'செக்குவை காணவில்லை.. மலாய் செக்குவை காணவில்லை
பள்ளி முழுக்க ஒரே போஸ்டர். டீச்சரை காணோம் டீச்சரை காணோம்ன்னு பாசக்கார மாணவர்கள் என்னவா ஏங்கி போயிருக்காங்க!
அதான் திரும்ப வந்துட்டேன்ல. க்லாஸ் மஜாவா ஆரம்பிச்சிடலாம். :-)
"செலாமாட் பாகி மூரிட்-மூரிட்"
"ஹய்யா.. டீச்சர் வந்துட்டாங்க.."
"என்ன க்ளாஸ்ல மொத்தமே அஞ்சு பேர்தான் இருக்கீங்க போல??"
"செக்கு, நல்லா பாருங்க.. நாங்க மொத்தம் செப்புலோ பேர் இருக்கோம்", கார்த்திக் எழுந்திரிச்சு சொல்கிறார்.
"ஆஹா.. பல நாள் வகுப்புக்கு நான் வரலைன்னாலும், நீங்க சரியா பாடத்தை படிச்சிட்டு இருக்கீங்க போல? கூட் கூட்"
"மாணவர்களே, இன்றைய பாடத்துக்கு போகலாமா?"
சிவா மேஜையில் சாய்ந்துக்கொண்டே, "வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவா போறீங்க! நடத்துங்க நடத்துங்க.."
"இன்றைக்கு நாம் வர்ணங்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்"
வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்
கதிர் எழுந்து, "செக்கு, 'அந்த பூனையின் நிறம் கருப்பு' என்பதை எப்படி சொல்றது?
அந்த - பூனையின் - நிறம் - கருப்பு
Itu - kucing - warna - hitam
"Kucing itu berwarna hitam [கூச்சிங் இத்து பெர்வர்ண ஹீத்தாம்]. மலாயில் மொழி மாற்றம் செய்யும்பொழுது வார்த்தைகளின் இடம் மாறுப்படும். சில இடங்களில் imbuhan [இம்பூஹான்] என்றழைக்கப்ப்டும் இலக்கியத்தை சேர்க்க வேண்டியிருக்கும். இந்த வாக்கியத்தில் 'ber' [பெர்] என்ற இம்பூஹான் சேர்க்கப்பட்டிருக்கிறது."
"செக்கு, பழுப்பு வர்ணத்தை எப்படி மலாய் மொழியில் சொல்வது?"
"பழுப்பு என்பது சாக்லேட்டின் வர்ணம் அல்லவா? அதனால் அந்த் சாக்லேட்டின் பெயரையே உபயோகிக்கப்படுகிறது. பழுப்பை மலாயில் Coklet [சொக்லேட்] என்று அழைப்பார்கள். ஆரஞ்சு என்ற வர்ணமும் ஆரஞ்சு பழத்தின் பெயரையே கொண்டழைக்கப்படுகிறது. ஆரஞ்சை மலாயில் Oren [ஓரேன்] என்று அழைப்பார்கள்"
"செக்கு, கருநீலம், கருஞ்சிவப்பு, கரும்பச்சைன்னு தமிழில் இருக்கே! மலாயிலும் அப்படி இருக்கிறதா?" சுமதி கேட்டார்.
"கண்டிப்பாக இருக்கு. இந்த கரும் வர்ணங்களுக்கு Tua [துவா] என்று வர்ணத்தின் பின்னால் சேர்க்க வேண்டும். துவா என்றால் முதியது என்று பொருள். நீங்க கருநீலம் என்று சொல்ல வேண்டும் என்றால் merah tua [மேரா துவா] என்று சொல்ல வேண்டும்"
"கரும்பச்சை என்றால் hijau tua [ஹீஜாவ் துவா], கருமஞ்சள் என்றால் kuning tua [ கூனிங் துவா] என்பது சரிதானே செக்கு?" என்று பொன்ஸ் கைத்தூக்கி சொல்கிறார்.
"பொன்ஸ், சரியாக சொன்னாய். கூட்."
"செக்கு, பிங்க் என்பது மலாயில் பிங்க் என்றுதான் சொல்வார்களா?" கேள்விக்குறியுடன் கேட்கிறார் காயத்ரி.
"இல்லை காயத்ரி. பிங்க் என்பதை merah muda [மேரா மூடா] அல்லது merah jambu [மேரா ஜம்பு] என்று சொல்லலாம். மூடா என்றால் இளமை என்று பொருள். மேரா ஜம்பு என்பதே அதிகம் உபஓகிக்கும் வார்த்தை. ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். அதனின் வெளித்தோற்றம் பிங்க் வர்ணத்தில்தான் இருக்கும். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது."
"பிங்க் வர்ணத்துக்கு இப்படி ஒரு சரித்திரமா? ஹீஹீஹீ" G3 சிரிக்கிறார்.
"சொல்ல மறந்துவிட்டேனே மாணவர்களே. பழுப்பு வர்ணத்துக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. Perang [பேராங்] என்றும் சொல்லலாம். ஆனால், இந்த வர்த்தையை நீங்கள் சொல்லும்பொழுது உங்கள் உச்சரிப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். பெராங் என்றால் போர் என்று பொருள். பேராங் என்றால்தான் பழுப்பு வர்ணம் என்று பொருள். உங்களுக்கு இலகுவாக இருக்க வேண்டுமென்றால் சொக்லேட் என்றே சொல்லுங்கள். சரியா?"
"சரி செக்கு"
"சரி, இன்றைய பாடம் இத்தோடு முடிவடைகிறது. இன்றைய வகுப்பு வர்ணமயமாக இருந்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்"
"தெரிமா காசே செக்கு. ஜும்ப்பா லாகி"
-----------------------------------------
இன்றைய பாடம்:
வெள்ளை - Putih - பூதே
மஞ்சள் - Kuning - கூனிங்
சிவப்பு - Merah - மேரா
ஊதா - Ungu - உங்கு
நீலம் - Biru - பீரு
பச்சை - Hijau - ஹீஜாவ்
மயிலை (Grey) - Kelabu - கெலாபு
கருப்பு - Hitam - ஹீத்தாம்
பழுப்பு - Coklet / Perang - சொக்லேட் / பேராங்
ஆரஞ்சு - Oren -ஓரேன்
பிங்க் - Merah Jambu - மேரா ஜம்பு
Tuesday, August 21, 2007
மலாய் படிக்கலாம் வாங்க - பாடம் 4
Subscribe to:
Post Comments (Atom)
5 மறுமொழிகள்:
பெர்- இலக்கிய வார்த்தையா? அவ்வளவு தூரம் கற்றுக்கொள்ளவில்லை அங்கிருக்கும் போது.
பரவாயில்லை... குரல் பதிவுக்கு,உச்சரிப்பை தெரிந்துகொள்ள உதவும்.
டீச்சர், வகுப்பை இவ்வளவு காலத்துக்கு பிறகு துவக்காதீர்கள்,விட்டதை பிடிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள்,புதியவர்கள்.
பகுஸ் லா!
:)
//ஜம்பு என்பது மலேசியாவில் கிடைக்கும் ஒரு பழத்தின் பெயர். சில பழங்களின் உள்வர்ணமும் பிங்க் வர்ணத்தில் இருக்கும். அதனால்தான் மலாயில் பிங்க் என்பது மேரா ஜம்பு என்றழைக்கப்படுகிறது//
சிஸ்டர்..
ஜம்பு = நாகப்பழம் (நாவற்பழம்)
அதாங்க ஒளவையார் ஊதி ஊதி திம்பாங்களே அதே தான்!
அதுவும் உள்ளார பிங்க் வர்ணத்தில் தான் இருக்கும்!
அதான் ஜம்பு-ன்னு ஜம்ப் பண்ணிச் சொல்லியிருக்காய்ங்க! :-))
சரி...நீங்கச் சொல்லிக் கொடுத்த கலரை எல்லாம் கலர்களிடம் பயன்படுத்த என் நண்பர் VCR முடிவு செய்துள்ளார்! அடி கிடி விழாதே? :-)))
மலாய் சொல்லித் தர நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சி யாருக்கு பயன்படுதோ இல்லீயோ..எனக்கு பயன்படும்...ஆனா ஆபீஸ்ல இருக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்..
உச்சரிப்புக்கு அந்த ஆடியோ ரொம்ப வசதி...
அப்பறம்..இ ஸ்னீப்ஸ் சில பிரொவுஸர்லா கேக்க மாட்டேங்கிது.
அதுக்கு வேனா..ஐ.இ உபயோகிக்கச் சொல்லி ஒரு இன்போ போடுங்க..
தெரிமா காசே...
வணக்கம்.
உங்கள் மலாய் வகுப்புக்கள் பயனுள்ளவையாக உள்ளன. புதிய இடுகைகளின் இறுதியில் முன்னைய வகுப்புக்களுக்கான தொடுப்புக்களை வழங்கினால் உதவியாக இருக்கும்.
வகுப்புக்கள் போல எழுதிவருவது நன்றாகத்தான் உள்ளது. வாசிப்பவர்கள் உள்வாங்கவும் இலகுவாக இருக்கும். ஆனால் அதிக தகவல்கள் தேவைப்படுவோர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆதலால் நேரடியானதாக மலாய்ச் சொற்கள், வசன அமைப்பு எடுத்துக்காட்டுக்கள் போன்றவற்றை உள்ளடக்கியதான இடுகைகள் சிலவற்றைத் தர முடியுமானால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் மூலம் மலாய் மொழியைக் கற்பதற்கான தமிழ்-மலாய் நூல்கள், தமிழ்-மலாய் அகராதி போன்றவை பற்றிய விபரங்களை அறியத்தர முடியுமா?
தமிழ்மூலம் மலாய் கற்பதற்கான நூல்கள் சுமார் எத்தனை உள்ளன? அவை பற்றிய முழுமையான விபரங்களை எவ்வாறு பெற முடியும்?
என் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்குப் பதில் அனுப்பி உதவ வேண்டுகிறேன். நன்றி.
கோபி
kopinath 'at' gmail 'dot' com
Post a Comment