


மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.
லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.
பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.
பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.
மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.
மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.
இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??
ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.
Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts
Tuesday, September 30, 2008
லெமாங் - ஆஹா என்ன ருசி!
“Selamat Hari Raya Aidilfitri"
Monday, July 21, 2008
பிறந்தநாள் வாழ்த்தும் ஐம்பதாவது பதிவும்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழி மை ஃபிரண்டிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது ஜில்லென்று ஒரு மலேசியா தளத்தின் ஐம்பதாவது பதிவும் ஆகும். வாழ்த்துப் பதிவாக அமைந்துவிட்டதில் மிக மகிழ்ச்சி.




அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட இப்பாடலை சமர்பிக்கிறோம்.
மாயாவி திரையில் இடம் பெற்ற 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலை போடலாம் என நினைத்தேன். அதில் ஜோதிகா கண்ணீர்விடும் காட்சி இருந்ததால் தவிர்த்துவிட்டேன்.
இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் மை ஃபிரண்ட் KFC வாங்கிக் கொடுப்பார்.
வாழ்த்து தெரிவித்தவர்கள்,
Saturday, October 13, 2007
செலாமாட் ஹரி ராயா
செலாமாட் ஹரி ராயா!
Selamat Hari Raya!
Selamat Hari Raya!

ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு எடுத்து ஷாவால் முதல் நாளில் பண்டிகை கொண்டாட விருக்கின்றனர் நம் முஸ்லிம் நண்பர்கள். மலாய் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்கு ஜில்லென்று ஒரு மலேசியா நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. Selamat Hari Raya.
மலேசியாவில் பிரபலமான பெருநாள் பாடல்களில் ஒன்று இங்கு உங்களுக்கு காட்டுகிறோம். கரோக்கே ஸ்டைலில் கீழே பாடல் வரியும் வரும். அந்த பாடகியை சைட் அடிக்காமல் பாடிப்பார்க்கவும் வாழ்த்துக்கள்.
பி.கு: பாடல் பிடித்திருந்தால், பாடல் வரியின் விளக்கங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதினால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதை நான் தமிழில் மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)