான தகவல்களை அறிந்து கொண்டோம்.நாரதர் கலகம் மாதிரி அனைவரும் புது புது தகவல்கள் தந்து எங்களை எல்லாம் கதி கலங்க செய்து விட்டீர்கள்.ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இந்த கலகத்திலிருந்து நம்மால் பல புது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆனால் எல்லாரும் நான் கேட்ட கேள்வியை மறந்து நீங்கள் பல கேள்விகளை டுரியான் பழத்தைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்.

நான் கேட்ட கேள்வி
“பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?”

கடைசி வரையில் யாருமே பதில் சொல்லவில்லை.அந்த துக்கத்தில் நான் 3 மாதமாக சாப்பிட்டவில்லை,தூங்கவில்லை, என்று பொய் சொல்ல மாட்டேன்.யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் உங்களை நான் விட போவது இல்லை,போன தடவை நம் Hero டுரியானைப் பற்றி அறிந்து கொண்டோம்,இம்முறை Heroine மங்குஸ்தீன் பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பழங்கள் அரசி மங்குஸ்தீன் எப்படி இருக்கும்?










படத்தைப் பார்த்தீர்கள் இல்லையா?இதுதான் அரசியார் மங்குஸ்தீன் அவர்கள் email blacklist check



இந்த பழத்தின் தனிதன்னமை வாய்ந்த சுவைக்காக இதற்கு பழங்களின் அரசி மற்றும் "தேவலோக பழம்" என்று கூட அழைக்கப்பட்டது.மங்குஸ்தீன் பழம் தென் கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு வகை பழம்(tropical fruit).டுரியான் பழம் குளிர்ச்சி என்றால்,மங்குஸ்தீன் பழம் வெப்ப தன்மையை கொடுக்கும் என்று நம்படுகின்றது.


இதற்கும் விக்டோரியா மகாராணிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.அது எப்படி என்றால் விக்டோரியா மகாராணி இந்த பழத்தைப் பற்றி கேள்விப்பட்டு இதை கொண்டு வருபவர்களுக்கு அந்நாட்டின் உரிய பட்டமான "வீரத்திருத்தகைப் பட்டம்"(knighthood) அளிப்பதாக வாக்குறுதி தந்தாராம்.ஆனால் யாராலும் இந்த பழத்தை கொண்டு வரமுடியவில்லை.இந்த பழத்தை வாரக்கணக்கில் கடுமையான தட்பவெட்ப சூழ்நிலை மாற்றங்களில் இருக்க முடியதினால்,இதை இங்கிலாந்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்று ஒரு கதை இருக்கின்றது.இந்த பழங்கள் தென்கிழக்கு ஆசியாவின் தட்ப வெப்ப நிலைகளில் தான் இருக்க முடியும்.இங்கிலாந்து அரசியே விரும்பி கேட்ட பழம் என்பதால் அதற்கு பழங்களின் அரசி என்ற பெயர் வந்தது என்று சொல்கின்றார்கள்.இந்த கதையில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால் கதை நன்றாக இருக்கின்றது இல்லையா?








மங்குஸ்தீன் பழத்தின் வெளித்தோற்றம்









பழத்தின் உள் தோற்றம்.பழங்கள் டுரியானைப் போல சுளைகளாக இருக்கும்.ஆனால் வெண்மையான சுளைகள்.உள்ளே சிறிய கொட்டைகள் இருக்கும்.ஒரு மங்குஸ்தீன் பழம் ஆரஞ்சு பழத்தின் அளவிற்கு இருக்கும்.





இந்த பழத்தின் சுவை இனிப்பும்,கொஞ்சம் துவர்ப்பும் மற்றும் புளிப்பும் கலந்து இருக்கும்.இந்த பழங்களைச் சிறு வயதில் சாப்பிடும் பொழுது அம்மாவிடம் பல முறை அடிவாங்கி இருக்கின்றேன்.அது இந்த பழங்களை உரித்து சாப்பிடும் பொழுது அதன் தோல்களில் இருந்து வரும் ஒரு வகை சாறு சட்டைகளில் பட்டால் கறை படிந்து விடும்.இந்த கறைகள் எல்லாம் போக்கவே முடியாது.அம்மா மங்குஸ்தீன் பழம் வாங்கி வந்தால் பழைய சட்டை எல்லாம் தேடி கண்டுப்பிடித்து,அதை அணிந்துக் கொண்டு சாப்பிடும் அளவிற்கு எல்லாம் பொறுமைசாலி நான் இல்லை.எப்படிதான் கவனமாக சாப்பிட்டாலும் சட்டையில் கறைப்படியும்,அம்மாவிடம் அடியும் கிடைக்கும்email blacklist check(இது எல்லாம் அரசியலில் சாதாரணம்ப்பா)



மங்குஸ்தீன் மரங்கள் பழங்களைக் கொடுக்க 7லிருந்து 9 வருடங்கள் ஆகும்.ஆனால் அதன் பிறகு சில மரங்கள் 100 வருடம் வரை பழங்களைக் கொடுக்குமாம்!!!!!!




6 மாதத்தில் மங்குஸ்தீன் செடிகள்








2 வருடத்தில்...




6வருடங்களில்




பூவாகி.....காய் ஆகும் பழம்





பழம் இப்பொழுது நன்றாக தெரிகின்றது.அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பூப் போன்று இருக்கின்றதே...தெரிகின்றதா?அதை வைத்து பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளலாம்.இந்த பழத்தின் உள்ளே ஒரு 6 சுளைகள் இருக்கும். இதைப் பார்த்து அதிக சுளைகள் உள்ள பழத்தை நாம் தேர்ந்து எடுக்கலாம்.






பழமாகும் காய்




பழுத்த பழம் ஊதா நிறத்தில் இருக்கும்....

சரி இப்பொழுது முக்கியமான விஷயம்.மங்குஸ்தீன் பழத்தை எப்படி சாப்பிடுவது?(வாயால் தான் என்று என்னை மாதிரி அறிவு ஜீவிகள் கிண்டல் பண்ண வேண்டாம்.)



மங்குஸ்தீன் பழத்தைக் கைகளாலே உரித்து சாப்பிடலாம்.பழத்தை மேசை மேல் வைத்து,அதை உள்ளங்கையால் அமுக்கினால் பழம் பிளக்கும்.இந்த மாதிரி வீர சாகசம் செய்து உங்கள் வலிமையைக் காட்ட முடியவில்லை என்றால் சிறு கத்தியைக் கொண்டு பழத்தை பிளக்கலாம்.பழத்தின் மேற்புறத்தில் 1cm அளவிற்கு குறைவாக பழத்தைச் சுற்றி வெட்டவும்.மிகவும் ஆழமாக வெட்ட வேண்டாம்.இப்படி செய்தால் பழம் இரண்டு பிரிவாக பிரியும்.(கீழே உள்ள படத்தைப் பாருங்கள்).ஆனால் கவனம் தேவை.நான் முன் சொன்னது போல இந்த பழங்களில் சாறு பட்டால் அந்த கறை போகாது.நான் எல்லாம் என்றைக்குமே இந்த பழங்களை உரித்தது இல்லை.அதற்குதான் அம்மாவும் அண்ணாவும் இருக்கின்றார்களே.என் நல்ல சட்டையில் அழுக்கு படிய கூடாது.இது மாதிரி யாரவது கிடைத்தால் அவர்களிடமே இதை உரித்து தர சொல்லுங்கள்.ஹிஹி.சின்ன வயதில் வாங்கிய அடியால் இப்படி ஆகிவிட்டேன்.





உள்ளே இருக்கு கொட்டை கடினமாக இருக்காது.ஆனால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மிகவும் கசப்பாக இருக்கும்.நன்கு பழுத்த பழங்கள் தான் இனிப்பாக இருக்கும்.காயாக இருப்பது சற்று துவர்ப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்.பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும் பழங்களையே தேர்ந்து எடுக்கவும்.மங்குஸ்தீன் பழங்களைக் குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாது.வாங்கிய சில நாட்களிலேயே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.











மேலும் விபரங்களுக்கு: http://www.hort.purdue.edu/newcrop/morton/mangosteen.html#Food%20Uses
நன்றி
http://ezinearticles.com/?Mangosteen---The-Queen-of-Fruits&id=94295
email blacklist check
சென்று வருகின்றேன் நண்பர்களே!!!
இது எந்த கலகத்தில் முடிய போகின்றதோ..நாரயணா நாரயணா!

44 மறுமொழிகள்:

Anonymous said...

Yenga..Nijamavey intha palangala sapidalama...Naan indivila irunthu penang vanthathilirunthu..Durian Sapidunga ..Duriyan Sapidunga nu solluranga..ana..antha vasatha pathiyum solluranga..Neenga yenna sollureenga..

')) said...

நேற்று கூட இதை கடையில் வாங்கலாமா? வேண்டாமா? என்ற யோஜனையில் அடுத்த தடவை வாங்கிக்கொள்ளலாம் என்றிருந்துவிட்டேன்.
சுவை நன்றாக இருக்கும்.
இது அரசி,சூடு,கறை போகாது என்பதெல்லாம் தெரியாது.:-))

')) said...

who don't brief us about the rambutan fruit?

')) said...

எனக்கு இந்தப் பழம் ரொம்ப இஷ்டம் "லா"

')) said...

நல்ல பழங்கள் & படங்கள் ;-)

Anonymous said...

I really don't understand use of the word 'la'. Is it Tamil?

')) said...

என்னமா ஆராய்ச்சி பண்ணி போட்டிருக்கீங்க அக்கா!!
ஒவ்வொரு படத்தையும் வலையேற்றி பதிவிற்கு ஏற்றார்போல் பொருத்துவதற்கூ எவ்வளவு பொறூமை வேண்டும் என்று எனக்கு தெரியும்!!!
My salute for the effort!!! B-)

நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு!!
வாழ்த்துக்கள்!! :)

')) said...

அரசியும் நல்லா இருக்காங்க ;)))

அடுத்து யாரு?

')) said...

நீங்க சுத்த பழம் என நிரூபனம்!

')) said...

தூரியன் பழம் - பழங்களின் அரசனா?
ஏன், பழத்த வெட்டினா, கிட்ட யாரும் போக முடியாத அளவு நல்லா வாசமா? :P

')) said...

இந்த பழத்த சாப்பிட்டு, அவ்ளோ பிடிச்ச மாதிரி இல்ல!

Different ppl, Diff tast :D

')) said...

hehe, eppadiyo, nalla pathivu! thanks for the info :)

')) said...

//இம்முறை Heroin மங்குஸ்தீன் //

hehe! naan kooda ullaye matter irukira palam thaan solla poreenganu ninachen!
heroin, kanja appadinu beethiya kilapareenga!

heroine ma athu!

')) said...

நல்ல படங்களும் பதிவுகளும்'லா'

இந்தக் கறை பிஸினெஸ் எல்லாம் வேணாமுன்னுதான் இங்கே 'டின்'லே
கிடைக்கறதை வாங்கி அமுக்கிடறது:-))))

')) said...

sari vanga oru valai pathivar meeting podalam..malaysiavila...

')) said...

//பழங்களின் அரசன் டுரியான்//

உண்மையா CVR?
யாரோ நீங்க தான் அந்த அரசன்-ன்னு சொன்னாங்களே! :-))))

துர்கா....
மா, பலா, வாழை....
அதில் மாம்பழத்தைப் பழங்களின் அரசன்-ன்னு இங்க சொல்லுவோம்! ஒங்க ஊரில் டுரியனா? சூப்பர்!
சிங்கையில் நண்பன் இந்தப் பழத்தை ஊட்டி விடாத குறையாக...கொடுத்தான்...பழத்தை நுகரும் போது இருந்த வெறுப்பு, வாயில் பட்டதும் அப்படியே மாறி விட்டது!

மங்குஸ்தீன் பழமும் சாப்பிடக் கொடுத்தான்...அரசனை விட அரசி இன்னும் அருமை! அவனும் ஊதா நிறப் பழம் தான் கொடுத்தான்...அவ்வளவு இனிமை...கிராமத்துக் காட்டு விளாம்பழத்தில் வெல்லம் தட்டிச் சாப்பிட்டாப் போல!

இங்கு அமெரிக்காவிலும் மங்குஸ்தீன் போல ஒரு பழம் உள்ளது. அதன் கலர் ஆரஞ்சு! Tropical Fruit தான்!
அதன் முடியில் வைத்து சுளைகள் எவ்வளவு என்று எண்ணலாம்! Parsimmon என்று பெயர்! சாப்பிட்டுப் பாருங்கள்! கறை படியும் பிரச்சனை கிடையாது! So உங்க அண்ணனை அடித்து வேலை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது! :-))))

')) said...

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பழத்தை வாங்கி எப்படி சாப்பிடறதுனு தெரியாம வீணாக்கிட்டேன் :-((

Anonymous said...

//PenangIndian said...
Yenga..Nijamavey intha palangala sapidalama...Naan indivila irunthu penang vanthathilirunthu..Durian Sapidunga ..Duriyan Sapidunga nu solluranga..ana..antha vasatha pathiyum solluranga..Neenga yenna sollureenga..
//

பழத்தின் மணம்தான் அதற்கு எதிரி.சுவை அப்படி இல்லை.கீழே KRS என்ன சொல்லி இருக்கின்றார் என்று பாருங்கள்

Anonymous said...

// வடுவூர் குமார் said...
நேற்று கூட இதை கடையில் வாங்கலாமா? வேண்டாமா? என்ற யோஜனையில் அடுத்த தடவை வாங்கிக்கொள்ளலாம் என்றிருந்துவிட்டேன்.
சுவை நன்றாக இருக்கும்.
இது அரசி,சூடு,கறை போகாது என்பதெல்லாம் தெரியாது.:-))
//

வாங்க குமார் அண்ணா.ஏதோ என்னால் முடிந்தது.அடுத்த பதிவிற்கும் வாங்க.நன்றி

Anonymous said...

/ பட்டணத்து ராசா said...
who don't brief us about the rambutan fruit?
//

எழுதுவதற்கு சுலபமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தது ரம்புத்தான் தான் :)
மலேசியாவைப் பற்றி எழுத நிறைய இருக்கின்றது.பழங்களிலேயே எல்லாவற்றையும் முடித்து விட கூடாது இல்லையா..வருகைக்கு நன்றி

Anonymous said...

//கானா பிரபா said...
எனக்கு இந்தப் பழம் ரொம்ப இஷ்டம் "லா"
//
அப்படியா'லா'.சந்தோசம்'லா'.நன்றி'லா' :))

Anonymous said...

//நல்ல பழங்கள் & படங்கள் ;-) //

நன்றி :))

Anonymous said...

//Thamilan said...
I really don't understand use of the word 'la'. Is it Tamil?
//

லா தமிழ் வார்த்தை இல்லை.மலாய் மொழியில் இருந்து சற்று இரவல் வாங்கி விட்டோம்.அதுவே புது வகை தமிழாக மாறி போய்விட்டது.ஒவ்வொரு இடங்களில் தமிழ் slang மாறுபாடும் இல்லையா?அது போலதான் இதுவும் :)

Anonymous said...

/ CVR said...
என்னமா ஆராய்ச்சி பண்ணி போட்டிருக்கீங்க அக்கா!!
ஒவ்வொரு படத்தையும் வலையேற்றி பதிவிற்கு ஏற்றார்போல் பொருத்துவதற்கூ எவ்வளவு பொறூமை வேண்டும் என்று எனக்கு தெரியும்!!!
My salute for the effort!!! B-)

நிறைய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு!!
வாழ்த்துக்கள்!! :)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.நன்றி அண்ணா.

Anonymous said...

/கோபிநாத் said...
அரசியும் நல்லா இருக்காங்க ;)))

அடுத்து யாரு?
//
அடுத்தது பெருச ஏதாச்சும் எழுதலாம் என்று முயற்சி செய்கின்றேன்.பார்ப்போம் கோபி.நன்றி

Anonymous said...

ட்ரிம்ஸ்:
தாத்தா இங்கேயும் வந்து மானத்தை எல்லாம் காற்றோடு பறக்க விட்டாச்சா?ஏன் இந்த கொல வெறி???நீங்கள் சொன்ன typo error ஐ மாற்றி விட்டேன்.நன்றி தாத்தா.

Anonymous said...

/நல்ல படங்களும் பதிவுகளும்'லா'

இந்தக் கறை பிஸினெஸ் எல்லாம் வேணாமுன்னுதான் இங்கே 'டின்'லே
கிடைக்கறதை வாங்கி அமுக்கிடறது:-))))//

பழம் எல்லாம் fresh ஆக சாப்பிடனும்.இல்லையென்றால் சுவை நன்றாக இருக்காது.எனக்கு மரத்தில் இருந்து வரும் பழங்கள்தான் அதிக இஷ்டம்.நீங்களும் லா லா தமிழ் பேச ஆரம்பிச்சுடீங்களா? :))

Anonymous said...

/TBCD (Tamilnadu Born Confused Dravidian) said...
sari vanga oru valai pathivar meeting podalam..malaysiavila...
//

மீட்டிங் எல்லாம் போட்டு முடிந்துவிட்டது கனவில்.நான் மலேசியா வந்தால் இது நடக்குமா என்று பார்ப்போம் :))

Anonymous said...

///பழங்களின் அரசன் டுரியான்//

உண்மையா CVR?
யாரோ நீங்க தான் அந்த அரசன்-ன்னு சொன்னாங்களே! :-))))//

அவர் ஞானபழம்.இந்த list இல் அந்த பெயர் வராது :))

//இங்கு அமெரிக்காவிலும் மங்குஸ்தீன் போல ஒரு பழம் உள்ளது. அதன் கலர் ஆரஞ்சு! Tropical Fruit தான்!
அதன் முடியில் வைத்து சுளைகள் எவ்வளவு என்று எண்ணலாம்! Parsimmon என்று பெயர்! சாப்பிட்டுப் பாருங்கள்! கறை படியும் பிரச்சனை கிடையாது! So உங்க அண்ணனை அடித்து வேலை வாங்க வேண்டிய அவசியம் இருக்காது! :-)))) //
ஹிஹி.படங்களைப் பார்த்தேன்.எங்க ஊரில் இந்த பழம் இருக்கின்றதா என்று தெரியவில்லை

Anonymous said...

//ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இந்த பழத்தை வாங்கி எப்படி சாப்பிடறதுனு தெரியாம வீணாக்கிட்டேன் :-(( //

ஹிஹி.ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே போட வேண்டிய பதிவு.நான் தான் போடமால் விட்டு விட்டேன்.Too bad anna :(

Anonymous said...

@KRS
அண்ணா,இணையத்தில் தேடி பார்த்ததில் இரண்டும் வேறு பழங்கள் என்று தெரிகின்றது
www.paradisewines.com.au/fruits.html

')) said...

/*மீட்டிங் எல்லாம் போட்டு முடிந்துவிட்டது கனவில்.நான் மலேசியா வந்தால் இது நடக்குமா என்று பார்ப்போம் :))*/
appa neenga inga illaya....I mean malaysiavila...hmmm..yenna koduma saravana ithu....

')) said...

வாவ், நல்லா இருக்கு!
அறிமுகம் விளக்கமும் அமர்க்களம்!

Anonymous said...

//appa neenga inga illaya....I mean malaysiavila...hmmm..yenna koduma saravana ithu....
//

:))

Anonymous said...

//வாவ், நல்லா இருக்கு!
அறிமுகம் விளக்கமும் அமர்க்களம்! //

நன்றி ஜீவா

')) said...

துர்கா!
இந்த மங்குஸ்தான் ; தென்னிலங்கையில் உண்டு. சில மாதங்களில் அதிகம் பழம் கொடுக்கும் அப்போ
வட இலங்கைக்கும் வரும் விலை சற்று அதிகம்; எனினும் வாங்கிச் சாப்பிடுவோம்; கொழும்விலிருந்து வருவோர் கொண்டுவருவார்கள்;
இந்த மரம் பூ எதுவும் நான் கண்டதில்லை; உங்கள் பதிவு மிக விபரமாக உள்ளது.
நன்றி

Anonymous said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
துர்கா!
இந்த மங்குஸ்தான் ; தென்னிலங்கையில் உண்டு. சில மாதங்களில் அதிகம் பழம் கொடுக்கும் அப்போ
வட இலங்கைக்கும் வரும் விலை சற்று அதிகம்; எனினும் வாங்கிச் சாப்பிடுவோம்; கொழும்விலிருந்து வருவோர் கொண்டுவருவார்கள்;
இந்த மரம் பூ எதுவும் நான் கண்டதில்லை; உங்கள் பதிவு மிக விபரமாக உள்ளது.
நன்றி
//
நம்ப ஊரில் எல்லாம் இந்த பழத்தின் விலை மலிவுதான்.வருகைக்கு நன்றி யோகன் :)

')) said...

நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு ஒரு பாக்ஸ் பார்சல்

')) said...

ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல கூட மங்கூஸ்தான் நல்லா கிடைக்கும்... சூப்பர் பழம்...


அவ்வ்வ்... நான் ஊருக்கு போனும்!!

')) said...

மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல கெடைக்காது. ஆனா குற்றாலம் போனா கிடைக்கும். குற்றாலம் போறப்பல்லாம் மங்கூஸ்தான் பழம் சாப்டாம வந்ததில்லை. அவ்வளவு பிடிக்கும். பழத்தைப் பத்தி இவ்வளவு விரிவா எடுத்துச் சொன்னதுக்கு நன்றி லா. :)

Anonymous said...

// குசும்பன் said...
நல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு ஒரு பாக்ஸ் பார்சல்
///

அது எல்லாம் முடியாது.மலேசியா வந்து வாங்கிட்டு போங்க.அதான் உங்க ஊர் குற்றாலடத்தில் எல்லாம் இந்த பழம் கிடைக்குமாமே :)

Anonymous said...

/ k4karthik said...
ஐய்ய்... எங்க ஊரு குற்றாலத்துல கூட மங்கூஸ்தான் நல்லா கிடைக்கும்... சூப்பர் பழம்...


அவ்வ்வ்... நான் ஊருக்கு போனும்!!
//

அப்படியா?அவ்வ்வ் நானும் மலேசியா போகனும்.சிங்கப்பூர் பழம் எல்லாம் மலேசியா பழம் போல இல்லை

Anonymous said...

/மங்கூஸ்தான் பழமெல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். தூத்துக்குடீல கெடைக்காது. ஆனா குற்றாலம் போனா கிடைக்கும். குற்றாலம் போறப்பல்லாம் மங்கூஸ்தான் பழம் சாப்டாம வந்ததில்லை. அவ்வளவு பிடிக்கும். பழத்தைப் பத்தி இவ்வளவு விரிவா எடுத்துச் சொன்னதுக்கு நன்றி லா. :) //

it is ok la brother ;)

')) said...

ஃப்ரெஷா பார்ஸிமொம் இங்கே தாராளமாக் கிடைக்குது. 'அரசி'தான் கிடைக்கறதில்லை(-:

'லா' வந்தே நிறைய வருஷமாச்சு. 14 வருஷம். மலேசியத் தோழியின் நெருக்கம்தான் காரணம்லா.