Sunday, April 8, 2007

மலேசியா வரலாறு

வணக்கம்.முதலில் மலேசியா வரலாறை சற்று அலசிப் பார்ப்போம்.முதலில் மலேசியா என்பது தீபகற்ப மலேசியாவை மட்டும்தான்.அந்த காலத்தில் மலேசியாவின் பெயர் தானா மெலாயு(tanah melayu) அப்படி என்றால் மலாய்காரர்களின் மண்/இடம் என்று அர்த்தம்.இந்த Tanah melayu வின் வரலாறுதான் இன்று நான் எழுத போகின்றேன்.
முதலில் மலேசியா வரலாறு ஐந்து பாகங்களாக பிரிக்கலாம்.

  • பண்டைய காலத்து மலேசியா(35,000 BC - 100 BC )

எலும்பு கூடு,குகை,இது எல்லாம் நமக்கு தேவையா?ஆகவே இதை விட்டு விடலாம்

  • இந்து அரசாட்சி(100 BC - 1400 AD)

ஒரு காலத்தில் தானா மெலாயுவில் இந்து மதம் மற்றும் புத்த மதம் ஆதிக்கதில் இருந்தது.அதைப் பற்றிதான் இன்று எழுதப் போகின்றேன்.

  • இஸ்லாமிய ஆட்சி(1400 - 1511 )

இது தானா மெலாயுவின் பொற்காலம் என்கின்றார்கள்.ஏன் என்று நாம் சற்று அலசிப் பார்க்கலாம்.

  • அந்நிய ஆட்சி(1511-1957)

ஆங்கிலேயர்,டச்சுகாரர்கள் என்று பல அந்நிய ஆட்சி நடைப்பெற்ற காலம்

  • சுதந்திர மலேசியா(1957-தற்பொழுது வரை)

இந்த காலகாட்டத்தில்தான் மலேசியா என்பது உருவாகியது.




-------------------------------------------------------------------------------------




இப்பொழுது மேலே குறிப்பிட்டு உள்ளது போல இந்து அரசாங்கத்தில் இருந்து மலேசியா வரலாறு ஆரம்பம்.




இந்து அரசாட்சி 2ஆம் நூற்றண்டிலேயே ஆரம்பித்து விட்டது.இந்து மற்றும் புத்த மத ஆதிக்கம் நிறைந்த அரசாங்கம் இந்த காலகட்டதில் அதிகம்.சில இந்து ,புத்த அரசாங்கங்களைப் பற்றி எழுதுகின்றேன்.பெயர்கள் சற்றே நகைச்சுவையாக இருப்பது போல இருக்கும்.சிரிக்க எல்லாம் கூடாது

கங்கா நெகரா(ganga negara)
இது 2ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை உள்ள இந்து அரசாங்கம்.நெகரா என்றால் மலாய் மொழியில் நாடு எனப்படும்.இதன் தமிழ் பெயர் எனக்குத் தெரியாது.ஆகவே மொழியக்கம் செய்யவில்லை.இந்த அரசாங்கம் ராஜ ராஜ சோழனால் 11ஆம் நூற்றாண்டில் வீழ்த்தப்பட்டது என்று சொல்கின்றார்கள்.

லங்கசுக்கா(langkasuka)
இது 2ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டு வரை நீடித்த அரசாங்கம்.இதுவும் ஒரு இந்து மத ஆதிக்கத்தில் இருந்தது.மலேசியாவில் மிக பழமையான அரசாங்கம் என்று சொல்கின்றார்கள்

பான் பான்(Pan Pan)
3 ஆம் நூற்றாண்டிலிருந்து 5 ஆம் நூறாண்டு வரையில் இருந்தது.இது கிளந்தான் அல்லது திரங்கானு மாநில பகுதியில் இருந்து இருக்கலாம்.இந்த அரசாங்கத்தைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

ஸ்ரீ விஜயா(sri vijaya)
4ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது.இந்த அரசாங்கத்தின் தலை நகரம் இந்தோனேசியாவில் palembang என்ற இடத்தில் இருந்தது.இவர்களின் ஆட்சி தானா மெலாயுவில் வரையில் பரவி இருந்தது.முதலில் இந்து ஆதிக்கத்தில் இருந்த இந்த அரசாங்கம் பிறகு புத்த மதத்தைப் பின்பற்ற தொடங்கினார்கள்.இந்த அரசாங்கமும் ராஜ ராஜ சோழனால் விழ்த்தப்பட்டது.

பண்டைய கெடா(kedah tua)
இது 5ஆம் நூற்றாண்டிலிருந்து இருந்த ஒரு அரசாங்கம்.இதுவும் இந்து மற்றும் புத்த மதத்தில் இருந்தது.



இந்த அரசாங்கத்தை வைத்து பார்க்கும் பொழுது வணிகத்தால் இந்தியாவின் பல கலாச்சாரங்கள் இங்கே வந்துள்ளன.இந்து மதமும் புத்த மதமும் மலேசியாவில் வருவதற்கு வணிகம் ஒரு முக்கிய பங்கற்றியது.இந்த இந்து புத்த அரசாங்கத்தின் அமைப்பு,ஆட்சி முறை,இலக்கியம்,கலை என்று அனைத்தும் இந்தியாவில் இருந்து வந்ததுள்ளது.பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியா மண்ணிற்கும் மலேசியா மண்ணிற்கும் தொடர்பு ஆரம்பித்து விட்டது.இன்று வரையிலும் அது தொடர்கின்றது. மற்றொரு விஷயம் ராஜ ராஜ சோழனின் ஆதிக்கம் மலேசியாவில் இருந்ததுதான்.இதோடு மிகவும் முடித்துக் கொள்கின்றேன்.

ராஜ ராஜ சோழனின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள்



" It was not China but India that so influenced the spiritual as well as the material life of the Malays that till the nineteenth century they owed nearly everything to her: alphabets, religion, a political system, law, astrology and mediaeval medicine, literature, sculpture in stone, metalwork and the weaving of silk.
The Indians, who built the oldest temples and chiselled Buddhist inscriptions in Sanskrit as early as the fourth century A.D. in Kedah, must have been preceded by traders, who sailed to and fro long before Brahmins and monks and literate adventurers brought the Hindu religion and Buddhism and Sivaite ideas of royalty, and carved Sanskrit inscriptions to which India itself had not long been accustomed. Immigration in larger numbers and permanent settlement began in the first centuries of the Christian era, with commerce as the driving force. "

இந்த இடுகையில் உள்ள சில மலாய் சொற்றகளின் அர்த்தம்:
tua(துவா)-பழமை,முதுமை
negara(நெகரா)-நாடு
tanah(தானா)-மண்/இடம்




34 மறுமொழிகள்:

')) said...

ஆமாம் கடைசியா ஆங்கிலத்தில் உள்ளது யார் சொன்னது என்று போடவில்லையே?
எனக்கென்னவோ பயமாக இருக்கு எங்கே இதை பாடபுத்தகத்தில் வைத்துவிடப்போகிறார்களோ என்று!!
இல்லை அங்கேந்து தான் எடுத்ததா?:-))

')) said...

மலேசியா பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தந்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் !

')) said...

மலேசியாவின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் நல்ல பதிவு..அதுவும் குறிப்பாக தங்கள் பதிவை படித்த பிறகு தான் ராஜராஜ சோழன் மலேசியாவை ஆண்ட விஷயமே அறிந்து கொண்டேன்(பள்ளியில் படிக்கும்பொழ்து வரலாறு சரியாக படிக்கவில்லையென்றால் இப்படித்தான்:( ).

தொடரட்டும் மலேசிய பயணம்! :)

')) said...

மலேசியா, மற்றும் கிழக்காசிய நாடுகளை இராஜ இராஜன் ஆண்டது பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பே இந்து இராச்சியங்கள் இருன்ந்தன என்பது புதிய தகவல்.

மலேசிய வரலாறை அறிய ஆவல்.

')) said...

அற்புதமான பதிவு!!!
மிகவும் ஆராய்ச்சி எல்லாம் செய்து சிரத்தை எடுத்து எழூதியிருக்கிறீர்கள்!!
உங்கள் முயற்சிக்கு ஏற்ற தரமான பல பதிவுகள் வர வாழ்த்துக்கள்!!
உங்கள் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் எனது பாராட்டுக்கள்!! :-))

')) said...

நல்லதொரு தொகுப்பு, இன்றைய கில்லிப் பதிவில் தொடுப்பும் கொடுத்திருக்கின்றேன்.

')) said...

Nice one.. :))

appadiye thamiz wikipedia vilayum update pannunga intha thakavala...

')) said...

துர்கா , மைபிரண்ட்

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்

எனது கேள்விகள் :

1. நெகெரா என்றால் நகரமா அல்லது நாடா ?
2. நெகரி செம்பிலான் என்றால் செம்பிலான் நகரம் என்று அர்த்தமா ?
3. "லங்கசுக்கா(langkasuka) " இது எனக்கு மட்டன் சுக்கா போலிருக்கிறது . சுகா வா இல்லை சுக்காவா ? :) முடிந்த வரை உங்கள் உச்சரிப்பிலேயே எழுதுங்கள்
4.
"சுதந்திர மலேசியா(1957-தற்பொழுது வரை)
இந்த காலகாட்டத்தில்தான் மலேசியா என்பது உருவாகியது."

"4ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது.இந்த அரசாங்கத்தின் தலை நகரம் இந்தோனேசியாவில் palembang என்ற இடத்தில் இருந்தது.இவர்களின் ஆட்சி மலேசியா வரையில் பரவி இருந்தது."

மேலே உள்ள இரண்டில் எது சரி ? :) 1957க்கு முன்னைய கால கட்டத்தில் மலேயா தீபகர்ப்பம் என்று அழைத்தால் போதுமே .

ஏன் சொல்கிறேன் என்றால் இதை நீங்கள் தொகுத்து நூலாக்கினால் அப்போது உங்கள் வேலை குறையும்

அன்புடன்
சிங்கை நாதன்

Anonymous said...

@வடுவூர் குமார்
MALAYA AND ITS HISTORY
by
SIR RICHARD WINSTEDT
K.B.E., C.M.G., F.B.A., D.LITT. (OXON.), M.A.
FORMERLY OF THE MALAYAN CIVIL
SERVICE AND READER IN MALAY,
UNIVERSITY OF LONDON

இந்த புத்தகத்தில் இருந்து சுட்டது :)))
எனக்கே நான் படித்த மலேசியா வரலாறு மறந்து போய் விட்டது.ஆகவே பல புத்தகங்களைப் படித்து எழுதியது இந்த பதிவு.எங்கள் பாட புத்தகம் எல்லாம் மலாய் மொழியில் இருக்கும்.ஆங்கிலத்தில் இருக்காது :)

Anonymous said...

@கோவி கண்ணன்
ஆதரவிற்கு நன்றி.கண்டிப்பாக நாங்கள் இருவரும் தொடர்ந்து எழுதுவோம் :)

Anonymous said...

@பாலா
நன்றி

Anonymous said...

@வி.ஜெ சந்திரன்
மேலும் பல பதிவுகள் உங்களுக்காக கண்டிப்பாக இருக்கும்.தொடந்து படியுங்கள்.நன்றி

Anonymous said...

@cvr
நன்றி நன்றி.உங்கள் போல பல நண்பர்கள் ஆதரவு இருக்கும் பொழுது இந்த மாதிரி கஷ்டப்பட்டு எழுதுவதிலும் ஒரு இன்பம் இருக்கவே செய்கின்றது.

')) said...

அனைவருக்கும் வணக்கம்,

என்னடா ப்லாக் ஆரம்பித்துவிட்டு நான் காணாமல் போய்விட்டேன் என்று சிலர் நினைக்கக்கூடும். :-P எனக்கு பதிலாதான் துர்கா இந்த வேலையை கற்சிதமா செய்கிறாரே! இதை விட எனக்கு வேறென்ன வேண்டும். நான் அடுத்த பதிவு போட இன்னும் ஒரு இரண்டு வாரமாக எடுக்கும் என்று நினைக்கிறேன்.

@வடுவூர் குமார்:

இந்த பதிவை படித்ததும் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது குமார். நாந்தான் வகுப்பில் கவனம் செலுத்த வில்லையோ இல்லை வகுப்புக்கே போகவில்லையோ என்று. :-P எங்கள் பாட புத்தகத்தில் இதை பற்றிய குறிப்புகள் ஒரு பக்கம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு வரலாறில் எப்போதுமே நாட்டம் இல்லாததால் அதில் கவனம் செலுத்தியதும் இல்லை. துர்காதான் இதுக்காக தனி ஆராய்ச்சியெல்லாம் செய்து ஆங்காங்கே தேடி இதை தொகுத்து வழங்கியுள்ளார். அவருக்கு இவ்வேளையில் நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

@கோவி. கண்ணன், பலர், வி.ஜெ.சந்திரன், சி.வி. ஆர், கானா பிரபா மற்றும் ஜி:

வருகைக்கு நன்றி (அனைவருக்கும் தனி தனியா பதில் எழுத நேரம் பற்றாக்குறை.. மன்னிக்கவும்..)

Anonymous said...

@கானா பிரபா
எங்கள் பதிவு கில்லியிலா?நன்றி நன்றி நன்றி.

Anonymous said...

@ஜி
நன்றி.பார்ப்போம்.முடிந்தால் wikipediaவில் இணைக்கின்றேன்.நன்றி

')) said...

@சிங்கை நாதன்:

வணக்கம் சிங்கை நாதன். பெயரை வைத்து பார்த்தால் நீங்கள் சிங்கப்பூரை சேர்ந்தவர் என்று தெரிகிறது. ;-)
அப்படியென்றால், இதில் பாதி விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என நம்புகிறேன் நண்பா.

உங்களுக்கு மலாய் தெரியுமா? (உங்கள் முதல் கேள்விதான் என்னை இந்த கேள்வியை கேட்க தூண்டியது.) ;-)
உங்கள் பதிலை வைத்துதான் இந்த கேள்விகளுக்கு பதில் எழுதுவது சிறந்தது என நினைத்தேன்.

ஆனாலும், இங்கே வருபவர்களில் முக்கால்வாசி பேருக்கு மலாய் தெரியாததால் அவர்களுக்கு புரியும் படியே எழுதுகிறேனே! ஓகேவா நாதன்? ;-)

கேள்வி 1
நெகாரா = Negara = நாடு
நெகிரி = Negeri = மாநிலம்
பண்டார் = Bandar = நகரம்

கேள்வி 2
நெகிரி செம்பிலான் (Negeri Sembilan) என்பது மலேசியாவில் உள்ள ஒரு மாநிலம். நெகிரி செம்பிலான் என்ற வார்த்தையை நேரடி மொழி மாற்றம் செய்தால் "ஒன்பது மாநிலம்" என்று பொருள். இந்த மாநிலத்துக்கு இந்த பெயர் வந்ததுக்கும் ஒரு சரித்திரம் இருக்கு.

இந்து அரசாட்சிக்கு பிறகு, தீபகற்ப மலேசியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடாகத்தான் திகழ்ந்தது. மொத்தம் ஒன்பது நாடு:
1- மலாக்கா
2- கெடா
3- பேராக்
4- சிலாங்கூர்
5- நெகிரி செம்பிலான்
6- ஜோகூர்
7- பகாங்
8- திரங்கானு
9- கிளாந்தான்

இந்த ஒவ்வொரு நாட்டையும் (இப்போது மாநிலங்கள்) ஆட்சி செய்தவர்களை சுல்தான் (Sultan) என்றழைப்பர்.

நெகிரி செம்பிலான் ஒரு நாடாக இருந்த சமயத்தில் 9 மாநிலங்கள் (இப்போது மாவட்டம் என்றழைக்கபடுகிறது) அதனுள் இருந்தன. 9 மாநிலங்களை கொண்டுருவானதால் அவர்கள் அப்போது நெகிரி செம்பிலான் என்று பெயர் வைத்தனர்.

கேள்வி 3
சுகா என்று எழுதினால் (Suga) என்று சிலர் படிப்பார்கள். ஆனால் இதை (Suka) என்று படிக்க வேண்டும். அதனால்தான் துர்கா "சுக்கா" என்று எழுதியுள்ளார். :-)

இப்போது அதன் ஓசை சரியா இருக்கிறதா?

கேள்வி 4
1963-லிருந்து இன்று வரை மலேசியா என்றழைக்கப்படுகிறது எங்கள் நாடு.

சுதந்திரம் கிடைத்ததிலிருந்து 1963 வரை மலாயா என்றழைக்கப்பட்டது. (பெயர் மாற்றத்துக்கான காரணங்களும் விரைவில் இந்த தொடரில் வரவிருக்கின்றன.) ;-)

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே பிரிட்டீஷ்காரர்கள் இங்கே இருந்த சுல்தான்களின் பவர்களை கப்பற்றினர். 9 நாடுகளையும் இணைத்து ஒரு நாடாக்கினார்கள். அப்போது இந்த நாட்டு தானா மெலாயு (Tanah Melayu) என்றழைக்கப்பட்டது.

இஸ்லாமிய ஆட்சியின்போது 9 தனி தனி ராஜ்ஜியங்கள் நடந்தன.

என் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளித்திருக்கும் அன நம்புகிறேன் நாதன். அப்படி மற்ற சந்தேகங்கள் இருந்தாலும், நீங்கள் இங்கே தெரிவு படுத்தலாம். எங்களால் இயன்றவரை நாங்கள் விளக்க கடமை பட்டிருக்கிறோம். ;-)

')) said...

தயவு செய்து உங்கள் பதிவின் வார்ப்புருவில் #outer-wrapper{text-align:justify}க்கு பதில் #outer-wrapper{text-align:left}என்று உபயோகியுங்கள். நீங்கள் justify உபயோகிக்கும் போது Firefox உலாவியில் தமிழ்ச் சொற்கள் உடைந்து தெரிகிறது.

')) said...

துர்கா,

பதிவே அருமையாக எழுதியிருக்க'லா......

//மலேசியா பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் தந்துள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் !///


வழிமொழிகிறேன் :)

')) said...

நல்ல தொகுப்பு தொடர வாழ்த்துக்கள்

')) said...

மை பிரண்ட், துர்கா,
நல்ல வரலாறு.. பொறுமையாக பதிப்பிக்கும் உங்களுக்கு நன்றிகள்..

இந்த இடுகையின் விவரங்களையே இன்னும் விரிவாக விளக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.. அப்புறம், மலேசிய வரலாறு முடிந்த பின்னர், மலாய் மொழி சொல்லிக் கொடுக்கலாமே எங்களுக்கெல்லாம்? என்ன சொல்றீங்க? :)

')) said...

@து. சாரங்கன்:

சீக்கிரமே சரி செய்து விடுகிறோம் சாரங்கன். ;-)

----------------------------------
@இராம்:

//பதிவே அருமையாக எழுதியிருக்க'லா......//

ராம், உங்க பேச்சிலேயே நீங்க "லா"ன்னு போட்டு ஒரு மலேசியனைப் போல் ஆகிட்டீங்க.

')) said...

@சுப.செந்தில்:

//நல்ல தொகுப்பு தொடர வாழ்த்துக்கள்//

நன்றி செந்தில்
:-)

')) said...

@பொன்ஸ்~~Poorna:

//நல்ல வரலாறு.. பொறுமையாக பதிப்பிக்கும் உங்களுக்கு நன்றிகள்..//

:-D நன்றி பொன்ஸ் அக்கா.

//இந்த இடுகையின் விவரங்களையே இன்னும் விரிவாக விளக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.. //

இதைப் பற்றிய விஷயங்கள் எங்களுக்கே அவ்வளவாக தெரியாது. நாங்கள் இவைகளை ஒரு பாதி பக்கம்தான் எங்கள் பாட புத்தகங்களில் படித்தோம். இந்த விஷயம் கூட துர்கா மேலும் சில பூத்ததகங்களில் படித்து எழுதியிருக்கார். இதுக்கு பிறகு வரும் தொடர்கள் கண்டிப்பாக நீங்க சொலியதுபோல் அதிக விளக்கங்களுடன் இருக்கும். ஏனேன்றால், இஸ்லாமிய ஆட்சியில் இருந்து இப்போது வரை நிறைய விஷயங்கள் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம்.. விரைவில் எதிர்பாருங்க :-D

//அப்புறம், மலேசிய வரலாறு முடிந்த பின்னர், மலாய் மொழி சொல்லிக் கொடுக்கலாமே எங்களுக்கெல்லாம்? என்ன சொல்றீங்க? :)//

மலாய் கற்றுக்கொள்ள எதுக்குங்க வரலாறு முடியும் வரை காத்திருக்க வேண்டும்????

இன்னும் இரண்டே வாரங்களில் நீங்கள் மலாய் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கலாம். :-D
மறக்காமல் வகுப்புக்கு வந்துவிடுங்கள்!
(வகுப்பில் தூங்கிவிட்டு எல்லாம் புகுந்து விட்டது.. வால் மட்டும்தான் இன்னும் இல்லைன்னு எல்லாம் சொல்லக்கூடாது.. ஓகே?)
:-P

Anonymous said...

@ராம்
நன்றி'லா' நீங்களும் மலேசியா 'கை' ஆகிட்டீங்களா?ஹி ஹி

@செந்தில்
நன்றி

@பொன்ஸ்
வாழ்த்துகளுக்கு நன்றி.இடுகைகளின் இடையே சில மலாய் வார்த்தகளைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
//இந்த இடுகையின் விவரங்களையே இன்னும் விரிவாக விளக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது//
இந்த பகுதி எழுத மிகவும் கஷ்டப்பட்டேன்.அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை.இல்லையென்றால் இன்னும் விரிவாக எழுதி இருப்பேன்
:-(

')) said...

சூப்பர் அடிச்சு ஆடுங்க...மலேசியா பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு :-)

')) said...

@து. சாரங்கன் / Saru:

//தயவு செய்து உங்கள் பதிவின் வார்ப்புருவில் #outer-wrapper{text-align:justify}க்கு பதில் #outer-wrapper{text-align:left}என்று உபயோகியுங்கள். நீங்கள் justify உபயோகிக்கும் போது Firefox உலாவியில் தமிழ்ச் சொற்கள் உடைந்து தெரிகிறது. //

சாரங்கன்,

சுட்டிக் காட்டடியதுக்கு நன்றி.. சரி செய்துவிட்டேன்..:-)

நன்றி.

')) said...

கோலாலம்பூர் டூ பத்து மலை செல்லும் நெடுஞ்சாலையில் Zoo Negara என்று கோலாலம்பூர் மிருகக்காட்சிசாலை வளாகத்திற்குப் பெயர் இருக்கிறதே??

நெகாரா = Negara = நாடு

Zoo Negara = மிருகங்களின் நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Any கூடுதல் விளக்கம்ஸ்??

')) said...

@Hariharan # 03985177737685368452 said...

//கோலாலம்பூர் டூ பத்து மலை செல்லும் நெடுஞ்சாலையில் Zoo Negara என்று கோலாலம்பூர் மிருகக்காட்சிசாலை வளாகத்திற்குப் பெயர் இருக்கிறதே??//

ஹரி, நீங்க மலேசியா வந்திருக்கீங்களா? மிகச் சரியா வழி சொல்லியிருக்கீங்க. :-)

//நெகாரா = Negara = நாடு

Zoo Negara = மிருகங்களின் நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Any கூடுதல் விளக்கம்ஸ்??
//

நெகாரா என்பது நாடுதான்

ஆனால், Zoo Negara என்பது தேசிய மிருகக்காட்சிசாலை (National Zoo)என்று பொருள்.

தேசிய என்பதுக்கும் மலாயில் நெகாரா என்றுதான் அர்த்தம். :-)

')) said...

//ஹரி, நீங்க மலேசியா வந்திருக்கீங்களா? மிகச் சரியா வழி சொல்லியிருக்கீங்க. :-)//

ஆமாங்க போன கோடைவிடுமுறையில் ஒருவாரம் கோலாலம்பூரில் கொண்டாட்டமாகக் கழித்தோம். எல்லாம் பத்துமலை முருகன் செயல்!

கோலாலம்பூர் துனுக் அப்துல்ரஹ்மான் சாலையை-சௌகித் ஏரியாவை ரெபெரென்ஸா வைத்து சுத்துப்புற ஏரியா சந்து பொந்து எல்லாம் இன்னமும் என் மண்டைக்குள்ள ஜிபிஎஸ் சிஸ்டத்துல எரேஸ் பண்ணாம இருக்குங்க!

நல்ல ஊருங்க. சில ஆண்டுகள் கழித்து திரும்ப இன்னொருவாட்டி கண்டிப்பா வருவேனுங்க!

//நெகாரா என்பது நாடுதான்

ஆனால், Zoo Negara என்பது தேசிய மிருகக்காட்சிசாலை (National Zoo)என்று பொருள்.

தேசிய என்பதுக்கும் மலாயில் நெகாரா என்றுதான் அர்த்தம். :-)//

மலாயிலும் ரெண்டு பொருள் தரும் சிலேடை வார்த்தைகள் இருக்கு அதுல ஒண்ணு இப்போ கத்துக்குடுத்ததுக்கு நன்றிங்க!

')) said...

ஃமை பிரண்ட் ,

ஹரிஹரன் பார்த்த மலேஷியா இந்தச் சுட்டிகளில்:

ஹரிஹரனின் பார்வையில் கோலாலம்பூர்-1

ஹரிஹரனின் பார்வையில் பத்துமலை முருகன்

ஹரிஹரனின் பார்வையில் கோலாலம்பூர்-2

')) said...

@Hariharan # 03985177737685368452 said...

//ஆமாங்க போன கோடைவிடுமுறையில் ஒருவாரம் கோலாலம்பூரில் கொண்டாட்டமாகக் கழித்தோம். எல்லாம் பத்துமலை முருகன் செயல்!//

அந்த பத்துமலை முருகனை பற்றியும் ஒரு பதிவு போடலாமிருக்கிறேன். அவர் அவ்வளவு புகழ் பெற்றவராச்சே! ;-)

//கோலாலம்பூர் துனுக் அப்துல்ரஹ்மான் சாலையை-சௌகித் ஏரியாவை ரெபெரென்ஸா வைத்து சுத்துப்புற ஏரியா சந்து பொந்து எல்லாம் இன்னமும் என் மண்டைக்குள்ள ஜிபிஎஸ் சிஸ்டத்துல எரேஸ் பண்ணாம இருக்குங்க!//

நீங்க டவுன் ஏரியாவில் உள்ள முக்கியமான இடங்களை கரைச்சி குடிச்சு வச்சிருக்கீங்க.. அவ்வளவு பிஸியான இடமாச்சே அவைகள். ;-)


//மலாயிலும் ரெண்டு பொருள் தரும் சிலேடை வார்த்தைகள் இருக்கு அதுல ஒண்ணு இப்போ கத்துக்குடுத்ததுக்கு நன்றிங்க! //

மலாயில் வார்த்தைகள் குறைவு. அதனால்தான் இப்படிப்பட்ட சிலேடை வர்த்தகள் இருக்கின்றன. கூடிய விரைவில் மலாய் மொழி வகுப்பில் கலந்துக்கொள்ளுங்கள். ;-)

')) said...

அட அட மைப்ரெண்ட்!
கலக்கறிங்களே!

இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் புயலிலே ஒரு தோணி நாவலின் காலகட்டம் டச்சுக்காரர்களின் பிடியிலிருந்த மலேசியா. இந்தோனேசியா, பிலிப்பன்ஸ், ஐ.என்.ஏ பற்றிய விவரங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவை எழுதப்பட்டுள்ளது. நாவல்தான் என்றாலும் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அற்புதமான நாவல்.

சுவாரசியமான சம்பவங்கள் உள்ளது. கிடைத்தால் படித்து பார்க்கவும்.

')) said...

துர்கா,
நல்ல பதிவு. உங்களது அடுத்த பதிப்பை ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்.
-தாமரை.