Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Tuesday, September 30, 2008

லெமாங் - ஆஹா என்ன ருசி!


மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.

லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.

பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.

மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.


மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.

இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??

ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.

“Selamat Hari Raya Aidilfitri"

Sunday, October 14, 2007

கெத்துப்பாட் (Ketupat)

மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.

கெத்துப்பாட் நாசி:

இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.

ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

கெத்துப்பாட் பாலாஸ்:

பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (Glutinous rice) உபயோகிப்பார்கள்.

இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்.

Monday, September 3, 2007

மலேசியா 50

மலேசியா என்று சொன்னதுமே நாம் பார்த்ததில் பிடித்ததில் ரசித்ததில் சில எப்போதுமே நம் மனதில் ரீங்காரமிடும். மலேசியாவை பற்றிய 50 விஷயங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். மலேசியாவை பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று சோதிக்கலாமா? உங்களுக்கு இதில் எத்தனை வகை தெரியும்? பார்த்திருக்கிறீர்கள்? ருசித்திருக்கிறீர்கள்?

நீங்கள் மலேசியா வந்தால் கண்டிப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் பார்த்து, ருசித்து, அனுபவிக்க தவறாதீர்கள்!

உணவு

1- நாசி லெமாக் (Nasi Lemak)
2- நாசி கண்டார் (Nasi Kandar)
3- ரொட்டி சானாய் - (Roti Canai)
4- தே தாரேக் (Teh Tarik)
5- காஜாங் சாத்தே (Kajang Satay)
6- ரம்லி பர்கர் (Ramly Burger)
7- சார் கொய் தியாவ் (Char Koay Teow)
8- ஏ.பி.சி - (ABC - Air Batu Campur)
9- ரோஜாக் - (Rojak)
10- யீ சாங் (Yee Sang)

உச்சரிப்பு (தினமும் அதிகம் பயன்படுத்துவது)

11- லா (Lah)
12- மச்சான் (Machan)
13- அலாமாக் (Alamak)
14- தா பாவ் (Ta Pau)
15- சின் சாய் (Cin Cai)
16- அய்யோ (Aiyo)
17- மலேசியா போல்லே (Malaysia Boleh)
18- யாம் சேங் (Yam Seng)

பிரமுகர்கள்

19- துங்கு அப்துல் ரஹ்மான் (Tunku Abdul Rahman)
20- துன் டாக்டர் மகாதீர் முகமது (Tun Dr Mahathir Muhamad)
21- தான் ஸ்ரீ பி.ரம்லீ (Tan Sri P.Ramlee)
22- சூடீர்மான் (Sudirman)
23- மாட் ரெம்பிட் (Mat Rempit)
24- ஆ லோங் (Ah Long)
25- லாட் (Lat)

கட்டிடங்கள் & இடங்கள்

26- கெந்திங் ஹைக்லண்ட்ஸ் (Genting Highlands)
27- 24 மணி நேர மாமாக் ஸ்டால்ஸ் (24 Hour Mamak Stalls)
28- பத்துமலை (Batu Caves)
29- பெத்ரோனாஸ் இரட்டை கோபுரம் (Petronas Twin Tower)
30- பினாங்கு பாலம் (Penang Bridge)
31- புத்ராஜயா (Putrajaya)
32- கினாபாலு மலை (Mount Kinabalu)
33- சவ் கிட் ரோடு (Chow Kit Road)
34- குவாலா லும்பூர் அனைத்துலக விமான நிலையம் ( KL International Airport)
35- மலாக்கா (Malacca)
36- டத்தாரான் மெர்டேக்கா (Dataran Merdeka)
37- இரவு சந்தை (Pasar Malam)

கலாச்சாரம் & மற்றவை

38- ப்ரோட்டோன் (Proton)
39- பாலீக் கம்போங் (Balik Kampung)
40- திறந்த வீடு உபசரிப்பு (Open House)
41- பாஜூ கூரூங் (Baju Kurung)
42- நீண்ட வீடு (Long House)
43- பாபா & ஞோஞ்ஞா (Baba & Nyonya)
44- மலேசியரின் விருந்தோம்பல் (Malaysian Hospitality)
45- "மலேசியன் நேரம்" - "Malaysian Time"
46- மை காட் - MyKad
47- 2020 தொலைநோக்கு திட்டம் (Vision 2020)
48- பொது போக்குவரத்து சாதனங்கள் (Public Transports)
49- வாயாங் கூலிட் (Wayang Kulit)
50- பல வர்ணங்களில் அங் பாவ் ( Ang Pow in many colours) - சீனர்கள் (சிவப்பு), மலாய்க்காரர்கள் (பச்சை), இந்தியர்கள் (மஞ்சள்)

Monday, July 16, 2007

யாரு"லா" பழங்களின் அரசி???!

வணக்கம் நண்பர்களே,
போன பதிவில் “மலேசியா பழங்களின் அரசன் டுரியான்” பற்றி பல சுவையான தகவல்களை அறிந்து கொண்டோம்.நாரதர் கலகம் மாதிரி அனைவரும் புது புது தகவல்கள் தந்து எங்களை எல்லாம் கதி கலங்க செய்து விட்டீர்கள்.ஆனால் நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது போல இந்த கலகத்திலிருந்து நம்மால் பல புது தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.ஆனால் எல்லாரும் நான் கேட்ட கேள்வியை மறந்து நீங்கள் பல கேள்விகளை டுரியான் பழத்தைப் பற்றி கேட்க ஆரம்பித்து விட்டீர்கள்.

நான் கேட்ட கேள்வி
“பழங்களின் அரசன் டுரியான்.அப்பொழுது அரசி எந்த பழம்?”

கடைசி வரையில் யாருமே பதில் சொல்லவில்லை.அந்த துக்கத்தில் நான் 3 மாதமாக சாப்பிட்டவில்லை,தூங்கவில்லை, என்று பொய் சொல்ல மாட்டேன்.யாரும் பதில் சொல்லவில்லை என்றாலும் உங்களை நான் விட போவது இல்லை,போன தடவை நம் Hero டுரியானைப் பற்றி அறிந்து கொண்டோம்,இம்முறை Heroine மங்குஸ்தீன் பழத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.பழங்கள் அரசி மங்குஸ்தீன் எப்படி இருக்கும்?










படத்தைப் பார்த்தீர்கள் இல்லையா?இதுதான் அரசியார் மங்குஸ்தீன் அவர்கள் email blacklist check



இந்த பழத்தின் தனிதன்னமை வாய்ந்த சுவைக்காக இதற்கு பழங்களின் அரசி மற்றும் "தேவலோக பழம்" என்று கூட அழைக்கப்பட்டது.மங்குஸ்தீன் பழம் தென் கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு வகை பழம்(tropical fruit).டுரியான் பழம் குளிர்ச்சி என்றால்,மங்குஸ்தீன் பழம் வெப்ப தன்மையை கொடுக்கும் என்று நம்படுகின்றது.


இதற்கும் விக்டோரியா மகாராணிக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.அது எப்படி என்றால் விக்டோரியா மகாராணி இந்த பழத்தைப் பற்றி கேள்விப்பட்டு இதை கொண்டு வருபவர்களுக்கு அந்நாட்டின் உரிய பட்டமான "வீரத்திருத்தகைப் பட்டம்"(knighthood) அளிப்பதாக வாக்குறுதி தந்தாராம்.ஆனால் யாராலும் இந்த பழத்தை கொண்டு வரமுடியவில்லை.இந்த பழத்தை வாரக்கணக்கில் கடுமையான தட்பவெட்ப சூழ்நிலை மாற்றங்களில் இருக்க முடியதினால்,இதை இங்கிலாந்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை என்று ஒரு கதை இருக்கின்றது.இந்த பழங்கள் தென்கிழக்கு ஆசியாவின் தட்ப வெப்ப நிலைகளில் தான் இருக்க முடியும்.இங்கிலாந்து அரசியே விரும்பி கேட்ட பழம் என்பதால் அதற்கு பழங்களின் அரசி என்ற பெயர் வந்தது என்று சொல்கின்றார்கள்.இந்த கதையில் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.ஆனால் கதை நன்றாக இருக்கின்றது இல்லையா?








மங்குஸ்தீன் பழத்தின் வெளித்தோற்றம்









பழத்தின் உள் தோற்றம்.பழங்கள் டுரியானைப் போல சுளைகளாக இருக்கும்.ஆனால் வெண்மையான சுளைகள்.உள்ளே சிறிய கொட்டைகள் இருக்கும்.ஒரு மங்குஸ்தீன் பழம் ஆரஞ்சு பழத்தின் அளவிற்கு இருக்கும்.





இந்த பழத்தின் சுவை இனிப்பும்,கொஞ்சம் துவர்ப்பும் மற்றும் புளிப்பும் கலந்து இருக்கும்.இந்த பழங்களைச் சிறு வயதில் சாப்பிடும் பொழுது அம்மாவிடம் பல முறை அடிவாங்கி இருக்கின்றேன்.அது இந்த பழங்களை உரித்து சாப்பிடும் பொழுது அதன் தோல்களில் இருந்து வரும் ஒரு வகை சாறு சட்டைகளில் பட்டால் கறை படிந்து விடும்.இந்த கறைகள் எல்லாம் போக்கவே முடியாது.அம்மா மங்குஸ்தீன் பழம் வாங்கி வந்தால் பழைய சட்டை எல்லாம் தேடி கண்டுப்பிடித்து,அதை அணிந்துக் கொண்டு சாப்பிடும் அளவிற்கு எல்லாம் பொறுமைசாலி நான் இல்லை.எப்படிதான் கவனமாக சாப்பிட்டாலும் சட்டையில் கறைப்படியும்,அம்மாவிடம் அடியும் கிடைக்கும்email blacklist check(இது எல்லாம் அரசியலில் சாதாரணம்ப்பா)



மங்குஸ்தீன் மரங்கள் பழங்களைக் கொடுக்க 7லிருந்து 9 வருடங்கள் ஆகும்.ஆனால் அதன் பிறகு சில மரங்கள் 100 வருடம் வரை பழங்களைக் கொடுக்குமாம்!!!!!!




6 மாதத்தில் மங்குஸ்தீன் செடிகள்








2 வருடத்தில்...




6வருடங்களில்




பூவாகி.....காய் ஆகும் பழம்





பழம் இப்பொழுது நன்றாக தெரிகின்றது.அதன் கீழ்ப்பகுதியில் உள்ள பூப் போன்று இருக்கின்றதே...தெரிகின்றதா?அதை வைத்து பழத்தின் உள்ளே எத்தனை சுளைகள் இருக்கின்றது என்று தெரிந்துக் கொள்ளலாம்.இந்த பழத்தின் உள்ளே ஒரு 6 சுளைகள் இருக்கும். இதைப் பார்த்து அதிக சுளைகள் உள்ள பழத்தை நாம் தேர்ந்து எடுக்கலாம்.






பழமாகும் காய்




பழுத்த பழம் ஊதா நிறத்தில் இருக்கும்....

சரி இப்பொழுது முக்கியமான விஷயம்.மங்குஸ்தீன் பழத்தை எப்படி சாப்பிடுவது?(வாயால் தான் என்று என்னை மாதிரி அறிவு ஜீவிகள் கிண்டல் பண்ண வேண்டாம்.)



மங்குஸ்தீன் பழத்தைக் கைகளாலே உரித்து சாப்பிடலாம்.பழத்தை மேசை மேல் வைத்து,அதை உள்ளங்கையால் அமுக்கினால் பழம் பிளக்கும்.இந்த மாதிரி வீர சாகசம் செய்து உங்கள் வலிமையைக் காட்ட முடியவில்லை என்றால் சிறு கத்தியைக் கொண்டு பழத்தை பிளக்கலாம்.பழத்தின் மேற்புறத்தில் 1cm அளவிற்கு குறைவாக பழத்தைச் சுற்றி வெட்டவும்.மிகவும் ஆழமாக வெட்ட வேண்டாம்.இப்படி செய்தால் பழம் இரண்டு பிரிவாக பிரியும்.(கீழே உள்ள படத்தைப் பாருங்கள்).ஆனால் கவனம் தேவை.நான் முன் சொன்னது போல இந்த பழங்களில் சாறு பட்டால் அந்த கறை போகாது.நான் எல்லாம் என்றைக்குமே இந்த பழங்களை உரித்தது இல்லை.அதற்குதான் அம்மாவும் அண்ணாவும் இருக்கின்றார்களே.என் நல்ல சட்டையில் அழுக்கு படிய கூடாது.இது மாதிரி யாரவது கிடைத்தால் அவர்களிடமே இதை உரித்து தர சொல்லுங்கள்.ஹிஹி.சின்ன வயதில் வாங்கிய அடியால் இப்படி ஆகிவிட்டேன்.





உள்ளே இருக்கு கொட்டை கடினமாக இருக்காது.ஆனால் அதை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுங்கள்.மிகவும் கசப்பாக இருக்கும்.நன்கு பழுத்த பழங்கள் தான் இனிப்பாக இருக்கும்.காயாக இருப்பது சற்று துவர்ப்பும் புளிப்பும் கலந்து இருக்கும்.பழங்கள் ஊதா நிறத்தில் இருக்கும் பழங்களையே தேர்ந்து எடுக்கவும்.மங்குஸ்தீன் பழங்களைக் குளிர்சாதன பெட்டிகளில் வைக்க கூடாது.வாங்கிய சில நாட்களிலேயே சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அதன் சுவை நன்றாக இருக்காது.











மேலும் விபரங்களுக்கு: http://www.hort.purdue.edu/newcrop/morton/mangosteen.html#Food%20Uses
நன்றி
http://ezinearticles.com/?Mangosteen---The-Queen-of-Fruits&id=94295
email blacklist check
சென்று வருகின்றேன் நண்பர்களே!!!
இது எந்த கலகத்தில் முடிய போகின்றதோ..நாரயணா நாரயணா!