Sunday, April 29, 2007

மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 1

"யாரப்பா அங்கே க்ளாஸுக்கு வெளியே?? மணி அடிச்சும் இன்னும் வெளியில உங்களுக்கு என்ன வேலை? க்ளாஸுக்கு போங்கடா.."

ப்ரீன்ஸி மாணவர்களை மிரட்ட அவர்கள் வகுப்பிற்குள் ஓடுகிறார்கள்.
டீச்சர் வகுப்புக்குள் வர்றாங்க..

"பசங்களா, நாந்தான் உங்களுக்கு மலாய் சொல்லி தர போகிறேன். எல்லாரும் இன்றைய பாடத்துக்கு ரெடியா??"

மாணவர்கள் கோரஸாக "ரெடி டீச்சர்!!!"

"டீச்சர் என்பது ஆங்கில் வார்த்தை. மலாயில் Cikgu [செக்கு] 'ன்னு சொல்லணும்.. எங்கே திருப்பி சொல்லுங்க பார்ப்போம்?"

"Cikgu"

"சரி.. நாம் இன்றைய பாடத்துக்கு வருவோம்.. நாம் யாரையவது எங்கேயாவது சந்த்தித்தால் முதலில் வாழ்த்து சொல்லிதானே ஆரம்பிப்போம் ! அதை பற்றியே இன்று நாம் படிப்போம்.."

"சிவா, உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிங்க வந்தால் எப்படி வரவேற்பே?"

"நான் எங்கே டீச்சர் வரவேற்கப் போகிறேன்!! வீட்டுல இருக்கிற நேரம் முழுதும் தூங்கிட்டேதான் இருப்பேன். மத்த நேரம் வெளியில நண்பர்களோட ஊர் சுத்த கிளம்பிடுவேன்.."

"கார்த்தி, உனக்காவது தெரியுமா?"

"Cikgu, எங்க வீட்டு கதவுல "வருக! வருக !"ன்னு எழுதியிருக்கும்.. வீட்டுக்கு வர்றவங்களை வருக வருகன்னு சொல்லி வரவேற்கணும்ன்னு என் அம்மா சொல்லுவாங்க .."

"குட்.. சரியான பதில் கார்த்தி. வருக வருக அல்லது welcome என்பதை Selamat Datang [செலாமாட் டாத்தாங்] என்று சொல்லலாம்."

"செலாமாட் என்பது நல்லது (good) என்று பொருள்ப்படும். ஆங்கிலத்தில் குட் என்று வாழ்த்து இருந்தால், அதை நாம் செலாமாட் என்று மலாயில் உச்சரிக்கலாம்."

"இப்போது காலை, பிற்பகல், மாலை மற்றும் இரவை எப்படி சொல்வது என்று பார்ப்போம்."

காலை - pagi [பாகி]

பிற்பகல் - tengah hari [தெங்கா ஹாரி]

மாலை - petang [பெத்தாங்]

இரவு - malam [மாலாம்]"

"இப்போது செலாமாட்டையும் காலங்களையும் சேர்த்து வாழ்த்து சொல்லுவோம்! ராம், காலை வணக்கம் (குட் மார்னிங்) மலாயில் மொழி மாற்றம் செய்"

"ம்ம்... குட் = செலாமாட்.. மார்னிங் = பாகி.. Selamat Pagi [செலாமாட் பாகி], cikgu"

"சரியான விடை ராம்.. செலாமாட் பாகி என்பதே சரியான பதில்."

குட் மார்னிங் - Selamat pagi [செலாமாட் பாகி]

குட் அஃப்டர்னூன் - Selamat Tengah hari [செலாமாட் தெங்கா ஹாரி]

குட் ஈவினிங் - Selamat Petang [செலாமாட் பெத்தாங்]

குட் நைட் - Selamat malam [செலாமாட் மாலாம்]

"தேவ், இப்போது உனக்கொரு கேள்வி.. நீ உன் நண்பனிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும்போது அவனிடம் என்ன சொல்லுவே?"

"ம்ம்.. ம்.. பாய் பாய் சொல்வேன். ஹாங்.. மீண்டும் சந்திப்போம்ன்னு சொல்வேன்"

"குட், இந்த வகுப்பில் படிக்கும் அனைவருக்கும் மரியாதையாக பேச தெரிகிறது. அதுக்கு நீங்களே உங்க தோளை தட்டிக் கொடுத்துகோங்க"

"மீண்டும் என்பது மலாயில் lagi [லாகி] என்று சொல்லலாம் .. சந்திப்பதை jumpa [ஜும்பா] என்று சொல்லலாம் .. மீண்டும் சந்திப்போம் என்பதை jumpa lagi [ஜும்பா லாகி] என்று சொல்ல வேண்டும்.."

"தேவ், சரியாக பதில் சொன்னதுக்கு உனக்கு இந்த சாக்லேட் பரிசு.. வா"

தேவ் சாக்லேட்டை வாங்கிவிட்டு "நன்றி cikgu" என்று சொல்கிறார்..

"நன்றி.. இந்த வார்த்தையை எப்படி மலாயில் சொல்வது என்று உங்களுக்கு தெரியுமா??"

சிவா கை தூக்குகிறார்..

"சிவா, உனக்கு தெரியுமா? சொல்"

"cikgu,எனக்கு தெரியாதுன்னு சொல்ல வந்தேன்..."

"ம்ம்.. பரவாயில்லை சிவா.. நானே சொல்கிறேன் உட்கார் . நன்றி என்பதை terima kasih [தெரிமா காசே] என்று சொல்ல வேண்டும் "

"மாணவர்களே "தெரிமா காசே"ன்னு சொல்லுங்க பார்ப்போம்??"

மாணவர்கள் கோரசாக "தெரிமா காசே"

"ஓகே.. தேங்கியூ சொன்னா நாம் பதிலுக்கு யூ ஆர் வெல்கம் என்று சொல்லனுமல்லவா? அதுக்கு நாம் sama-sama [சமா சமா] என்று சொல்ல வேண்டும்"

"ஏதாவது தப்பு செய்திருந்தால் நாம் சொல்வது sorry..."

சிவா: "cikgu, ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை.. சாரி.."

தேவ்: "நேத்து ராத்திரி கேப்டன் படம் பார்க்க போயிருக்கே நீயி.. என்னை கூப்பிடவே இல்லை பார்த்தியா!!!!"

"க்ளாஸ்.. அமைதி அமைதி!! சிவா, நீ ஓவரா தமிழ் படம் பார்க்கிற.. இது நல்லதா படலை.. சொல்லிட்டேன் .. சரி நாம் பாடத்துக்கு வருவோம்.. மன்னிப்பு கேட்பதுக்கு மலாயில் minta maaf [ மிந்தா மா-ஆஃப்] என்று சொல்ல வேண்டும்"

சிவா உடனே எழுந்து "Minta maaf, cikgu"

"பரவாயில்லை சிவா.. உட்கார்.."

"பசங்களா, உங்களுக்கு வேரு ஏதாவது வார்த்தைக்கு மலாயில் தெரிய வேணுமென்றால் கேளுங்க.."

"ராம், உனக்கேது கேள்வி இருக்கா?"

"ஆமாம் cikgu... How are you என்பதை எப்படி மலாயில் கேட்பது?"

"நல்ல கேள்வி ராம். அதை apa khabar [அப்பா காபார் ] என்று சொல்லாம். நலம் என்பதை சொல்வதுக்கு khabar baik [காபார் பாயிக் ] என்று சொல்ல வேண்டும்"

"சரி, இன்று படித்தவை என்னென்ன என்று பார்ப்போம்.."

ஆசிரியர்- Cikgu - செக்கு
வருக வருக- Selamat Datang - செலாமாட் டாத்தாங்
காலை வணக்கம்- Selamat Pagi - செலாமாட் பாகி
மதிய வணக்கம்- Selamat Tengah hari - செலாமாட் தெங்காஹாரி
மாலை வணக்கம்- Selamat Petang - செலாமாட் பெத்தாங்
இரவு வணக்கம்- Selamat Malam - செலாமாட் மாலாம்
மீண்டும் சந்திப்போம்- Jumpa Lagi - ஜும்பா லாகி
நன்றி- Terima Kasih - தெரிமா காசே
நன்றிக்கு பதில்- Sama-sama - சமா சமா
மன்னிக்கவும்- Minta Maaf - மிந்தா மா-ஆஃப்
நலமா? - Apa Khabar? - அப்பா காபார்
நலம்- Khabar Baik -காபார் பாயிக்

மேலே உள்ள வார்த்தைகளை கேட்க கீழே கொடுக்கப்ப்பட்டுள்ள ஈ-ஸ்னிப்ஸ் பட்டனை சொடுக்கவும்..


இங்கே இப்படியே பாடம் நடந்துக்கொண்டிருக்க ஒருவன் மட்டும் வகுப்பின் ஒரு மூலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.. டீச்சருக்கு சந்தேகம் .. பையனுக்கு பாடம் புரியவில்லையோன்னு..

"ஸ்யாம், இன்னைக்கு படிச்சதெல்லாம் நுழைஞ்சதா?"

"எல்லாம் நுழைஞ்சிடுச்சு டீச்சர்.. ஆனா இந்த வாலு மட்டும்தான் இன்னும் வெளியிலேயே தெரியுது!!!!"

"இவன் திருந்த மாட்டான் போலிருக்கே!!! சரி மாணவர்களா.. அடுத்த பாடத்தில் சந்திப்போம் . Jumpa lagi"

" Terima kasih cikgu"

Thursday, April 26, 2007

வாக்களிக்க பதிந்துவிட்டீர்களா?


Suruhanjaya Pilihan Raya (SPR) [தேர்தல் ஆணையம்] வாக்காளராக பதிவு செய்ய மார்ச் 30தான் கடைசி நாள் என்று அறிவித்தது உங்களுக்கு தெரியும்.

இப்போது அவர்கள் SPR வலையை வடியமைத்துள்ளார்கள். உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்கள் அடையாள அட்டையின் (MyKAD) எண்ணை அங்கே கொடுக்கப்ப்ட்டிருக்கும் இடத்தில் டைப் பண்ணி தேடு (Semak) எனும் பட்டனை தட்டுங்கள். உங்களின் அடையாள அட்டை எண், பெயர், வாக்களிக்க தகுதி பெற்ற இடம், மாவட்டம், நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாநிலமும் இருக்கும். அப்படி அதில் ஏதாவது தவறான தகவல் இருந்தால், அங்கே கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் அனுப்பவும்.

இணைய வங்கியில் நடக்கும் ஏமாற்று வேலை

கீழே உள்ளதைபோல உங்களுக்கு மின்னஞ்சல் வந்தால், அந்த சுட்டியை சொடுக்காதீர்கள். அப்படியே சொடுக்கினாலும் அதில் உள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து அனுப்பாதீர்கள்.

இது ஒரு ஏமாற்று வேலை. இதை நீங்கள் செய்தீரானால் உங்களுடைய வங்கி கணக்கு எண் (Bank account number) மற்றும் உங்களுடைய ரகசிய காவற் சொல் (password) அந்த மூன்றாவது நபருக்கு அனுப்பி வைக்கப்படும். ஜாக்கிரத்தை!!!!


From: Online Banking [mailto: AlexanderAubuchon@bankinginfo.com.my ]
Sent: 19 Aug 2006 7:28 AM
Subject: *****SPAM***** HIGH * Hong Leong/Bumiputra Commerce/AmBank Group/Alliance Bank

Dear Hong Leong/Bumiputra Commerce/AmBank Group/Alliance Bank Member,

This email was sent by the Bank server to verify your e-mail address. You must complete this process by clicking on the link below and entering in the small window your Hong Leong/Bumiputra Commerce/AmBank Group/Alliance Bankonline access details. This is done for your protection - because some of our members no longer have access to their email addresses and we must verify it. To verify your e-mail address and access your account, click on the link below:

If You Have Hong Leong Bank Account: http://www.hlb.com.my/DF3RwiNBzvjz37l7c1h1p
If You Have Alliance Bank Account: http://www.alliancebank.com.my/86uZyaeeCm8nf5tu31i0vdq
If You Have Bumiputra Commerce Bank Account: http://www.channel-e.com.my/0khaSRO3JT2s7q09iu53j26e33
If You Have AmBank Group Account: http://www.ambg.com.my/s55a3m02A007h703iyr9


உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தயவு செய்து ஃபார்வட் செய்யுங்கள்.. வரும்முன்னே காப்போம். :-)

Thursday, April 19, 2007

பழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது

டுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்

பழங்களின் அரசனின் அலைகள் இன்னும் ஓயவில்லை. டுரியான் பழத்தை துர்கா சென்ற வாரம் உங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பின்னூட்ட கேள்விகள் மழையாக கொட்டியிருப்பதை பார்த்தவுடன் இன்னொரு பதிவு இந்த அரசனுக்கு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.


இதோ உங்கள் கேள்விகளின் பதில்கள்:

விருபா: நீங்கள் டுரியான் பழத்தை அரசன் என்கிறீர்கள், அண்மையில் மலேசியாவிற்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதியில் டுரியான் பழத்தை உள்ளே எடுத்து வந்தால் 200 ரிங்கிட்ம் என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

டுரியான் அரசன்தான். ஆனால், இவன் தெற்கிழக்காசியாவின் அரசன். தெற்கிழக்காசியாவின் (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனிசியா) தற்பவெப்பங்களுக்கு ஏற்ற ட்ரோப்பிக்கல் (Tropical) என்றழைக்கப்படும் இடங்களில் மட்டுமே இந்த மரம் வளரும். இந்த மரம் வளர்ப்பது மிக சுலபம். பழத்தின் சுலைகளை உண்டப் பின் அதில் மீதமிருக்கும் கொட்டையை நீங்கள் மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால்(ஊற்றாவிட்டாலும் சொந்தமாகவே வளரும்) மிக சாதாரணமாக வளரும். மற்ற செடி கொடிகளுக்கு கொடுக்க வேண்டிய கவனங்கள் இந்த மரத்துக்கு தர தேவையில்லை. மரம் வளர்ந்ததும் (40 மீட்டர் வரை) அந்த பருவக் கலத்தில் (மே முதல் ஜூலை வரை) மரத்தில் டுரியான் பூத்துக் குளுங்கும்.

டுரியான் பழமும், சாப்பிட்ட பின் மீதமிருக்கும் கொட்டையும்

மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டுரியான். என்னேரமும் கீழே விழலாம். விழுந்ததும் பழத்தை வெட்டி சுவக்கலாம்.


ஆனால், மற்ற பழங்களை பறிப்பதுபோல் இந்த பழத்தை நாம் பறிக்க முடியாது. இந்த பழம் நம் கையில் கிடைக்க நாம்தான் காத்திருக்க வேண்டும். பழங்கள் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். அதைதான் நாம் பொருக்க வேண்டும். (இங்கே உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்: பழத்தை பொருக்க செல்லும்போது தலைகவசத்தை (நம்ம நாட்டாமை ஓர்குட்ல அணிந்திருக்கிற மாதிரி) அணிந்து செல்லுங்க. டுரியான் பழம் உங்கள் தலையில் விழுந்தால் உங்கள் உயிர் அதோ கதிதான்).

டுரியானுக்கு ஒரு தனி மணம் இருக்கிறது. அது கண்டிப்பாக துர்நாற்றம் இல்லை. நீங்கள் அணியும் வாசனை திரவியம் எந்த் அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கோ, அந்த அளவுக்கு டுரியானின் மணமும் ஸ்ட்ராங்தான். ஒரு சிலருக்கு எந்த ஒரு மணமும் கொஞ்சம் பலமாக இருந்தால் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அதான் பொது இடங்களில் (குறிப்பாக குளிர்சாதனம் பொருந்திய இடங்களில்) இப்பழத்தை கொண்டு செல்வதுக்கு தடா விதிக்கப்பட்டிருக்கிறது. டுரியானை ருசித்து நாம் இன்புறும் நேரத்தில் மற்றவர் இதனால் துன்புற கூடாது என்ற ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த தடா விதிக்கப்ப்ட்டிருக்கிறது.

டுரியான், சுலைகள் அடங்கியிருக்கும் ஒரு சின்ன அறை, டுரியான் சுலை


விருபா: அதேவேளை ஓரிடத்தில் நடைபாதை பழவியாபாரியிடம் சில ஐரோப்பியர்கள் இதனை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

விருபா, நீங்கள் சொன்னது சரியே! பழத்தின் ருசியை பற்றி கேட்டால், என் பதில் "ஆஹா.. அருமை அருமை!". இதனின் ருசியை எனக்கு விளக்க தெரியவில்லை. வேறேதாவது பழங்களின் ருசி ஏறக்குறைய இப்படி இருந்தாலாவது நான் உங்களிடம் விளக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பழங்கள் வேறெதுவுமில்லை. அதனால், டுரியானின் ருசியை அறிய நீங்கள் டுரியானை சாப்பிட்டால் மட்டுமே உணர முடியும்.

டுரியானை பல வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். பிரபலமான சில டுரியான்கள் D24, D99, D158 மற்றும் D159. இதில் D24 வகை டுரியானின் ருசியே அற்புதம். நீங்களும் இவ்வகை டுரியானை கேட்டு வாங்கி ருசித்து பாருங்கள். மே மாதம் டுரியான்களை நீங்கள் மலேசியாவில் எல்லா இடத்திலும் விற்க்கப்படுவதை பார்க்கலாம்.

டுரியானில் உள்ளே உள்ள சுலை. மஞ்சள் நிறமாக இருக்கும் இப்பழத்தின் ருசியை வர்ணிக்க வார்த்தயே இல்லை. ;-)


தேவ்: இந்தப் பழம் எங்க தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியாகுதான்னு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?

தேவ், டுரியான் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் டுரியான் மரம் நட ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஆராய்ச்சி வெற்றிப்பெற்றிருந்தால், இன்னேரம் உங்கள் ஊரிலும் டுரியான் மரங்களும் பழங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. டுரியான்கள் ஏற்றுமதி செய்யப்படாததுக்கு ஒரே காரணம் அதனின் அளவுக்கு அதிகமான மணம்தான். ஆனால், டுரியான்களை பதனம் செய்யப்பட்டு டின்களில் அடைக்கப் பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலேசியாவின் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் டுரியானும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

டுரியானை அறை அறையாக பிரித்து சாப்பிட தெரியாதவர்கள் இப்படி பேக்கிங் செய்து விற்க்கப்படும் டுரியான்களை சுவைக்கலாம்.


பலர்: டுரியான்=ப்லா பழம்???

இதன் தோற்றத்தை பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதையும் வைத்து பார்க்கும் பொழ்து இது தமிழ் நாட்டில் கிடைக்கும் பலா பழம் போல் அல்லவா தெரிகின்றது?..

இது ஒரு நல்ல கேள்வி! :-)
டுரியான் பலாப்பழம் இல்லை.

பலாப்பழத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நான் டுரியானை பற்றியே சொல்கிறேன். கேளுங்கள்.

டுரியானின் வெளிப்புறம் பச்சை நிறம். பலாப்பழமும் பச்சை நிறம்தான். ஆனால், டுரியானின் வெளிப்புறத்தில் உள்ள முட்கள் மிக கூர்மையானவை. பலாப்பழத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் முட்களோ கூர்மை இழந்து காணப்படும் (குத்தவே குத்தாது). பலா பழம் பெரிதாக இருக்கும் (ஒரு இரண்டு கிழோக்கு மேலே இருக்கும் என நினைக்கிறேன்). டுரியான் பலா பழம் அளவுக்கும் பெரிதாய் இருக்காது. ஆக பெரிய அளவு எவ்வலவு பெரிது என்று கேட்டால், ஒரு கால்பந்தின் அளவு என்று சொல்லலாம்.

வெளியே முரடனாக இருந்தாலும் இவன் உள்ளே இதமாக உள்ளவன். மிகவும் மென்மையாக இருப்பான் உள்ளே! பழங்களின் சுலைகள் மஞ்சல் நிறத்தில் இருக்கும் (ஒரு சில வகையான டுரியான்களில் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்). சாதாரணமா மற்ர பழங்களை வெட்டுவதுப்போல் இவனை வெட்ட முடியாது / அப்படி வெட்டவும் கூடாது. மற்ற பழங்களை நீங்கள் ஒரே வெட்டில் அந்த பழத்தை ருசிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால் டுரியானின் அறைகள் அறைகளாக இருக்கும். ஒவ்வொரு அறையிலும் இரண்டு மூன்று சுலைகள் மட்டுமே இருக்கும். நீங்கள் பழத்தை கடையில் வாங்கும்போதே கடைக்காரன் சின்னதாய் முக்கோண வடிவில் வெட்டி வைத்திருப்பான். அதனை வழிக்காட்டாக கொண்டு நீங்க ஒவ்வொரு அறையையும் கண்டு பிடித்து திறக்க வேண்டும் (இதனை திறக்க உங்களுக்கு கத்தி தேவையே படாது. கையாலேயே திறக்கலாம்). பழத்தை நீங்க கடித்து மென்னு சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதன் சுலைகல் மிருதுவாக இருக்கும். வயில் வைத்தால்பஞு மிடாய் எப்படி கரையுமோ அதே போல் கரையும். உங்கள் பொக்கை வாய் தாத்தா பாட்டிக்கும் டுரியானை நீங்கள் வாங்கி தரலாம். :-)

பழங்களில் ஒரு சின்ன பகுதியை முக்கோண வடிவமாய் வெட்டப்பட்ட காட்சி: இதில் நாம் உள்ளே உள்ள பழம் எப்படி இருக்கின்றது என்றும் கவனிக்கலாம்.
டுரியான் சுலைகளும், அறைகளும்

கண்மணி: இது என்ன எங்க ஊரு பலாப்பழம் போல இருக்கு.சுளை சுளையா இருக்குமா?தனியே எடுத்து ஒரு போட்டோ காட்டியிருக்கலாம்.

யக்கா, இது பலாப்பழம் இல்லை. மேல் விளக்கத்துக்கு மேளே உள்ள பதிலை கவனியுங்கள். :-)

நீங்கள் கேட்டது போலவே நான் சில படங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன். :-)

டுரியான் அறைகள் இதில் நன்றாக தெரிகிறது.


கனக்ஸ்: இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

இது துரியான் இல்லை. இது டுரியான் (Durian). அன்னமுன்னாப் பழம் பற்றி இணையத்தில் தேடினேன். ஒரு தகவலும் தெரியவில்லை. ஈழத்து நண்பர்கள் யாரவது இதற்கு பதிலளிப்பார்கள் என்ரு நம்புகிறேன் கனக்ஸ். அப்படி எனக்கு விஷயம் தெரிந்தால் நானே சொல்கிறேன். ஆனால், இந்தியாவிலேயே கிடைக்காத இந்த பழம் ஈழத்தில் கிடைக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் தற்ப்பவெப்ப நிலையும் இலங்கையின் தற்ப்பவெப்பநிலையும் ஓரளவு ஒன்றுதானே!

Friday, April 13, 2007

இது தெரியுமா?

மலேசியா வரலாறு பற்றி இன்னும் சில தினங்களுக்குப் பேச்சை எடுக்க வேண்டாம்.தலை வெடித்து விடும் அளவிற்கு இருக்கின்றது.அது வரலாறு பாடம் எனக்கு மிகவும் பிடித்த பாடம் ஏனென்றால் நன்றாக தூங்க வைக்கும் பாடம் அது மட்டும்தான் :-)ஆனால் கடந்த பதிவு எழுதுவதற்குள் பாதி தூக்கம் போய்விட்டது.ஆகவே நான் வரலாறு பாடத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கின்றேன்.


சரி இன்று வேறு ஒன்றைப் பற்றி எழுதுகின்றேன்.அனைவரும் தயாரா?

இது பச்சையாக இருக்கும்

முட்கள் நிறைந்தது

இதன் மணம் சிலருக்கு நறுமணம் சிலருக்குத் துர்நாற்றம்.எப்படி பட்ட மணம் என்று இணையத்தில் தேடி பார்த்தேன்.படு கேவலமாக இருந்தது.பூனை முத்திரம்,வாந்தி என்று எல்லாம் எழுதி வைத்திருந்தார்கள்.இப்படி தப்பாக எழுதி வைத்திருப்பவர்களை நம்ப வேண்டாம்.எனக்கு அந்த மணம் அவ்வளவு கேவலமாக இருப்பதாக தெரியவில்லை.பல நாடுகளில் இந்த மணம் மிக பிரபலம்.மலேசியார்களான பலருக்கு இது நறுமணம்தான்.

இது ஒரு பழம்சாதாரண பழம் இல்லை

இது பழங்களின் அரசன்எங்கள் ஊர் டுரியான்(durian) பழத்தைப் பற்றிதான் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


தென் கிழக்கு ஆசியா நாடுகளில் டுரியான் பழம் மிகப் பிரபலம்.இந்த பழம் சுவையாக இருக்கும் ஆனால் மணம்தான் சற்று ஒரு மாதிரியாக இருக்கும்.டுரியான் பழத்தைப் பற்றி ஒரு நாட்டுபுறக் கதை ஞாபகம் வருகின்றது.

"ஒரு ஊரில் அவலட்சணமான அரசன் இருந்தான்.அவனுக்கு ஒரு அழகான இளவரசி மேல் காதல்.ஆனால் அந்த இளவரசிக்கோ இந்த அரசனைக் கண்டால் பிடிக்காது.ஆகவே இந்த அரசன் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடினார்.அந்த மந்திரவாதியும் ஒரு விதையைக் கொடுத்து அரண்மனைத் தோட்டத்தில் நட்ட சொன்னார்.அந்த விதையில் இருந்து காய்க்கும் பழத்தை இளவரசி உண்டால் காதல் வரும் என்றார்.அப்படி இளவரசி அரசனை மணந்தால் அவர்களின் திருமண விருந்திற்கு மந்திரவாதியையும் அழைக்க வேண்டும் இதுதான் மந்திரவாதிக்கு அரசன் செய்ய வேண்டிய கைமாறு.விதை ஒரே நாளில் முளைத்து மரமாகி,காயாகி கனியும் ஆகிவிட்டது.அந்த சுவையான மற்றும் வாசமான பழத்தை உண்ட இளவரசியும் அரசன் மீது காதல் கொண்டு திருமணமும் செய்தாள்.ஆனால் அரசன் மந்திரவாதிக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான்.இதனால் சின முற்ற மந்திரவாதி இந்த சுவையான பழம் இனிமேல் நாற்றம் அடிக்கட்டும்,பழத்தின் மேல் இனிமேல் முட்கள் இருக்கும் என்று சாபம் விட்டு விட்டார்.இப்படிதான் அந்த சுவையான பழம் டுரியான் பழமாக மாறியதாம்.(கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றால் பழம் நாறிவிடுமா?)இதுதான் கதை.


(இதைப் படித்து விட்டு யாரவது நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு டுரியான் பழம் வாங்கி கொடுக்க வேண்டாம்.இது மிகவும் ஆபத்தான வேலை.பழத்தின் மணம் பிடிக்கமால் அந்த பழத்தால் அடி வாங்கினால் உடம்பு தாங்காது.பழங்களின் முட்கள் சற்றே கூர்மையானவை.)

அடுத்தது டுரியான் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

இது ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கும்(மே முதல் ஜுலை மாதம் வரை).

பழத்தின் வெளிதோற்றத்தை நீங்கள் படத்திலேயே காணலாம்.வெளியே நிறைய முட்கள் இருக்கும்.உள்ளே மஞ்சள் நிற சுளைகள் இருக்கும்.பழத்தின் சுவையே தனி.தித்திப்பாக நாக்கில் அப்படியே பழம் கரையும்.எனக்கு இப்பொழுதே சாப்பிட ஆசையாக இருக்கின்றது.பழத்தை அப்படியே கொட்டையோடு வாயில் போட வேண்டாம்.மாட்டிக் கொண்டால் வீண் வம்பு.(அனுபவத்தில் சொல்கின்றேன்.என் பேச்சை கேளுங்கள்)

டுரியான் பழத்தின் தரம் மூன்று கூறுகளால் நிர்மாணியம் செய்யபடுக்கின்றது
•வெளிதோற்றம்(நிறம்)
• மணம்
• படிவ அமைப்பு(texture)


டுரியான் பழத்தை வாங்குவதும் ஒரு கலைதான்.நல்ல பழத்தை தேர்ந்து எடுக்க பல குறிப்புகள் இருக்கின்றன.பலரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டவைகளை இங்கே பகிர்ந்துக் கொள்கின்றேன்.
பழம் அதிக கனமாக இல்லமால் இருக்க வேண்டும்
• பழத்தின் தண்டுகள் பெரிதாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும்
• பழம் பழுத்துவிட்டதா என்பதை அதன் மணத்தை வைத்துதான் சொல்வார்கள்
• பழத்தை ஆட்டிப் பார்கும் பொழுது சத்தம் கேட்க வேண்டும்.
• ஒரு கத்தியை உள்ளே சொருகினால் பழம் அதில் ஒட்டி இருக்க வேண்டும்.இல்லையென்றால் பழம் பழுக்கவில்லை என்று நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்
• பழத்தில் எந்த ஒரு ஓட்டைகளும் இருக்க கூடாது.அப்படி இருந்தால் உள்ளே புழுக்கள் இருக்க வாய்ப்பு உண்டு

அடுத்த முறை எங்கள் ஊர் பக்கம் வந்தால் இந்த பழத்தை எப்படி வாங்குவது என்று சந்தேகம் எல்லாம் உங்களுக்கு வந்தால் இதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்.பழத்தை வெட்டுவதற்கும் ஒரு தனி வழிமுறை இருக்கின்றது.உங்களுக்கு அந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம்.வாங்கும் இடத்திலேயெ வெட்டி கொடுத்து விடுவார்கள்.

இந்த பழம் வேறும் பழமாக மட்டும் உட்கொள்ள படுவதில்லை.கேக்,ரொட்டி,Jam,ஐஸ் கீரிம் என்று பல உணவுகள் டுரியானைக் கொண்டு தயாரிக்கப் படுகின்றன.ஒரு சில உணவுகள் கிழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் நீங்கள் பார்க்கலாம்.
http://www.durianpalace.com/gourmet.htm

பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?இந்த கேள்விக்குப் பதில் அடுத்த முறை எழுதுகின்றேன்.இல்லை நீங்களே கண்டிப்பிடித்துக் கொள்ளுங்கள் :-)

Tuesday, April 10, 2007

இது ஒரு சோதனை பதிவு மட்டுமே!

சோதனை மேல் சோதனை இது!!!

Sunday, April 8, 2007

மலேசியா வரலாறு

வணக்கம்.முதலில் மலேசியா வரலாறை சற்று அலசிப் பார்ப்போம்.முதலில் மலேசியா என்பது தீபகற்ப மலேசியாவை மட்டும்தான்.அந்த காலத்தில் மலேசியாவின் பெயர் தானா மெலாயு(tanah melayu) அப்படி என்றால் மலாய்காரர்களின் மண்/இடம் என்று அர்த்தம்.இந்த Tanah melayu வின் வரலாறுதான் இன்று நான் எழுத போகின்றேன்.
முதலில் மலேசியா வரலாறு ஐந்து பாகங்களாக பிரிக்கலாம்.

  • பண்டைய காலத்து மலேசியா(35,000 BC - 100 BC )

எலும்பு கூடு,குகை,இது எல்லாம் நமக்கு தேவையா?ஆகவே இதை விட்டு விடலாம்

  • இந்து அரசாட்சி(100 BC - 1400 AD)

ஒரு காலத்தில் தானா மெலாயுவில் இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆதிக்கதில் இருந்தது.அதைப் பற்றிதான் இன்று எழுதப் போகின்றேன்.

  • இஸ்லாமிய ஆட்சி(1400 - 1511 )

இது தானா மெலாயுவின் பொற்காலம் என்கின்றார்கள்.ஏன் என்று நாம் சற்று அலசிப் பார்க்கலாம்.

  • அந்நிய ஆட்சி(1511-1957)

ஆங்கிலேயர்,டச்சுகாரர்கள் என்று பல அந்நிய ஆட்சி நடைப்பெற்ற காலம்

  • சுதந்திர மலேசியா(1957-தற்பொழுது வரை)

இந்த காலகாட்டத்தில்தான் மலேசியா என்பது உருவாகியது.
-------------------------------------------------------------------------------------
இப்பொழுது மேலே குறிப்பிட்டு உள்ளது போல இந்து அரசாங்கத்தில் இருந்து மலேசியா வரலாறு ஆரம்பம்.
இந்து அரசாட்சி 2ஆம் நூற்றண்டிலேயே ஆரம்பித்து விட்டது.இந்து மற்றும் புத்த மத ஆதிக்கம் நிறைந்த அரசாங்கம் இந்த காலகட்டதில் அதிகம்.சில இந்து ,புத்த அரசாங்கங்களைப் பற்றி எழுதுகின்றேன்.பெயர்கள் சற்றே நகைச்சுவையாக இருப்பது போல இருக்கும்.சிரிக்க எல்லாம் கூடாது

கங்கா நெகரா(ganga negara)
இது 2ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள இந்து அரசாங்கம்.நெகரா என்றால் மலாய் மொழியில் நாடு எனப்படும்.இதன் தமிழ் பெயர் எனக்குத் தெரியாது.ஆகவே மொழியக்கம் செய்யவில்லை.இந்த அரசாங்கம் ராஜ ராஜ சோழனால் 11ஆம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டது என்று சொல்கின்றார்கள்.

லங்கசுக்கா(langkasuka)
இது 2ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை நீடித்த அரசாங்கம்.இதுவும் ஒரு இந்து மத ஆதிக்கத்தில் இருந்தது.மலேசியாவில் மிக பழமையான அரசாங்கம் என்று சொல்கின்றார்கள்

பான் பான்(Pan Pan)
3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூறாண்டு வரையில் இருந்தது.இது கிளந்தான் அல்லது திரங்கானு மாநில பகுதியில் இருந்து இருக்கலாம்.இந்த அரசாங்கத்தைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

ஸ்ரீ விஜயா(sri vijaya)
4ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது.இந்த அரசாங்கத்தின் தலை நகரம் இந்தோனேசியாவில் palembang என்ற இடத்தில் இருந்தது.இவர்களின் ஆட்சி தானா மெலாயுவில் வரையில் பரவி இருந்தது.முதலில் இந்து ஆதிக்கத்தில் இருந்த இந்த அரசாங்கம் பிறகு புத்த மதத்தைப் பின்பற்ற தொடங்கினார்கள்.இந்த அரசாங்கமும் ராஜ ராஜ சோழனால் விழ்த்தப்பட்டது.

பண்டைய கெடா(kedah tua)
இது 5ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்த ஒரு அரசாங்கம்.இதுவும் இந்து மற்றும் புத்த மதத்தில் இருந்தது.இந்த அரசாங்கத்தை வைத்து பார்க்கும் பொழுது வணிகத்தால் இந்தியாவின் பல கலாச்சாரங்கள் இங்கே வந்துள்ளன.இந்து மதமும் புத்த மதமும் மலேசியாவில் வருவதற்கு வணிகம் ஒரு முக்கிய பங்கற்றியது.இந்த இந்து புத்த அரசாங்கத்தின் அமைப்பு,ஆட்சி முறை,இலக்கியம்,கலை என்று அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்ததுள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மண்ணிற்கும் மலேசியா மண்ணிற்கும் தொடர்பு ஆரம்பித்து விட்டது.இன்று வரையிலும் அது தொடர்கின்றது. மற்றொரு விஷயம் ராஜ ராஜ சோழனின் ஆதிக்கம் மலேசியாவில் இருந்ததுதான்.இதோடு மிகவும் முடித்துக் கொள்கின்றேன்.

ராஜ ராஜ சோழனின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்" It was not China but India that so influenced the spiritual as well as the material life of the Malays that till the nineteenth century they owed nearly everything to her: alphabets, religion, a political system, law, astrology and mediaeval medicine, literature, sculpture in stone, metalwork and the weaving of silk.
The Indians, who built the oldest temples and chiselled Buddhist inscriptions in Sanskrit as early as the fourth century A.D. in Kedah, must have been preceded by traders, who sailed to and fro long before Brahmins and monks and literate adventurers brought the Hindu religion and Buddhism and Sivaite ideas of royalty, and carved Sanskrit inscriptions to which India itself had not long been accustomed. Immigration in larger numbers and permanent settlement began in the first centuries of the Christian era, with commerce as the driving force. "

இந்த இடுகையில் உள்ள சில மலாய் சொற்றகளின் அர்த்தம்:
tua(துவா)-பழமை,முதுமை
negara(நெகரா)-நாடு
tanah(தானா)-மண்/இடம்