Friday, August 17, 2007

50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை

மலேசிய நாட்டின் 50-ஆவது பொன்விழா சுதந்திர தினத்தையொட்டி இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமது படாவி, முன்னாள் பிரதமர்கள் துன் டாக்டர் மகாதீர் முகமது, துன் ஹூசேன் ஓன், துன் அப்துல் ரசாக், சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ஆகியோர் நாட்டிற்கு அர்ப்பண உணர்வுடன் வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் அர்ப்பணமிக்க பங்கேற்பிற்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒவ்வொருவருக்கும் தலா 10 மணி நேரம் என 50 மணி நேரம் இடைவிடாது தேசிய மொழி போதனை நடத்த மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார் குளுவாங் கல்வி மைய முதல்வர் டாக்டர் அ.இளந்தேவன்.

இந்த துணிகர முயற்சி வெள்ளிக்கிழமை 17-8-2007 மாலை 3.00 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை 19-8-2007 மாலை 5.00 மணிக்கு நிறைவேறும். எண் 32, ஜாலான் இள்மாயில், விஸ்மா சோமசன்மா, குளுவாங் எனும் முகவரியில் உள்ள அவரின் குளுவாங் கல்வி மையத்தில் தொடங்கும். இந்நிகழ்ச்சியை ம.இ.கா ஜொகூர் மாநில தொடர்புக்குழுச் செயலாளர் செனட்டர் எம்.எம்.சாமி தொடக்கி வைப்பார். இச்சாதனையில் 1,300 மாணவர்கள் பங்கு பெற உள்ளனர்.

ஏற்கனவே 2005-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்தாற்போல் 24 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி மலேசிய சாதனை புத்தக வரலாற்றில் தமது பெயரை பதிவு செய்த அவர் 2005 டிசம்பரில் இடைவிடாது 88 மணி நேரம் தேசிய மொழி போதனை நடத்தி கின்னஸ் உலக சாதனை முத்திரையையும் பதித்த டாக்டர் அ.இளந்தேவன் தாம் பிறந்தமண்ணின் சுதந்திர தின விழாவிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

4 மறுமொழிகள்:

')) said...

ஆஹா!!
50 மணி நேரம் தொடர்ந்து போதனையா???
படிக்கும் போதே கண்ணை கட்டுதே!!!! :ஓ

Anonymous said...

வெறும் போதனை மட்டுந்தானே. பரிட்சை மார்க்குன்னு எதுவும் இல்லியே

')) said...

ஹிஹி!! ஐ அம் நாட் a fan of states sponsoring religions :)
and anything that comes from such states.

Funny how none of the muslim majority countries are secular

guess i am digressing from the topic.

')) said...

50 மணி நேரம்மா!!!!!!!!!!!!