Sunday, October 14, 2007

கெத்துப்பாட் (Ketupat)

மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.

கெத்துப்பாட் நாசி:

இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.

ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

கெத்துப்பாட் பாலாஸ்:

பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (Glutinous rice) உபயோகிப்பார்கள்.

இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்.

16 மறுமொழிகள்:

')) said...

first comment !
enaku oru dabbala Ketupat parcel anupunga pls :)

')) said...

Thanks for visiting my blog. Keep commenting:)

ketupat nu naan kelvi pattadhe illai. superaa photosoda detailedaa adha pathi sonnadhukku ungaluku oru big applause.
Good post !
-Kittu mam(i)

')) said...

ஒரே கெத்தா இல்லாம நான் கேக்குறது...

ரெண்டு கெத்துபாட்டை டெத்துபோறதுக்கு முன்னால கோழி பலாங்ல வெச்சு திங்கனும்ங்கறது தான்...

அரிசிடை இயற்கையால் செய்த ஓவன்ல போட்டு வெவிக்கறது எல்லா ஊர்லயும் இருக்கு போல...

கேரளாவுல புட்டு
நம்மூர்ல இட்லி
இண்டீரியர் கர்நாடகாவில கூட ஒரு டைப்பான எலையில வெச்சு ரைசை வெவிச்சு இட்லிமாதிரி எடுப்பாங்க...

பெயர் மறந்துபோச்சு....

')) said...

நல்ல பதிவு!! :-)
informative!! :-)

')) said...

My friend, I can't view your pics. All showing only X,X,X,X . You justifyed all your texts, So i can't read. How can I comment on this?

')) said...

@மை பிரண்ட்
எனக்கும் ஒரு பார்சல்.

-------

@வித்யாகலைவாணி
//
My friend, I can't view your pics. All showing only X,X,X,X . You justifyed all your texts, So i can't read. How can I comment on this?
//
இல்லியே எல்லா படமும் தெரியுதே

')) said...

எங்க ஊருல இப்படி ஓலையில் செஞ்சு அதை வைத்து "எறி பந்து" என்ற ஒரு விளையாட்டு ஆடுவோம். எதிரணிகாரனை ஓடாமல் நின்ற இடத்தில் இருந்தே எறிய வேண்டும். செம மஜாவா இருக்கும் :-)

')) said...

//இண்டீரியர் கர்நாடகாவில கூட ஒரு டைப்பான எலையில வெச்சு ரைசை வெவிச்சு இட்லிமாதிரி எடுப்பாங்க...//

ரவி, பெயரைச் சொல்லிடலாம்னுதான் பார்த்தேன். ஆனா தமிழச்சி ரேஞ்சில பிரச்சினை ஆயிடலாம் :)

')) said...

தலைப்பைப் பார்த்ததும் யாரையோ மலாய் மொழியில் திட்றீங்களோனு நெனச்சேன் ;-)

சிட்னிக்கு ஒரு பார்சல் பிளீஸ்

')) said...

ரொம்ப நல்லாருக்கு பாக்கவே எல்லாரும் சேர்ந்து செய்வதும்.. அந்த் பின்னல் முறையும்.. :)

')) said...

மங்களூர் சிவா said...
//
இல்லியே எல்லா படமும் தெரியுதே//
மை பிரண்ட் என்னைய நேத்து கலாய்ச்சதுக்கு இதெல்லாம் எங்க. அப்ப நீங்க பக்கத்துல இருந்திருந்தீங்கன்னா அக்கா நிலையைப் பார்த்து ரொம்ப கஷ்டப் பட்டிருப்பீங்க.

')) said...

பெத்த ராயுடு,

அப்படி என்னப்பா பேரு அது ? பிரச்சினை ஏதும் நினைவுக்கு வரலையே ?

')) said...

நல்ல பதிவு...... :))

')) said...

அடப்பாவமே அங்க எல்லாரும் பனைஓலையும் சேர்த்தா சாப்பிடுவாங்க?....ஹிஹி..சும்மா..கலாட்டா...
பின்ன எனக்கு கொடுக்காம நீங்களாம் மட்டும் சாப்பிட்டா?..

')) said...

.:myfriend:. :

http://www.globalvoicesonline.org/2007/10/15/celebrating-festivals-feasting-and-donating-smiles/

Have listed this post in globalvoicesonline.

-Mathy

')) said...

Hi

Firstly, congratulations on your site :)

We would like to invite you to be part of the Malaysia's 50 Years book.

You can write what you like on Malacca, or Malaysia... and share your photographs of the state too.


Pls kindly visit www.themalaysiapage.com/book.php for more info.


Look fwd to hearing from you.