Wednesday, March 19, 2008

பூங்கா இமாஸ்


(பூங்கா இமாஸ்)

உலகில் சில நாடுகள் பலம் வாய்ந்தவையாக இருக்கும்.பல நாடுகள் பலம் குன்றிய நாடாக இருக்கும். பலங்குன்றிய நாடுகளின் மீது பலம் வாய்ந்த நாடு தன் அதிகாரத்தை செலுத்த படை எடுக்கும். அதனை எதிர்த்து போராட முடியாத நாடுகள் அதன் அதிகாரத்திற்கு கட்டுபடும். பின்னர் அந்நாடுகளை கப்பங்கட்டுமாறு பலமிக்க நாடு கட்டளையிடும். சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்கஞ்சி கப்பங்கட்டி கொண்டுவரும்.
அங்கனம் கப்பமாகக் கட்டக்கூடிய பொருள் தங்கமாகவோ வேறு விலையுயர்ந்த பொருட்களாகவோ இருக்கும். கெடா, திரங்கானு மாகாணங்கள் சயாமிற்கு இதுபோல கப்பங்கட்டி வந்தன.இதுவே பூங்க இமாஸ் என அழக்கப்படுகுறது. பூங்கா என்றால் மலர், இமாஸ் என்றால் தங்கம். எனவே பூங்கா இமாஸ் என்றால் தங்க மலர் என பொருள்படும்.
கெடா சுல்தான் சயாம் நாட்டிற்கு அஞ்சி, பிரிட்டிஷ் காரர்களின் உதவியை நாடினார். பிரிடிஷ்காரர்கள் உதவி செய்வதாக கூறி பினாங்கை குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். பிரிடிஷாரின் உதவியை பெற்ற கெடாவானது சயாமிற்கு பூங்கா இமஸ் கொடுக்க மறுத்தது.
கெடாவிற்காக பிரிடிஷார், சயாமியர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அப்பேச்சுவார்த்தை பயனில்லாமல் போயிற்று. கொஞ்சகாலம் கழித்துச் சயாமிய அரசன் தன் படைகளை நாட்டிற்குத் திரும்பும்படி கட்டளையிட்டான். அப்பொழுது ஒரே மகாணமாக இருந்த கெடா இரண்டு மாகாணங்களாகன் பிரிக்கப்பட்டது. ஒன்று கெடா, இன்னொன்று இன்றுள்ள பெர்லிஸ் என்பதாகும்.
மலாயாவின் கிழக்குக்கரை மாகாணங்களான கிளந்தான், திரங்கானு ஆகியனவை சயாம் ஆட்சியின் கீழ் இருந்து வந்தன, அப்பொழுது அம்மாகாணங்கள் தொடர்ந்து சயாமிற்கு கப்பங்கட்டி வந்தன. 1869-ம் அண்டில் கிளந்தான் சுல்தான் பெரியதொரு பூங்கா இமாஸ் செய்து சயாமிற்கு கொடுத்தான். அது எட்டுக் கிளைகள், முப்பத்தெட்டு பூக்கள் எண்ணூற்றெண்பது இலைகள், நான்கு பாம்புகள், எட்டு பறவைகள் கொண்டதாக அமைந்திருந்தது. இவ்விரு மாகாணங்களும் 1909-ம் அண்டுவரை சயாம் ஆட்சியின் கீழிருந்தன. எனவே. அவை தொடர்ந்து ஆண்டுதோற்ம் பூங்கா இமாஸ் கட்டி வந்தன.

2 மறுமொழிகள்:

')) said...

oh ! nalla thagaval.
romba naal kazhichu naan unga blogku varen, neengale romba naala post podalaya

-kittu mami

')) said...

நன்றி கிட்டு மாமி...