Saturday, June 9, 2007

சிகரத்தைத் தொட்ட மண்ணின் மைந்தர்கள்

வணக்கம் நண்பர்களே,
இமய மாலை சிகரம் உலகத்திலேயே உயரமான சிகரம்.எங்கள் மண்ணின் மைந்தர்கள் முதன் முதலாக இந்த சிகரத்தை 23 தேதி மே மாதம் 1997இல் அடைந்தனர்.அங்குச் சென்ற 20 பேர்கள் கொண்ட குழுவில் இரண்டும் மலேசிய தமிழர்கள்தான் இறுதியாக சிகரத்தை அடைந்தார்கள்.அவர்கள் தான் மோகன் தாஸ் மற்றும் மகேந்திரன்.சிகரத்தை அடைந்த முதல் மலேசியர்களும் முதல் தமிழர்களும் இவர்கள்தான்.இவர்கள் அங்கு இருந்த 55 நாட்களையும் மலேசியா தொலைகாட்சியில் ஒளிப்பரப்பட்டது.சிறு வயதில் இதை ஆர்வமாக பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கின்றது.

உலகின் மிக உயர்ந்த சிகரத்தைத் தொட்ட முதல் மலேசியர்கள்

கடந்த மாதம் 22 திகதி மறுபடியும் 6 மலேசியர்கள் இந்த சிகரத்தைத் தொட்டார்கள்.அவர்களின் பெயர்கள் பின் வருமாறு:
Muhammad Fauzan Haji Hassan(40 வயது)
Mr. Idris Bin Said (51 வயது),
Mr. Ahmad Reduan Bin Rozali (24 வயது),
Mr. Ahmad Fakhri Bin Abu Samah (25 வயது),
Ms. Marina Binti Ahmad (26 வயது)
Mr. Mohammad Rafi Bin Kori (28 வயது),
இதில் மரினா அஹமாட் சிகரத்தைத் தொட்ட முதல் மலேசியா பெண்மணி ஆவர்.வாழ்த்துக்கள்.

சிகரத்தை தொட்ட முதல் மலேசிய பெண்மணி

மேலும் தகவல்கள் அறிய:

http://thestar.com.my/news/story.asp?file=/2007/5/22/nation/17794325&sec=nation

மலேசியா வரலாறு பாகம் 2:மலாக்கா மாநிலம்மலாக்கா மாநிலம் மலேசியாவில் வரலாற்றுக்குப் புகழ் பெற்ற மாநிலம்.இன்று இந்த மாநிலத்தில் இருந்துதான் மலேசியாவின் வரலாறு இரண்டவது பாகம் ஆரம்பம்.போன வரலாறு இடுகையில் நான் மலேசியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்ட காலம் 1400 முதல் 1511 வரை இந்த மாநிலத்தில் இஸ்லாமிய ஆட்சிதான்.மலாக்கா மாநிலத்தின் பெயர் எப்படி வந்தது?இந்த மாநிலத்தை தோற்றுவித்தவர் யார்?தானா மெலாயுவில் எப்படி இஸ்லாமிய மதம் வந்தது?ஏன் இந்த ஆட்சி 1511 முடிவுக்கு வந்தது என்ற பல கேள்விகளுக்கு இந்த இடுகையில் பதில் கிடைக்கும்.வாருங்கள் மலாக்கா மாநிலத்தின் வரலாறை ஒரு அலசு அலசலாம்.(யாரும் படித்து விட்டு தூங்க கூடாது சொல்லிட்டேன்)


மலாக்கா மாநிலத்தை தோற்றுவிற்றவர் பரமேஸ்வரா என்று அழைக்கப்பட்ட ஒரு இளவரசர்.பெயர் இந்து பெயர் மாதிரி இருக்கின்றது இல்லையா?இவர் இந்து நாட்டைச் சேர்ந்தவர்.பாலேம்பாங்(Palembang)எனப்படும் நாட்டை பற்றி கடந்த இடுகையில் சொல்லி இருந்தேன்.இந்த இந்து அரசாட்சியைச் சேர்ந்தவர்தான் பரமேஸ்வரா.இவர் பாலேம்பாங் நாட்டின் நடந்த அரசியல் கலவரத்தால் அந்த நாட்டை விட்டே ஓடினார்.அவர் முதலில் தஞ்சம் புகுந்த இடம் தெமாசிக்(temasik).தெமாசிக்தான் தற்பொழுதைய சிங்கப்பூர்.அங்கேயும் பிரச்சனை வந்து தெமாசிக்கை விட்டு வெளியேறினார்.பிறகு சில அரசாங்கத்தை உருவாக்க முயற்சித்தார்.ஆனால் எல்லாம் தோல்வியில் முடிந்தது.கடைசியாக அவர் வந்து சேர்ந்த இடம்தான் மலாக்கா.இந்த “மலாக்கா” பெயர் வந்ததிற்கு பல சுவராசியமான சம்பவங்களைச் சொல்கின்றார்கள்.அதில் ஒன்று பின் வரும் இந்த கதை;மேலே உள்ள மிருகம்தான் இந்த கதையின் கதாநாயகன்/நாயகி(எனக்கு அது ஆணா இல்லை பெண்ணா என்று தெரியாது)இது ஒரு வகையான மான்.மலாயில் சாங் கஞ்சில்(sang kancil) என்று அழைப்பார்கள்.கதைக்கு போவோமா?

"பரமேஸ்வரா ஒரு நாள் காட்டில் இளைப்பாறி கொண்டிருந்தார்.அவரின் வேட்டை நாய்களில் ஒன்று இந்த மானை தாக்கியது.இந்த மான் மிகவும் சிறியது.ஆனால் தன் பின்காலால் அந்த நாயை உதைத்து தப்பித்துவிட்டது.பரமேஸ்வரா இந்த மானின் புத்திகூர்மையைக் கண்டு வியந்து போய் இதுதான் அவர் ஆட்சி செய்ய சரியான இடம் என்று முடிவெடுத்தார்.அவர் இந்த காட்சியை “மலாக்கா” எனப்படும் மரத்தின் கீழ் இருந்து பார்த்ததினால் இந்த பெயர் வந்தது என்று கூறுகின்றார்கள்."

பரமேஸ்வராவின் நல்ல நேரம் இந்த இடம் வணிகம் செய்ய மிகவும் ஏற்ற இடமாக இருந்தது.அந்த கால கட்டத்தில் மலாக்கா என்பது மிக முக்கியமான வணிக மையம்.உலகளவில் புகழ்பெற்ற வணிக மையமும் இதுதான்.வணிகத்தால் மலாக்கா மாநிலம் பல துறைகளில் மேன்மை அடைந்தது.ஐரோப்பா,இந்தியா,சீனா என்று பல நாடுகளில் இருந்து வணிகர்கள் வந்து குவிந்தனர்.இதே வணிக்கதால்தான் இந்து ஆதிக்கத்தில் இருந்த மலேசியா இஸ்லாம் மதத்திற்கு மாறியது.குஜராத் மற்றும் ஆரேபியா வணிகர்களால் இஸ்லாம் மதம் பரப்பட்டது என்று நம்படுகின்றது.பரமேஸ்வரா பாசை(Pasai) என்பப்டும் இஸ்லாம் நாட்டின் இளவரசியை மணந்து இஸ்லாம் மதத்தைத் தழுவினார் என்றும் சொல்கின்றார்கள்.சில காலத்துக்கு பிறகு மலாக்கவே இஸ்லாம் மத்தத்தைப் தென் கிழக்கு ஆசியாவில் பரப்பும் ஒரு மையமாக ஆனது.மலாக்கா சுல்தான்கள்(இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்பு ராஜாவை சுல்தான் என்றுதான் அழைப்பார்கள்)இஸ்லாம் மதத்தைப் பரப்ப பல முயற்சிகள் எடுத்தார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இந்த மலாய் சுல்தான்கள் ஆட்சி,மலக்கா மாநிலத்தில் ஒரு நூற்றாண்டு வரையில்தான் நீடித்தது.பிறகு போர்த்துகீயர்கள் மலாக்காவின் மேல் படை எடுத்தனர்.மலக்காவின் ஒரு பிரபலமான வணிக மையம்.இதை கைப்பற்றினால் அவர்களுக்கு பெரும் லாபம் கிட்டும் என்பதற்காகதான் மலாக்காவைக் கைப்பற்ற நினைத்தனர்.கடைசியில் வெற்றி அவர்களுக்கே கிட்டியது.இதன் மூலம் முதல் அந்நிய அரசாட்சி இந்த மண்ணில் நுழைந்தது.

இந்த பதிவை நான் மிகவும் சுருக்கமாகதான் எழுதி உள்ளேன்.உங்களுக்கு இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.கிழே நான் சில சுட்டிகளைக் கொடுத்து உள்ளேன்.உங்களுக்கு மலாக்கா மாநிலத்தைப் பற்றி மேலும் தெரிய வேண்டும் என்றால் இந்த வலைப்பக்கங்களை உபயோக்கிக்கலாம்.
மேலும் தகவல்கள் அறிய:
http://www.questia.com/PM.qst?a=o&d=3947044http://www.regit.com/malaysia/history/history.htm
http://ms.wikipedia.org/wiki/Melaka

http://planet.time.net.my/CentralMarket/melaka101/chrono.htm

Sunday, June 3, 2007

மலாய் படிக்கலாம் வாங்க:பாடம் 3

Kelas cabut paku(கிளாஸ் சாபுட் பக்கு) ......

ஆணி புடுங்கும் வகுப்பா?

இது என்ன புது மாதிரியான வகுப்பு என்று நான் வகுப்பில் நுழைகின்றேன்.
எல்லாமே ஆணி புடுங்கும் மாணவர்களாக இருந்தார்கள்.ஆஹா இதுதான வகுப்பின் பெயர்க்கு காரணம்!!!!அனைத்து மாணவர்களும் லாப் டாப்பும் கையுமாக வகுப்பில் அமர்ந்து இருந்தார்கள்

நானும் வகுப்பை ஆரம்பித்தேன்.

"Selamat pagi murid-muridஇன்று நான் தான் உங்களுக்கு எல்லாம் மலாய் ஆசிரியை.மை ஃபிரண்ட் டீச்சர் இப்பொழுது சற்று busy.ஆகவே இன்றைய வகுப்பு என்னுடந்தான் "

“ஐயோ மலேசியா மாரியாத்தா வந்துருச்சி.நாமே எல்லாம் செத்தோம்” இது இராயல் இராம்.

“ராம் வகுப்பு நடக்கும் நேரத்துல அது என்ன பக்கத்தில் உள்ள ரஞ்சனி கூட பேச்சு?இங்கே வாங்க”

ராம் தலையில் ஒரு கொட்டு விழுகின்றது.

"நான் மை ஃபிரண்ட் cikgu மாதிரி பொறுமைசாலி இல்லை.ரொம்ப கண்டிப்பு.யாரவது தப்பு செய்தீர்கள் .... கொட்டுதான் விழும் சொல்லிட்டேன்.சரி இன்று நாம் சில மலாய் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளலாமா?"

“நாங்க முடியாதுன்னு சொன்னால் விடவா போறீங்க”என்று நாகை சிவா முணுமுணுக்கின்றார்.


“இந்த மலாய் வார்த்தைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகளோடு சம்பந்தம் உள்ளவைகள்.”

Cikgu மலாய் மலாய்தான் தமிழ் தமிழ் தான்.எப்படி இது இரண்டும் சம்பந்தம்பட்டவை?என்று அய்யனார் கேட்கின்றார்.

“நல்ல கேள்வி..”(பதில் தெரியமால் திரு திரு என்று முழிக்கின்றேன்)

“அது வந்து எனக்கு யாரும் என்னிடம் கேள்விகள் கேட்ககூடாது.நான் தான் கேள்விகள் கேட்கனும்.சரியா?"
....
..
.

“கார்த்திக் நீங்கதான் தான் மலாய் வகுப்பில் ஆர்வமாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.நீங்க பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்”

“தமிழ் மொழியின் சில வார்த்தைகள் மலாய் மொழியிலும் பயன்படுத்தப்படுகின்றன.”என்று கார்த்திக் google search பயன்படுத்தி சரியான விடையைச் சொல்கின்றார்.

“ஆஹா...வாழ்த்துக்கள் கார்த்திக்”

“அடுத்த கேள்வி தமிழ் மொழி பயன்பாடு எப்படி மலாய் மொழிக்கு வந்தது?அதற்கான காரணங்கள் தெரியுமா”?

“cikgu நான் பதில் சொல்லுறேன்” என்று ஆர்வத்தோடு ஜி துள்ளி குதிக்கின்றார்.

“பூனை ஜி பொறுமை.சரி சொல்லுங்க பார்ப்போம்”

“அந்த காலத்தில் பல இந்து அரசாட்சி மலேசியாவில் இருந்தது.ராஜ ராஜ சோழன் ஒரு தமிழர் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.நாங்க எல்லாம் அவரு பரம்பரைன்னு வெளியே பேசிக்கிறாங்க cikgu"

"ஜி இது எல்லாம் வெட்டி பந்தா.அடுத்தது வேறு யாரவது சொல்லுங்கள்.சிபி நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்".

“மலாக்கா மாநிலத்திற்கு வணிகத்தின் மூலம் பல தமிழ் வணிகர்கள் வந்துள்ளனர்.இந்த வகையில் கூட தமிழ் மொழி மலாய் மொழியில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம்”என்று சிபி சொன்னார்.

“ஆமாம் இதுவும் ஒரு காரணம்.மெலாயு என்ற சொல்லிலேயே தமிழ் இருப்பது தெரியுமா?உங்களுக்கு எல்லாம் தெரியாது என்று எனக்கும் தெரியும்.நானே சொல்கின்றேன் கேளுங்கள்”

“cigku எங்களுக்குத் தெரியாதது என்பதனால்தான் இங்கே வந்து கஷ்டப்படுறோம்.இப்படி அறுக்கமால் பாடத்தை நடத்துங்கள்.அடுத்தது நாங்க எல்லாரும் சிவாஜி படம் பார்க்க போகனும்.சீக்கிரம் வகுப்பை முடிங்க”என்று தேவ் கத்த ஆரம்பித்தார்.

“தேவ் உங்களுக்கு கச்சேரி வகுப்பு முடிந்து நடக்ககும்.சரி இதுதான் காரணம்”

மலை+ஊர்=மலையூர்
இமயமாலை தொடர்தான் நம் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பு போல் இருக்கின்றது.இந்த மலைத்தொடரை வைத்துதான் மெலாயு என்ற சொல் வந்ததாக நம்ப படுகின்றது,ஆங்கிலேயேர்கள் இந்த சொல்லை சொல்லும் பொழுது மெலாயுவை மெலாயா(Malaya)என்று மாற்றி சொல்லி இந்த நாட்டினின் பெயரை மாற்றிவிட்டார்கள் என்றும் நம்படுகின்றது

“Cigku நீங்க இவ்வளவு பெரிய அறிவாளியா”என்று வெட்டிபயல் கேட்கின்றார்.

“அது இப்போதான் உங்களுக்குத் தெரியுமா?என்ன பண்ணுவது பல அறிவாளிகள் எல்லாம் இலைமறை காயாகதான் இருக்கின்றார்கள்.அடுத்த கேள்விக்கு நான் போகின்றேன் murid murid”


"நடுவுல இது அறிவாளின்னு சந்துல சிந்து பாடுது.எல்லாம் நம்ப நிலமை"என்று my day gops அனைவருக்கும் g talk வழியாக சொல்கின்றார்

"என்ன கணினியை வெறிச்சு பார்க்குறீங்க.பாடத்தை கவனிங்கப்பா."

“பூமிபுத்திரா(bumi putera).இதுவும் ஒரு தமிழ் வார்த்தைதான்.யாரவது விளக்கம் தர முடியுமா”

அப்பொழுது CVR ஜன்னலுக்கு வெளியே வெறித்து பார்க்கின்றார்.

“தம்பி.Hey தம்பி.என்ன வேடிக்கை பார்க்குறீங்க.வகுப்பைக் கவனிக்க மாட்டீங்களா”

“நான் ஒரு dreamer.கனவு காணும் பொழுது தொந்தரவு பண்ணதீங்க”

“கனவு எல்லாம் வகுப்பில் காண கூடாது.வகுப்பு முடிந்தது காணுங்கள்.மற்ற மலாய் வகுப்பு பக்கமே நீங்கள் போகவில்லையமே.அதற்கு தண்டனை இன்னும் ஒரு வாரத்தில் மற்ற வகுப்பில் நடந்த பாடங்களை மனப்பாடம் செய்யுங்கள்.சரியாக மனப்பாடம் செய்யவில்லை.Bench க்கு மேலே நிற்க வைப்பேன்.ஜாக்கிரதை.சரி இந்தாங்க ஒரு குட்டு”

“ச்சே இந்த லூசு தொல்லை தாங்க முடியவில்லை.எங்கே போனாலும் வந்து உயிரை வாங்குது.அப்துல் கலாமே இளைஞர்களே கனவு காணுங்கள் என்று சொல்லி இருக்கார்.இது நம்பளை திட்டிட்டு போகுது”என்று மனதிற்குள் CVR திட்டிக் கொள்கின்றார்.

“cikgu பூமி என்றால் தமிழிலும் பூமி இல்லை மண் என்று வைத்துக் கொள்ளலாம்.புத்திரா என்றால் புத்திரன்.மைந்தன் என்று வைத்துக் கொள்ளலாம்.ஆகவே மண்ணின் மைந்தர்கள்தான் பூமி புத்திரா”என்று அருண் சரியாக பதில் அளிக்கின்றார்.

“அப்பா.. உங்களில் சிலர் வகுப்பில் கவனத்தோடு தான் இருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி”

"ராகவன் உங்களால் மலாய் மொழியில் பயன்படுத்த பட்ட சில தமிழ் வார்த்தைகளைச் சொல்ல முடியுமா?

"டிலாராங் மாசுக்?"

"என்ன dilarang masuk ஆ?உங்களை மலேசியா பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க சரி.அதை தவிர வேறு எந்த வார்த்தையும் தெரியாது போல் இருக்கின்றதே"

“சியாம் தலையில் என்ன helmet?”

“எல்லாம் பூரிக்கட்டைக்கு பயம்தான் cikgu”

“பூரிக்கட்டையா?!ஏங்கே போனாலும் கழற்ற மாட்டீங்க போல் இருக்கு.சரி நீங்க ஒரு சில உதாரணங்கள் சொல்ல முடியுமா”

“தோ சொல்லுறேன் cikgu”
சுவாமி(suami) என்றால் கணவர் aka ரங்கமணி
ராஜா(raja) என்றால் அரசர்
கேடாய்(kedai) என்றால் கடைசரி murid-murid நேரம் ஆகிவிட்டது.டீச்சர் அடுத்த வகுப்புச் செல்ல வேண்டும்.ஆகவே இத்தோடு வகுப்பை முடித்துக் கொள்ளலாம்.இன்னும் சில வார்த்தைகளைக் குறிப்புகளில் கொடுத்து உள்ளேன்.Putu (புட்டு) -புட்டு(உணவு வகை)
Kapal(கப்பால்) - கப்பல்
Kupang(கூப்பாங்) - குப்பம்
Kotak(கோத்தா) - கொட்டான்
Satay(சாத்தே) – சதை
Harimau (Tiger)(ஹாரிமாவ்) - அரிமா
Singa(சிங்கா) - சிங்கம்
Perahu(பேராகு) -படகு
Taulan(தௌலன்) - தோழன்
Neschaya(நெஸ்சாயா) - நிச்சயம்
Aniyaya(அநியாய) - அநியாயம்
Sama(சாமா) - சமம்
Segala(செகலா) - சகலம்
Kerana(கெரனா)- காரணம்
Manga(மாங்கா)-மாங்காய்
Kari(கறி)-கறி


மலாய் மொழியில் தமிழ் மொழி மட்டும் இல்லமால் இன்னும் பல மொழிகளின் பயன்படும் உள்ளது.முடிந்தால் இது எல்லாம் மற்றொரு நாள் பார்ப்போம்."

சரி இன்றைய பாடத்தில் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா?

“cikgu ஒரு சந்தேகம்”என்று ஜொள்ளுப்பாண்டி கேட்கின்றார்

“எல்லாம் சொல்லி கொடுத்தீங்க சரி.இந்த ஐ லவ் யூ மட்டும் மலாயில் இப்படி சொல்லுவது என்று சொல்லி தரவீங்களா?”

“அடப்பாவி.இந்த வகுப்பில் உள்ள மற்ற நல்ல மாணவர்களையும் கெடுத்து விடுவீங்க போல் இருக்கே”


"Cikgu இந்த ஜொள்ளு மலாயில் எப்படி சொல்லுவாங்க.அதையாச்சும் சொல்லிட்டு போங்க.எனது ஜொள்ளுப்பணி மலேசியா அளவில் துவங்கலாம் என்று இருக்கின்றேன்"என்று ஜொள்ளுப்பாண்டி நச்சரிக்க ஆரம்பித்தார்.


மணி அடித்தது.

அப்பாடா.... ஆளை விடுங்க சாமீகளா என்று தலை தெறிக்க அவர்கள் ஓடுவதற்கு பதிலாக நான் ஒடி விட்டேன்.அடுத்த வகுப்பில் மை ஃபிரண்டுடன் மலாய் வகுப்பு ஆரம்பம்.சென்று வருகின்றேன்.

murid murid-மாணவர்கள்
cikgu=ஆசிரியர்
paku= ஆணி
cabut=புடுங்குதல்
kelas=வகுப்பு
(இது தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு மீள்பார்வை)