
Soyuz TMA-11 விண்கலம் நேற்று இரவு 10.52க்கு அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station, ISS) இணைந்தது. 48 மணி நேரமாக 700 தடவை பூமியை சுற்றி வந்தப்பின் சரியான தருணத்தில் இணைய Soyuzக்கு சுமார் 90 நிமிடங்கள் எடுத்தது.
அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மோஸ்கோ விண்வெளி மையத்துக்கு 10 நிமிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
மலேசிய முஸ்லிம்களுக்கு தன்னுடைய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிய டாக்டர் ஷேய்க் முஜாப்பார் தன்னுடைய 10 நாட்கள் பயணம் வெற்றி பெற மலேசியர்கள் வாழ்த்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
Soyuz (வட்ட்டதிற்குள்) ISS-இல் சேரும் காட்சிநோன்பு பெருநாளை விண்வெளியில் கொண்டாடும் உலகின் முதன் விண்வெளி வீரர் என்ற சரித்திரத்தையும் இன்று படைக்கிறார் டார்டர் ஷேய்க் அவர்கள்.
பி.கு: மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 588, Angkasa 1-இல் உடனுக்குடன் செய்திகளை காணலாம்.