மலாய்க்காரர்களின் விஷேஷங்களில் இடம்பெரும் பல உணவுவகைகளில் லெமாங் பிரசித்திப்பெற்றது. பெருநாள் காலங்களில் அனைத்து வீடுகளில் கண்டிப்பாக லெமாங் இருக்கும்.
லெமாங் மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. அனைவாரும் விரும்பி சாப்பிடும் உணவும்கூட. மலேசியாவில் வருடம் முழுதும் லெமாங் விற்பதை நீங்க கண்டிருக்கலாம். ஆனால், விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலேயே செய்வார்கள்.
பண்டைய காலத்தில் மக்கள் வீட்டில் கேஸ் எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வெளியே கரி அடுப்பு மூட்டி அடுப்பு ஊதி மண் பானை, அல்லது மூங்கிலில்தான் சமைப்பார்கள். இதுவும் ஒரு வகையில் அப்படியே அமைக்கப்படும் வகையை சார்ந்ததுதான்.பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு மலாயர் பச்சை மூங்கிலை தேடி வெட்டி எடுத்துவருவர். ஒவ்வொரு மூங்கிலும் ஒரு கையளவு நீளத்துக்கு வெட்டி அதனுள் வாழை இலையை வைப்பர். இன்னொருவர் காய்ந்த விறகுகள், கொட்டாங்குச்சி போன்றவைகளை எறிப்பொருளாக உபயோகிக்க தேடிக்கொண்டுவரவார். மூங்கிலை நிறக வைப்பதுக்கு ஏதுவாக இருக்க இரும்பு அடிப்பார்கள். பிறகு நெருப்பை மூட்டி, அங்கே மூங்கிலை வரிசையாக அடுக்கி, நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கும்வரை காத்திருப்பார்கள்.
மூங்கில் சூடானவுடன் பூலூட் அரிசி (glutinous rice) தேங்காய் பாலுடன் கலந்து இந்த மூங்கினுள் போடுவர். அதன் பிறகு அரிசி வேகும்வரை, பக்கத்தில் உட்கார்ந்த்து நெருப்பு நன்றாக எறிய காற்று வீசுவர். இது 3 முதல் 4 மணி வரை சமைக்கப்பட வேண்டிய உணவு. 15 நிமிடத்துக்கு ஒரு தடவை மூங்கிலை கொஞ்சம் புரட்டி புரட்டி வைக்க வேண்டும். அப்போதுதான் அது சமமாக வேகும். தெருவில் உள்ள அனைவரும் லெமாங் ஒரே நேரத்தில் சமைக்கும்போது எல்லார் வீட்டு முன்னாடியும் இந்த செட்-அப் இருக்கும். இதுவே ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வெந்ததும் மூங்கிலை அப்படியே எடுத்து பத்திரப்படுத்தி வைப்பர். சாப்பிடும் போது அந்த மூங்கிலை இரண்டாக பிளந்து உள்ளே உள்ள லெமாங் (அழகாய் வாழை இலையில் மடிக்கப்பட்டிருக்கும்) சின்ன சின்னதாக வெட்டி பரிமாறுவர். மலேசியாவில் உணவு பகிர்ந்துக்கொள்ளுதல் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக (முக்கியமாக விழாக்காலங்களில்) கருதப்படும். அப்போது மலாய்க்காரர்கள் அந்த மூங்கிலை அப்படியே அல்லது மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்.
மேற்கு மாநிலங்களில் லெமாங் வாட்டிய மீனுடன் (Ikan Bakar) பறிமாறப்படும். கிழக்கில் ரெண்டாங் அல்லது செருண்டிங்குடன் பறிமாறப்படும். சைவர்கள் லெமாங்கை ருசி பார்க்க வேண்டுமென்றால் கச்சான் குழம்புடன் சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும்.
இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??
ரம்ஜான் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் “ஜில்லென்று ஒரு மலேசியா” குழுவின் சார்பாக பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறோம்.
Tuesday, September 30, 2008
லெமாங் - ஆஹா என்ன ருசி!
“Selamat Hari Raya Aidilfitri"
Subscribe to:
Post Comments (Atom)
27 மறுமொழிகள்:
நேற்று நான் எழுதலாம் என்றிருந்தேன் நன்கு சிறப்பாக எழுதியுள்ளீர்கள்...
அனைவருக்கும் 'செலமாட் ஹரி ராயா ஐடில் ஃபித்திரி"
ரமஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
//இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??//
நீங்க சாப்பிடுங்க அதை நாங்கெல்லாம் வேடிக்கை பார்க்குறோன் ஒ.கே :)))))
// மூங்கிலை பிளந்து லெமாஙை சிறிது சிறிதாக வட்டமாக வெட்டியோ கொடுப்பர்./
பார்க்க அழகாய் இருக்கிறது!
நல்லா இருந்தா எனக்கு ஒரு பார்சல் கூட பண்ணிவிடலாம்
//அனைவருக்கும் 'செலமாட் ஹரி ராயா ஐடில் ஃபித்திரி"//
ஆமாம் நானும் அத்திரி பித்திரியை ரிப்பிட்டு போட்டுக்கிறேன் :)))
சிறப்பான பதிவு அனு, பாராட்டுகள்.
அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் இவ்வேளையில் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள். ஈட் முபாரக்!
//ஆயில்யன் said...
//அனைவருக்கும் 'செலமாட் ஹரி ராயா ஐடில் ஃபித்திரி"//
ஆமாம் நானும் அத்திரி பித்திரியை ரிப்பிட்டு போட்டுக்கிறேன் :)))//
அதென்ன அத்திரி பித்திரி? இப்படி சொல்லிப் பாருங்க Aidil Fitri!!!
கூடவே மற்றுமொன்று
Maaf Zahir dan Batin (உள்ளமும் புறமும் மன்னிப்பு) இது ஈகைத் திருநாளின் சிறப்பம்சம்.!!!
லெமாங் ஆஹா உங்க பதிவே படிச்ச மாதிரி இருக்குங்க அப்படியே சாம்பல் பார்சல் அனுப்புங்க.
//இந்த பெருநாளில் நான் லெமாங் சாப்பிட போறேன். அப்ப நீங்க??//
பார்சல் ஒண்ணு அனுப்ப முடியுமா..?
நல்லா விவரிச்சிருக்கற மைஃப்ரண்ட் ..
இது பற்றி முன்னேயும் எழுதியிருக்கீங்களா?
அடுத்தமுறை மலேசியா வரும்போது ஒரு கை பார்க்கிறேன்.
//பார்க்க அழகாய் இருக்கிறது!
நல்லா இருந்தா எனக்கு ஒரு பார்சல் கூட பண்ணிவிடலாம்//
அப்படியே சிட்னிக்கும் ஒரு பார்சல் ;)
//அப்படியே சிட்னிக்கும் ஒரு பார்சல் ;)//
இரண்டு ;)
adik, berkirim satu Lemang bungkus
அனைத்து நண்பர்களுக்கும் இவ்வேளையில் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள். 'செலமாட் ஹரி ராயா ஐடில் ஃபித்திரி"
ஹாய் அனு,
ம்ம்ம் படிக்க நல்லாவெ இருக்கு பாக்கவும் கூட.
சாப்பிட்டால் தான் தெரியும் எப்படி இருக்கும் என்று. இருந்தாலும் நான் சுத்த சைவம் இல்லையா அதனால நல்ல ஒரு சைட் டிஷ் கூட தான் சாப்பிட முடியும் னு நினைக்கிறேன்
பட் படிக்க நல்லா இருக்கு.
selamat hari raya :D
selamat hari raya
ரமஜான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..
நாசி லெமாக்கும் இதுவும் ஒன்றா?
திருநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இனிய வாழ்த்து(க்)கள்.
@விக்னேஷ்:
அட ஆமாவா? தெரிஞ்சிருந்தா உங்களுக்கு இடம் விட்டிருப்பேனே. :-)
------------------------
@ஆயில்யன்:
நான் சாப்பிடுறது உங்களுக்கு கத்தார் வரைக்கும் தெரியுதா? ;-)
கண்டிப்பா நல்லா இருக்கும். மலேசியா வாங்க. சாப்பிடலாம்.
@புனிதா:
நன்றி. :-)
சிறப்பாக சொன்னீங்க புனிதா.. நானும் திரும்ப சொல்லிக்கிறேன். Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir dan Batin. :-)
---------------------------
@கோவை ரவி:
பதிவை படிச்சதுலேயே ருசி அறிஞ்சாச்சா? சூப்பர். :-)
@மின்னுது மின்னல்:
அண்ணா, அண்ணி செஞ்சு கொடுப்பாங்க. ருசிச்சு சாப்பிடுங்க. :-)
----------------------
@முத்துக்கா:
நன்றிக்கா :-)
@கானா பிரபா:
அது கெத்துப்பாட். இது லெமாங்.. ரெண்டும் வேற வேற. அந்த லின்கை படிச்சு பாருங்கண்ணோ. :-)
சிட்னிக்கா? கண்டிப்பா.. ஆனால் அதுக்கு முன்னாடி நீங்க டோடோல் அனுப்பனும். (நான் டோடோல் பத்தி பதிவு போடுறதுக்குள்ளே..) :-))
--------------------
@தூயா:
நீங்க இங்கே வாங்க. கொடுத்துடலாம். :-)
@தமிழ் பிரியன்:
அண்ணே, உங்களுக்கு தாராளமா கொடுக்கலாம். மலாய் சொந்தமா கத்துக்கிட்டு வந்து அழகா கேட்டீங்கள்ளே.. அதுக்காகவே தரலாம். :-)
-----------------
@சுமதிக்கா:
லெமாங் சைவம்தான் அக்கா. தொட்டுக்க கச்சான் குழம்பு மேட்சிங்-ஆ இருக்கும். அசைவத்துக்கு நெறைய வெரைட்டி இருக்கு. :-)
@துர்கா & ஜெகதீசன்:
வருகைக்கு நன்றி. :-)
----------------------
@கடைசி பக்கம்:
நாசி லெமாக் வேற. இதோ இந்த் லிங்கை பாருங்க:
http://vaazkaipayanam.blogspot.com/2008/08/blog-post.html
கெத்துப்பாட்:
http://chitchatmalaysia.blogspot.com/2007/10/ketupat.html
ம் என்ற மலேசியாவில் இருந்து வந்த என்ற உறவினர் ஒருவர் லெமாங் பற்றி கூறியுள்ளார். நீங்களும் வாயுர வைத்து விட்டீர்கள்.
A similar preparation with panai olai, Olai kolukkattai.A tasty stuff.
Post a Comment