Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

Saturday, October 13, 2007

Soyuz விண்கலம் ISS-ஐ அடைந்தது


Soyuz TMA-11 விண்கலம் நேற்று இரவு 10.52க்கு அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station, ISS) இணைந்தது. 48 மணி நேரமாக 700 தடவை பூமியை சுற்றி வந்தப்பின் சரியான தருணத்தில் இணைய Soyuzக்கு சுமார் 90 நிமிடங்கள் எடுத்தது.

அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மோஸ்கோ விண்வெளி மையத்துக்கு 10 நிமிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

மலேசிய முஸ்லிம்களுக்கு தன்னுடைய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிய டாக்டர் ஷேய்க் முஜாப்பார் தன்னுடைய 10 நாட்கள் பயணம் வெற்றி பெற மலேசியர்கள் வாழ்த்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
Soyuz (வட்ட்டதிற்குள்) ISS-இல் சேரும் காட்சி

நோன்பு பெருநாளை விண்வெளியில் கொண்டாடும் உலகின் முதன் விண்வெளி வீரர் என்ற சரித்திரத்தையும் இன்று படைக்கிறார் டார்டர் ஷேய்க் அவர்கள்.
பி.கு: மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 588, Angkasa 1-இல் உடனுக்குடன் செய்திகளை காணலாம்.

Sunday, August 19, 2007

மலேசிய சாதனை புத்தகத்தில் ஈப்போ ஏ.சி.எஸ் மாணவர்கள்


ஈப்போ ஏ.சி.எஸ் இடைநிலைப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 50-ஆம் ஆண்டு சுதந்திரப் பொன்விழாவையொட்டி 73.3 மீட்டர் நீளமும் 41.4 மீட்டர் அகலமும் கொண்ட தேசியக் கொடி வடிவமைப்புக் கோலத்தை அமைத்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனர்.

இந்த தேசிய தினக் கோலத்தை வடிவமைப்பதில் 2000க்கும் மேற்ப்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கோலம் மலேசியாவின் மிகப்பெரிய கோலமாகக் கருதப்படுகிறது. ஏ.சி.எஸ் பள்ளி மைதானத்தில் நேற்று காலை 9.00 மணி அளவில் பொது மக்கள் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. பேரா மந்திரி புசாரின் பிரதிநிதியாக உயர்கல்வி இலாகாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் அத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் நாட்டுப் பற்றையும் அவர்களின் திறனையும் வெளிக்கொணரும் வகையில் ஏற்ப்பாடு செய்யப்படும் இதுப்போன்ற சாதனைகள் மூலம் நாட்டின் மீது மாணவர்களிடையே சிறந்த சிந்தனையை விதைக்கலாம்.


இதனை தொடர்ந்து ஜெராண்டூட் ஆரம்ப தமிழ் பள்ளியின் 140 மாணவர்கள் 50-ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு மூன்றே மணி நேரத்தில் கோலம் போட்டிருக்கின்றனர்.


சுமார் 2000 கிலோ தேங்காய் சக்கையை கொண்டு 13 மீட்டர் ஞ் 12 மீட்டர் கோலத்தை உருவாக்கியுள்ளனர் இந்த பன்னிரெண்டு வயதுக்கும் குறைவான மாணவர்கள்.

Friday, August 17, 2007

50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை

மலேசிய நாட்டின் 50-ஆவது பொன்விழா சுதந்திர தினத்தையொட்டி இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி, முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் ஹூசேன் ஓன், துன் அப்துல் ரசாக், சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் நாட்டிற்கு அர்ப்பண உணர்வுடன் வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் அர்ப்பணமிக்க பங்கேற்பிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 10 மணி நேரம் என 50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை நடத்த மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார் குளுவாங் கல்வி மைய முதல்வர் டாக்டர் அ.இளந்தேவன்.

இந்த துணிகர முயற்சி வெள்ளிக்கிழமை 17-8-2007 மாலை 3.00 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 19-8-2007 மாலை 5.00 மணிக்கு நிறைவேறும். எண் 32, ஜாலான் இள்மாயில், விஸ்மா சோமசன்மா, குளுவாங் எனும் முகவரியில் உள்ள அவரின் குளுவாங் கல்வி மையத்தில் தொடங்கும். இந்நிகழ்ச்சியை ம.இ.கா ஜொகூர் மாநில தொடர்புக்குழுச் செயலாளர் செனட்டர் எம்.எம்.சாமி தொடக்கி வைப்பார். இச்சாதனையில் 1,300 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.

ஏற்கனவே 2005-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்தாற்போல் 24 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி மலேசிய சாதனை புத்தக வரலாற்றில் தமது பெயரை பதிவு செய்த அவர் 2005 டிசம்பரில் இடைவிடாது 88 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி கின்னஸ் உலக சாதனை முத்திரையையும் பதித்த டாக்டர் அ.இளந்தேவன் தாம் பிறந்தமண்ணின் சுதந்திர தின விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.