Saturday, June 9, 2007

மலேசியா வரலாறு பாகம் 2:மலாக்கா மாநிலம்மலாக்கா மாநிலம் மலேசியாவில் வரலாற்றுக்குப் புகழ் பெற்ற மாநிலம்.இன்று இந்த மாநிலத்தில் இருந்துதான் மலேசியாவின் வரலாறு இரண்டவது பாகம் ஆரம்பம்.போன வரலாறு இடுகையில் நான் மலேசியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட காலம் 1400 முதல் 1511 வரை இந்த மாநிலத்தில் இஸ்லாமிய ஆட்சிதான்.மலாக்கா மாநிலத்தின் பெயர் எப்படி வந்தது?இந்த மாநிலத்தை தோற்றுவித்தவர் யார்?தானா மெலாயுவில் எப்படி இஸ்லாமிய மதம் வந்தது?ஏன் இந்த ஆட்சி 1511 முடிவுக்கு வந்தது என்ற பல கேள்விகளுக்கு இந்த இடுகையில் பதில் கிடைக்கும்.வாருங்கள் மலாக்கா மாநிலத்தின் வரலாறை ஒரு அலசு அலசலாம்.(யாரும் படித்து விட்டு தூங்க கூடாது சொல்லிட்டேன்)


மலாக்கா மாநிலத்தை தோற்றுவிற்றவர் பரமேஸ்வரா என்று அழைக்கப்பட்ட ஒரு இளவரசர்.பெயர் இந்து பெயர் மாதிரி இருக்கின்றது இல்லையா?இவர் இந்து நாட்டைச் சேர்ந்தவர்.பாலேம்பாங்(Palembang)எனப்படும் நாட்டை பற்றி கடந்த இடுகையில் சொல்லி இருந்தேன்.இந்த இந்து அரசாட்சியைச் சேர்ந்தவர்தான் பரமேஸ்வரா.இவர் பாலேம்பாங் நாட்டின் நடந்த அரசியல் கலவரத்தால் அந்த நாட்டை விட்டே ஓடினார்.அவர் முதலில் தஞ்சம் புகுந்த இடம் தெமாசிக்(temasik).தெமாசிக்தான் தற்பொழுதைய சிங்கப்பூர்.அங்கேயும் பிரச்சனை வந்து தெமாசிக்கை விட்டு வெளியேறினார்.பிறகு சில அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்தார்.ஆனால் எல்லாம் தோல்வியில் முடிந்தது.கடைசியாக அவர் வந்து சேர்ந்த இடம்தான் மலாக்கா.இந்த “மலாக்கா” பெயர் வந்ததிற்கு பல சுவராசியமான சம்பவங்களைச் சொல்கின்றார்கள்.அதில் ஒன்று பின் வரும் இந்த கதை;மேலே உள்ள மிருகம்தான் இந்த கதையின் கதாநாயகன்/நாயகி(எனக்கு அது ஆணா இல்லை பெண்ணா என்று தெரியாது)இது ஒரு வகையான மான்.மலாயில் சாங் கஞ்சில்(sang kancil) என்று அழைப்பார்கள்.கதைக்கு போவோமா?

"பரமேஸ்வரா ஒரு நாள் காட்டில் இளைப்பாறி கொண்டிருந்தார்.அவரின் வேட்டை நாய்களில் ஒன்று இந்த மானை தாக்கியது.இந்த மான் மிகவும் சிறியது.ஆனால் தன் பின்காலால் அந்த நாயை உதைத்து தப்பித்துவிட்டது.பரமேஸ்வரா இந்த மானின் புத்திகூர்மையைக் கண்டு வியந்து போய் இதுதான் அவர் ஆட்சி செய்ய சரியான இடம் என்று முடிவெடுத்தார்.அவர் இந்த காட்சியை “மலாக்கா” எனப்படும் மரத்தின் கீழ் இருந்து பார்த்ததினால் இந்த பெயர் வந்தது என்று கூறுகின்றார்கள்."

பரமேஸ்வராவின் நல்ல நேரம் இந்த இடம் வணிகம் செய்ய மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.அந்த கால கட்டத்தில் மலாக்கா என்பது மிக முக்கியமான வணிக மையம்.உலகளவில் புகழ்பெற்ற வணிக மையமும் இதுதான்.வணிகத்தால் மலாக்கா மாநிலம் பல துறைகளில் மேன்மை அடைந்தது.ஐரோப்பா,இந்தியா,சீனா என்று பல நாடுகளில் இருந்து வணிகர்கள் வந்து குவிந்தனர்.இதே வணிக்கதால்தான் இந்து ஆதிக்கத்தில் இருந்த மலேசியா இஸ்லாம் மதத்திற்கு மாறியது.குஜராத் மற்றும் ஆரேபியா வணிகர்களால் இஸ்லாம் மதம் பரப்பட்டது என்று நம்படுகின்றது.பரமேஸ்வரா பாசை(Pasai) என்பப்டும் இஸ்லாம் நாட்டின் இளவரசியை மணந்து இஸ்லாம் மதத்தைத் தழுவினார் என்றும் சொல்கின்றார்கள்.சில காலத்துக்கு பிறகு மலாக்கவே இஸ்லாம் மத்தத்தைப் தென் கிழக்கு ஆசியாவில் பரப்பும் ஒரு மையமாக ஆனது.மலாக்கா சுல்தான்கள்(இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு ராஜாவை சுல்தான் என்றுதான் அழைப்பார்கள்)இஸ்லாம் மதத்தைப் பரப்ப பல முயற்சிகள் எடுத்தார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்த மலாய் சுல்தான்கள் ஆட்சி,மலக்கா மாநிலத்தில் ஒரு நூற்றாண்டு வரையில்தான் நீடித்தது.பிறகு போர்த்துகீயர்கள் மலாக்காவின் மேல் படை எடுத்தனர்.மலக்காவின் ஒரு பிரபலமான வணிக மையம்.இதை கைப்பற்றினால் அவர்களுக்கு பெரும் லாபம் கிட்டும் என்பதற்காகதான் மலாக்காவைக் கைப்பற்ற நினைத்தனர்.கடைசியில் வெற்றி அவர்களுக்கே கிட்டியது.இதன் மூலம் முதல் அந்நிய அரசாட்சி இந்த மண்ணில் நுழைந்தது.

இந்த பதிவை நான் மிகவும் சுருக்கமாகதான் எழுதி உள்ளேன்.உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.கிழே நான் சில சுட்டிகளைக் கொடுத்து உள்ளேன்.உங்களுக்கு மலாக்கா மாநிலத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்த வலைப்பக்கங்களை உபயோக்கிக்கலாம்.
மேலும் தகவல்கள் அறிய:
http://www.questia.com/PM.qst?a=o&d=3947044http://www.regit.com/malaysia/history/history.htm
http://ms.wikipedia.org/wiki/Melaka

http://planet.time.net.my/CentralMarket/melaka101/chrono.htm

17 மறுமொழிகள்:

')) said...

துர்க்கா

சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி

')) said...

"(யாரும் படித்து விட்டு தூங்க கூடாது சொல்லிட்டேன்)"

நீங்க சொன்ன மாதிரி நான் படித்துவிட்டு தூங்கல...படிக்கும்பொழுதே
தூங்கிட்டேன் :))))

நல்ல தகவல்...நன்றி

')) said...

கலக்கி போட்டீங்க அக்கா!!
நிறைய தகவல்களை சுவையா சுருக்கமா சொல்லி இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)

')) said...

Thur Akka,
Very interesting information ma... we are expecting part 2.

Anonymous said...

@அய்யனார்
//மலேசியாவிலிருந்து எத்தனை பேர் ஏறினாலும் மகேந்திரன் மோகனதாஸ் ஏறும் போது என் மனதில் இருந்த படபடப்பு வரவே வராது.. :-) //

நல்ல புள்ளையாக தூங்கமால் படித்தற்கு நன்றி அய்ஸ்

Anonymous said...

//குசும்பன் said...
"(யாரும் படித்து விட்டு தூங்க கூடாது சொல்லிட்டேன்)"

நீங்க சொன்ன மாதிரி நான் படித்துவிட்டு தூங்கல...படிக்கும்பொழுதே
தூங்கிட்டேன் :))))

நல்ல தகவல்...நன்றி
//

குசும்பனுக்கு ஓவர் குசும்பா?நன்றிங்க...வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும்.அடிக்கடி எங்க பதிவு பக்கம் வாங்க

Anonymous said...

/CVR said...
கலக்கி போட்டீங்க அக்கா!!
நிறைய தகவல்களை சுவையா சுருக்கமா சொல்லி இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)
//
பெரியவரே உங்களுக்கும் குசும்பு.எனக்கு சின்ன வயசுதான்.அக்கான்னு கூப்பிட்டு உங்க வயசை குறைக்கதீங்க.வாழ்த்துகளுக்கு நன்றி

Anonymous said...

//நெல்லை காந்த் said...
Thur Akka,
Very interesting information ma... we are expecting part 2.
///

நீங்களும் ஒரு பெரியவர்...என்னை பார்த்து அக்கான்னு கூப்பிடுறீங்களே :(
உங்க வயசை குறைக்க என் வயசை கூட்ட வேண்டாம் :))
அடுத்த பகுதியும் கூடிய விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி

')) said...

தகவல்களுக்கு நன்றி

அக்கா..:)

Anonymous said...

//மின்னுது மின்னல் said...
தகவல்களுக்கு நன்றி

அக்கா..:)
//

மின்னலு நீங்களும் பெரியவர்.வேண்டாம்...இப்படி எல்லாம் உங்க வயசை குறைக்கதீங்க.வருகைக்கு நன்றி

')) said...

"குசும்பனுக்கு ஓவர் குசும்பா?நன்றிங்க...வருகைக்கும் உங்கள் மறுமொழிக்கும்.அடிக்கடி எங்க பதிவு பக்கம் வாங்க"

ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்கோவ்...கண்டிப்பா வருவேனுங்கோ..ஆனா ஈவ் டீசிங்ல புடிச்சு கூடுத்துட மாட்டீங்கலே? அப்படியே நானும் என்னத்ததான்
குசும்பியிருக்கேன் என்று என் பதிவு பக்கம் ஒரு தபா எட்டி பார்க்குறது.

')) said...

மின்னலு நீங்களும் பெரியவர்.வேண்டாம்...இப்படி எல்லாம் உங்க வயசை குறைக்கதீங்க.
//

உண்மை கசக்கும்

(வயச நல்லாவே மெயிண்டென் பண்ணுரீங்க)

')) said...

சுவராஸ்யமான வரலாற்று தகவல்களுக்கு நன்றி..:)

Anonymous said...

//அப்படியே நானும் என்னத்ததான்
குசும்பியிருக்கேன் என்று என் பதிவு பக்கம் ஒரு தபா எட்டி பார்க்குறது.
//

ரெண்டு தபா எட்டி பார்த்துட்டேன்.மறுமொழிகள் வரவில்லையா?

Anonymous said...

//உண்மை கசக்கும்

(வயச நல்லாவே மெயிண்டென் பண்ணுரீங்க) //

நீங்க பெரியவர் என்ற உண்மை உங்களுக்குக் கசக்கதான் செய்யும்.வயசை எப்படி maintain பண்ணுவது?அது ஏறிகிட்டேதான் போகுது.ஆனா உங்களை விட ரொம்ப சின்ன வயசு.அது மட்டும் உண்மை :)

Anonymous said...

//balar said...
சுவராஸ்யமான வரலாற்று தகவல்களுக்கு நன்றி..:)
//
பாலர் நன்றி...அடிக்கடி வாங்க

')) said...

தகவல்கள் நன்று! அப்படியே 'கெடா' பத்தியும் ஒரு தகவல் சொல்லுங்களேன்?

தற்போதைய 'கெடா' மானிலம்தான் 'கடாரம்' என்று முன்பு அழைக்கப் பட்டது. அதனால்தான் நம்ம ராஜேந்திர சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' னு பட்டப் பேர். இது அப்படியே மலேசிய வரலாற்றில் இருக்கானு தெரிஞ்சிக்க ஆசை!