Thursday, April 19, 2007

பழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கின்றது

டுரியானை சந்தோஷமாக தூக்கி செல்லும் ஓர் இளைஞர்

பழங்களின் அரசனின் அலைகள் இன்னும் ஓயவில்லை. டுரியான் பழத்தை துர்கா சென்ற வாரம் உங்களுக்கு அறிமுகப் படுத்தினார். பின்னூட்ட கேள்விகள் மழையாக கொட்டியிருப்பதை பார்த்தவுடன் இன்னொரு பதிவு இந்த அரசனுக்கு அளிக்க வேண்டும் என்று தோன்றியது.


இதோ உங்கள் கேள்விகளின் பதில்கள்:

விருபா: நீங்கள் டுரியான் பழத்தை அரசன் என்கிறீர்கள், அண்மையில் மலேசியாவிற்கு வந்திருந்த போது தங்கியிருந்த விடுதியில் டுரியான் பழத்தை உள்ளே எடுத்து வந்தால் 200 ரிங்கிட்ம் என்று அறிவிப்பு வைத்திருந்தார்கள்.

டுரியான் அரசன்தான். ஆனால், இவன் தெற்கிழக்காசியாவின் அரசன். தெற்கிழக்காசியாவின் (தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனிசியா) தற்பவெப்பங்களுக்கு ஏற்ற ட்ரோப்பிக்கல் (Tropical) என்றழைக்கப்படும் இடங்களில் மட்டுமே இந்த மரம் வளரும். இந்த மரம் வளர்ப்பது மிக சுலபம். பழத்தின் சுலைகளை உண்டப் பின் அதில் மீதமிருக்கும் கொட்டையை நீங்கள் மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால்(ஊற்றாவிட்டாலும் சொந்தமாகவே வளரும்) மிக சாதாரணமாக வளரும். மற்ற செடி கொடிகளுக்கு கொடுக்க வேண்டிய கவனங்கள் இந்த மரத்துக்கு தர தேவையில்லை. மரம் வளர்ந்ததும் (40 மீட்டர் வரை) அந்த பருவக் கலத்தில் (மே முதல் ஜூலை வரை) மரத்தில் டுரியான் பூத்துக் குளுங்கும்.

டுரியான் பழமும், சாப்பிட்ட பின் மீதமிருக்கும் கொட்டையும்

மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டுரியான். என்னேரமும் கீழே விழலாம். விழுந்ததும் பழத்தை வெட்டி சுவக்கலாம்.


ஆனால், மற்ற பழங்களை பறிப்பதுபோல் இந்த பழத்தை நாம் பறிக்க முடியாது. இந்த பழம் நம் கையில் கிடைக்க நாம்தான் காத்திருக்க வேண்டும். பழங்கள் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். அதைதான் நாம் பொருக்க வேண்டும். (இங்கே உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்: பழத்தை பொருக்க செல்லும்போது தலைகவசத்தை (நம்ம நாட்டாமை ஓர்குட்ல அணிந்திருக்கிற மாதிரி) அணிந்து செல்லுங்க. டுரியான் பழம் உங்கள் தலையில் விழுந்தால் உங்கள் உயிர் அதோ கதிதான்).

டுரியானுக்கு ஒரு தனி மணம் இருக்கிறது. அது கண்டிப்பாக துர்நாற்றம் இல்லை. நீங்கள் அணியும் வாசனை திரவியம் எந்த் அளவுக்கு ஸ்ட்ராங்கா இருக்கோ, அந்த அளவுக்கு டுரியானின் மணமும் ஸ்ட்ராங்தான். ஒரு சிலருக்கு எந்த ஒரு மணமும் கொஞ்சம் பலமாக இருந்தால் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. அதான் பொது இடங்களில் (குறிப்பாக குளிர்சாதனம் பொருந்திய இடங்களில்) இப்பழத்தை கொண்டு செல்வதுக்கு தடா விதிக்கப்பட்டிருக்கிறது. டுரியானை ருசித்து நாம் இன்புறும் நேரத்தில் மற்றவர் இதனால் துன்புற கூடாது என்ற ஒரு நல்லெண்ணத்தில்தான் இந்த தடா விதிக்கப்ப்ட்டிருக்கிறது.

டுரியான், சுலைகள் அடங்கியிருக்கும் ஒரு சின்ன அறை, டுரியான் சுலை


விருபா: அதேவேளை ஓரிடத்தில் நடைபாதை பழவியாபாரியிடம் சில ஐரோப்பியர்கள் இதனை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்கக்கூடியதாக இருந்தது.

விருபா, நீங்கள் சொன்னது சரியே! பழத்தின் ருசியை பற்றி கேட்டால், என் பதில் "ஆஹா.. அருமை அருமை!". இதனின் ருசியை எனக்கு விளக்க தெரியவில்லை. வேறேதாவது பழங்களின் ருசி ஏறக்குறைய இப்படி இருந்தாலாவது நான் உங்களிடம் விளக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பழங்கள் வேறெதுவுமில்லை. அதனால், டுரியானின் ருசியை அறிய நீங்கள் டுரியானை சாப்பிட்டால் மட்டுமே உணர முடியும்.

டுரியானை பல வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். பிரபலமான சில டுரியான்கள் D24, D99, D158 மற்றும் D159. இதில் D24 வகை டுரியானின் ருசியே அற்புதம். நீங்களும் இவ்வகை டுரியானை கேட்டு வாங்கி ருசித்து பாருங்கள். மே மாதம் டுரியான்களை நீங்கள் மலேசியாவில் எல்லா இடத்திலும் விற்க்கப்படுவதை பார்க்கலாம்.

டுரியானில் உள்ளே உள்ள சுலை. மஞ்சள் நிறமாக இருக்கும் இப்பழத்தின் ருசியை வர்ணிக்க வார்த்தயே இல்லை. ;-)


தேவ்: இந்தப் பழம் எங்க தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதியாகுதான்னு விசாரிச்சுச் சொல்ல முடியுமா?

தேவ், டுரியான் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ஆனால், இந்தியாவில் டுரியான் மரம் நட ஆராய்ச்சிகள் நடந்து வருவதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த ஆராய்ச்சி வெற்றிப்பெற்றிருந்தால், இன்னேரம் உங்கள் ஊரிலும் டுரியான் மரங்களும் பழங்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. டுரியான்கள் ஏற்றுமதி செய்யப்படாததுக்கு ஒரே காரணம் அதனின் அளவுக்கு அதிகமான மணம்தான். ஆனால், டுரியான்களை பதனம் செய்யப்பட்டு டின்களில் அடைக்கப் பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலேசியாவின் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் டுரியானும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

டுரியானை அறை அறையாக பிரித்து சாப்பிட தெரியாதவர்கள் இப்படி பேக்கிங் செய்து விற்க்கப்படும் டுரியான்களை சுவைக்கலாம்.


பலர்: டுரியான்=ப்லா பழம்???

இதன் தோற்றத்தை பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதையும் வைத்து பார்க்கும் பொழ்து இது தமிழ் நாட்டில் கிடைக்கும் பலா பழம் போல் அல்லவா தெரிகின்றது?..

இது ஒரு நல்ல கேள்வி! :-)
டுரியான் பலாப்பழம் இல்லை.

பலாப்பழத்தை பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நான் டுரியானை பற்றியே சொல்கிறேன். கேளுங்கள்.

டுரியானின் வெளிப்புறம் பச்சை நிறம். பலாப்பழமும் பச்சை நிறம்தான். ஆனால், டுரியானின் வெளிப்புறத்தில் உள்ள முட்கள் மிக கூர்மையானவை. பலாப்பழத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் முட்களோ கூர்மை இழந்து காணப்படும் (குத்தவே குத்தாது). பலா பழம் பெரிதாக இருக்கும் (ஒரு இரண்டு கிழோக்கு மேலே இருக்கும் என நினைக்கிறேன்). டுரியான் பலா பழம் அளவுக்கும் பெரிதாய் இருக்காது. ஆக பெரிய அளவு எவ்வலவு பெரிது என்று கேட்டால், ஒரு கால்பந்தின் அளவு என்று சொல்லலாம்.

வெளியே முரடனாக இருந்தாலும் இவன் உள்ளே இதமாக உள்ளவன். மிகவும் மென்மையாக இருப்பான் உள்ளே! பழங்களின் சுலைகள் மஞ்சல் நிறத்தில் இருக்கும் (ஒரு சில வகையான டுரியான்களில் ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்). சாதாரணமா மற்ர பழங்களை வெட்டுவதுப்போல் இவனை வெட்ட முடியாது / அப்படி வெட்டவும் கூடாது. மற்ற பழங்களை நீங்கள் ஒரே வெட்டில் அந்த பழத்தை ருசிக்க ஆரம்பித்து விடலாம். ஆனால் டுரியானின் அறைகள் அறைகளாக இருக்கும். ஒவ்வொரு அறையிலும் இரண்டு மூன்று சுலைகள் மட்டுமே இருக்கும். நீங்கள் பழத்தை கடையில் வாங்கும்போதே கடைக்காரன் சின்னதாய் முக்கோண வடிவில் வெட்டி வைத்திருப்பான். அதனை வழிக்காட்டாக கொண்டு நீங்க ஒவ்வொரு அறையையும் கண்டு பிடித்து திறக்க வேண்டும் (இதனை திறக்க உங்களுக்கு கத்தி தேவையே படாது. கையாலேயே திறக்கலாம்). பழத்தை நீங்க கடித்து மென்னு சாப்பிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதன் சுலைகல் மிருதுவாக இருக்கும். வயில் வைத்தால்பஞு மிடாய் எப்படி கரையுமோ அதே போல் கரையும். உங்கள் பொக்கை வாய் தாத்தா பாட்டிக்கும் டுரியானை நீங்கள் வாங்கி தரலாம். :-)

பழங்களில் ஒரு சின்ன பகுதியை முக்கோண வடிவமாய் வெட்டப்பட்ட காட்சி: இதில் நாம் உள்ளே உள்ள பழம் எப்படி இருக்கின்றது என்றும் கவனிக்கலாம்.
டுரியான் சுலைகளும், அறைகளும்

கண்மணி: இது என்ன எங்க ஊரு பலாப்பழம் போல இருக்கு.சுளை சுளையா இருக்குமா?தனியே எடுத்து ஒரு போட்டோ காட்டியிருக்கலாம்.

யக்கா, இது பலாப்பழம் இல்லை. மேல் விளக்கத்துக்கு மேளே உள்ள பதிலை கவனியுங்கள். :-)

நீங்கள் கேட்டது போலவே நான் சில படங்களை இந்த பதிவில் இணைத்துள்ளேன். :-)

டுரியான் அறைகள் இதில் நன்றாக தெரிகிறது.


கனக்ஸ்: இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.

இது துரியான் இல்லை. இது டுரியான் (Durian). அன்னமுன்னாப் பழம் பற்றி இணையத்தில் தேடினேன். ஒரு தகவலும் தெரியவில்லை. ஈழத்து நண்பர்கள் யாரவது இதற்கு பதிலளிப்பார்கள் என்ரு நம்புகிறேன் கனக்ஸ். அப்படி எனக்கு விஷயம் தெரிந்தால் நானே சொல்கிறேன். ஆனால், இந்தியாவிலேயே கிடைக்காத இந்த பழம் ஈழத்தில் கிடைக்குமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் தற்ப்பவெப்ப நிலையும் இலங்கையின் தற்ப்பவெப்பநிலையும் ஓரளவு ஒன்றுதானே!

18 மறுமொழிகள்:

')) said...

ellam sari palathinta mannam epidi My
Friend?? ...thurmanam ilai enda solureengal?? engada veeda munthi nindathu intha maram...sapidrathenavo pakathuveedu uncle than..vera orutharukum manam pidikaathu.

')) said...

nan sona veedu Matale la irukira veedu....yarlpana pakam intha palam iruka endu theriyella ethukum ammadathan kekanum.

')) said...

this fruit is available in OOty also i read in ananda viakatan once. People have problem in preganancy it is good for them.

')) said...

//கனக்ஸ்: இந்த தூரியானை எமது ஈழத்தில் "அன்னமுன்னாப் பழம்" என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லவேண்டும்.//

ஈழம் என்று சொல்லும் போது எமது தமிழ் பகுதிகளில் காணமுடியாது. கனக்ஸ் சொல்லுவது அன்னமுன்னா அதோடு ஒத்த இன்னுமொரு பழம் ஆனால் அவை இரண்டும் டூரியான் அல்ல.

டூரியான் இலங்கையின் தென்பகுதியில் அதாவது கொழும்பு, மலை நாட்டு பிரதேசங்களில் கிடைக்கிறது.

கொழும்பின் வீதியோர பழ கடைகளில் பழம் பழுக்கும் காலத்தில் கிடைக்கும். ஆனால் விலை அதிகம்.

')) said...

ஏங்க இந்த பழத்தை பத்தி விளக்கம் குடுத்து இருக்கீங்க ஏரியா பக்கம் வருகிறவர்களுக்கு sample எல்லாம் எதுவும் இல்லையா?

')) said...

ஆஹா!..கேள்வியும் பதிவே பதிலும் பதிவே! அருமையான ஐடியா..:)

டூரியான் பழத்தை பற்றிய எனது சந்தேகத்தை உங்களுடைய அருமையான் கருத்து விளக்கங்கள் மூலம் தீர்த்து வைத்த்தற்கு மிக்க நன்றி..அதுவும் படங்களுடன் அதற்கு தகுந்த விளக்கம் தந்தது மிக அருமை..

தமிழ்நாட்டில் குற்றாலத்தில் உள்ள பழத்தோட்டம் அருவியில் இந்த் பழம் விளைவதாக இதில படித்தேன்.

ஆனால் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

')) said...

மிக முக்கியமான ஒன்று விட்டுப்போய் விட்டது என்று நினைக்கிறேன்.
பழத்தை சாப்பிட்ட பிறகு அந்த மூடியின் உள் பாகத்தில் தண்ணீர் விட்டு "தொண்ணையில்" குடிப்பது மாதிரி தண்ணீர் குடித்தால் வாயில் இருந்து வரும் டுரியன் வாசம் இருக்காது மற்றும் உடம்புச்சூடும் தணியும்.
இது நான் கேள்விப்பட்டது தான்,அதிகமாக சாப்பிடவில்லை என்பதால் பரிட்ச்சித்து பார்க்கவில்லை.
மலேசியாவில் 3 பழம் 10 ரிங்கெட் அதே 3 பழம் இங்கு 10 வெள்ளி- கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கிறது.
இது இரவில் மட்டும் தான் கீழே விழுமாமே?
D24 ஒரு தடவை சுவைக்க வேண்டும்.

')) said...

நான் சாப்பிட்டு இருக்கேன். கொஞ்ச நாளில் அந்த நாத்தம் (டாய்லெட்) பழகி போய் விட்டது(ப்ழத்தின் சுவை காரணமாக)

இப்போ முள்ளங்கி சாப்பிடுவதில்லையா..அது போல இதுவும் பழகிடும்!

')) said...

Aaha.. idha saapidaradhukkaagavaavadhu malaysia varanum pola irukka.. avlo aasaiya kelappi vittuteenga :)

')) said...

பழங்களின் அரசனின் ராஜ்ஜியம் தொடர்கிறதோ இல்லையோ,இணையத்தில் மலேசிய சகோதரிகளின் எழுத்து ராஜ்ஜியம் இதே போல் வளமோடு தொடரட்டும்!!! ;-)

ரொம்ப நல்ல இடுகை இது!! பொருத்தமான படங்களையும் போட்டு தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்!! ;-)

')) said...

hi hi...Very nice post about jack :)

')) said...

வாழ்த்துக்கள் :)

')) said...

இது என்னா பழங்க, பார்க்கிறதுக்கு லிச்சி பழம் மாதிரி இருக்கு! அப்படியும் சொல்லலாமுங்களா?

')) said...

யாராவது வரும் போது இந்த பழத்தை இந்தியாவிற்கு கொடுத்து அனுப்புங்கள், முழுசாக இல்லைனாலும், பேக் செய்து அனுப்பி வையுங்கள்.. முடியுமா?

')) said...

//ஆனால், மற்ற பழங்களை பறிப்பதுபோல் இந்த பழத்தை நாம் பறிக்க முடியாது. இந்த பழம் நம் கையில் கிடைக்க நாம்தான் காத்திருக்க வேண்டும். பழங்கள் தானாகவே மரத்திலிருந்து கீழே விழும். //

ஏன் பறிக்க கூடாது?..

')) said...

இப் பழம் ஈழத்தில் இல்லை. சிலசமயம் கொழும்பில் உள்ள மலேயர்களுக்காக இறக்குமதி செய்கிறார்களோ? தெரியவில்லை.
அடுத்து 'அன்னமுன்னா' என்பது இதுவல்ல, அன்னமுன்னாவுக்கு முள் இல்லை. சதுரவடிவான பல்லுப் போன்ற அமைப்பு உருவிலும் சிறியது.
பல்லுப் போன்ற மேற்தோலற்ற ஓர் இனமும் உண்டு. இலங்கையில் அதைப் 'பறங்கி அன்னமுன்னா' என்பர்.
இந்தியாவில் இவற்றைச் சீதாப்பழம் என அழைப்பார்கள் என நினைக்கிறேன்.
அன்னமுன்னாச் சுளைகள் சிறியன வெள்ளை நிறம் கறுத்த விதைகள்
ஒரு பழத்துள் குறைந்தது, 25 விதைகள் இருக்கும்.
பதிவில் சுளை என வருமிடமெங்கும், சுலை என உள்ளது.
தயவு செய்து திருத்தவும்.

')) said...

http://gardenbreizh.org/modules/gbdb/plante-82.html

அன்னமுன்னா பற்றிப் பார்க்க மேற்குறிப்பிட்ட பக்கம் செல்லவும்.
அத்துடன் தேடு பொறியில் ANNONA
எனத் தேடவும். படத்துடன் விபரம் பெறலாம்.

Anonymous said...

johan paris:
நீங்கள் சொல்லும் பழம் வேறு.அந்த பழத்தையும் மலேசியாவில் பார்த்து இருக்கின்றேன்

கவிதா:
நல்ல பழுத்த பழங்கள் தானாகவே கிழே விழும்.ஆகவே அது சுவையாக இருக்கும்

அன்புடன்,
துர்கா