Sunday, October 14, 2007

கெத்துப்பாட் (Ketupat)

மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.

கெத்துப்பாட் நாசி:

இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.

ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

கெத்துப்பாட் பாலாஸ்:

பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (Glutinous rice) உபயோகிப்பார்கள்.

இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்.

Saturday, October 13, 2007

Soyuz விண்கலம் ISS-ஐ அடைந்தது


Soyuz TMA-11 விண்கலம் நேற்று இரவு 10.52க்கு அனைத்துலக விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (International Space Station, ISS) இணைந்தது. 48 மணி நேரமாக 700 தடவை பூமியை சுற்றி வந்தப்பின் சரியான தருணத்தில் இணைய Soyuzக்கு சுமார் 90 நிமிடங்கள் எடுத்தது.

அங்கிருந்து விண்வெளி வீரர்கள் மோஸ்கோ விண்வெளி மையத்துக்கு 10 நிமிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

மலேசிய முஸ்லிம்களுக்கு தன்னுடைய நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிய டாக்டர் ஷேய்க் முஜாப்பார் தன்னுடைய 10 நாட்கள் பயணம் வெற்றி பெற மலேசியர்கள் வாழ்த்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
Soyuz (வட்ட்டதிற்குள்) ISS-இல் சேரும் காட்சி

நோன்பு பெருநாளை விண்வெளியில் கொண்டாடும் உலகின் முதன் விண்வெளி வீரர் என்ற சரித்திரத்தையும் இன்று படைக்கிறார் டார்டர் ஷேய்க் அவர்கள்.
பி.கு: மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 588, Angkasa 1-இல் உடனுக்குடன் செய்திகளை காணலாம்.

செலாமாட் ஹரி ராயா

செலாமாட் ஹரி ராயா!
Selamat Hari Raya!



ரம்ஜான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு எடுத்து ஷாவால் முதல் நாளில் பண்டிகை கொண்டாட விருக்கின்றனர் நம் முஸ்லிம் நண்பர்கள். மலாய் மற்றும் முஸ்லிம் நண்பர்களுக்கு ஜில்லென்று ஒரு மலேசியா நோன்பு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. Selamat Hari Raya.
மலேசியாவில் பிரபலமான பெருநாள் பாடல்களில் ஒன்று இங்கு உங்களுக்கு காட்டுகிறோம். கரோக்கே ஸ்டைலில் கீழே பாடல் வரியும் வரும். அந்த பாடகியை சைட் அடிக்காமல் பாடிப்பார்க்கவும் வாழ்த்துக்கள்.



பி.கு: பாடல் பிடித்திருந்தால், பாடல் வரியின் விளக்கங்கள் வேண்டும் என்று நீங்கள் கருதினால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அதை நான் தமிழில் மொழிப்பெயர்க்க முயற்சி செய்கிறேன்.